கொடுத்து வைத்தவர் …. கலாம்….!!!

dr.kalam-3

83 வயது …
வீட்டில், உறவினர்களிடையே, பேரன்-பேத்திகளிடையே –
சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு –
சந்தோஷமாக உரையாடிக்கொண்டும்.
தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்துக் கொண்டும்,
பிடித்த நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டும்,
இசை நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டும் –
இருக்கக்கூடிய முதிய பருவம்….!

அல்லது –

நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையிலோ,
வீட்டிலோ – படுக்கையையே வாசமாகக் கொண்டு –
இறுதி நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலம்…

இது எதுவுமே இல்லாமல் –
உடல் தளர்வை சற்றும் பொருட்படுத்தாமல் –

தான் இதற்கும் முன் –
இந்த மாபெரும் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர்
என்பதையே மறந்து –

தென் கோடி ராமேஸ்வரம் எங்கே –
நாட்டின் இன்னொரு கோடியான வட கிழக்கில் –
ஷில்லாங் எங்கே..?

ஊர் ஊராக நாட்டின் ஒவ்வொரு திசையிலும் உள்ள
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று
தேடித்தேடிச் சென்று – இன்றைய மாணவர்கள் தான்
எதிர்கால இந்தியாவை மாற்றி அமைக்கக்கூடியவர்கள்
என்ற தளராத நம்பிக்கையுடன் –
அயராது உழைத்துக் கொண்டிருந்த –
ஒரு மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள்…..

83 வயதில் –
தான் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும்போதே –
மாணவரிடையே மேடையில் உரையாற்றிக்
கொண்டிருக்கும்போதே –
அவர் உயிர் பிரிந்தது என்று கேட்கையில் –
உடல் புல்லரிக்கிறது. உள்ளம் வியக்கிறது.

வயதானவர்கள் நோய்வாய்ப்படுவதும் இறப்பதும் இயற்கை…
ஆனால் – யாருக்கு கிடைக்கும் இத்தகைய இறப்பு …!
நோய்ப் படுக்கையில் வீழாமல் ,
ஓய்வில் இல்லாமல்,
தனக்குப் பிடித்த பணியை செய்து கொண்டிருக்கும்போதே –
வலியின்றி, துன்பமின்றி – நொடியில் உயிர் பிரிவது…!!

இந்த நாட்டின் அத்தனை மக்களின் அன்பையும் பெற்ற
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் எங்கும் போய்விடவில்லை.
தொடர்ந்து இந்த நாட்டின் வளமான
எதிர்காலத்திற்கு நிச்சயம் துணையாக இருப்பார்…
ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக…!!!

—————————————————————–

நான் அரசுப் பணியில் இருக்கும்போது –
டாக்டர் கலாம் அவர்களுடன் ஒரு அரை நாள் பொழுது
கூடவே இருக்கக்கூடிய பாக்கியம் கிடைத்தது.
( அப்போது அவர் ராணுவ ஆராய்ச்சிப் பிரிவின்
தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருந்தார் )

இதைப்பற்றி இந்த தளத்தில் எப்போதோ எழுதி இருப்பதாக
நினைவு – ஆனால் இப்போது என்னால் தேடிக்கண்டு பிடிக்க
முடியவில்லை.

இப்போதைக்கு – முல்லைப்பெரியாறு குறித்த
பிரச்சினை தீவிரமானபோது – தமிழ்நாட்டின் மற்றும்
இந்த தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்குமாக
டாக்டர் கலாம் அவர்கள் கூறிய ஆலோசனைகள் குறித்த
ஒரு இடுகை என் கவனத்திற்கு வந்தது.
அந்த இடுகையிலிருந்து சில பகுதிகளை
அவர் நினைவாக கீழே தந்திருக்கிறேன் –

—————————

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு சில ஆலோசனைகள் கூறி ஒரு கடிதம்
எழுதி இருப்பதாக (அல்லது எழுத இருப்பதாக )-
இன்று அதிகாரபூர்வம் இல்லாத
ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

அதில் காணும் முக்கிய விஷயங்கள் –

1) இந்தியாவின் அனைத்து நதிகளும்,
ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும்,
புதிதாகக் கட்டப்படும் அணைகளும்
தேசிய மயமாக்கப்பட்டு ராணுவத்தின் பொறுப்பில்
ஒப்படைக்கப்பட வேண்டும்.

2) உலகத்தில் ஏற்கெனவே(அமெரிக்கா உட்பட )
பல நாடுகளில் அணைகள் ராணுவத்தின் பொறுப்பில்
தான் இருக்கின்றன.

அதே போல் இந்தியாவிலும், இனி புதிதாக
அணைகளை கட்டும் பொறுப்பையும்,
அவற்றை நிர்வாகம் (மெயின்டெனன்ஸ்) செய்யும்
பொறுப்பையும், ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

3) நதிகளை இணைக்கும் தேசிய திட்டம் உடனடியாக
துவங்கப்பட வேண்டும்.

