கலைஞர் பேஸ்புக்கில் கவுண்டமணி-செந்தில் ….!!!

kalaignar facebook foto

நேற்றிரவு ஒன்பதரை மணி சுமாருக்கு நண்பர் பாமரன் விமரிசனம் வலைத்தளத்தில் – அப்போது தான் வெளிவந்த கலைஞரின் – மதுவிலக்கு குறித்த செய்தியை அனுப்பி அது குறித்து என் கருத்தை கேட்டிருந்தார்…

அது குறித்து நான் சொன்னேன் –

———–

// சந்தேகமே இல்லை – நிஜமான அறிக்கை தான்….!!!
ஆனால் கலைஞர் மிகவும் கெட்டிக்காரர்.
வார்த்தைகளில் விளையாடக்கூடியவர்…
இன்னமும் கலைஞர் மீது நம்பிக்கை வர மறுக்கிறது…

அதென்ன ….

// சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும்
வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர
நடவடிக்கைகள் எடுக்கப்படும்” //

திமுக ஆட்சிக்கு வந்தால் – “உடனடியாக பூரண மதுவிலக்கு
அமலுக்கு கொண்டு வரப்படும் ”

என்றல்லவா இருந்திருக்க வேண்டும் அறிவிப்பு…?

———-

எப்படியாவது இருக்கட்டும்.

என் கருத்து –

கலைஞருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல்,
ஜெ.அவர்கள் தேர்தலுக்கு முன்னரே மதுவிலக்கை
அறிவித்து விடுவார் –
என்றே நான் கருதுகிறேன்.

எப்படியோ – யார் மூலமாவது தமிழ்நாட்டிற்கு
விடிவு காலம் பிறக்கட்டும்…//

————–

இதன் பிறகு, நள்ளிரவில், கணிணி வேலையை முடித்து விட்டு –
மூடுகையில், தோன்றியது – “கலைஞர் அறிவிப்புக்கு
அவரது தளத்தில் எத்தகைய ” வரவேற்பு ” இருக்கும் ….???

உடனே, கலைஞரின் முகப்புத்தகத்திற்கு சென்று பார்த்தேன்.
திருவாளர்கள் கவுண்டமணியும், செந்திலும் இல்லாமலே –
அடுத்த ஒரு மணிநேரத்திற்கு வயிறு குலுங்கச் சிரித்தேன் –
நான் பெற்ற இன்பம் – நீங்களும் பெற வேண்டாமா …?
விவரங்கள் கீழே –

——————

கலைஞரின் மதுவிலக்கு பற்றிய அறிவிப்புக்கு எக்கச்சக்கமான
மறுமொழிகள் – பின்னூட்டங்கள்…!

அதை வரவேற்று எழுதியவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி
எழுதி இருந்ததால் – அதில் விசேஷம் இல்லை.

எரிச்சலும், கோபமும், நக்கலும் – பொங்க நூற்றுக்கணக்கில் வந்த எதிர்மறை பின்னூட்டங்கள் தான் சிரிக்க வைக்கின்றன.
தமிழ் மக்கள் விழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்….
தலைவர்கள் நினைப்பது போல் – அவர்களை அவ்வளவு சுலபமாக
ஏமாற்றி விட முடியாது என்பது வெகு தெளிவாகத் தெரிகிறது…!!!

வந்திருந்த பின்னூட்டங்களிலிருந்து மாதிரிக்கு சில கீழே –

—-

Balasubramani Ramalingam உங்களால் தமிழ் நாட்டில்
ஏற்பட்ட இந்த பேரழிவிற்கு நீங்களே முடிவு கட்ட முன்வந்திருப்பது
பாராட்டதக்கது, ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் கண்டிப்பாக
மாறிவிடுவீர்கள், முத்துகுமார் எரித்து தற்கொலை செய்து
கொண்டபோது உங்களைப்பற்றித்தான் தெளிவாக
சொல்லியிருந்தாரே,

நான் சொன்னது போனமாசம்,ஆனால் இது இந்த மாசம் என்று சொல்லி மக்களை வழக்கம் போல ஏமாற்றி விடுவீர்களோ ?

Balasubramani Ramalingam ஏனக்கு வயது 60 வயதிற்கு
மேல் ஆகிறது, இது வரை திமுகதான்,கலைஞருக்காக உயிரையும்
விடதயாரக இருந்தவன்தான்,தமிழ் இனத்திற்க்கு அவர் செய்த
நம்பிக்கை துரோகத்தின் விளைவாகத்தான், இப்போது நான் நாம்தமிழர்,ஏனென்றால்

நான் 40 வருடமாக ஏதிர்பார்த்த
தலைவர் கலைஞர் இல்லை

Balakrishnaa Subbia மலிவு விலையில்
மது, பாக்கெட் சாராயம் தந்த நீங்களே
இப்படி சொல்லலாமா ஐயா?!!!!
தல சுத்துது !!!

சசி குமார் – தீவிர மதுவிலக்கை அமல்படுத்துங்கள் அதற்கு
ஏன் தயக்கம் அது என்ன பரிசிலிக்கப்படும் பரிசிலனை
பரிசிலனை செய்தேன் ஒத்துவராது என்று
காரணம் சொல்லவா? தலைவரே

பால்பாண்டி- தேனி நகர திமுக.மாவட்டபிரதிநிதி அய்யா
மது விலக்கு உறுதி என்று அறிவித்த உடனே 2016 நாம் தான் என்று உறுதியாகி விட்டது

Arun Msami ஜெயலலிதாவிற்கு பயங்ரமாக கலைஞர்
செக் மேட் வைத்துள்ளார் . ஜெ யால் இப்படி ஆட்சிக்கு வந்தால்
என அறிவிக்க முடியாது . ஏனெனில் ஆட்சியில் உள்ளதே
அவர்தான் . ஏற்கனவே கடனில் அரசு மூழ்கி தவிக்கும் போது
வருமானம் வரும் டாஸ்மாக்கை மூடினால் அரசே திவால் ஆகிவிடும்.

