மக்களுக்கு கலாம் அவர்களின் சில கடைசி செய்திகள் ….

kalam sir as a teacher கலாம் அவர்களுடன் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றுகிற வாய்ப்பை பெற்ற,

அவருடன் கூடவே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயணித்து, பல விஷயங்களை அவருடன் விவாதித்து, அவரது கருத்துக்களை கேட்டறிந்து, கலாம் அவர்களுடன் சேர்ந்து புத்தகங்களை எழுதுகின்ற ஒருவர் –

Indian Institute of Management, Ahmedabad-ல் படித்த, லக்னோவைச் சேர்ந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவர்.

இவர் தனது வலைப்பக்கத்தில் கலாம் அவர்களது கடைசிப்பயணமான ஷில்லாங் ஐஐஎம் நிகழ்ச்சிக்கு கூடவே சென்றது பற்றியதான தனது அனுபவங்களை விவரித்திருக்கிறார். ( https://www.facebook.com/srijan.pal.singh.personal )

கலாம் அவர்கள் தன்னை எந்த விதத்தில், எதற்காக மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டுமென்று விரும்பினார் …?

அவரிடம் தெரிவிக்கப்பட்ட – முன்னாள் ஜனாதிபதி, ராக்கெட் விஞ்ஞானி, எழுத்தாளர், விஷன் 2020, 30 லட்சம் மக்கள் இலக்கு…. ஆகிய எல்லாவற்றையும் மறுத்து விட்டு –

தான் “ஒரு ஆசிரியர் ” என்கிற முறையில் நினைவுகூறப்படுவதையே விரும்புவதாகக் கூறி இருக்கிறார்.

மேலும் சில கருத்துக்களையும் கூறி இருக்கிறார்….

அதில் ஒன்றைத்தான் நான் முந்திய இடுகையின் தலைப்பாக வைத்திருந்தேன். ( நான் இடுகையை எழுதும்போது கலாம் அவர்களின் இந்த கருத்து வெளியாகி இருக்கவில்லை… )

“one is blessed is one can die working, standing tall without any long drawn ailing. Goodbyes should be short, really short”.

-நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் கிடந்து இறப்பதை விட, பணியில் ஈடுபட்டிருக்கும்போதே – சட்டென்று உயிர் பிரிபவர்களே கொடுத்து வைத்தவர்கள்….!!!”

அந்த “கொடுத்து வைத்தவர் கலாம்” தலைப்பு இவ்வளவு அழகாகப் பொருந்தும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…….!

” நன்றி கலாம் சார்…! நீங்கள் கூறிய அந்த கொடுத்து வைத்தவர்களில் ஒருவனாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன்…”

திரு ஸ்ரீஜன்பால் சிங் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் கலாம் சார் தொடர்புடைய சில அருமையான புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அவற்றிலிருந்து சில –

( புகைப்படங்களில் கலாம் அவர்களுடன் கூட இருப்பவர்
தான் திரு ஸ்ரீஜன்பால் சிங் )
book -apj and spsingh kalam sir with sp singh -2 kalam sir with sp singh-3 Srijan Pal Singh  with kalam sir final flight C130 hercules airforce dr. kalam -s final air ride

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to மக்களுக்கு கலாம் அவர்களின் சில கடைசி செய்திகள் ….

  1. Pingback: மக்களுக்கு கலாம் அவர்களின் சில கடைசி செய்திகள் …. | Classic Tamil

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.