( பகுதி-3 ) MSV – இளையராஜா நிகழ்ச்சி தொடர்ச்சி…..

msv-sivaji

இது நிகழ்ந்தது 30 ஆண்டுகளுக்கு முன்னர் –

திரு MSV அவர்களின் மீது இளையராஜா எந்த அளவிற்கு
அபிமானமும் அக்கரையும் கொண்டிருந்தார் என்பதற்கான
ஒரு சிறந்த உதாரணம் இது. இதைப்பற்றி ராஜா அவர்கள்
இதுவரை எங்கும் வாய் திறந்து சொன்னதாகத் தெரியவில்லை.
( வேறு ஒரு இடத்தில் திரு ஏவிஎம் சரவணன்
அவர்கள் சொல்லிய செய்தி இது )

மக்களின் ரசனை மாறிக்கொண்டே வந்ததால் –
MSV அவர்களுக்கு திரையுலகில் வாய்ப்புகள் குறைந்திருந்த
காலம் அது.

இளையராஜாவும் பாரதிராஜாவும் சேர்ந்து சென்று திரு.ஏவிஎம்
சரவணன் அவர்களை நேரில் பார்த்து, விஸ்வநாதன்
அவர்கள் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு
ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று
சொல்லி இருக்கிறார்கள்.
அவரும் அதற்கு உடனே இணங்கவே, இளையராஜா மட்டும் இசையமைப்பதாக இருந்த அந்த படத்தை ராஜா, MSV ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

MSV அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து,
ஆனால் அதை அவரிடம் சொல்லாமல், “அண்ணா எனக்கு
உங்களுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண ஆசை ” என்று கூறி,
அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார்.
அந்த படத்தின்
பாடல்களுக்கான ட்யூனை விஸ்வநாதன் போட,
ஆர்கெஸ்ட்டிராவை இளையராஜா இயக்கி இருக்கிறார்.

அற்புதமான பாடல்களுடன் வெளிவந்து, பாடல்களுக்காகவே
ஓடிய படம் அது ” மெல்ல திறந்தது கதவு ”

இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்களை மேடையில்
இசைத்தார் இளையராஜா. ஆனால், அந்த படம் தானும் சேர்ந்து இசையமைத்த படம் என்று மேடையில் சொல்லவே இல்லை.

ஊரு சனம் தூங்கிடுச்சு –

அடுத்ததாக inspiration-க்கு இன்னொரு உதாரணமாக –
வான் மீதிலே இன்பத் தேனாறு பாயுது ( பார்க்கவும் – பகுதி-1)
என்ற பாடலின் துவக்கத்திலிருந்து கிளம்பிய –
ஆனால் பிறகு மாற்றம் பெற்ற ஒரு பாடலாக
அதே மெல்ல திறந்தது கதவு படத்திலிருந்து இன்னொரு பாடல் –

வான் மீதிலே ……
வா வெண்ணிலா –

அடுத்து நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத
ஸ்ரீதரின் – நெஞ்சம் மறப்பதில்லை –

மிகச்சிறந்த கருத்துக்களை, மிக எளிமையாகச் சொல்வதில் –
கவிஞர் கண்ணதாசனுக்கு இணை வேறு யார்…?
கண்ணதாசனும், விஸ்வநாதனும் சேர்ந்து படைத்த பல
பாடல்கள், வாழ்க்கையின் பல கட்டங்களில் அப்படியே
அந்த சூழ்நிலையை பிரதிபலிப்பது போல் அமைந்தன.
பிறப்பா, குழந்தைப் பருவமா, துள்ளும் இளமையா,
கொண்டாட்டமா, காதலா, பிரிவா, சோகமா, இறப்பா….
ஒருவர் வாழ்வின் எந்த கட்டத்தை எடுத்துக் கொண்டாலும்,
அதை மிகச்சிறப்பாக பிரதிபலிக்க ஒரு MSV பாடல்
நிச்சயம் இருக்கும்…..