ஆர். தியாகு ஆமாம் தலைவரே! ஓயின்ஸ் ஷாப்பை மூடுவோம்! சாரயக்கடையை திறப்போம்!!\

Simon Siga மது விலக்கு என்று திமுக தேர்தல் அறிக்கையில்
கூறினால் ஸ்டாலின் பின்னால் இளைஞர்கள் நிற்கத் தயார்.
ஏனெனில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவதை
ஆட்சியில் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

புகழேந்தி பொறியாளர் இந்தப்பாவச்செயலை
துவக்கி வைத்ததே நீங்கள்தான். பூரண மதுவிலக்கு என்று
சொன்னால்தான் நம்புவோம். வார்த்தை விளையாட்டெல்லாம்
நம்ப தயாராக இல்லை.

Rajamani Vaikundaraj இதுதான் சாத்தான்
வேதம் ஓதுவது என்பார்களோ?

Fazil Ameen தாய் மீது சத்தியம் நான் ஆட்சிக்கு வந்தால்
மீண்டும் சாராய கடையை திறக்க மாட்டேன் என்று சொன்னார்
எம்ஜியார்,

Vaithinadan Pandurangan உங்கள் முதல் கையெழுத்து
மதுவிலக்கு என்று சொல்லுங்க…. ஐயா

Bharath Pandian – அய்யா மது விலக்கு உறுதி என்று
அறிவித்த உடனே 2016 நாம் தான் என்று உறுதியாகி விட்டது

Renga Raja – ஆனாலும் ரொம்ப குசும்புதான்
அம்மாவே அடுத்த தேர்தலுக்குள்ள மூடிவிடுவார்கள்.
நான் ரொம்ப ஆசைபடுகிறனோ? ஏன்னா அவர் டீவி கொடுத்தா
நாங்க லேப்டாப் கொடுப்போம். நீங்க முயற்சி எடுத்தா நாங்கள்
மூடியே விடுவோம். என்னமோ போங்க நல்லது நடந்தா சரி

Suresh Kumar Balaram மது என்ற அரக்கனால் மரணித்த
\மனித உயிர்கள். குடி கெடுத்த குடியினால் குலைந்து போன

குடும்பங்கள்,அத்தனைக்கும் மறு வாழ்வு மலரப்போவது தங்களது மனிதாபிமான

நடவடிக்கையால் மட்டுமே. மக்கள் உங்கள் பக்கம்.
உங்கள் வெற்றி நிச்சயம்.

Abdul Farook இழுக்கற இழுப்பே சரியில்லையே !!!
அடித்து சொல்லுங்கள் கட்டாயமாக மதுவிலக்கு நிறைவேற்றுவோம்,
முதல் கோப்பு கையெழுத்தே மதுவிலக்கு என்று சொல்லுங்க,
ஓட்டை அள்ளி எடுங்க !

அரி கரன் – என் மனம் ஏற்க மறுக்கின்றது.
இதற்கு முன் உங்கள் ஆட்சி தான் அது மட்டும் இல்லை
இதில் லாபம் கிடைப்பது திமுக அதிமுக இரண்டு கட்சி
சார்ந்தவார்கள் தான் இதில் இருத்து உங்கள் கட்சிக்கு
குறிப்பிட்ட தொகை வருமானம் வருகின்றது.
எனக்கு எப்படி தெரியும் என்றால் என் தந்தை திமுக தான்
அவர் சொல்லி தெரியும்.இது தேர்தல்கான வாக்கு உறுதி
தேர்தல் முடிந்தது காற்றில் பறக்கும்

கிராமத் தான் “கலைஞரின் வார்த்தை ஜால நாடகம்:
திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு இல்லை!”

செந்தில் தி.ஏந்தல் – தலைவரே கருணாநிதி இந்த வாயால
கடந்து ஆண்டு மதுவிலக்கு சாத்தியமற்றது என்று கூறிவிட்டு
2016ல் மதுவிலக்ககை அமல்படுத்துவேன் என்று சொல்லிறியே
உனக்கு வெட்கமா இல்ல ஆனால் அரசியலுக்காக
எதைவேனாலும் செய்யுவிங்கபோல திராவிட குடும்பம்
இனிதான் ஆரம்பமே மாற்றம்!முன்னேற்றம்!
அன்புமணிக்கு கிடைத்தவெற்றி விரைவில்
திராவிட குடும்பம் வெளியேறும்

பாட்டாளி மக்கள் கட்சி “கலைஞரின் வார்த்தை ஜால நாடகம்:
திமுக ஆட்சிக்கு வந்தால்…..தனது கண்துடைப்பு நாடகத்தை
தொடங்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.

Murugesan Dravidan என் மனநிலைய தலைவரின்
மனிநிலையும்!!! ஆர் கே நகர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
என்று ஒருநாள் பதிவிட்டேன்..மறுநாளே ஆர் கே நகர் தேர்தலை புறக்கணிக்கிறோம்

என்று தலைவர் அறிவித்தார்…
அதேபோல திமுக தேர்தல் 2016 அறிக்கைகளில் பூரண மதுவிலக்கு
வேண்டும் என்று தோழர..

Suresh Subramaniyan ஏன் முன்பு நீங்கள் ஆட்சியில் இருந்த
பொழுது மது கடை இல்லையா..??

தேர்தல் வர ஆரம்பித்தவுடனே நான் அதை செய்வேன்
இதை செய்வேன் என்று வெற்று அரிக்கை விடுவது …

Moorthysir Moorthy மது விலக்கு என்ற வாசகம்
அதுவும் உங்க ஆட்சியில் நான் ஆப்புடியே ஷாக் ஆய்டேன்.

சசி குமார் – மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய
மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில்
மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்///\\\
///\\\ ///\\\ ஏன் தலைவரே … இந்த தடுமாற்றம் ?

Kanth Prabu வார்த்தை ஜாலம், மாய வித்தை
மாய வினோதகன் அது நமது தலைவர் கலைஞர்தான்,
அவர் சொல்வார் செய்யமாட்டார்,
கடைசி காலம் தமிழகத்துக்கு சில நல்லது செய்வதாக
நினைத்தால் தயவு செய்து முதல்வர் ஆசையை விடுங்கள்
உங்களை நம்பி ஏமாந்தது போதும்.