4) முல்லைப் பெரியாறில் புதிய அணை எதுவும் கட்டாமல்,
இன்னொரு பக்கம் பாதுகாப்பு சுவரை மட்டும்162 அடி
உயரத்திற்கு எழுப்பி, அதன் மூலம்
பாதுகாப்பையும் பலப்படுத்தி
கிடைக்கக்கூடிய கூடுதல் மின்சாரத்தை கேரளாவிற்கும் –
தண்ணீரை தமிழ் நாட்டிற்கும் தந்து பிரச்சினையை
இருவருக்கும் பொதுவாக தீர்க்கலாம்.

( https://vimarisanam.wordpress.com/2011/12/13/ )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to கொடுத்து வைத்தவர் …. கலாம்….!!!

 1. paamaran சொல்கிறார்:

  ஒருவர் ஏழ்மையாக இருக்’கலாம் ‘— படித்தவராக இருக்’கலாம் ‘ — அறிவாளியாக இருக்’கலாம் ‘—- அணுசக்தி விஞ்ஞானியாக இருக்’கலாம் ‘ — நாட்டின் ஜனாதிபதியாக இருக்’கலாம் ‘ — ஆனால் மனிதனாக — மனித நேயம் மிக்கவராக — மாணவர்களுக்கு நல்ல ஆசானாக — எளிமையனவராக என்று மேலே கூறிய அனைத்து இருக்’கலாம் ‘ என்கிற எல்லாவற்றிலும் என்றுமே நிலைத்து இருப்பவர் — பிடிவாதம் தேவை வெற்றி அடைய என்று கனவு காண வைத்த — ஒரே ” கலாம் ” எங்கள் அபதுல்கலாம் அவர்களே ! காலத்தினால் மறக்க முடியாத மாமேதை !! நிலைக்க என்றும் நின் புகழ் !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   மிக அழகாக, மனதில் பதியும்படி கூறி இருக்கிறீர்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  இந்திய ஜனாதிபதி என்ற பதவிக்கு மக்களிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்திய ஒரு மாமனிதர் “நமது” கலாம் அவர்கள். இன்றைய இளைய சமுதயமே வருங்கால இந்தியாவின் அடித்தளம் என்று கூறி அவர்களை தயார்படுத்திய மாமனிதர். அன்னார் புகழ் இந்தியா எங்கும் என்றும் ஒலிக்கும்.

 3. Madhavan சொல்கிறார்:

  Avarudaya
  Medhamai potrapatta alavu!!

  Avaruadaya
  VISION
  (Ilaingarkal Yethir Kaala India!!
  Yenbathai sarivara)
  Naam Potravillayoo!!
  YENDRA KURAI YENAKKU UNDU

  Irukkum Kaalathil avarathu Arumai puriyaamal
  Naam ilandha manidha (rathinan)galil
  Nam Annnaaar KALAM avargalum oruvar
  matruvar MSV avargal….. innum palar!!

  yentharoo mahanubhavalu… yena teluguvil solvargal
  “Kadamai sei” yendra geethaikor
  nam-mun vaalndha udharanam thiru Kalaam avargal.

  ORU NERUNIGAYA URAVI
  ILANDHA UNARVUDAN!!!

  —Annarain thambi
  Madhava nambi

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மன்னிக்கவும் நண்பர் மாதவ நம்பி,

   பொது மக்களாகிய நாம் – இந்த மாமனிதர்களை –
   அவர்களது வாழ்நாளிலேயே புரிந்து கொள்ளவோ,
   போற்றவோ தவறவே இல்லை.
   நிச்சயம் போற்றி, பெருமை கொண்டோம்.

   தவறிழைத்தவர்கள் –
   அரசியல்வாதிகள் தான்
   அதிகாரத்தில் இருந்தவர்கள் தான்….
   எனவே வெட்கப்பட வேண்டியவர்கள்
   அவர்கள் தான்….

   எமக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. kalakarthik சொல்கிறார்:

  my salutes to him in my blog //http.vijayanagar.blogspot.com//.please read.
  karthik amma

 5. Pingback: கொடுத்து வைத்தவர் …. கலாம்….!!! | Classic Tamil

 6. Sharron சொல்கிறார்:

  Great loss to all Indians.

 7. today.and.me சொல்கிறார்:

  தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   மிக மிக பொருத்தமான வீடியோ காட்சித் தேர்வு…
   மிக்க நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • nparamasivam1951 சொல்கிறார்:

    ஆம். இந்த அருமையான வீடியோ இணைப்பை இணைத்ததற்கு, அவருக்கும் உங்களுக்கும் மிக மிக நன்றி.

 8. poetthuraivan சொல்கிறார்:

  எனது ஆழ்ந்த இரங்கல் பதிவு செய்கிறேன்.

 9. drkgp சொல்கிறார்:

  The man who raised the respect level for Tamilians in Delhi
  RIP

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு நல்லவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம். வருங்காலதில் இவரை போன்ற மனிதர்களை தேட வேண்டியிருக்கும். ஒவ்வொரு நொடியிலும் இந்தியாவுக்காக இந்தியராக வாழ்ந்த மகத்தான தமிழன்.

