பகுதி -5- MSV – இளையராஜா நிகழ்ச்சியின் தொடர்ச்சி…..

raja-4

raja-5

இந்த பகுதிக்குள் போவதற்குள் நண்பர் ராமச்சந்திரனுக்கு ஒரு விளக்கம். அனேகமாக – இரண்டு பாடல்கள் தவிர – மற்ற
எல்லா பாடல்களையும் இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டேன்
என்றே நினைக்கிறேன்.
இருந்தாலும், என் கவனக்குறைவால் எதாவது விட்டுப் போயிருக்கலாம்.

திரு சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள் – இளையராஜா அவர்களின்
நிகழ்ச்சியில் எதுவும் வரவில்லை. நேரம் பற்றாக்குறை
காரணமாக இருக்கலாம். இருந்தாலும், உங்கள் ஆசையையும்,
என் விருப்பத்தையும் சேர்த்து நிறைவேற்றும் விதமாக
மிகவும் புகழ் பெற்ற CSJ அவர்களின் புதையல் படப்பாடல் கீழே –

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் …..

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இளையராஜா அவர்கள் ரஜினியை
மேடைக்கு அழைத்து சில வார்த்தைகள் பேசச்சொன்னார்.
ரஜினி பேசியது பல தளங்களில் வெளிவந்து விட்டது. இருந்தாலும்
இந்த இடுகை முழுமை பெற இங்கும் கீழே –

—-

‘‘எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி! பெரிய மகான்!
அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது.
இளையராஜா அவர்கள் ஒரு இசைஞானி!
எம்.எஸ்.வி. இசை சாமி! அந்த கடவுளை பற்றி ஒரு ஞானிக்கு
தான் தெரியும். அவரைப் பற்றி பாமர மக்களுக்கு இசைஞானி
தான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப்
போன்றவர்கள் கலந்து கொண்டது எங்களுக்கு கிடைத்த பெரிய
ஆசீர்வாதம்!

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம்
இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது.
அது ஒரு பிராப்தம், சரஸ்வதி கடாட்சம்! எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு
அது கிடைத்திருக்கிறது.

பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது.
ஆனால் எம்.எஸ்.வி.யிடம் சிறு கடுகளவு கூட தலைக்கனம்
இருந்ததில்லை. அவர் ஒரு இசை கடவுள்!
1960 மற்றும் 70 காலகட்டத்தில் ஜாம்பவான்களாக நிறைய
நடிகர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் இருந்தனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாலச்சந்தர், ஸ்ரீதர், டி.எம்.
சௌந்தர ராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும்
புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ராமருக்கு உதவிய அனுமன் போல் இருந்தாலும் ஒரு அணில்
மாதிரியே வாழ்ந்தவர் எம்.எஸ்.வி.

அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை.
இனி பார்க்கப்போவதும் இல்லை.
அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்’’

—-

அதன் பின்னர், முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த
மெல்லிசை மன்னர் MSV அவர்களின் குடும்பத்தினரை
மேடைக்கு அழைத்து வரச்செய்தார் ராஜா.

பிறகு சிறிய குரலில், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த
தொகையை MSV அண்ணா அவர்களின் குடும்பத்திற்கு
அளிக்கிறோம். இதனை தன் கையால் அளிக்குமாறு ரஜினியை
கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மீண்டும் மேடை ஏறிய ரஜினி ராஜாவிடமிருந்து
பெற்றுக் கொண்ட காசோலையை ஒருக்கணம் பார்த்தார்.
தொகையைப் பார்த்ததாலோ என்னவோ, ஆச்சரியத்துடனும்,
சந்தோஷத்துடனும், ராஜாவின் கன்னத்தை தன்
இரு கரங்களாலும் தடவி வாழ்த்தி, நெஞ்சாற அணைத்துக்
கொண்டார். ( கடைசி வரை ராஜா தொகை எவ்வளவு என்று
சொல்லவே இல்லை )

பின்னர் ரஜினி அந்த காசோலையை MSV மகளிடம் கொடுத்தார்.
கண்ணீர் மல்க அதைப்பெற்றுக் கொண்ட அவர், ராஜாவிற்கும்
மற்ற அனைவருக்கும் தன் குடும்பத்தினரின் சார்பில் நன்றி
தெரிவித்தார்.

இங்கு ஒன்றை அவசியம் சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரும் தொகை MSV அவர்களின்
குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்று முன்னதாகவே
இளையராஜா அவர்கள் அறிவித்திருந்தால், அவரைப்பற்றி
யாரும் குறை பேசவே சந்தர்ப்பம் வந்திருக்காது.

ஆனால் – MSV அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி
தேவைப்படுகிறது என்று விளம்பரம் செய்ய ராஜாவிற்கு
மனம் வரவில்லை என்று தோன்றுகிறது.
அதனால் தானோ என்னவோ, எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதைக்கூட வெளியில் அறிவிக்கவில்லை.
ரஜினி பார்த்து வியந்ததோடு சரி.