Fros Khan மகிழ்ச்சி அடைகிறேன். கட்சியில் உள்ள
உங்கள் குடும்ப அரசியல் நீங்கிட இது போன்ற சூப்பர் ஸ்டார்
அறிக்கைகள் வெளியிடுங்கள் வாழ்த்துக்கள். நன்றி ஐயா

Sanjaigandhi Ambalakkarar அய்யோ பாவம் பாமக..!
மதுஒழிப்பு என்ற கொள்கையில் எந்த சமரசத்திற்க்கும்
இடமளிக்காத ஒரே கட்சி பாமக‌…

பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மக்கள் இனியும் உன்னிடம்
ஏமாறுவார்கள் என கனவு காணாதே கருணாநிதி

Shabudin Yacob அய்யா மது விலக்கு உறுதி என்று
அறிவித்த உடனே 2016 நாம் தான் என்று உறுதியாகி விட்டது®

Kumar Muthu தீவிர நடவடிக்கை என்பதில்
ஒரு சின்ன திருத்தம் – ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாள்,
முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல் படுத்தத்தான் என்று
தேர்தல் அறிக்கையில் வெளியிடுங்கள். ஏனென்றால்,2016
தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, 2017
தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட….

Mani Mani தீவிர மதுவிலக்கை அமல்படுத்துங்கள்
அதற்கு ஏன் தயக்கம் அது என்ன பரிசிலிக்கப்படும்
பரிசிலனை பரிசிலனை செய்தேன் ஒத்துவராது என்று
காரணம் சொல்லவா? தலைவரே

Fekdo Karate இந்த அறிவிப்பைதான் வெளியிடுங்கள்
என்று பலநாளா கெஞ்சிகொண்டிருந்தேன் அய்யா,
வாழ்கவளமுடன், நன்றிகள் பல

இலங்கைநேசன் இலங்கை இனி தீராவிசம்
இங்கு தேவையில்லை.இனி தமிழியம்.நீங்கள் உங்கள் ஊருக்கு
மூட்டை கட்டுங்கள் ஆட்டையை போட்ட பணத்துடன்.இது எங்கள் தாயகம்.இங்கு

நாம்தான் ஆட்சியதிகாரம் செய்யவேண்டும்.

பா கார்த்திகேயன் “கலைஞரின் வார்த்தை ஜால நாடகம்:
திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு இல்லை!”

Jothi Kumar Ex Mc பாழாய்ப் போன குடி பழகத்தால்
ஒரு தலைமுறை சீரழிந்து மனநோயாளிகளாக வாழும்…See More

Umanaath Venkatachalam நேரடியாக….
மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொல்லாம…..
அதென்ன தீவிர கீவிரனு இழுக்கறீங்களே…..
இந்த காலத்தில மக்கள் ஒரளவுக்கு தெளிவா தான் இருக்காங்க….
அதனால நீங்களும் பட்டுன்னு தெளிவா சொல்லுங்க தலைவரே…..

புகழேந்தி யாழினி தமிழினியன் அது எப்படி தலைவரே..?
பா.ம.க பல ஆண்டுகளாக மதுவிலக்கு கோரிக்கையை வைத்தபோது…
நீங்கள் ..

Rajesh Kanna ஐயா,
வரும் சட்டசபை தேர்தலில் மதுவிலக்கை மட்டும் தாங்கள் கையில்

எடுத்தீர்களானால் ஒட்டு மொத்த தமிழகமும் உங்கள் பின்னால்…இது

சத்தியம்…சாத்தியம்

Thanigai Vel ஐயா உங்கள் அறிக்கை வினோதமாக உள்ளது
இதன் விளக்கம் என்ன ..நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு
பற்றி தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் மற்றபடி மதுவிலக்கை
கொண்டு வருவோம் என்ற உறுதி தெரியவில்லை
ஏனெனில் நீங்கள் ஆட்சியில் இருந்தவர்கள் உங்களுக்கு தெரியும்
என்ன வென்று ..

Vinoth J Vinoth அப்ப கூட மதுவை ஒழிப்பேன் என்று
சொல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் – னு , சொன்னீங்க பாரு
அங்க தான் தலைவரே நீங்க நிக்கரீங்க ! ! ! !


Deepak Smart உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா??
முடியாதல்லவா, ஏனென்றால் நீங்களும் ஆட்சி பொறுப்பில்
இருந்ததால் அது முடியாது என்று தெரிந்த நீங்களே இப்படி கூறி
மக்களை ஏமாற்றாதீர்கள்………. அப்படி மது ஒழிப்பு முக்கியம்
என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில.

கொங்கு தங்கம் லோகு -தமிழகத்தில் மதுவைக் கொண்டுவந்து
உங்களுடைய தி.மு.க அரசு இப்போ ஏன் திடிரென்று ஞானோதயம்

Ravichandran Sivaperakasam மதுவை ஒழிப்பேன்
என்று சொல்லுங்கள் எங்கள் குடும்ப ஓட்டு அனைத்தும்
உங்களளுக்கே. இலவசம் எதுவும் வேண்டாம்.

Murugan Dmk வாழ்க கலைஞர் என்று எங்கள் சகோதிரிகள்
முழக்கம் இடுகின்றனர்

Vasanth Manoharan நல்ல வேலை இந்த படத்துல
நாங்க இல்ல. நன்றி ஐய்யா

Sanjaigandhi Ambalakkarar சாத்தான் வேதம் ஓதுகிறது
# திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு- கருணாநிதி

Aspinmuthu Raj மது விளக்கு என்று செல்லவில்லை
நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது எனவே
ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை ஏடுசிறோம் என்றே காலத்தை க
டத்தி விடுவார்கள் ஓட்டு அரசியல் மயங்க வேண்டாம்

Sagalai Raf IK இது தற்போதைய முதல்வர் நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் ஓட்டுநர் உரிமம்(பேட்ஜ்) சட்டம் ரத்து
செய்வேன் என்று சொன்னதுபோல் ஆகுமா?????

RamaRethinam Thangaiya தேர்தல் அறிக்கையில்
பூரண மது விலக்கு என்று அறிவித்தால் தளபதி முதல் வர்
ஆவது நூறு சதவீதம் உறுதி ஆகிவிடும் கலைஞர் ஐயா
மனது வைத்தால் நடக்காதது எதுவும்
கிடையாது தமிழ் மக்களை காப்பாற்ற வேறு வழிகிடையாது

Gokulakrishnan Murugesan அது என்ன நடவடிக்கை
எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்தபின் ஏமாற்றவா. தீவிர மதுவிலக்கு
அமலுக்கு வரும் என்று சொல்லுங்கள். அப்டி சொன்னாலும்
உங்கள நம்ப முடியாது.

