தேர்தல் சூதாட்டத்தில் முதல் பலி – காந்தீயவாதி சசி பெருமாள்….

sasiperumal

தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கி விட்டது.

ஆட்டத்தில் வெற்றி பெற கொடுக்கப்பட்ட முதல் களப்பலி தான்
திரு சசி பெருமாள் அவர்கள்….

யார் யாரோ கண்ணுக்குத் தெரியாமல் காய்களை நகர்த்துகிறார்கள்.
யார் – யார், எதற்காக, எந்த காயை நகர்த்துகிறார்கள் என்பதை
யாரும் வெளிப்படையாக யாரும் அறிய முடியவில்லை…
அது தானே அவர்களின் அரசியல் வெற்றி…?

ஒரு போராட்டத்தில் இருக்கையில், நான் நேரில்
திரு சசி பெருமாளை
மிக அருகிலிருந்து கவனித்திருக்கிறேன்.

அவர் – விளம்பரம் தேடுவதற்காக வீணாக போராட்டங்களில் ஈடுபடுபவராகத் தெரியவில்லை.

அதே சமயம், தமிழ்நாட்டில் மதுவிலக்கு பிரச்சினை இன்னும் ஆறு மாதங்களுக்குள் எப்படியும் முடிவுக்கு வந்து விடும்
என்பது தெரியாத அளவிற்கு திரு சசி பெருமாள் அரசியல்
அறியாத மனிதரும் அல்ல.

தூண்டி விட்டிருக்கிறார்கள்….
ஒரு கட்டத்தில் விஷயம் எல்லை மீறிப் போயிருக்கிறது.
ஒரு உயிர் போய் விட்டது….

இப்படி அரசியல் காரணங்களுக்காக – மற்றவர்களை காவு
கொடுக்கத் துணியும் மனிதர்களை என்னவென்று சொல்வது….?

இதுகுறித்து இன்றைய மாலை வெளிவந்த செய்தியை
பாருங்கள் –

—————————————-

மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடையில் ஒரு
டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர்.

இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் கடையை
அப்புறப்படுத்தக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு
கொடுத்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு அந்த கடையை
உண்ணாமலைக் கடை பகுதியில் இருந்து அகற்ற உத்தரவிட்டது.
அதன்பிறகும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காந்தியவாதி
சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்தார். அவரும் உண்ணாவிரதத்தில்
பங்கேற்றார்.

அதன்பிறகும் டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து இன்று அங்கு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்
போவதாக சசிபெருமாளும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி
தலைவரும், பா.ஜனதா கட்சியின் நிர்வாகியுமான
ஜெயசீலன் அறிவித்தனர்.

இன்று காலை இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள 60 அடி
உயர செல்போன் டவரில் ஏறினர். கையில் மண்எண்ணெய்
கேனையும் எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்து
மார்த்தாண்டம் போலீசார் மற்றும் குழித்துறை தீயணைப்பு வீரர்கள்
அங்கு விரைந்து வந்தனர். அவர்கள்
செல்போன் டவரில் ஏறி நின்ற சசிபெருமாளையும்,
ஜெயசீலனையும் கீழே இறங்கி வரும்படி கூறினர்.

அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை
அகற்றும் வரை கீழே இறங்க மாட்டோம் என கூறினர். இதனால்
அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த தகவல் போலீஸ்
உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் சுற்று வட்டார மக்களும் குவிந்தனர்.
100–க்கும் மேற்பட்டோர் திரண்டதால் கூடுதல் போலீசார்
வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் உயர் அதிகாரிகளும் வந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை
நடத்தினர்.

இதற்கிடையில், சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த
போராட்டத்தின்போது, செல்போன் டவர் மீது ஏறிய தீயணைப்பு
துறையினர் சசி பெருமாளை மயங்கிய நிலையில் மீட்டனர்.
அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த
டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து
விட்டதாக தெரிவித்தனர்.

