அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்கள்…. தண்டனை என்பது திருந்தவா – அல்லது உயிர் உள்ள மட்டும் சிறையிலேயே இருந்து வருந்தவா …?

gallows-

தவறு செய்தவர்களை சிறையில் போடுவது எதற்காக …?

செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கவும்,

மற்றவர்கள் – அதைக்கண்டு தவறு செய்யாமல் இருக்க
ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தவும்,

தவறு செய்தவர் சிறைச்சாலையில் சில காலம் இருந்து –
தன் தவறுகளை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளவும்,
திருந்தவும் – வாய்ப்பு கொடுக்கவும்,

தண்டனையை அனுபவித்த பின் வெளியே வந்து –
நல்ல வாழ்க்கை வாழவும் தானே …?

தூக்கு தண்டனை யாருக்கு விதிக்கப்படுகிறது …?

மனசாட்சியே இன்றி பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு –
இவர்களை சமுதாயத்தில் மீண்டும் நடமாட விட்டால் –
அவர்களால் மீண்டும் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத
அளவிற்கு கேடு உண்டாகும் என்று –
கருதும் பட்சத்தில் தானே …?

———–

இதற்கு மாறாக –
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் உள்ள வரை சிறையில்
இருக்கத்தான்…

உயிர் உள்ள வரை , செய்த தவறை
எண்ணி எண்ணி வருந்தி கொண்டே சிறைக்குள் இருக்கத்தான் –
என்கிற புதிய சிந்தனை வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது…!

அதுவும் இத்தகைய சிந்தனைகள் எந்த மட்டத்தில் –
யாரிடத்தில் வந்திருக்கிறது என்பதைப் பார்க்க
மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது…

முதிர்ச்சியற்றவர்கள் முடிவெடுக்கும் நிலையில்
இருந்தால் – நீதியின் கதி என்னாகும் ..?

—————

ஆயுள் தண்டனை பெற்றவர்கள் –
14 ஆண்டுகள் சிறையில் கழிந்த பின்னர்,
அவர்களின் சிறைக்கால வாழ்வையும், நடத்தையும்
பரிசீலனை செய்து, அவர்கள் தண்டனையை
முடித்து வைத்து – விடுதலை செய்யலாமா என்று
ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும்
என்பது தானே நடைமுறை.. ?

– சில வழக்குகளில் மட்டும் இந்த பரிசீலனையே வேண்டாம் என்று புதிதாக ஒரு விதி கொண்டு வருவது சரியா…?

————-

மக்கள் கருத்தை மதிக்காத எந்த அரசும் –
நீடித்து பதவியில் இருக்க முடியாது.
யாரும், எந்த பதவிக்கும் நிரந்தரமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல…

ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்தின் மக்கள் அனைவரும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
அடங்கிய சட்டமன்றத்தால், ஒருமனதாக ஒரு
தீர்மானத்தை, வேண்டுகோளை – நிறைவேற்றி அனுப்பிய
பிறகும், மத்திய அரசு அதை குப்பைக்கூடையில்
தூக்கியெறிந்து விட்டு,

தன் இஷ்டம் போல் செயல்படுமானால் –
மீண்டும் ஒரு நாள் அந்த அரசின் பிரதிநிதிகள் –
இதே மக்களின் முன் வந்து நிற்கும்போது –
அதன் விளைவுகளை நிச்சயம் சந்திக்க நேரிடும்…..

———–

என்ன நடந்தாலும் –
நம்மால் என்ன செய்ய முடியும்
என்று கை கட்டி, வாய் பொத்தி –
நிற்கத்தான் வேண்டுமா ..?
இது தான் ஜனநாயகமா …?

ஒரு ஜனநாயக நாட்டில்
இறுதி முடிவு எடுக்கப்படும் முன்னர் –
குறைந்த பட்சம் தாங்கள் இதை விரும்பவில்லை என்று
சொல்லவாவது மக்களுக்கு உரிமை இருக்கிறதல்லவா …?

யாரையும், எந்த அமைப்பையும் –
அவமதிக்கும் நோக்கமின்றி –
ஒரு சுதந்திர நாட்டில் வாழும் நமக்கு
நம் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு
என்றே நம்புகிறேன்.

இறுதி முடிவு இன்னமும் எட்டப்படாத நிலையில் –
இப்போது கூட மக்களும், அரசியல் கட்சிகளும்
தங்கள் விருப்பத்தை உரக்கச் சொன்னால் –

உரிய முறையில் சொன்னால் –
மத்திய அரசு முன்னெடுத்த நிலைகள் மாறவும் –
அதன் விளைவாக நல்ல முடிவு எட்டப்படவும்
வாய்ப்பு உருவாகக்கூடும்… என்பது என் எண்ணம் -விருப்பம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்கள்…. தண்டனை என்பது திருந்தவா – அல்லது உயிர் உள்ள மட்டும் சிறையிலேயே இருந்து வருந்தவா …?

