அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….!!!

dr.anbumani interview

தந்தி டிவியில் நேற்றிரவு
பாட்டாளி மக்கள் கட்சியின்
முதல்வர் வேட்பாளரான டாக்டர் அன்புமணியுடன் –
தந்தி டிவி திரு ரங்கநாத் பாண்டே நிகழ்த்திய ஒரு பேட்டி
ஒளிபரப்பாகியது.

அரசியலில் ஆர்வம் உடையவர்கள் அவசியம் பார்க்க
வேண்டிய பேட்டி இது.

முதல்வர் வேட்பாளரின் முக அசைவுகளும்,
உடல்மொழியும் ( body language ) – பல செய்திகளை
நமக்கு சொல்லாமலே உணர்த்துகின்றன.

பேட்டி எடுத்த ரங்கராஜ் பாண்டே நல்ல தயாரிப்புடன்
(good home work ) வந்திருந்தார்.

ஆனால் எனக்குத் தெரிந்து பாண்டேயின் ஒரு
சறுக்கல் –

( நீங்கள் பார்க்கும்போது இன்னம் சிலவும் தென்படலாம்…)

டாக்டர் அன்புமணியின் மீது நிலுவையில் உள்ள இரண்டு
சிபிஐ வழக்குகள் பற்றி
( மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி
கொடுப்பதில் நிகழ்ந்த ஊழல் குறித்தவை )
பாண்டே ஏனோ கேட்கத்தவறி விட்டார்….!!!

பின் குறிப்பு –

இந்த பேட்டி குறித்த தங்கள் கருத்துக்களை
பின்னூட்டங்களில் வெளிப்படுத்துமாறு,
நண்பர்களை வேண்டுகிறேன்.

—————-

நண்பர்கள் பார்க்க – லிங்க் கீழே –

http://www.thanthitv.com/Video/VideoListing.aspx?channelID=2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  கரெக்டா பிடிச்சீங்க சார்.

  அந்த் கேள்வியையும் கேட்டிருந்தால் – அன்புமணி அய்யா
  திணறுவதையும், சமாளிப்பதையும் பார்த்திருக்கலாம்.

  Ranganath Pandey has failed.

 2. seshan சொல்கிறார்:

  among all other political leaders…. this guy has some potential…….

  take JJ…..not reachable any body….god only knows …

  mk….only commision agent….

  stallion …..not big hope…..after mk only his caliber will come to know….

  vkanth……..not in this world…

  bjp……….every body talking too much…

  cong. & commu…………………………..already in underground….and they going towards same direction…

  so atleast this guy answering the question …. but his team is the big minus for him…

  let us hope for some magic only…..

 3. Pingback: அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….!!! | Classic Tamil

 4. இளங்கோ சொல்கிறார்:

  1) இந்திய அரசியல் சரித்திரத்திலேயே முதல் தடவையாக
  எம்.பி.யாக கூட ஆகாத நிலையிலேயே ,
  கூட்டணி பிரஷர் கொடுத்து கேபினட் அமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாகபறித்துக் கொண்ட இருவர் திருவாளர்கள்
  தயாநிதி மாறனும், டாக்டர் சின்ன அய்யாவும்
  மட்டும் தான்.
  2) முதல் தடவையாக அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதே
  இரண்டு ஊழல் வழக்குகளில் சிக்கிய பெருமை
  சின்ன அய்யவுக்கு உண்டு.
  3) மருத்துவ கவுன்சிலும், பின்னர் உயர்நீதிமன்றம் நியமித்த
  குழுவும் அனுமதி மறுத்த நிலையில், தானாகவே
  இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்
  என்பதை இதுவரை சின்ன அய்ய இன்னும்
  தமிழக மக்களுக்கு விளக்கவே இல்லை.
  4) அனுமதி வழங்கப்பட்ட தினத்தன்று சம்பந்தப்பட்ட
  மருத்துவ கல்லூரி ஓனர்கள், இவரை சந்தித்துப் பேசியதாக
  கூறப்படுவதை சிபிஐ விசாரித்து அதன் பேரில் தான்
  வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்பது தானே உண்மை ?
  5) பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மீது விசாரணை
  வந்தாலே, விசாரணை முடியும் மட்டும் சம்பந்தப்பட்ட
  அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது வழக்கமாக
  இருக்கும்பொது,
  இரண்டு கிரிமினல் வழக்குகள் சிபிஐ விசாரணையில்
  இருக்கும் நிலையில் தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு
  வேட்பாளராக இவரைத்தேர்ந்தெடுக்க வேண்டும்
  என்று கேட்பதை எந்த விதத்தில் ஏற்க முடியும் ?