( http://www.maalaimalar.com/2015/07/31143448/
Gandhian-Sasi-Perumal-dies-whi.html )

———————————————————–

சில கேள்விகள் –

1) பள்ளிகள், கல்லூரிகள், கோவில்களுக்கு அருகே
பொதுமக்களுக்கு இடைஞ்சலாக அந்த இடத்தில் டாஸ்மாக் கடை
தேர்ந்தெடுக்கப்பட /அமைக்கப்பட யார் காரணமாக இருந்தார்கள்….?

2) விதிகளை மீறி அந்த இடத்திற்கு யார் அனுமதி கொடுத்தது….?

3) மதுரை ஹைகோர்ட் கிளை, டாஸ்மாக் கடையை அகற்றும்படி உத்திரவு கொடுத்ததற்குப் பிறகும் அந்தக்கடை இன்றுவரை அகற்றப்படாததற்கு யார் பொறுப்பு …?

இதற்கு பொறுப்பானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) திரு ஜெயசீலன் என்ன ஆனார்….?
புகைப்படங்களில், வீடியோவில் – சசி பெருமாள் மட்டுமே
டவரின் உச்சியில் தெரிகிறார்….?

5) திரு சசி பெருமாளை, செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யத் தூண்டிய உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும், பா.ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஜெயசீலன் மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது…?

திரு சசி பெருமாளின் தற்கொலை முயற்சிக்கு
உண்மையில் காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு,
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழக மக்களின் நலன் கருதி –
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் –

– மதுவிலக்கு கொள்கையை பயன்படுத்தி தேர்தல் விளையாட்டை இனிமேலும் யாரும் தொடராமல் இருக்கவும், அப்பாவிகள் இனியும் தொடர்ந்து பலியாவது தடுக்கப்படவும்,

– மதுவிலக்கைப் பற்றிய தமிழக அரசின் எதிர்கால திட்டங்களை
இப்போதே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தேர்தல் சூதாட்டத்தில் முதல் பலி – காந்தீயவாதி சசி பெருமாள்….

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  Fantastic Sir ; This is what I too wish to say.
  They should come out openly about Prohibition policy
  without giving room for rumours.

 2. Pingback: தேர்தல் சூதாட்டத்தில் முதல் பலி – காந்தீயவாதி சசி பெருமாள்…. | Classic Tamil

 3. paamaran சொல்கிறார்:

  சசிபெருமாள் ரத்தவாந்தி எடுத்து இறந்துள்ளார் — அவர் மயக்கம் அடைந்ததும் —- ரத்த வாந்தி எடுத்ததும் அவருடன் இருந்த பாஜக ஜெயசீலனுக்கு தெரியாதா ? தெரிந்தும் அவர் போலிஸ் மற்றும் மற்ற அதிகாரிகளிடம் தெரிவிக்காதது ஏன் ? அவர் மட்டும் ஏன் கீழே இறங்கி சென்றார் ? போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன ! காந்தியவாதி கோபுரத்தின் மீது ஏறி போராட தூண்டிய சதிகாரர்கள் யார்… யார் …? ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிந்து இருந்தும் — இந்த விவகாரத்தை மட்டும் கையில் எடுத்து கொண்டு இருப்பது எதனால் …..?

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நீதிமன்ற திர்ப்பை எதிர்த்து பேசினால் குற்றம் என்று சொல்லும் சட்டம்,
  உயர்நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த வேண்டி போறாடி தன் இன்னுயிரை போக்கிக்கொண்ட இவர் ஆத்மாவுக்கு நம் சட்டம் சொல்லும் பதில்தான் என்ன?

 5. ssk சொல்கிறார்:

  உங்கள் கேள்வி 1,2,3 இதற்கு பதில் தமிழக அரசு பொறுப்பு.
  சொல்ல ஏன் தயக்கம். அதிலும் 3 வது கேள்வி மிக முக்கியம்.
  நீதி மன்றத்தை மதிக்கும் அரசு உள்ளதா என்பது?