துன்பத்திலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் இளைஞர்களுக்கு
எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையூட்ட இதைவிடச் சிறந்த
பாடல் எதுவாக இருக்க முடியும்…?

மயக்கமா…. கலக்கமா…?

மறைந்து விட்ட காதலியை மறக்க முடியாமல்
தன்னை அணுகும்
பெண்ணுக்கு தன் நிலையைக் கூறி கணவன் பாடும் –

நிலவே என்னிடம் நெருங்காதே –

ஒரு பாடல், இரண்டு பாடல், என்று பல பாடல்கள் பிறக்க
ஒரே அடிப்படை அமைவதை, கீழ்க்கண்ட உதாரணங்களுடன்
மீண்டும் அழகாக வரி வரியாக பிரித்து பாடிக்காட்டினார் ராஜா –

வீதி வரை உறவு ( சோகப்பாடல் ) …. எப்படி

மாம்பழத்து வண்டு – என்று மகிழ்ச்சி பாடலாக மாறியது

என்றும் பிறகு அதே துவக்கம் எப்படி –
பேசுவது கிளியா – பெண்ணரசி மொழியா – என்று காதல் பாட்டாக
மறு வடிவம் எடுத்தது என்றும் சிரிக்க சிரிக்க விவரித்தார்.

பேசுவது கிளியா – பெண்ணரசி மொழியா …

இதன் பிறகு இவர்கள் இருவருமே சேர்ந்து எப்படி
“அலை பாயுதே கண்ணா” என்கிற கானடா ராக பாடலை பிரித்து ரசித்து வரி வரியாக
அனுபவித்தார்கள் என்று ஒரு சொன்னார் ராஜா,
ராஜா மேடையில் அந்த பாடலை இசைக்கவில்லை…..

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது.
பலருக்கும் பிடிக்கும்….

இந்த தருணத்தில் நாம் அனைவருமே அதை அவசியம்
கேட்டு ரசிக்க வேண்டுமல்லவா …?

தமிழில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவருமே
எதாவது ஒரு கட்டத்தில் இந்த பாடலை பாடி இருக்கிறார்கள்…
யார் பாடியதை தேர்ந்தெடுப்பது என்று ஒரு கணம்
யோசித்தேன்.

ஜேசுதாசா, சுதா ரகுநாதனா, சௌம்யாவா, சைந்தவியா …..

ஒரே ஒரு கணம் தான்…….

பித்துக்குளி முருகதாஸ் அவர்களை விட வேறு யாரால்
இந்தப் பாடலை இவ்வளவு அழகாக ரசித்துப் பாட முடியும் …?

( தொடர்கிறது – பகுதி-4-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ( பகுதி-3 ) MSV – இளையராஜா நிகழ்ச்சி தொடர்ச்சி…..

 1. Pingback: ( பகுதி-3 ) MSV – இளையராஜா நிகழ்ச்சி தொடர்ச்சி….. | Classic Tamil

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இதற்கு என்ன மறுமொழி இடுவது என்றே தெரியவில்லை. எம்.எஸ்.வியின் அகந்தையற்ற குணத்தினால், தன்னோடு தன்னைப்போல் வேலை செய்த பலரது அன்பைச் சம்பாதித்து வைத்துள்ளார். அதனைக் கர்வமில்லாது வெளிப்படுத்தியதன்மூலம், இளையராஜா, ஒருபடி மேலோங்கி நிற்கிறார். காலத்தை வென்ற கலைஞர்களான, கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., வாலி, எம்.எஸ்.வி, இளையராஜா போன்றவர்களை 40-80 வயதுகளில் இருப்பவர்கள் எங்கணம் மறக்க இயலும்?

  ரசித்து எழுதுகின்ற உங்களைப் பாராட்டுகிறேன் ஐயா.

