( பகுதி -4 ) – MSV- இளையராஜா நிகழ்ச்சி – தொடர்ச்சி. ……

raja-3

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், இளையராஜா மேடைக்கு வந்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து ரஜினிகாந்த் மேடைக்கு
அருகே உள்ள முதல் நுழைவாயில் வழியே உள்ளே வந்தவர் –
பரபரவென்று நேராகச் சென்று முதல் வரிசையில்
காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

இருந்தாலும், ரசிகர்கள் அவரைப் பார்த்து விட்டதால்,
அவையில் ஒரு சிறிய ஆரவாரம் இருந்தது.

பின்னர், அரைமணி நேரம் கழித்து, தன் நிகழ்ச்சியின்
இடையில் இது குறித்து பேசிய ராஜா, தான் இந்த
நிகழ்ச்சிக்கு பிரபலஸ்தர்கள்
என்று யாரையுமே அழைக்கவில்லை என்றார். அழைக்காமலே
வந்து கலந்துகொண்ட ரஜினிக்கு தன் நன்றியைத் தெரிவித்துக்
கொண்டார். ( முகம் முழுவதும் வெள்ளை தாடி,மீசையுடன்
இருந்த ரஜினியை ராஜா “சாமி” என்று தான் விளித்தார் )

தான் முக்கியஸ்தர்கள் யாரையும் அழைக்காததற்கான
காரணத்தையும் விளக்கினார் ராஜா….
எஸ்.பி.பி, சித்ரா போன்றோரை
கூப்பிட்டிருந்தால் நிச்சயம் வந்திருப்பார்கள். நான் வேண்டுமென்றே
தான் கூப்பிடவில்லை. பிரபலமானவர்கள் வந்தால், நிகழ்ச்சியின்
உணர்வும், கவனமும் அவர்கள் பக்கம் திரும்பி விடும்.

” நான் இந்த நிகழ்ச்சியின் கவனம் முழுவதுமாக
எம்.எஸ்.வி. அவர்களின் மீதே சார்ந்திருக்க வேண்டுமென்று
விரும்பினேன். அதனால் தான் யாரையும் அழைக்கவில்லை

என்றார்.

– நான் முதன் முதலில் எம்.எஸ்.வி. அவர்களின் குழுவில்
ஒரு வாத்தியக்காரனாக சேர்ந்தபோது – புதிதாக
ஒரு வாத்தியக்காரனாக சேர்ந்த எனக்கு தனியாக என்னை
நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே
மெனக்கெட்டு தனியாக நோட்ஸ் கொடுத்த புண்ணியவான்
அவர்
– என்று உணர்ச்சி வசப்பட்டார் ராஜா…
நான் அவர் கூடப்பிறக்கவில்லை தான்… ஆனாலும் இசை
எங்கள் இருவரையும் இணைத்து வைத்தது. எனவே நாங்கள்
உடன்பிறவாத சகோதரர்கள்.

எவ்வளவு நெருங்கிப் பழகினாலும்,
எப்போதுமே நான் அவரை என் குருவாகவும், மூத்த
சகோதரராகவுமே மதித்தேன்-
என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும், MSV அவர்களின்
இசையமைப்பாளர் வாழ்வில் – முதல் இருபது வருடங்களில் ( 1950 – 70 ) வெளிவந்த பழைய படங்களையே ராஜா எடுத்துக் கொண்டார்.

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…..

மீண்டும் எம்.எஸ்.வி அவர்களின் திறமைகளைப் பற்றி
கூறும்போது, 250 ஆண்டுளுக்கு முன் வாழ்ந்த, உலக அளவில் புகழ்பெற்ற இசைமேதை மொசார்ட் போல் மிகச்சிறந்த
கம்போசர் MSV. இந்தியாவில் பிறந்ததால், அவர் மொசார்ட்டை
விட எந்தவிதத்திலும் குறைந்தவர் ஆக மாட்டார் என்றார்.

mozart

மொசார்ட் 200 வருடங்களுக்கு முன்னர் கம்போஸ் செய்த
ஒரு ட்யூனைப் பற்றி – 1950-ல் நம் வசமிருந்த வசதிகளைக்கொண்டு – MSV -க்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை –

ஆனாலும் அதே போன்ற ஒரு அற்புதமான ட்யூனை தமிழில் கம்போஸ் செய்தார் MSVஅண்ணா என்று
சொல்லி 1950- வாக்கில் வெளிவந்த,
ஒரு பாடலை இசைக்கச் செய்தார் ராஜா.