Spsanthanam Spsanthanam தமிழ் நாட்டுல மது விலக்கு!!!
கேக்குறப்பவே? அடிச்ச சரக்க்கே எறங்கிடுச்சே! பரவாயில்லை
வாழ்க!!! வருங்கால ( கிக் இல்லாத தமிழகம் ) அப்புறம் கட்சி
காரவுங்க வருமானம்? ?? மாத்தீதீ யோசிப்போம்!!!

Karan Rajamoorthy குடிக்க ஏற்பாடு செய்ததே தாங்கள் தான்.
இப்போது ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று
கண்டதையும் உளறி வருகிறீர்கள் மக்கள் முட்டாள்கள் அல்ல..
1 · 1 hr

Loganathan Nathan மது ஒழிக மது ஒழிக என்று கோஷம் சரி
மாப்ளே குவார்டர் சொல்லு இது தான் இன்றைய

Bilal Mohamed தீங்கு விளைவித்தவனெ அந்த தீங்கை
நீக்கினால்தான் பாவ விமோசனம் கிடைக்கும்.நான் ஏற்படுத்திய.
தீங்கை நானே அகற்றுவேன் என்று அடித்து சொன்னால்தான்.
நாங்கள் நம்புவோம். இந்த வழவழ வார்த்தைகள் வேண்டாம் .

ஷாஹுல் ஹமீது மகிழ்ச்சி….. ஆனால் நடவடிக்கை எடுப்பதல்ல..
.மாறாக முதல் கையெழுத்தாக தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை
மூடுவதாக அமைய வேண்டும்…..முதல் கட்டமாக
கிராமப்புறங்களில் உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும்
இரண்டாம் கட்டமாக சிறு நகரங்கள் என இரண்டு வருடத்திற்குள்
மதுவே இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என உங்கள் பாணியில்
கையெழுத்திடுவதாக அறிவிக்க வேண்டும்…

Senthil Kumar VR Constructions தலைவா….முழு மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும் என்று பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

Vivek Anandan கலைஞரின் ஆட்சியிலேதான் மதுவிலக்கு
தளர்த்தப்பட்டது. அதற்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Vellaichamy Samy தலைவரே உங்கள் 78ஆண்டுகால
அரசியல் வாழ்க்கையில் எவ்வளவோ திட்டம் தமிழகத்திற்கு
கொணடுவந்து வரலாற்றால் மறைக்க முடியாத சக்தி என்று
நிருபித்து உள்ளீகர்கள். ஆனாலும் இன்று தாங்கள் அறிவித்துள்ள
செய்தி தான் தமிழக வரலாற்றில் பொன் எழுத்தால் உங்கள் பெயர் பொறிக்கப்பட..

Katheer Kalai ஆட்சியை பிடிக்க இவர் ஜெயாவின்
காலில்விழச் சொனால்கூட விழுவார் , . முதல்வராய்
இருந்தபொழுது மது விலக்கு என்று வாய் திறக்காத
இந்த சதிகாரர் இப்பொழுது ஆட்சியை பிடிக்க அம்மா
அவர்கள் குட்டிகர்ணம் அடிக்க சொன்னால்கூட அடிப்பார் ,
தமிழ்நாட்டை த்ருபிடிக்க வைத்த மகாபாவி கருணாநிதி , தமிளினத்ரோகியும்கூட

Smk Annadurai தங்களின் இந்த அறிக்கை சிறப்புடன்
வரலாறு படைக்கும்

Sa Moorthy 1971.ல் மதுவிலக்கு கொண்டு வந்தபோது
தி.மு.க..வில் வன்னியர்கள் யாரும் இல்லையா ?
மதுகடைகள் ஏலம்எடுத்து நடத்தவல்லையா?
உங்கள் ஏரியாவில்தான் கள்ளசாராய மரணம் அதிகம்.
எனனமோ புதுசா மாற்றம் முன்னேற்றம் எனறு

கொடியபிடிக்கிறீங்க.

Muthu Kumar தலைவரே நீங்கள் 15ந்து வருடம் மதுகடை
இருந்தாது அப்போது இல்லாத அக்கறை மக்களின் உங்களுக்கு
இப்போது வந்துள்ளது என்பதை நீனைக்கும் மிக்கமகிழ்ச்சி

மணிகண்டன் மணி இது உங்க ஈழ உன்னவிரத போராட்டம் மாதிரிதன

Magesh G Kshathriyan யாரோ கலைஞர் ட்விட்டர் ஐடிய ஹேக் பண்ணிட்டாண்டோய்..

Nichol Raj R மது விலக்கு ஒன்று போதும் தலைவா….
அத்தனைத் தொகுதியும் தி மு க வெல்லும் …அள்ளும் .
இது நிச்சயம் ஏனென்றால் நம்மை காப்பியடித்த அம்மையாரே
பாஸ் ஆகும்போது .நாம் ஒருஜினல் .

Umar Siddique எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்
என்ற நிலையில் வாக்குறிதிகள் கொடுக்க வேண்டாம் தலைவரே
மக்கள் முடிவே மகேசன் முடிவு என்று சொல்லுங்கள் மக்களிடம்
ஓட்டெடுப்பு நடத்துங்கள் மக்கள் முடிவெடுப்பார்கள்…

Shaik Abdullah இது தங்களது வாயிலிருந்தோ, தாங்களது
வாயிலாகவோ வரும் என யாரும் எதிர்பாராத சமயத்தில்
வந்த இந்த அறிவிப்பு அரசியலில் ஓர் திருப்புமுனை.
உங்களது ஆட்சி வரைக்கும் காத்திருக்க அவசியம் இல்லை.
இன்னும் சில நாட்களில் ஜெயலலிதா அறிவித்துவிடுவார்.
ஆயினும் அப் பெருமை உங்களையே சாரும்.

Naresh Mohan அது என்ன நடவடிக்கை எடுப்போம்?
நிச்சயம் ஓராண்டிற்குள் செய்து காட்டுவோம் என்று
கூறமாட்டீர்களா? ஒருவேளை இதை மட்டும் நீங்கள்
செய்துவிட்டால் 70 களில் நீங்கள் செய்த தவறுக்கு இது தான்
பிராயச்சித்தம்.
இன்று நீங்கள் சொன்னதை எதற்கும்
ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைப்போம். நாளை நீங்கள்
செய்யாவிட்டால் இது பயன்படும்.