 3. காரிகன் சொல்கிறார்:

  திரு காவிரி மைந்தன் அவர்களே,

  இந்தத் தொடர் பதிவை நீங்கள் எம் எஸ் வி க்காக எழுதுகிறீர்களா அல்லது எம் எஸ் வி யின் மரணத்தை வைத்து வியாபரம் செய்த இளையராஜாவுக்காக எழுதுகிறீர்களா என்று முதலில் தெளிவாக விளக்கிவிட்டு பிறகு தொடருங்கள்.

  எம் எஸ் வி பற்றி இளையராஜா சொல்லித்தான் இங்கே தமிழகத்தில் பலருக்கு தெரியவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் மன்னிக்கவும். எம் எஸ் வி இளையராஜாவைத் தாண்டிய – இளையராஜா நினைத்தால் கூட நெருங்க முடியாத உயரத்தில் இருக்கும்- இசை மேதை. இவர் அவரைப் பற்றி புகழ்ந்து சொல்லியதை பதிவாக வெளியிடும் உங்களின் போக்கு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பின்ன எம் எஸ் வி பற்றி இரா வேறு எப்படி சொல்ல முடியும்?

  கொஞ்சம் நடுநிலையோடு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இராவே உங்கள் மையம் என்றால் தயவு செய்து அவரைப் புகழ்ந்து பல பதிவுகள் எழுதுங்கள். எம் எஸ் வி யை இதில் இழுக்க வேண்டாம்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் காரிகன்,

  // எம் எஸ் வி யின் மரணத்தை வைத்து
  வியாபரம் செய்த இளையராஜா//

  அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
  நீங்கள் “ஞாநி” வழி வந்தவரோ….!

  எனக்கு இவர்கள் இருவரையுமே, ஏன் இன்னும்
  பல இசையமைப்பாளர்களையும்
  பிடிக்கும். நல்ல இசையை யார் தந்தாலும் பிடிக்கும்.

  நான் இதைப்பற்றி எல்லாம் இந்த இடுகைத் தொடரின்
  இறுதியில் பேசுவதாக இருந்தேன்.

  வயதுக்கு தகுந்த முதிர்ச்சி இல்லாமல் ஞாநி அவசரப்பட்டு
  கொட்டிய வார்த்தைகள் இளையராஜா மீது அவருக்குள்ள
  அசூசையை / வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறது….
  உண்மையை அல்ல….

  உங்களுக்கு தெரியுமோ – இல்லையோ –
  இந்த நிகழ்ச்சி மூலம் வசூலான தொகையை, MSV அவர்களின்
  மகளிடம், அந்த நிகழ்ச்சியின் முடிவிலேயே கொடுத்து
  விட்டார் இளையராஜா.

  ஏறக்குறைய கடைசி இருபது வருடங்களாக உரிய வருமானமின்றி
  சிரமப்பட்டுக்கொண்டிருந்தார் மெல்லிசை மன்னர்.,
  மறைந்த மெல்லிசை மன்னரின் குடும்பத்திற்கு அவசியப்படும்
  உதவிகளைச் செய்வதை விட சிறந்த மரியாதை வேறு என்ன
  இருக்க முடியும் …?

  விளம்பரமின்றி அவர் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய
  முயன்றவரை ஏன் தவறாகப் பேசுகிறீர்கள்…?

  இளையாராஜா மீது வேறு எந்த விஷயத்திற்காகவாவது
  உங்களுக்கு வெறுப்பு இருக்கக்கூடும். அதற்கான காரணங்களும்
  உங்களுக்கு இருக்கக்கூடும். தயவுசெய்து இந்த நிகழ்ச்சியுடன்
  அதை தொடர்புபடுத்த வேண்டாம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  பின் குறிப்பு – உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் –
  படிக்க வேண்டாம் – விட்டு விடுங்கள்.
  சில நினைவுகளைப் போற்றி எழுதப்படும்
  இந்த இடுகையில் யாரும்
  அவதூறு செய்யப்படுவது எனக்கு ஏற்புடையதல்ல.
  அதை வேறு சமயத்தில் வைத்துக் கொள்வோம்.