  கே.எம்.சார் நீங்கள் இந்த கேள்விகளுக்கு விரிவாக
  விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் இளங்கோ,

   எல்லாவற்றையும் நீங்களே விளக்கமாக எழுதி விட்டீர்கள்..
   பிறகு – என்னையும் விளக்கம் அளிக்கச் சொன்னால்
   நானென்ன செய்வேன் …?

   நீங்கள் எழுப்பியுள்ள வினாக்கள் அத்தனையுமே
   பொருள் பதிந்தவை தான்…

   தன் மீது இரண்டு கிரிமினல் ஊழல் வழக்குகள்
   சிபிஐ விசாரணையில் இருக்கையில், தன்னை சுத்தமானவர்
   என்று முதலமைச்சர் பதவிக்கு முன் நிறுத்திக் கொள்வது –
   கேள்விக்குரியது தான்.

   இன்னாள், முன்னாள் – முதலமைச்சர்கள் மீது
   ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறி பதவிக்கு வர முயல்பவர் –
   குறைந்த பட்சம் தன் மீது ஊழல் வழக்குகள் எதுவும்
   இல்லாமல் இருக்க வேண்டும்….
   தேர்தல் நெருங்கும்போது – இந்த விஷயம் அவருக்கு
   எதிரானவர்களால் நிச்சயம் பெரிது படுத்தப்படும்.

   நண்பர் நெல்லைத்தமிழன் கூறியது போல் –
   பெரிய – சின்ன அய்யாக்களின் சொத்து விவரங்களூம்
   கூடத்தான் வியப்பளிக்கின்றன…..
   அவர்களது சொத்து விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன.
   அத்தனையும் கடந்த 30 ஆண்டுகளில் கூடியதாகவே
   தெரிகிறது. பொது வாழ்விற்கு வந்த பிறகு –
   இவை எப்படி சேர்க்கப்பட்டன என்கிற விவரங்களையும்
   வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய அவசியம்
   அவர்களுக்கு இருக்கிறது.

   தந்தி தொலைக்காட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம்
   கொடுக்கப்படுவது பற்றி – இது தொலைக்காட்சி
   தங்களது TRP rate-ஐ அதிகப்படுத்திக் கொள்ள
   முன்னெடுக்கும் உத்தி மட்டுமே – என்றே நான்
   நினைக்கிறேன்.

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இதைச் சொல்ல மறந்துபோய்விட்டது. ஒரு பேட்டியில் சின்ன ஐயா சொன்னார். அவர் தொழில் Real Estate என்று. இதுக்கும், ஜெ சொன்ன ‘திராட்சை விவசாயத்தில் கோடிகள் குவிந்தது’ என்பதற்கும் யாரும் முடிச்சுப் போடக் கூடாது.

    இவர்களுக்குத்தான் இந்தப் பழமொழி. ‘படிக்கிறது ராமாயணம்..இடிக்கிறது பெருமாள் கோவில்’. அல்லது, ‘உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேணும்’

   • today.and.me சொல்கிறார்:

    இதனாலெல்லாம் டிஆர்பி ரேட் கூடுமா? சந்தேகம்தான்.

    திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே கிடையாது, அன்புமணி மட்டும்தான் தமிழகத்தைக் காக்க என்ற மாயையை மக்கள் மத்தில் உண்டாக்க மருத்துவர் ஐயா யோசனையில் உருவான தப்பான ஐடியா தப்பான நேரத்தில்..

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பேட்டிமட்டுமல்ல, அவரின் பரப்புரைகளையும் அவ்வப்போது கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். பொதுவாக, போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல் அவர் பேட்டி தோன்றுகிறது. அவர், பெரிய ஐயா விவசாயியாக இருந்து கஷ்டப்பட்டார் என்-கிறார். அவரும் பெரிய தொழில் எதுவும் பார்த்ததில்லை. ஆனால், ஆடம்பரமான வீடு, தோட்டங்களும், கார்களும் எங்கேயிருந்து வந்தன? பொறியியல் கல்லூரி எங்கிருந்து வந்தது? எனக்குத் தோன்றுகிறது, it may be a conditional பேட்டி. நேற்று இரவு, அளவுக்கு அதிகமாக அன்புமணியின் பரப்புரையும் வெளியாயிற்று. அது ஒரு ‘paid’ நிகழ்சி மாதிரி எனக்குத் தோன்றியது.

  சமயத்தில் அவர் சொல்வது, மோடி, ஒவ்வொரு குடிமகனுக்கும், கருப்புப் பணத்திலிருந்து 15 லட்சம் (அல்லது ஆயிரம்?) தருவேன் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னதுபோல், வெறும் வெத்து மாயாஜாலமாகத் தோன்றியது.

  அவர் பொதுமக்களைக் (பா.மா.காவைத் தவிர்த்து) கவர முடியும் என்று தோன்றவில்லை.