அதற்கு முன்னர் மொசார்ட்டின் அந்த ட்யூனையும்
ராஜாவே இசைத்துக் காட்டினார்…..!

இதைப்படிக்கும் அநேகம் பேருக்கு 60-62 வருடங்களுக்கு முன்னர்
MSV இசையில் இப்படி ஒரு பாடல் வந்ததோ –
அதைப்பாடியிருந்த, அந்தக்காலத்தில் பாடி நடிக்கக்கூடிய –
புகழ்பெற்ற நடிகர், நடிப்பிசைப்புலவர் என்றழைக்கப்பட்ட
கே.ஆர். ராமசாமியையோ தெரிந்திருக்க சான்ஸே இல்லை….!!!

கேளுங்களேன்- பாருங்களேன் – “சுகம் எங்கே”
என்கிற படத்தின் அந்த அருமையான பாடலை….

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் …..


அதே மாதிரி இன்னொரு பாடல் அதே படத்தில் ….
செந்தமிழ் நாட்டு சோலையிலே –

MSV அவர்கள், அவரது தாயின் மீது வைத்திருந்த பக்தியையும் மரியாதையையும் விளக்க ஒரு சம்பவத்தை கூறினார்….

தேவர் பிலிம்ஸ் படங்கள் அனைத்திற்கும் வழக்கமாக
இசையமைத்து வந்தவர் “மாமா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த மறைந்த திரு கே.வி.மஹாதேவன் அவர்கள்.

தேவர், “வேட்டைக்காரன்” படத்தை தயாரிக்கவிருந்தபோது, அந்தப் படத்திற்கு MSV அவர்கள் இசையமைக்க வேண்டுமென்று விரும்பி, அதற்காக MSV அவர்களிடம் 5000 ரூபாய் அட்வான்சும் கொடுத்திருக்கிறார். MSV தனது அன்னையிடம் பெரும் பக்தியும்
மரியாதையும் வைத்திருப்பவர். எந்த தருணத்திலும் தன் தாய்
சொல்வதை மீறவே மாட்டார்.

வீட்டிற்கு சென்றவுடன், வழக்கம்போல், தேவர் பிலிம்ஸ்-க்கு இசையமைக்க வாய்ப்பும், 5000 ரூபாய் அட்வான்சும்
கிடைத்திருப்பதை மிகப்பெருமையாகச் சொல்லி –
அந்த பணத்தையும் தன் அன்னையிடம் கொடுத்தாராம்.

அவரது அன்னை பெரும் கோபம் கொண்டு -” நீ எப்படி இதை
ஒப்புக்கொண்டாய். மாமா ( கேவிஎம் அவர்கள் ) உனக்கு “குரு”
மாதிரி அல்லவா ?. அவர் வழக்கமாக இசையமைத்து வந்த
கம்பெனிக்கு நீ ஒப்புக் கொண்டால், அவர் வாய்ப்பு பறி போகாதா…?

நீ எப்படி இந்த பாவத்தை செய்யத் துணிந்தாய்….?
போ – உடனே போ….
போய் இந்த பணத்தை உடனே திருப்பிக் கொடுத்து விட்டு,
அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிறகு தான்
நீ வீட்டுக்கு வர வேண்டும் “
என்று சொல்லி விட்டாராம்.
தாய் சொல்லைத் தட்டாத தனயனான MSV-யும் அதே போல்
தேவர் பிலிம்ஸ் வாய்ப்பை வேண்டாமென்று கூறி விட்டாராம்….!!!

மன்னாதி மன்னன் படத்திற்கான, MSV இசையில் உருவான,
கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல் –

ஆடாத மனமும் உண்டோ ….

நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவுக்கு வரக்கூடிய நேரத்தில் – ஆடியன்சை பார்த்து, உங்கள் விருப்பம் எதாவது உண்டா ..? என்று கேட்டார் ராஜா…
கூட்டத்திலிருந்து எதை எதையோ குரல் கொடுத்தார்கள்.
கூட்டமாகச் சொல்லாதீர்கள். யாராவது ஒருவர் தெளிவாகச் சொல்லுங்கள் என்று சொன்னார்.

பின்னர் ஒரு முதியவர் எழுந்து உரத்த குரலில் “கர்ணன்”
என்று சொன்னார்.

சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருந்தார் ராஜா….

பின்னர் ” நான் அந்த பாட்டை ( உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது …. ) வேண்டுமென்றே தான் இங்கு
பாடாமல் இருக்கிறேன். அதைப் பாடி விட்டால் இந்த
உற்சாகமான சூழ்நிலை முற்றிலும் மாறி விடும்.
நான் இதை ஒரு இரங்கல் கூட்டமாக நடத்த விரும்பவில்லை.
MSV அண்ணாவின் திறமைகளை, சாதனைகளை
எண்ணி எண்ணி வியந்து, அனுபவித்து – போற்றி பாராட்டும்
நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறேன்”
என்று சொல்லி விட்டு வேறு ஒரு பாடலை இசைக்கச் செய்தார்….

வான் நிலா – நிலா அல்ல

( அடுத்த 5-வது பகுதியுடன் தொடர் நிறைவடைகிறது ….)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ( பகுதி -4 ) – MSV- இளையராஜா நிகழ்ச்சி – தொடர்ச்சி. ……

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  உங்கள் எழுத்துக்களின் மூலம் MSVயை ராஜா ரசித்ததை உணர்கிறோம். இதன் முத்தாய்பாக உங்கள் எழுத்தை, உங்கள் ரசனையை நாங்கள் அதை விட ரசிக்கிறோம்.

 2. Pingback: ( பகுதி -4 ) – MSV- இளையராஜா நிகழ்ச்சி – தொடர்ச்சி. …… | Classic Tamil

 3. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்கள் narration அசத்துகிறது. புதுவசந்தம்
  எழுதியிருப்பது போல் இளையராஜா எம்.எஸ்.வி.சாரை
  ரசித்ததை, உங்கள் வார்த்தைகளில், உங்கள் ரசனையோடு
  கேட்பது இன்னும் ரசமாக இருக்கிறது.

  நாங்கள் நேரில் இந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தால் கூட
  இந்த அளவிற்கு ரசித்து அனுபவித்திருப்போமா என்று
  தெரியவில்லை. உங்கள் commentry யோடு சேர்த்து
  பார்ப்பதால் இன்னும் interesting ஆக இருக்கிறது.
  பேசாமல் உங்கள் கூடவே நிகழ்ச்சிக்கு வந்து பக்கத்திலேயே
  உட்கார்ந்து பார்த்திருக்கலாம் !
  ஆனால், நிகழ்ச்சிக்கு நாங்கள் நேரில் வந்திருந்தால், பாடல்களை
  மட்டும் தான் கேட்டிருப்போம். கே.ஆர்.ராமசாமியையும்,
  சாவித்திரியையும், பத்மினியையும், எம்.ஜி.ஆரையும்
  பார்த்திருக்க முடியாதே !
  மிக மிக interesting ஆன ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக
  உங்களுக்கு மிக மிக நன்றி.
  நான் அந்த பழைய பாடல்களுக்காக, மீண்டும் மீண்டும் உங்கள்
  தளத்திற்கு வந்து போய்க்கொண்டே இருக்கிறேன்.

  ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் அத்தனை பாடல்களையும் கவர்
  செய்து விட்டீர்களா ? you tube-ல் கிடைக்காத பாடல்களும்
  எதாவது உண்டா ? ஏன் கேட்டேனென்றால் சி.எஸ்.ஜெயராமன்
  பாடல்கள் எதுவும் இங்கே இல்லை.
  ராஜா சார் தேர்ந்தெடுக்கவில்லையா? கே.ஆர்.ராமசாமி போலவே,
  சி.எஸ்.ஜெ. குரலும் ரொம்ப வித்தியாசமானது.