  • Siva சொல்கிறார்:

   Although KM sir asked to stop the discussion, I just want to say one important critical assessment about our stupidity on how we recognize the legendary personalities. Particularly, how we assess the legend argues across different time periods. No one can refute that both MSV and Ilayaraja are the greatest music composers in thier period. No one is inferior or superior to each other. They are legends in thier generational period.

   A comparison between legends of different periods is totally inappropriate. You cannot simply compare MSV with Ilayaraja; Ilayaraja with A R Rahman or newer generation composers. They all made/make thier footprint of skills at given time. We cannot compare thier legendary skills across time period.

   I feel very bad for the prevailing stupid mentality among educated/learned people in Tamil Nadu to make a comparison between two legends, who lived/live in different time periods. You cannot make any valid comparison among legends who belong to two different periods.

   A simple example, you cannot make a perfect comparison among ur grand-father and ur father ( as well between your father and you OR between you and ur son).

   None of the educated stupids in Tamil Nadu realize this incompatiblity in comparison, but fight on social and online media for Ilayaraja or AR Rahman or current generation music composer.

   Mr Karigan is one of the under-educated person, who is critical of this serial posts written by KM sir

   In fact, KM sir is giving us the abstract of music show on MSV. I do not see any fault with Ilayaraja performing the show or KM sir writing it here!

   KM sir, post this message as such without any deletion.

   • Siva சொல்கிறார்:

    Correction for first paragraph: “Particularly, how we assess the legendaries across different time periods”

   • Siva சொல்கிறார்:

    Same way, I see the people comparing the legendary Kaviarasu Kannadasan with Vairamuthu; and Vairamuthu with new generation poets. We cannot simply compare them. Kannadasan was greatest in his periods; Vairamuthu has been greatest during his period; now Na Muthukumar, Pa Vijay and other poets are greatest in the current period.

    It is better to take good things what they brought out and how it is helpful in changing the society as a whole! Otherwise, do not divide the creators. But you can have a high esteem for one creator over other, but do not underestimate the other one!

 5. காரிகன் சொல்கிறார்:

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சியின் பணம் எம் எஸ் வி யின் குடும்பத்திற்கு சென்ற விவரம் எனக்கும் தெரியும். நான் சொல்ல வந்தது அதுவல்ல. வேறு. ஆனால் உங்கள் தளத்தில் ஒரு வீண் விவாதத்தை தொடர விரும்பவில்லை.

  நன்றி. தொடர்ந்து இராவைப் பற்றி புகழ்ந்தே எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 6. Rishabaraj Rajendra சொல்கிறார்:

  @காரிகன்,
  முதலில் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்
  உங்கள் போன்ற மூத்தோருக்கு MSV ஐ தெரிந்த அளவுக்கு அடுத்த தலைமுறையினருக்கு தெரிந்து இருக்காது . அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள இளையராஜா போன்றவர்கள் கூறினால்தான் உண்டு.
  இளையராஜா ஒரு நல்ல காரியம் செய்திருக்கின்றார் . அதை வசைபாடாமல் புரிந்து நடந்து கொள்ளுங்கள் .
  உங்களை விட வயதிலும் , அனுபவத்திலும் காவிரி மைந்தன் ஐயா மூத்தவர் என்பதை மறக்காதீர்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் ரிஷபராஜ் மற்றும் காரிகன் –

   இந்த விஷயத்தை இதோடு விட்டு விடுவோமே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Ganpat சொல்கிறார்:

  நல்லா போய்கொண்டிருக்கும் கச்சேரியில் சற்றே ஸ்ருதி பேதம்! 😦 என்ன செய்வது? எனையாளும் ஈசன் செயல்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.