 6. Pavan சொல்கிறார்:

  Offlate, thandi TV and its principle is slightly sliding in the way to support PMK and its CM Candidate, God only knows why?

  • today.and.me சொல்கிறார்:

   If you watched the video, it is clear that Thanthi tv is trying to establish PMK and Anbumani are caste-based, and the party is totally disqualified to rule TN.’

   Anbumani also understood the way and ‘result-would be’ of Pande’s interview, and chided openly over him about that.

   That’s why i said “joke of the show’.

   By the way, Anbumani became comedian after this interview.
   Unfortunately, neither laughing sound nor smile at least.

 7. today.and.me சொல்கிறார்:

  பாமக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற நிர்வாகத்தை தருவோம்-அன்புமணி

  ‪ஆட்சிக்கு‬ வராத போதே நிலுவையில் அன்புமணி மீதான புகார்களின், ஊழல் வழக்குகளின், முறைகேடுகளின் விவரங்கள்……

  1. உத்திரபிரதேசம் ரோகில்காண்டில் தனியார் மருத்துவ கல்லூரிக்கு, முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் ஊழல் – அன்புமணி மீது சிபிஐ ஊழல் வழக்கு.. ஜாமீனில் உள்ளார் அன்புமணி.

  2. மத்தியபிரதேசம் இந்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் ஊழல் – அன்புமணி மீது CBI ஊழல் வழக்கு.. இந்த வழக்கிலும் ஜாமீனில் உள்ளார் அன்புமணி.

  3. மருந்து கொள்முதலில், தனது நண்பரின் நிறுவனத்துக்கு சாதகமான அன்புமணி சாதகமாக நடந்ததாக மகாராஷ்டிராவில் புகார்…

  4. மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பல்மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக ஊழல் வழக்கில் ஆற்காடு தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ பழனி கைது…

  5. நாட்டுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களான சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையம், ஊட்டி பாஸ்ட்யுர் மையம் போன்றவைகள், தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்குத் தடைவிதித்து, தனியாருக்கு, அதுவும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு, அந்த உரிமைகளை திறந்து விட்டது, நமது முன்னாள் சுகாதார துறை மத்திய அமைச்சர் அன்புமணி….

  6. அதேபோல சத்தியம் நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டுவந்த ஆம்புலன்ஸ் திட்டத்திலும் சுமார் 5,600 கோடி ஊழல் நடந்ததாக சுப்ரீம்கோர்ட்டில் PIL மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

  தொடரும்.. தெரிந்தவர்கள் தொடரலாம்..

 8. today.and.me சொல்கிறார்:

  ரங்கராஜ் பாண்டேக்கு என்ன ஆச்சுன்னு தெரியல,,, எல்லாம் தப்புத்தப்பா கேக்குறாரு… (அன்புமணி) ஜோக் ஆப் த ஷோ

 9. today.and.me சொல்கிறார்:

  செம்ம காமெடி… ஓட்டுவங்கிக்கும் ஆட்சிக்கு வருவதற்கும் சம்பந்தம் இல்லை – அன்பு மணி…. (இந்தியாவில் நாம் போடும் வாக்குகளால் தான் ஆட்சிஅமைக்கப்படுகிறது என்கிற ஜனநாயகம் நடைமுறையில் இல்லையா? ஒரு நியாயமான டவுட்)

 10. today.and.me சொல்கிறார்:

  ‘மக்கள் முட்டாள்கள் கிடையாது’ அன்புமணி.

  class answer. I like it.

 11. today.and.me சொல்கிறார்:

  உடல்மொழி…எந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிக்கவேண்டும் என்று கண்ணாடிமுன் பலமுறை பயிற்சி செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

 12. today.and.me சொல்கிறார்:

  ராகுல்ஜிக்கு சரியான ஆப்பொனன்ட் அன்புமணிஜிதான்.
  கொட்டும்மழையில் பேச்சு.

  மதுவிலக்குதான் என் முதல் கையெழுத்து என்று சொல்லும் அன்புமணி சார்
  முதலில் தன் சொந்தக் கட்சியினரை குடிக்காதே என்று சொல்லுவாரா?
  குடித்து்விட்டு கட்சிவேலைகள் செய்ய வராதே என்று சொல்லுவாரா?
  தன் கட்சி மீ்ட்டிங்குகளில் தொண்டர்களுக்கு மது சப்ளை கிடையாது அல்லது தொண்டர்கள் மது அருந்தி்விட்டு வருவதில்லை என்பதால் அவரால் உறுதிசெய்யமுடியுமா?

