MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!!

illaraja_msv_

திங்கள் (27/07/2015) மாலை, மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவாக சென்னையில்
காமராஜர் அரங்கில், இளையராஜா அவர்கள்
ஒரு அற்புதமான இசைப்பயணத்தினை மேற்கொண்டார்…..!

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த
அந்த இசைப்பயணத்தில் ஒரு பார்வையாளனாக
கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

நிரம்பி வழிந்த அந்த அரங்கில் முக்கால்வாசி பேர்கள்
40-45 வயதுக்கு மேற்பட்டவர்களே…!

பெரும்பாலும் MSV அவர்களின் துவக்க காலத்தில்
இசையமைக்கப்பட்ட அந்த காலத்திய – பழைய பாடல்களை இசைஞானி தன் குழுவினருடன்
மீண்டும் அரங்கேற்றி
பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் அழியாப்புகழ் பெற்ற
பல பாடல்களை பாட வைத்து, அதில் இருக்கும்
இசை நுணுக்கங்கள் பற்றியும், சிறப்புகள் பற்றியும்
விவரமாக எடுத்துரைத்தார் இளையராஜா.

அத்தனையுமே ஏற்கெனவே எனக்கு மிகவும் பிடித்த –
நான் மிகவும் விரும்பி கேட்கக்கூடிய பாடல்கள்
என்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…!

இந்த நிகழ்ச்சியை நேரில் காணக்கூடிய / கேட்கக்கூடிய
வாய்ப்பு கிடைக்காதவர்களுக்காக

ஒரு நேரடி ரிப்போர்ட்….

நிகழ்ச்சியில் இளையராஜா
அவர்கள் பேசியதன் சுருக்கத்தையும், முடிந்த வரையில்
அவர் அரங்கேற்றிய பழைய பாடல்கள் பெரும்பாலானவை
அடங்கிய திரை ஒளிச்சித்திரங்களையும் இங்கே
தர முயற்சிக்கிறேன்….
ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்….!!!

( எல்லாமே பழைய படங்கள் என்பதால், ஒளிப்பதிவு
தெளிவாக இருக்காது. பார்க்க தொந்திரவாக இருந்தால்
கண்களை மூடிக்கொண்டு – பாட்டை மட்டும் கேளுங்கள்…..! )

———–

எம்.எஸ்.வி. அவர்களை தனது உடன்பிறவாத அண்ணன்
என்றும் மானசீக குரு என்றும் இளையராஜா மிகுந்த
உணர்ச்சிப் பரவசத்துடன் குறிப்பிட்டார்…
நிகழ்ச்சி முழுவதும், அடிக்கடி அவருக்கும் தனக்குமான
நெருக்கத்தையும், பாசப்பிணைப்புகளையும்
நினைத்து நினைத்து நெகிழ்ந்தார்…

தனக்கு 12-14 வயது நடக்கையில், தான் கிராமத்தில்
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் –
இசை நுணுக்கங்களைப் பற்றிய அடிப்படைகள் எதுவுமே
தெரியாத நிலையில் –

எம்.எஸ்.வி. அவர்களின் இசை அவரை
எப்படி மயக்கி ஆட்கொண்டது என்பதை உணர்ச்சிகரமாக
கூறிக்கொண்டிருந்தார். இளையராஜாவை அப்படி மயக்கிய
பாடல்களில் ஒன்று –

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்
மயங்குகிறேன் தோழி –

இந்த பாடலை வரி வரியாக, வார்த்தை வார்த்தையாக
பிரித்து, இசைத்து, அதன் அருமைகளை விவரித்தார்.

மற்றுமொன்று – மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ –
( இதற்கு முதலில் இசையமைத்தவர் திரு கே.வி.
மஹாதேவன் அவர்கள். தனது முந்தைய படத்திற்காக
உருவான இந்தப் பாடலை அங்கு பயன்படுத்திக் கொள்ள
முடியாததால், அடுத்து குலேபகாவலி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ( டி.ஆர்.ராமண்ணா…? ) குலேபகாவலி
படத்திற்கு எம்.எஸ்.வி. இசையமைக்கையில், இந்த பாடலை
பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னதால் – இந்த பாடல்
எம்.எஸ்.வி. அவர்களின் பாடல் என்றே முதலில்
அறியப்பட்டது. )

அரங்கத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் ரஜினி.

rajini samy

“மயக்கும் மாலைப் பொழுதே” முடிந்தவுடன்,
ராஜா, ரஜினியை பார்த்து சிரித்துக்கொண்டே –
இந்தப்பாடல் அந்தக்கால சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர்.
பாடி புகழ் பெற்ற பாடல்….

இந்தக்கால சூப்பர் ஸ்டாருக்கு
இது மாதிரி பாடல்களைக் கொடுத்தால் பாடுவார்களா …?
என்று கிண்டலாகச் சொன்னார்.

கிண்டலை ரசித்த ஆடியன்ஸ் கைதட்டிச் சிரித்தது.
உடனேயே, இதற்காக சூப்பர் ஸ்டாரை குறை சொல்ல
முடியாது ஜனங்களின் ரசனை தான் மாறி விட்டது.
அதான் இந்தக்கால சூப்பர் ஸ்டாருக்காக போட்டோமே
ஒரு பாடல் …. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” (தளபதி)
என்று மீண்டும் கிண்டலடித்தார்.