Balaajee VR திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு
அமல்படுத்த படும் கலைஞர் அறிவிப்பு.
ஐயா கலைஞர் அவர்களே உங்கள் அறிவிப்பு மிக்க
மகிழ்ச்சி யை தருகிறது . அதுக்கு முன்னாடி உங்கள்
கட்சி கார்களின் சாராய ஆலையை மூட சொல்லி உங்கள்
வார்த்தைக்கு ஒரு நம்பிக்கையை குடுங்கள்… தமிழக மக்களுக்கு

Jhonson Christober அரசியல் சாணக்கியன்
கிரிமினல் பச்சோந்தி என்பதற்கு இது ஒன்று போதும்

Mohamed Naina இது அரசியல் இதுக்கு முன்னர்
இவங்க ஆட்சிக்கு வரல அப்போதும் இதை நிலைதான்
இப்போதும் இதை நிலைதான்

Chozhan Mani கடந்த ஆட்சியில் என்ன செய்தீர்

Narasimman Naresh அவுட்! அவுட் ! ஒரே பந்தில்
அத்தனை பேரும் அவுட். அடுத்தவர்கள் அரசியலே
பண்ண முடியாத அளவிற்கு அறிவிச்சிட்டீங்களே?

Morsi John Mishal இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு…
எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்…
திமுக கொள்கை எங்கே..

Selva Kumaran 1) இந்த மாதிரியான நாடக தன்மையை
மாற்றுங்கள். சமுதாயத்திற்க்கு தீங்கு என்று பலத்த மக்கள்
எதிர்பிற்க்கு பின்தான் ஒரு தலைவனுக்கு தெரியவேண்டுமா?
கடந்த ஆட்சியில் ஏன் செய்யவில்லை?
2) இலங்கை தமிழர்க்கு உதவாததற்கு பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.
3) குடும்ப அரசிய…

Purushothaman KR மதுவை கலைஞர் கொண்டு வராமல்
வேறு யாரு கொண்டு வந்தது.? பழைய திருடன் யாரும்.
இனி ஆட்சிக்கு வர முடியாது. புது திருடன் எனாவது வரனும்., . .

Sivaraj Sivaraj இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்வீர்கள் .
மீண்டும் அடியா?

Kanniappan Elangovan பம்மாத்து. தனது கட்சி
உறுப்பினர்களின் கருத்து என்ன அறிவாறா? பாண்டிச்சேரியில்
என்ன கொள்கை? அறவிப்பாரா?

Saravanan Mohan அய்யா தலைவரே இந்த வயசிலும் இவ்வளவு தந்திரமாக
அரசியல் செய்யும் தலைவரை உலகம் இன்று வரை கண்டு இருக்காது எமகாதகன்
ஐயா நீங்க!!!

Magesh G Kshathriyan பாமக அறிக்கையை கலைஞர் காப்பி அடிக்குரார்ன்னு சொன்னா யாராவது நம்புநீங்களா..
இதோ ஆதாரம்..

Kannan R 5 முறை முதலமைச்சராக
இருந்த நீங்கள் எங்கள் சின்ன அய்யா விற்கு பயந்து
இந்த அறிக்கையை …

Vignesh Vicky எலகெசன் டைம்மு பீல் ஆய்டாப்ல
எலகெசன் முடிஞ்ச கூல் ஆய்டுவாப்ல

Akilan Selvin திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று முடிவே

செய்துவிட்டீர்களா!!!!
அதனால்தான் முடியாத திட்டங்களை அறிக்கையாக
அள்ளிவிடுகிறீர்களோ!!!!

Kadhiravan Ajith என்னடா இது .. நரி இன்னும்
ஊளை இடலையே நு நினைசேன் ..
மக்களே இது …கட்டு மரத்தின் கபட நாடகம் ….
இந்த வயசுலயும் எப்படி கிரிமினல் தனமா யோசிக்குது பாருங்க
கட்டு மரம்… இப்போது மதுவை எதிர்த்து குரல் கொடுத்து
கொண்டு இருக்கும் (திரு , வைகோ ,அன்புமணி, ,,,,

Aravindh FX மதுவை கொண்டு வந்ததே நீ தான் தல!
தமிழகத்தில் மது வேண்டாம் என்று திரு இராஜாஜி அவர்கள்
கொட்டும் மழையில் உங்கள் வீட்டிற்கே வந்து கெஞ்சினர்
மறந்துவிட்டிற்காள தல!உங்களுக்கு ஆட்சியை பிடிக்க கடைசி
அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளீர்??

நீங்கள் யார் என்பது தமிழகமக்களுக்கு நன்றாக தெறியும் தல!
உன் கபட நடகம் மக்களிடம் இனிமேல் எடுபடாது!!!.

Galif Deen இனியும் இந்த மக்கள் அரசியல்வாதிகளை எப்படிதான் நம்புகிரர்களோ

Rabeek Raja சாராயக்கடையவும்,கள்ளுக்கடையவும்
திறந்ததை இந்த சன்டாளன் கருணாநிதிதான்.
அவருபூரனமதுவிலக்கு கொன்டுவருவாரு
ஆனா வரமாட்டாரு.
உயிர்த்தெழ முடியாது..

Raju Vanniyar மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று
உறுதியாக சொல்லவில்லையே.அடப்பாவி உன் குடும்பம்
சின்னா பின்னமாக சிதைவை நோக்கி செல்வதை பார்த்துமா
உனக்கு புத்திவரவில்லை.மக்கள் பாவன்
உன் குடும்பத்தை என்றும் விடாது….

Richard Job கிறிஸதுவர்களை அசட்டைப்பண்ணி
பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு
மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக சன்
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் எல்லா மூடநம்பிக்கை
வளர்க்கும் நிகழ்ச்சிகளுக்கு முதலில் முற்றுப்புள்ளி
வையுங்கள ் திமுக வுக்கு எதிரானவர்களின் திரைப்படம்
சீரியல்களை ஒளிபரப்ப தடைவிதியுங்கள் பிறகு ஆட்சிக்கு
வருவதைப பற்றி யோசியுங்கள் ்

ஆ.சி.பழனி முத்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதே டாக்டர் அன்புமணி அவர்கள். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி

Rajash Kanagaraj ராமாயணத்தை கூனி இல்லாமலும்,
மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ
அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை திமுக இல்லாமல்
எழுத முடியாது என்பது தானே உண்மை. அதிமுக ஆட்சியில்
முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள…

Venkat Raman பாமகவின் கோரிக்கையை ஏற்றதற்க்கு நன்றி.