  இவ்வளவு ஏன்?
  வரும் 2016 பொதுத்தேர்தலில் மது குடிப்பவர்கள் பாமகவுக்கு ஓட்டுப்போடவேண்டாம் என்று கூறுவாரா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிச்சு ஒதர்றீங்க நண்பர் டுடேஅண்ட்மீ.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 13. today.and.me சொல்கிறார்:


  மதுவிலக்கைபற்றி பேச யாருக்கு அருகதை இருக்கு…?

  மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதி அண்ட் கும்பலுக்கு சுத்தமாக யோக்கிதை கிடையாது . so திமுக அவுட்

  மதுவிலக்கை ரத்து செய்யும்பொழுது கருணாநிதியின் தோளில் கிடந்த வைகோ விற்கு நிச்சயம் அருகதை கிடையாது – MDMK out.

  மதுவை அருந்திவிட்டு மாண்புமிகு மன்றத்திற்கே வந்த மானெங்கெட்ட விஜயகாந்துக்கு சுத்தமா கிடையாது- So MDMK out

  தன் கட்சிக்காரனை குடிக்காமல் இரு ன்னு சொல்லவும், குடிப்பழக்கம் உள்ளவன் ஓட்டு நிச்சயம் வேண்டாம் ன்னு சொல்ல வக்கில்லாத ராமதாசுக்கு அறவே கிடையாது – So PMK out

  அப்பறம் இந்த இரண்டு மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை தலைவராக கொண்டுள்ள பிஜேபி கோ காங்கிரசுக்கோ ஒரு துளி உரிமை கூட கிடையாது. ஏன்னா காங்கிரஸ் பிஜேபி ஆளும் மாநிலங்களில் புடிங்கிய ஆணிகள் அனைவருக்கும் தெரியும். So those two mentals got out.

  கம்யூனிஸ்ட் மதுவிலக்கைப்பற்றியே பேச மாட்டாங்க. நாம விட்டறலாம் அவிங்கள. We just let them as they wanna be.

  சரி அப்ப யாருக்குத்தான் டா மதுவிலக்கைப் பற்றி பேச உரிமை இருக்கு. தமிழருவி மணியனுக்கு த்தான் மதுவிலக்கைப் பற்றி பேச முழு உரிமை உள்ளதாக நினைக்கிறேன். He is the only person who started his party for this purpose wholly. அவர் மதுவிலக்கு வேண்டி போராட்டம் பண்ணினால் அது பொருத்தமாகவும் இருக்கும். பெருமையாகவும் இருக்கும்.

  இதுல அதிமுக காரன் என்ன பண்ணனும். ரொம்ப சிம்பிள். புரட்சித்தலைவி தான் கள்ளச்சாரயத்தை, லாட்டரியை, கந்துவட்டியை மொத்தமாக அழித்தொழித்த பெருமை கொண்டவர். ஆக முழுமையான மதுவையும் ரத்து செய்வார் ன்னு நம்பிக்கையுடன் இருக்கணும்.

  By the way my friends, நான் முழுமையான மதுவிலக்கிற்கு முழுமையான ஆதரவாளன் நேற்றும் இன்றும் நாளையும்.

  –நன்றி: திரு. தனாக்குட்டி முகநூல் பக்கத்தில்.

 14. today.and.me சொல்கிறார்:

  தற்போது சோதனைமுறையில் விடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலுக்கு சோதனையாக திமுக உரிமைகொண்டாடுவதைப்போல

  எப்போதோ வரப்போகும் மதுவிலக்கு என்கிற சோதனைக்கு அச்சாரமாக உரிமைச்சீட்டுக்கு துண்டு போடுகிறார் அன்புமணி என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நேற்று மாலை/இரவு வெளியில் போயிருந்தேன் –
   வலைப்பக்கம் வர முடியவில்லை.
   இன்று காலை வந்து பார்த்தால் ………..

   மிக உற்சாகமாக பல கருத்துக்களை அள்ளி வீசி இருக்கும்
   நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு
   மனமார்ந்த பாராட்டுக்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 15. drkgp சொல்கிறார்:

  Reading Mr Today and me gives many angles for the story of the day.
  Today he rules without fetters.
  Regards

 16. today.and.me சொல்கிறார்:

  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=147533

  Anbumani’s dual toungue on ‘full block of liquor”

 17. Selvadurai Muthukani சொல்கிறார்:

  If we keep on commenting on everybody, who is the alternative? Dr.Anbumani is an educated and knowledgable person. He has a background to emerge as leader. Why cant’ we consider him as an alternative to JJ / MK ? Many will accept now that V’Kanth and the like are not competent. Dr.Anbumani says he can prove his ability if given a chance. Why do’nt we give him a chance. Who is perfect in Politics. We have to accept the least evil.

 18. rajan சொல்கிறார்:

  All the TV Interviews of Pandey in some way or the other is pre planned. Its not that he forgot to ask . pandey is not the person who will forget recent incidents..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.