திரு ஞாநி, பக்குவம் சிறிதும் இல்லாமல் அவசரப்பட்டு –
இளையராஜா, இந்த நிகழ்ச்சியின் மூலம் MSV பெயரை
பயன்படுத்தி –
தனக்கு, தனது மனைவி பெயரிலான ட்ரஸ்டுக்கு –
பணம் பண்ணப் போவதாக அவசரப்பட்டு எழுதினார்.
விவரம் தெரிந்த பின்னராவது வருத்தம் தெரிவித்திருக்கலாம் –
அந்த பெருந்தன்மையும் அவரிடத்தே இல்லை….

திருவண்ணாமலை மகான் ரமணரின் நினைவாக
இளையராஜா தானே ஒரு பாடலை இசைத்து நிகழ்ச்சியை
முடித்து வைத்தார்.

அந்தப்பாடலை என்னால் வலைத்தளத்தில்
தேடிக்கண்டு பிடிக்க முடியவில்லை….
எனவே, கருணை வள்ளல் ரமணரின் நினைவாக
இளையராஜாவே பாடிய மனதை உருக்கும்
இன்னொரு பாடலை இங்கு பதித்து
இந்த இடுகைத்தொடரை நிறைவு செய்கிறேன்.

இந்த இடுகைத் தொடரை எழுதியது என் மனதிற்கு மிகவும்
பிடித்தமானதாக இருந்தது. நிகழ்ச்சியையும், அதில்
இசைக்கப்பட்ட ஒவ்வொரு பாடலையும் நான் மிகவும்
ரசித்து தான் இங்கே முடிந்த வரை பதித்தேன்.

இது உங்களுக்கும் பிடித்தால் – எனக்கு மிகவும் மகிழ்ச்சி…..

ஒரு வேளை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் …..?

எனக்காக பொறுத்துக் கொள்ளுங்களேன்….!!!!

பிக்ஷை பாத்திரம் ஏந்தி வந்தேன்…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to பகுதி -5- MSV – இளையராஜா நிகழ்ச்சியின் தொடர்ச்சி…..

 1. Tyagarajan சொல்கிறார்:

  அற்புதமான இடுகைகள். ரொம்ப நன்றி. இது பின்னர் இணையத்தில் காணக்கிடைக்குமா?

 2. D. Chandramouli சொல்கிறார்:

  Rajini’s encomiums on MSV and also on Ilayaraja were icing on the cake. Excellent write up, like watching the show from the ringside.

 3. paamaran சொல்கிறார்:

  ஐந்து இடுக்கையும் சிறப்பு ! என் மனதில் தோன்றிய ஒரு பாடல் :—- “நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? – நெஞ்சில்
  நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
  கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
  குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?” —- இந்த பாடல் ” பந்தபாசம் படத்தில் கவிஞர் திரு . மாயவநாதன் என்பவரால் எழுதி எம்.எஸ் வி . அவர்களால் இசை அமைக்கப்பட்டது ” இந்த காலத்திற்கும் [ ஞானி போன்ற ] சிலருக்கும் பொருந்துவது தான் — தனி சிறப்பு !! .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் ….
   இங்கு யாருக்கும் குறை இருக்கக்கூடாது…
   சரி தானே …!!!

   எதைச் சொல்வது – எதை விடுவது…?

   உங்கள் விருப்பம் என் விருப்பமும் கூட….!!!

   -வாழ்த்துக்க்ளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: பகுதி -5- MSV – இளையராஜா நிகழ்ச்சியின் தொடர்ச்சி….. | Classic Tamil

 5. Siva சொல்கிறார்:

  Good compilation of very good program!

 6. Surya சொல்கிறார்:

  Excellent write-up! Gave great pleasure to read this…

 7. S.Muneeswarn சொல்கிறார்:

  I am reading all of your articles. Really nice & you are doing service to the society.

 8. Bala சொல்கிறார்:

  Excellent coverage of the event. Thank you for sharing.

 9. kr.l.ramanathan சொல்கிறார்:

  எப்போதும் ஒரு இசைக்கு மற்றொரு இசையை பிடிக்காது இங்கே இருஇசையும் இணைந்து போனது தமிழகத்தின் தாராளம்

 10. Nanban சொல்கிறார்:

  ஞானி என்று பெயர் வைத்த காரணத்தால் தான் சொல்லுவது எல்லாம் சரி என்று நினைக்கின்றாரோ என்னவோ? ஒருவேளை இந்த இடுகையைப் பார்த்தால், தான் குற்றம் கூறியதால் அது இல்லை என்று நிரூபிக்க இளையராஜா MSV குடும்பத்திற்கு ஏதோ கொஞ்சம் உதவினார் என்றும் சொல்லக்கூடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.