Venkatesan Duraisamy இலங்கையில் அப்பாவி தமிழர்களை
கொண்று குவித்தபோது வேடிக்கை பார்த்தவரா மது விலக்கு
தீர்மானம் கொண்டு வரபோரார் இது நாடகம்

நாம் தமிழர் செந்தில் குமார் நீயும் பல தடவ சொல்லிட்டு
பதிவில இருந்துருக்க. உன் வம்சம் மட்டும் தான் ஏற்றம்
அடைந்ததே தவிர உன்னையும், அந்த அம்மாவையும் நம்பி
ஓட்டு போட்ட நாங்க அப்படியே தான் இருக்கோம்.
போதும் உங்களை நம்பியது. 2ஜிலா எவ்வளவு அப்பப்பா .
போதும்டா சாமி மாற்றம் வேண்டும்.
இது திமுக அதிமுக வாள முடியாது.

Siva Ram அய்யா முதல்ல உங்க கட்சிக்காரங்க
மது அருந்தக்கூடாது என இன்றே உத்தரவிடுங்க பாக்கலாம்.

பாட்டாளி மக்கள் கட்சி- தமிழினத்தைக் கொன்ற துரோகியே

Ramesh Venkatraman If you have conscious
please accept the sin you committed 40 years
back inspite of advise by elder statesman Rajaji
literally begging you at your house
.

Murali France மருத்துவர் அன்புமணி முதல்வராக.,
பாமக ஆட்சியில் மட்டுமே தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம்.!

இந்த உலகம் இன்னுமா உங்களை நம்புது தலீவரே.!..

Marimuthu Ramasamy Marimuthu எனக்கு வரும்
கோபத்தில் பாதக்குறடெடுத்து பன்னூறு முறை அடிக்க
வேண்டும் போல் உள்ளது. வயது என்னைத் தடுக்கிறது.
இன்றைய இழிநிலைக்கு வித்திட்டது யார்?

தமிழ் செல்வன் தீவிர நடவடிக்கை எடுத்து நீங்க
முடிப்பதற்குள் ஐந்தாண்டு முடிந்து விடும். மீண்டும்
காதை காட்டி கொண்டு நிற்க யாரும் தயாராக இல்லை.
இன்னும் ஐந்தாண்டுங்கள் ஓய்வில் இருங்கள்.
யாரும் ஏமாறுவதற்கு இல்லை.

Sethu Baskar தமிழகத்தாய்மார்களின் தாலியை காக்க வந்த
தாயுமானவர்…….!!!வாழ்க!

இசன் பட்டுக்கோட்டை -பாலுக்கு காவல் பூனைக்கு தோழன்

Mselumalai Malai பா.ம.க.ஆட்சி வந்துவிடுமோ பயமா.
இன்றுதான் மதுவை பற்றிய. ஞாபகம்.

Arun Sethuram இதை போனா ஆட்சியிலே செஞ்சிருக்கலாம்
இதை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
ஆனா திமுக 2016ல் ஆட்சி அமைச்சாத்தானே தலைவரே
கனவிலும் கூட நெனச்சிடாதீங்க ஆட்சி அமைப்போம்னு!..

Vasanth Manoharan ஐயா நீங்கள் எதிர்கடசியை ,
ராமதாசை வாக்குவாதத்தால் வெல்லும் திறமையுள்ளவர்
ஆனால் இப்படி எங்களை மாட்டி விடாதிங்க ஐய்யா.
பாவம் இந்த மானவர்கள்
இன்னைக்கு வீட்ல சோறு கிடைக்காதுஃ

Eswar An இப்போ பாருங்க
உங்களுக்கு போட்டியாக ஜெயலலிதா அம்மையார்
அடுத்த வாரமே தமிழகத்தில் பூரண மது விலக்கு சட்டம்
கொண்டு வந்தாலும் வரலாம்

Siva Ram அய்யா முதல்ல உங்க கட்சிக்காரங்க
சாராய ஆலையை மூடுங்க இன்னைக்கே

புகழேந்தி யாழினி தமிழினியன் கண் கெட்ட பின்பு
‘சூரியன்” நமஸ்காரம் ஏன் தலைவரே..?

ரவி சங்கர் அய்யா குடிகாரங்க ஓட்டு வேணாமா

Ajush Aju மது பிரியர்கள் ஓட்டு கிடைக்காது,,,
சுமார் 2 கோடி ஓட்டுக்கள்

Mars Siva இவன நம்பாதீங்க. இவன நம்பித்தான்
என் தமிழினமே அழிந்தது. நானும் திமுக கட்சிகாரன்தான்
2009 க்கு முன்னால. இவன் தமிழின துரோகி .ஓநாய்

Smart Suresh நான் எனது மது தொழில்சாலையை மூட
நடவடிக்கை எடுக்கிறேன் கருணாநிதி,
Thanks to Anbumani.

Yazhini Naval எதுக்கும் T.R. பாலு, ஜெகத்ரட்சகன் போன்ற
மதுபான அதிபர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக்குங்க !!!!

Sekar Sekar இரண்டு பேரும் திருட்டு பயலுக நம்பாதிங்க……?

Magesh Nm வரவேற்கிறேன் ஐயா
TR.பாலு அவர்களின் சரக்கு கம்பெனி என்னாகும்

வினோத் சுந்தரம்- தலிவரே ஏதோ போதையிலே உளறாரு

Haribala Krishna Super Comedy

Smart Suresh நான் எனது மது தொழில்சாலையை மூட
நடவடிக்கை எடுக்கிறேன்- கருணாநிதி.

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி effect,
Thanks to Anbumani.

பா கார்த்திகேயன் அட பண்ணாட பசங்களா –
அவுரு எங்கடா பூரண மது விலக்குன்னு சொன்னாரு……

புகழேந்தி யாழினி தமிழினியன்- மது ஒழிக்க
ஏதாவது போராட்டம்.,
உண்ணாவிரதம்.,நடத்தும் திட்டம் இருக்கீறதா தலைவரே..?

விண்மதி விண்மதி அய்யா பாத்து பேசுங்கள் இன்று
குடிக்காதவங்களே இல்ல அதனால 100க்கு 85%பேர் ஓட்டு
பரிபோயிடும்.அப்புறம் ஆட்சிக்கே வரமுடியாது.