தன் வாழ்க்கை அனுபவங்களை விவரித்து வரும்போதே –
இளையராஜா – எம்.எஸ்.வி. அவர்கள் துவக்க காலத்தில்
இசையமைப்பாளராக உருவாக பட்ட அவஸ்தைகளையும்,
அனுபவங்களையும் விவரித்தார்.

ஐம்பதுகளின் துவக்கத்தில் – இசைமைப்பாளர் சி.ஆர்.
சுப்பராமன் அவர்களிடம் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும்
உதவியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
சுப்பராமன் அவர்கள் “தேவதாஸ்” (நாகேஸ்வரராவ்- சாவித்திரி) திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது – பாதியிலேயே ,பணி முடிவடையாத நேரத்திலேயே
இறந்து விட்டார்.

எனவே எம்.எஸ்.வி. அவர்களையே மீதி பொறுப்பை ஏற்று,
முழு இசையமைப்பையும் முடித்து கொடுக்கும்படி
தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். “தேவதாஸ்” படத்தின்
இசையமைப்பாளர் என்று டைட்டிலில் மறைந்த சி.ஆர்.
சுப்பராமன் அவர்களின் பெயரிலேயே வெளிவந்தது.
ஆனாலும், இதில் சில பாடல்களுக்கு முழுக்க முழுக்க
எம்.எஸ்.வி. அவர்களே மெட்டுக்களையும், பின்னணி
இசையையும் அமைத்திருக்கிறார்.

ஐம்பதுகளில் வெளியான மகா சோகப்படமான “தேவதாஸ்” – அதன் பாடல்களுக்காகவே புகழ் பெற்றது.
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்களின் துவக்க கால
பாடல்கள் என்று இளையராஜா கூறியவை மூன்றும்
துயரமும், வறண்ட தத்துவங்களும் நிறைந்த பாடல்கள்.

ஆக, துவக்கத்தில் – சோகப்பாடல்களைக் கொடுத்தே
“ஹிட்” ஆகி விட்டார் எம்.எஸ்.வி.
அந்த “தேவதாஸ்” படத்தின் உள்ளத்தை உருக்கும்
அந்த மூன்று சோகப்பாடல்கள் கீழே –

உறவுமில்லை – பகையுமில்லை, ஒன்றுமே இல்லை…..

கனவிது தான் – நிஜமிது தான் ……

உலகே மாயம் – வாழ்வே மாயம் …

பலத்த இடைஞ்சல்களுக்கிடையே,
மிகுந்த சிரமத்துடன் – ஏகப்பட்ட ரிஹர்சலுக்கு பின்னர்
இந்த உலகே மாயம் பாடலை பதிவு செய்திருக்கிறார் MSV.
ரிக்கார்டிங் முடிந்தவுடன்,
பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி அவர்களுக்கு
பதிவை போட்டுக்காட்டிய எம்.எஸ்.வி. அவர்களை –
வாத்தியக்காரர்கள், உதவியாளர்கள் அத்தனை பேரின்
எதிரிலேயே – ஓங்கி அறைந்தாராம் உடுமலை நாராயண கவி….

( சீனியர் கவிஞர் – முதல் முறை இசையமைப்பாளர்
தாங்கிக் கொள்ள வேண்டியது தான் –வேறு வழியில்லை….!!! )

இசையமைப்பாளராக உருவானபோது –
முதல் பாடலுக்கே பாடலாசிரியரிடமிருந்து அடி …! ஏன் … ???

( …..அடுத்த தவணையில் சொல்கிறேனே…!!! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!!

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  ரொம்ப காஸ்ட்லி. வேலை நாள் வேறு.
  போக முடியவில்லை. நொந்து கொண்டே இருந்தேன்.
  கரெக்டாக போட்டு விட்டீர்கள் – first class report.

  அடுத்த தவணையையும் உடனே கொடுங்க சார்.

 2. chollukireen சொல்கிறார்:

  படிக்கவே இவ்வளவு நன்றாக இருப்பது நேரில் கேட்டபோது. எப்படி அநுபவித்து ரஸித்திருப்பீர்கள். மேலும் கேடக ஆசை. அன்புடன்

 3. Pingback: MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!! | Classic Tamil

 4. Sampathkumar. K. சொல்கிறார்:

  neengal yezhuthi iruppathai padikkumbothey

  neraaga paarppathu pol irukkirathu.

  mikka nanri.

 5. NagendraBharathi சொல்கிறார்:

  அருமையான பதிவு. நிகழ்ச்சிக்கே சென்ற நெகிழ்வு. நன்றி

 6. T.N.MURALIDHARAN சொல்கிறார்:

  எம்.எஸ்.வி க்கு சிறப்பான அஞ்சலி

 7. D. Chandramouli சொல்கிறார்:

  My favorite topic. MSV-Ramamurthy pair had created wonderful melodies, the trendsetter was “Pava Mannippu” song ‘Athan Ennathan’! Even now, not a day passes without my humming some song or the other of their melodies! My musical taste began with G. Ramanathan’s with his best Carnatic-based ragas (Ambikapathy) and ended with MSV’s creations. Wish I had been in India to enjoy Ilayaraja’s performance, more particularly his commentary on various songs. Anyway, many thanks for your detailed narration.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பழைய பாடல்களை விரும்பும் நண்பர்கள்
  அனைவருக்கும்
  என் நன்றிகள்…..

  ” யான் பெற்ற இன்பம் – பெறுக இவ்வையகம்”

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 9. Nathan சொல்கிறார்:

  anpudan eppodum marakkamaddom Nathan Toronto

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.