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  – தன் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும்,
  இந்த நாட்டு மக்களின் நல் வாழ்வுக்காக,
  நல்ல எதிர்காலத்திற்காக- செலவழித்த –

  தன் இறப்பிற்காக விடுமுறை விடக்கூடாது
  என்று வேண்டுகோள் வைத்துவிட்டுப்போன –

  திரு.கலாம் அவர்களின் வார்த்தைகள்….
  இன்று நான் படித்தவை –

  ———–

  “குடியரசுத் தலைவராக நல்ல நேரத்தில் பொறுப்பேற்கிறீர்களா?”
  என்று வந்த கேள்விக்கு, கலாம் அவர்கள் தந்த பதில்
  “எனக்குச் சூரிய மண்டலம் இயங்கும் எல்லா நேரமும்
  நல்ல நேரம்தான்”

  ———
  ‘அந்த மலரைப் பாருங்கள். அது நறுமணமும், தேனும்
  தாரளமாகத் தருகிறது. அதன் பணி முடிந்ததும் சலனமில்லாமல்
  அது சரிகிறது. அதைப்போல அகந்தை இல்லாமல் அத்தனை நற்குணங்களோடு இருங்கள்!’.

  —-

  ” என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி
  எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை,
  என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள
  வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்”

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 12. Siva சொல்கிறார்:

  Dr APJ Abdul Kalam has started a new journey in the HEAVENLY world for science teaching! Have a peaceful journey, Sir!

 13. paamaran சொல்கிறார்:

  கடைசியாக கூட இந்த நாட்டின் நலனின்பால் கொண்ட நல்லெண்ணத்தின் செயலாக அவர் வருத்தப்பட்டு தீர்வு காண நினைத்த விஷயம் :—- நாடாளுமன்றம் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும்படி, ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் நாம் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களிடம் கேட்க வேண்டும் என்றும் —-
  நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாக நடைபெறுவதற்கான 3 ஆலோசனைகளை மாணவர்கள் வழங்க வேண்டும் என்று கலாம் எதிர்பார்த்தார் ! இந்த அரசியல்வாதிகளிடம் இதற்கான தீர்வை சொன்னாலும் கடைபிடிக்க போவதில்லை என்பதை அறிந்த ஆண்டவனே — திரு கலாம் அவர்களை தடுத்துவிட்டு — தன்னிடம் ஐக்கிய படுத்திக்கொண்டானோ !! மனம் வேதனை அடைகிறது .

 14. today.and.me சொல்கிறார்:

  ஒரு நாட்டின் முதல்வன்
  ஒரு கட்சியின் தலைவன்
  அந்தக் கட்சியின் தொண்டன்..

  https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/10432120_1627408807517703_8232554481445390624_n.png?oh=6a46567dadf55aabbcd29710d6c759df&oe=5611A41B

  இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்

 15. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எந்த அரசியல்வாதியையும், தலைவர்களையும் மாணவர்களும் இளைய தலைமுறையும் பெரியதாகப் போற்றுவதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மனத்தில் தன் செய்கைகளால் நிறைந்தவர் கலாம் அவர்கள். காலத்தின் கட்டாயத்தினால் அன்னாரது விளக்கு பாரத ரத்னாவாக, அதைத் தொடர்ந்து ஜனாதிபதியாக ஏற்றப்பட்டது. அது பல மாணவ, இளைய சமுதாயச் செல்வங்களைப் பிரகாசிக்க வைப்பதற்காக உபயோகப்படுத்தினார். ‘செயற்கரிய செய்வார் பெரியோர்’. ஒரு மனிதனிடத்தில், பதவிக்கு வந்தும் இத்தகைய மனித நேயம் இருக்குமா? இந்தியத் திருனாட்டில் நம்பிக்கை வைத்து அது உயர அயராது பாடுபட முடியுமா? நாட்டின் எதிர்காலத் தூண்களுக்கு நம்பிக்கை கொடுப்பதே தன் லட்சியம் என்று செயல்பட முடியுமா? எத்தகைய பிரதி பலனும் பாராது அயராது உழைக்க இயலுமா? அவரை என்றும் மறக்க இயலாது.

  என் பெண் “APJ Passes away” என்று இந்தச் செய்தியை மிக முக்கியமாக நினைத்துச் சொல்லும்போதே, இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது.

  மனித-‘நேயம், எதிர்கால நம்பிக்கை இவைதான்’ அவரின் வாழ்க்கைச் செய்தி என்பதை எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டும்.

 16. chollukireen சொல்கிறார்:

  அப்துல்கலாம் போய்விட்டார் என்ற செய்தி கேட்டவுடன், நல்ல மனிதர்,கிடக்காமல்,படுக்காமல் போய்விட்டார் நல்ல சாவு எல்லோருக்கும் கிடைக்குமா என்று உடனே வாய் சொல்லுகிரது. உங்கள் மாதிரி இருக்கவும் முடியாது. போகவும் முடியாது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.