அடுத்த பலி …? ..மாணவர்களா…? பிணங்களை வைத்து பிழைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் …..

college students agitating

puzhal -1

—————–
” ரேபிஸ் ”
– வெறி பிடித்த நாய்களால் கடிக்கப்பட்ட மனிதர்களுக்கு
வரும் ஒரு வெறி நோய் “ரேபிஸ்”.
இந்த நோய் பிடித்தவர்கள் காண்பவர்களை எல்லாம்
நாயைப் போல் கடிப்பார்கள்.
கடிக்கப்பட்டவர்களுக்கும் “ரேபிஸ்” நோய் பரவும்.

—————–

மதுவிலக்கை முன்வைத்து வரவிருக்கிற தேர்தலில்
ஆதாயம் பெறுவதில் யார் முந்திக் கொள்வது என்பதில்
கேடுகெட்ட தமிழக அரசியல்வாதிகளிடையே கடும் போட்டி….

“மதுவிலக்கு” அமல்படுத்துவது தொடர்பாக ஜெ. ஆலோசனை
செய்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தவுடனேயே அவசர
அவசரமாக கலைஞர் – திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை
அமல்படுத்த “ஆவன” செய்யப்படும் என்று நள்ளிரவில்
அறிக்கை வெளியிட்டார்.

உடனே இந்த நோய் அரசியல் கட்சிகள் அனைத்தையும்
பீடித்தது. இதில் டாக்டர் ராமதாஸ் ஒருவரைத்தவிர
மீதி அத்தனை பேரும் தேர்தலுக்காகவே இந்த ஆயுதத்தை ஏந்தி
இருப்பவர்கள்.

தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக எதையும் செய்யத் துணிந்த
அரசியல் வியாபாரிகள் இவர்கள்….

தேர்தலுக்காக – இவர்கள் கொடுத்த முதல் பலி –
அதைப் புரிந்து கொள்ளாத அப்பாவி – திரு சசி பெருமாள்.
அவர் சாவை வைத்து முடிந்த வரை ஆதாயம் தேட அத்தனை கட்சிகளும் முயன்று வருகின்றன.

இப்போது அடுத்து அவர்கள் பலி ஆடுகளாகத்
தேர்ந்தெடுத்திருப்பது
கல்லூரி மாணவர்களை ….
அதுவும் எத்தகைய கல்லூரி மாணவர்கள் …?

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பது
பெரும்பாலும் கலைக்கல்லூரிகளிலும்,
அரசு சட்டக்கல்லூரிகளிலும் தான்…..

லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து பொறியியல்,
மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வசதி இல்லாதவர்களின்
கடைசிப் புகலிடம் இந்த கல்லூரிகள் தானே…?
குறைந்த அளவு மதிப்பெண் பெற்றதாலும் கூட –
காசு எதுவும் கேட்காமம் சேர்த்துக் கொள்வது இங்கே தானே…?

அரசியல் வெறியர்களின், அரசியல் வியாபாரிகளின்
குறி – பலவீனமான, எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய
இந்தக் கல்லூரி மாணவர்கள் தான்.
( மெடிக்கல் அல்லது எஞ்சினீரிங் கல்லூரி மாணவர் யாராவது
போராட்டத்தில் இறங்கி பார்த்திருக்கிறீர்களா ..? )

நேற்று நடந்த “பந்த்” ல் கைது செய்யப்பட்ட
‘ so called ‘ தலைவர்களின் நிலை என்ன …?
ஓருக்கணம் யோசித்துப் பாருங்கள்….
பெரும்பாலானவர்கள் தொலைக்காட்சிகளுக்கு க்ளோசப்பில்
பேட்டி கொடுத்து விட்டு, போராட்ட அறைகூவல்கள்
விடுத்து விட்டு, போலீஸ் வேனில் முழு மரியாதையுடன்
அழைத்துச் செல்லப்பட்டு, நான்கு மணி நேரம் கல்யாண
மண்டபங்களில் இளைப்பாற, கதையளக்க விடப்பட்டு,
சர்க்கார் செலவில் ” சோறு ” போடப்பட்டு – மாலையில்
ஹாயாக “ரிலீஸ்” செய்யப்பட்டார்கள்.