நண்பன் பிரபு அரசியல் வாதி பேச்சு விடிஞ்சா போச்சு.
சும்மா காமெடி பன்னாதிங்க பாஸ் டாஸ் மாக்க மூடிட்டா
அரசியல்வாதிகள் எங்க போய் சம்பாதிப்பாங்க???

Raju Vanniyar
.அன்புமணி மேல் இவ்வளவு பயமா

Batcha Malick வாழும் வரலாறே வணங்கி மகிழ்கிறேம்

Naveen Kumar ஒரு பய நம்ப மாட்டான்!

Naveen Kumar நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு கொண்டுவருவோம். கருணா(2G)நிதி…
கண்டிப்பா ஜெயிக்க முடியாதுனு உனக்கே தெரியும்!
ஏன் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இனணப்பேன் கூட
சொன்னாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல….

Gurumoorthy Chandrasekar டோர் டெலிவரி கொடுப்பாங்க
இரட்டை விலைல கல்ல சாராயம்

தமிழ் செல்வன் தமிழகத்தில் மதுவிற்று கோடிகள் சேர்த்த
கருணாநிதியாரே… நீங்கள் பதுக்கி வைத்துள்ள கோடிகளில்
ஒரு பகுதியை தமிழகம் முழுவதும் மதுபோதையால்(உங்களால்)
அளிந்த குடும்பங்களுக்கு தற்போதே கொடுத்து உதவலாமே!!!
கொடுக்க முன் வருவீர்களா கருணாநிதியாரே..?

———————

போதும் முடித்துக் கொள்கிறேன்..!!!

பின் குறிப்பு – இதில் பெஸ்ட் கமெண்ட்ஸ் எது என்று
யாராவது சொல்ல முடியுமா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to கலைஞர் பேஸ்புக்கில் கவுண்டமணி-செந்தில் ….!!!

 1. drkgp சொல்கிறார்:

  1. Selvakumaran 2. Rajas kanagaraj

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நல்ல தேர்வு – நன்றி Dr.KGP.

   —————–

   Selva Kumaran 1) இந்த மாதிரியான நாடக தன்மையை
   மாற்றுங்கள். சமுதாயத்திற்க்கு தீங்கு என்று பலத்த மக்கள்
   எதிர்பிற்க்கு பின்தான் ஒரு தலைவனுக்கு தெரியவேண்டுமா?
   கடந்த ஆட்சியில் ஏன் செய்யவில்லை?
   2) இலங்கை தமிழர்க்கு உதவாததற்கு பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.
   3) குடும்ப அரசிய…

   Rajash Kanagaraj ராமாயணத்தை கூனி இல்லாமலும்,
   மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ
   அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை திமுக இல்லாமல்
   எழுத முடியாது என்பது தானே உண்மை. அதிமுக ஆட்சியில்
   முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான்
   என்று கூறியிருக்கிறீர்கள…

   ——————-

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. shiva சொல்கிறார்:

  Some interesting comments from Dinamalar
  மெட்ரோ ட்ரைன்ல டிக்கெட் இருந்தா தான் கதவு திறக்குமாம். இந்த சிஸ்டம் அன்னைக்கே திருவாரூர் ரயில் நிலையத்தில இருந்திருந்தா தமிழ் நாடே பிழைத்து இருக்கும்…

  திருமங்கலம் பார்முலாவின் பிதாமகரே, வேட்டி கட்டிய சிதம்பரத்தின் பாதுகாவலரே, சொற்ப ஓட்டுக்களில் (துறைமுகம்) கசமுசா செய்து வெற்றியை தக்கவைத்துக்கொண்ட ஒற்றை ரோஜாவே, … இப்படி தங்களின் கடந்தகாலப் புகழ்பெற்ற அடையாளங்களை தமிழக மக்கள் அறியாத ‘ மட்டிகளா அன்றி மரமண்டைகளா ‘ தலைவரே… இப்போது ஏன் பிதற்றுகின்றீர்கள். ஆளில்லா இடத்தில் வாள்வீச்சு எதற்கென்று கேட்டீர்? நடக்க இருப்பது போரல்லவே…போட்டியிடும் தலைவர்கள், மக்கள் மத்தியில் தமக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் இடமல்லவா தேர்தல் களம்? இப்போது நீர் திருவாய் மலர்ந்தருளி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவுள சீட்டு எடுத்து பிதற்றும் இந்த மது உண்ணாமையை உங்கள் அய்யன் வள்ளுவர் சொன்னபோது மூளை மண்டையின் பின்னால் ஒளிந்துகொண்டதோ? மூதறிஞர் ராஜாஜி தள்ளாத வயதிலும் உடல்நலக்குறைவுடன் தங்களை இரவில் தங்கள் இல்லம் தேடி வந்து மதுவிலக்கை விலக்காதீர்கள் என்று கெஞ்சியபோது எப்படியெல்லாம் ஏகடியம் பேசினீர்கள்? நினைவில் உள்ளதா அல்லது நான் இப்போது எடுத்துக்கூறட்டுமா? 1971 ஜூன் மாதம் கோவை செயற்குழு கூட்டத்தில் மதுவிலக்கை விலக்குவதற்கு கூறிய காரணங்கள் அனைத்தும் பொய்த்துப்போனதோ? இன்று மதுவிலக்கு தேவை என்று மனதில் தேர்தல் சுரத்தினை நினைவில் வைத்து கூறும் நீவிர், உங்கள் அருந்தவப்புதல்வர் பிள்ளையோ பிள்ளையார் அவரிடம் இந்த கருத்தினை தந்தை என்ற முறையில் வலியுறுத்தாதது ஏன் என்று விளக்க முடியுமா? 1971 லும் பின்னர் 1989, 1996 கால கட்டங்களில் இரத கஜ துரக பதாதிகளுடன் கோலோச்சியபோது எந்த கடையினை எந்த உடன்பிறப்பு எடுத்து நடத்தவேண்டும், எந்த கடையினை எந்த உளுத்தம்பருப்பு எடுத்து நடத்த வேண்டும், என்றெல்லாம் அருள்வாக்கு கூறி , உளுத்தம்பருப்பு மற்றும் உடன்பிறப்பு கோல்மால்புர சந்நிதானத்துக்கும் சி ஐ டி காலனி சந்நிதானத்துக்கும் செலுத்தவேண்டிய அன்றாட கப்பத்தொகையை நிர்ணயித்த பெருமகனல்லவா நீவிர் வாழிய நின் கொற்றம் வாழிய நின் சூது வாழிய நின் கபட நாடகம் மக்கள் முட்டாள்களல்ல, இது புரியப்போவது, வர இருக்கும் தேர்தலில் ஏற்கனவே 2006 தேர்தலில் நீவிர் ஒவ்வொருவருக்கும் அளித்த இரண்டு ஏக்கர் நிலம் மனதில் அழியாமலே உள்ளது…