  எப்படி இருந்தாலும் உங்களுக்கு மிக மிக மிக நன்றி.
  கடைசீ பகுதிக்காக காத்திருக்கிறேன்.

 4. Sampathkumar. K. சொல்கிறார்:

  K.M.sir,

  திசை மாறுவதற்கு மன்னிக்கவும்.

  ‘ ஆம்பளையா இருந்தா சுடு ‘
  பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

  • Siva சொல்கிறார்:

   What is there to think? Or comment?
   Mr Vaiko is trying to ban the alcohol use, but groups with vested interests prevent it. He has been sincerely working for this goal since a long time. But no public support nor media support. So he has to take several fights with police and others. In the middle of these fights, police hands are tied; Mr Vaiko is frustrated with police activities. Neither police nor Mr Vaiko is wrong. We cannot blame police because his paid master is pulling the ring to dance as per his tune. It is the groups (ruling and opponents) with vested interest are to blame completely!

   However, People like you want to dry out ur body (kulir kaayuthal) in this cold of unending fight ! Without giving serious attention to the matter, you guys want to see who is right or wrong/ win or loose. Vaazhga tamilar!

   • Sampathkumar. K. சொல்கிறார்:

    Mr.Siva,

    முதலில் உங்களை நீங்களே அதிமேதாவி என்று
    நினைத்துக் கொண்டு, மற்றவர்களை ஏளனப்
    படுத்துவதை நிறுத்தவும்.
    உங்கள் கருத்தைச் சொல்லி விட்டுப் போங்கள்.
    என்னை குறைகூற நீங்கள் யார் ?
    நான் குளிர்காய விரும்புவதாக நீங்கள் எப்படி
    சொல்லலாம் ? ஒரு முக்கியமான விஷயத்தில்
    நான் காவிரிமைந்தன் அவர்களின்
    கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்பித்தான் கேட்டேன்:
    உங்களைப் போன்ற அரைவேக்காட்டின் கருத்தைப் பற்றி
    எனக்கு எந்த அக்கரையும் இல்லை.

    • Siva சொல்கிறார்:

     Even I don’t care what u said about me ! I am not going to be angry about what u and others say about me. But I will not walk free also. I will keep posting message and be critical of about everything until we people get awareness!

     Nothing is personal attack here. I don’t mind even if you attack me personally!

     I am not athi-methaavi. Neither you. We are all learning knowledge and experience from birth to death. So there is no space for athi-methaavi thanam! I am not arai-vekkaad too.

     I do not care whether u listen me or read my comments. But my drill will keep continue!

     If you have asked in general about the madhu-vilakku poraattam, it is appreciable! But you specifically asked for Vaiko’s one speech. It indicates that you guys are not interested in the core cause, but wants to see which politician vomited where ?

     Come on man! Think about the core issue, forget accessories!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சம்பத்குமார்,

   வைகோ அவர்கள் என் உள்ளத்தில்
   மிக உயர்ந்த இடத்தில் இருந்தார் – முன்பு……

   நேற்று, கலிங்கப்பட்டி வீராவேசங்களை எல்லாம்
   நேரடி தொலைக்காட்சியில் கண்ட பிறகு –

   வருந்துகிறேன்… என்னை நானே நொந்து கொள்கிறேன்.

   இந்த இடுகைத் தொடர் முடிந்த பின்னர்
   நாம் விவரமாகப் பேசுவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. gopalasamy சொல்கிறார்:

  please write about “Engal Selvi” songs.

 6. gopalasamy சொல்கிறார்:

  sorry. engal selvi music by KV Mahadevan. (nageswara rao,anjali devi)

 7. D. Chandramouli சொல்கிறார்:

  The songs of 1950-70 selected by Ilaya Raja were indeed gems from the treasure left behind by MSV and Ramamurthy. The real dilemma would have been which ones to select, given the time constraint! It is so nice of MSV for having returned the advance from Thevar so that the latter continued with KVM, another great composer (but who has been unfortunately under-rated). But, of course, for melodies, MSV-Ramamurthy and later, MSV on his own created magic. As someone said, we really cannot compare the greatness of composers of different eras. I look forward to your next episode.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.