 1. thiruvengadam சொல்கிறார்:

  It is crystal clear whom to this refer. We may have a note of the past happening in this. After Apex court nod , the rush to take credit, on a subject of a general public expectations, some unpleasant act to the higher level , slightly as a warning with time bound ultimatum to proceed has evoked their desire to show their mighty. The current administration may be in the calculation if they get any chance to strength their party here. Let us pray for a good sooner

 2. Pingback: அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்கள்…. தண்டனை என்பது திருந்தவா – அல்லது உயிர் உள்ள மட்டும் சிறையி

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஐயா.. இந்த மாதிரி சட்டத்தை விவரிப்பதில் பா.ஜ.கா தவறு செய்கிறது. நோக்கம் பழுதில்லை.

  1. கோர்ட் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறது. அதை மாற்றி, ஆயுள் தண்டனை ஆக்குகிறது. இது நம் முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட விஷயம். அரசியல் படுகொலை. நம் நாட்டு இறையாண்மைக்கு விடுவிக்கப்பட்ட சவால். அவர்களை விடுவிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது குற்றத்தை எண்ணி வருந்தக் கொடுக்கப்பட்ட வாய்ப்பல்ல. இவர்கள் தமிழர்கள் என்ற நிலை நாம் எடுத்தால், யாகூப் மேனன் இஸ்லாமியர் என்ற நிலையை ஜவாஹிருல்லா எடுக்கிறார். இதற்கு முடிவே கிடையாது.
  2. இது மத்திய அரசு (இந்தியா) சம்பந்தப்பட்ட வழக்கு. இதற்கு மானிலத்துக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், நாளை, பீகார் மானிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்னாட்டில் குற்றம் புரிந்து, அதை பீகார் மானிலம் கவனத்தில் கொள்ளாமல் விடுதலை செய்வதற்கு நிகரானது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
  3. நம் நாட்டுக் குற்றவாளிகளுக்கு, அவரவர் செய்த குற்றத்திற்கேற்ப தண்டனை வழங்கப் படுகிறது. அது அவர்கள் திருந்தும் நோக்கில் வழங்கப்படுவதாலேயே, பலவிதமான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிட்டுகிறது. தூக்குத் தண்டனை பெற்றவர் கூட, பல வித ‘கருணை மனுக்களை’ அனுப்பும் நடைமுறை இருக்கிறது. இதில் தவறு இல்லை.
  4. இந்த நாலு பேரைவிட, ஏராளமான கைதிகள் குற்றம் நிரூபிக்கப் படாமல், ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலேயே, சந்தேகத்தின்பேரில் வாடுகிறார்கள். இதில் இஸ்லாமியரும், ஏழைகளும் ஏதிலிகளும்தான் மிக மிக அதிகம். அவர்களுக்காகத் தமிழர் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்த நான்கு குற்றச் செயல்கள் புரிந்த, அதற்குத் துணையாக இருந்தவர்களுக்கல்ல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் நெல்லைத் தமிழன்,

   உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவைஅல்ல.
   தவறான கண்ணோட்டங்கள்… தவறான உதாரணங்கள்….
   உங்களின் அனைத்து கருத்துக்களுக்கும்
   விளக்கம் அளிக்க இயலும்…

   ஆனால், இன்றைய சூழ்நிலையில், இந்த இடுகையில் –
   நான் அதைச் செய்ய விரும்பவில்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    வயதில் பெரியவர், மற்றும் அனுபவங்களில் முதிர்ந்தவர் நீங்கள். உங்கள் கண்ணோட்டம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சமயத்தில் எனக்குச் சரி என்று தோன்றியவைகளை எழுதியுள்ளேன். தவறாகப் பட்டால் எப்போதும் நீங்கள் Edit செய்யலாம். அல்லது பிரசுரிக்காமலிருக்கலாம்.

 4. Paramasivam சொல்கிறார்:

  திரு நெல்லை தமிழன் சரியாக கூறுவதாக நானும் நினைக்கிறேன். தவறான கண்ணோட்டங்களாக தோன்றவில்லை.

 5. CHAKRAR சொல்கிறார்:

  குற்றம் நடந்தவுடன் தீர்ப்பை உடனே வழங்கியிருக்க வேண்டும்
  தூக்காக இருந்தாலும் ஆயுளாக இருந்தாலும் சரி
  ஆயுளாக இருந்தால் தண்டனை காலம் முடிந்தவுடன் விடுதலை செய்ய வேண்டும்
  யாகூப் மேனனாக இருந்தாலும் பேரறிவாலானாக இருந்தாலும் சரி
  சட்டம் எல்லாருக்கும் ஒன்றதான்
  இதாலியகாரியின் கணவனாக இருந்தாலும் சரி சாதாரண இந்திய குடிமகனாக இருந்தாலும் சரி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.