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நியாயமான கேள்விகள். அரசியல்வாதிகளுக்கு ஏதாவது காரணத்தை வைத்து மக்களைத் திசை திருப்பவேண்டும். அவர்கள் நோக்கத்தை அறியாமல் பகடைக் காய்களாகப் பலர் பயன்படுகிறார்கள்.

  இன்றைக்கு சரவணப்பெருமாள் ஐயாவின் இறப்பு வருத்தத்தைத் தந்தபோதும், இந்த அரசியல்வாதிகள், அவர் சொன்ன பல கோரிக்கைகளுக்குத் தங்களின் கருத்து என்ன, எவைகளையெல்லாம் அவர்கள் கடந்தகாலத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். இல்லாவிடில், இது வெறும் அரசியலாகத்தான் பார்க்கப்படும்.

 7. Sampathkumar. K. சொல்கிறார்:

  திரு சசி பெருமாளை, கயிறும், மண்ணெண்ணை பாட்டிலும் கொடுத்து
  செல்போன் டவரில் ஏற்றி விட்டு, தான் மட்டும் பாதியிலேயே
  உட்கார்ந்து கொண்டு,
  தற்கொலை
  செய்யத் தூண்டிய உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும்,
  பா.ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஜெயசீலன் மீது
  தற்கொலைக்கு தூண்டியதற்காக போலீஸ் உடனடியாக நடவடிக்கை
  எடுக்க வேண்டும்.
  சசிபெருமாளின் உயிர் பறிபோக இந்த ஆளே முதல் காரணம்.

 8. தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

  மிக நேர்மையான பதிவு நண்பரே! அது மட்டுமல்ல, ஒரு நல்ல களப் போராளியான சசிபெருமாள் இப்படி ஒரு போராட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்தது, நிச்சயம் தவறான அணுகுமுறையாகும்; தமிழ்நாட்டில் உள்ளவர்கள்தான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாயிற்றே அதனால் இனி நமக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால்கூட தகவல் கோபுரத்தின் மீது ஏறிக்கொள்ளலாம்; இதுவா நல்ல போராட்ட வழிமுறை? நிச்சயம் இது ஒரு மிரட்டல் வழிதான். தாங்கள் கூறியதுபோல் உடனிருந்த ஜெயசீலனைப் பற்றி யாரும் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை! சசிபெருமாள் விலை பேசப்படவில்லை; மாறாக பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. இந்த அரசு விலக்கப்பட வேண்டிய அரசு தான்; அதற்காக இது மட்டுமே வழியல்ல; எதிர்க்கட்சிகளுக்கு, குறிப்பாகத் திமுகவிற்கு மதுவைத் தவிர, ஆட்சியைப் பிடிக்க வேறு எந்த அஸ்திரமும் கண்ணில் தெரிவதில்லை!

  • Siva சொல்கிறார்:

   Well said Rajendran! Sasi Perumal did a great mistake by going there for protesting toward closure of a single Tasmac! Such a personality should have mobilized a large movement with others to close all Tasmac shops! Again, hunger-strike or burning ownself or climbing tower is obsolete methods of protests (old methods). Unnecessarily we lost a strong poraaly!!

 9. D. Chandramouli சொல்கிறார்:

  It is obvious that all the political parties are trying to take advantage of the sad demise of the Gandhian. The police force must be under severe pressure to keep a lid on the situation. This cannot be tackled just as a law and order issue. There is no easy solution to implement a total prohibition in TN. However, there must be several ways to mitigate the evils of drinking among the society. Primarily, there is no point in having TASMAC shops on every road corner, irrespective of the fact whether the shops are close to schools, religious places, hospitals or highways. The Government should be prepared to accept considerably lower revenue on liquor sales. Sanity and wisdom must prevail to sort out the mess that has been created over decades. The ‘WILL’ must be there, the rest will follow.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.