  கலைஞரின் தற்புகழ்ச்சி ஆர்வத்தை கண்ட அவ்வையார் பாடிய பாடல், ஒன்றானவன் நீயே ஆயுள் முழுக்க கழக தலைமை என்றானவன். . . . . .இரண்டானவன் நீயே இரண்டாம் எண்ணால் உலகப்புகழானவன் . . ( 2 ஜி ) மூன்றானவன் ..நீயே மூன்றானாவன்,மூன்று தமிழையும் விற்று பணமாக்கினவன் . . . . . . . .நான்கானவன்,நான்காம் தலைமுறையிலும் பதவி ஆசை தீராதவன் . . .. ஐந்தானவன்,நீயே சோனியாவுக்கு ஐந்தாம் படை என்றானவன் …. ஆறானவன் . .நீ ஆறானவன்..தமிழர் நலனுக்கு மாறானவன் . . . ஏழானவன்,உன் வாரிசுகளாலே பாழானவன். . .நீ பாழானவன்.. . . . எட்டானவன் , தமிழக வாரிசு அரசியலுக்கு வித்து ஆனவன் . . .. நவம் ஆனவன், நீயே நவமானவன், யார் மீதும் நவபாஷானா வசவுகளை வீச தயங்காதவன் . . பத்தானவன் நீயே பத்தானவன் , பதவி ஆசையில் என்றும் பித்தானவன் ..நீ என்றும் பித்தானவன்

 3. Pingback: கலைஞர் பேஸ்புக்கில் கவுண்டமணி-செந்தில் ….!!! | Classic Tamil

 4. paamaran சொல்கிறார்:

  பெஸ்ட் கமெண்ட்ஸ் :—- 1. Saravanan Mohan அய்யா தலைவரே இந்த வயசிலும் இவ்வளவு தந்திரமாக
  அரசியல் செய்யும் தலைவரை உலகம் இன்று வரை கண்டு இருக்காது எமகாதகன்
  ஐயா நீங்க!!! 2. விண்மதி விண்மதி அய்யா பாத்து பேசுங்கள் இன்று
  குடிக்காதவங்களே இல்ல அதனால 100க்கு 85%பேர் ஓட்டு
  பரிபோயிடும்.அப்புறம் ஆட்சிக்கே வரமுடியாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இதுவும் பிரமாதம் நண்பர் பாமரன்.
   (முக்கால்வாசி பின்னூட்டங்கள் பொருத்தமாகவே
   இருப்பது போல் தோன்றுகிறதோ …! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. today.and.me சொல்கிறார்:

  பெஸ்ட் கமெண்ட் :—- The One and Only Mu.ka.

  //மதுவிலக்கு சாத்தியமில்லை என்றாலும் அதை சாத்தியமாக்க வேண்டும் –
  சற்றுமுன் கருணாநிதி பேட்டி (Sun news)//July21, 7.45 pm.

  இவரை அடித்துக்கொள்ள வேறு யாராலும்முடியாது.

  🙂 🙂 😀

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்டுமீ,

   சந்தேகமே இல்லை …
   இவர் இருக்கும் வரை இவர் தான் அடுத்த (?)முதல்வர்.
   பாவம் – ஸ்டாலின் அவர்களுக்கு சான்ஸே இல்லை…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. today.and.me சொல்கிறார்:

  இன்னொரு போட்டி கமென்ட்

  //முதலில் திமுகவினர் தங்களின் மது ஆலையை மூடுங்கள்.பிறகு மது கடைகளை மூடலாம் – பாமக ராமதாஸ்//

  ஹையோ ஹையோ
  😀 😀

 7. Arun சொல்கிறார்:

 8. Siva சொல்கிறார்:

  Dear KM Ji
  I regret to say that y(our) blog is loosing the neutrality (the very basic criterion that attract hundreds and thousands of readers here).

  I do not understand that why you need to unnecessarily argue (repost others comments) about m. Karuna/j.jeya what they did or not in the past, in relation to alcohol prohibition. We need to think positively what can be done in future to regulate the use of alcohol!

  Both m.karuna and j.jeya are not pure gold to be subjected/discussed for further testing. Both are same mattai in a dirty kuttai. This applies to other politicians in Tamil Nadu and any where in India.

  I think that we can focus only on good discussion how to control alcohol sale/use in a reasonable way.

  It is impossible to complete (100%) ban because alcohol has been produced and used even before start of civilization. So we have to find out the ways to regulate its use and misuse.

 9. Ganpat சொல்கிறார்:

  best கமெண்ட் ;;இங்கு இல்லாதது.. 🙂
  Karuna promises liquour free TN if elected to power-Headlines

  சரியா போச்சு! இப்போ இந்த விலை விற்கும்போதே இப்படி வாங்கி குடிக்கிறாங்க
  இவர் free ஆக்கப்போறேன் ன்னு வேற சொல்றார்.மாநிலம் உருப்பட்டா மாதிரிதான்.
  -விஜயகாந்த்.

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Mr. Ganpat –

  F A N T A S T I C imagination…!!!

  with all best wishes,
  Kavirimainthan

 11. Thomson சொல்கிறார்:

  Dear KM Ji,

  I’m totally agreeing with Siva. I hope nowadays you are totally targetting Karunanithi or BJP and keeping full silent on the issues in TN.
  I would like to read the reality on the TNEB corruptions from your wordings… at least the truth. I’m reading from other sources that TNEB is in dept of 5000 cr. At least I thought you’ll be posting your views on Adahi’s new venture with TN govt. (Rs. 7 for TN and Rs. 6 for MP)
  People like us would love your neutrality on all the issues. I feel the blog is becoming bit biased. Please forgive me if I’m saying anything wrong.

  And for the record I’m a big hater of Karunanithi and BJP.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.