தெற்கே இருந்த ஒரு தலைவர், தலைக்கும், மீசைக்கும்
புதிதாக் “டை”அடித்து, ப்ளேன் பிடித்து, இன்று சென்னையில்
மீண்டும் மாணவர்களை தொடர்ந்து தூண்டி விட
வந்திறங்கி விட்டார்.

இவர் மீது முந்தாநாள் தான் 17 பிரிவுகளின் போலீஸ் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது ஆகி விடுங்கள் என்று
கெஞ்சி கேட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரியிடம்,
“மரியாதையாகப் போய் விடு – என்னை கைது செய்தால்
அடக்க முடியாத அளவுக்கு கலவரம் வெடிக்கும்” என்று
பயமுறுத்தி விட்டு, வீட்டிற்கு கிளம்பி விட்டவர் இவர்.

ஆனால் இந்த அரசியல் வியாபாரிகளால் மூளைச்சலவை
செய்யப்பட்டு, வெறியூட்டப்பட்டு, டாஸ்மாக் கடைகளின்
மீது தாக்குதல் நடத்தி போலீசிடம் மாட்டிய மாணவர்களின்
கதி என்னவாயிற்று …..?

jail-2

jail-3

“அடித்து நொறுக்குங்கள். தீ வைத்து கொளுத்துங்கள் ”
என்று ஆவேசமாகப் பேசிய தலைவர் இப்போது
ஏஸி அறையில் டிவி பார்த்துக் கொண்டு,
தன் சகாக்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்….

ஆனால் – அவர் பேச்சை கேட்ட மாணவர்கள் ….?

போலீசிடம் லத்தி உதை பட்டு,
சிறையில் அடைக்கப்பட்டு –
14 நாட்கள் கம்பி எண்ண காராக்கிரகத்துக்கு
கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

stalin-meets-students-in-jail

இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளும்,
ஒருவர் தவறாமல் வரிசையாக போட்டி போட்டுக் கொண்டு
சிறைக்கு சென்று எதற்கும் பயப்படாதீர்கள் மாணவ சிங்கங்களே –
தொடர்ந்து போராடுங்கள் – நாங்கள் இருக்கிறோம் உங்கள் பின்னால் என்று சொல்லி உசுப்பி விட்டு வருகிறார்கள்.

( முன்னால் வந்து உதை வாங்க எந்த அரசியல்வாதி
தயாராக இருக்கிறான்….? )

சிறையில் அடைக்கப்பட்ட இந்த மாணவர்கள்
எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள் என்னென்ன …?

ஒரு FIR பதிவானாலும் முடிந்தது அவர்கள் எதிர்காலம்…
அவர்கள் எந்த அரசு வேலைக்கும் தகுதியற்றவர் ஆகிறார்கள்.
pre- police verification செய்யும் எந்த
IT கம்பெனியிலும் வேலை கிடைக்காது …
வருடக்கணக்கில் பாஸ்போர்ட் கிடைக்காது.
வழக்குகள் முடிய ஆண்டுகள் பல ஆகலாம்….
வருட கணக்கில் நீதிமன்றங்களுக்கும்
போலீஸ் ஸ்டேசன்களுக்கும் அலைய வேண்டும் ..
இவர்கள் படிப்பை முடித்து, வேலை செய்து தங்களை
காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருக்கும்
இவர்களின் அப்பா-அம்மா கதி என்ன ?

அடுத்த தேர்தல் வரை – இந்த தலைவர்கள் வெறுமனே
ஆறுதலாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
அதன் பிறகு –
ஒரு தலையும் கண்டு கொள்ளாது…..

பாவம் இந்த இளைஞர்கள் …. இவற்றை எல்லாம் யோசிக்கும்
அளவிற்கு அவர்கள் சிந்திக்கும் திறனை தான் இவர்கள்
வளர அனுமதிப்பதே இல்லையே…

அவர்களுக்குத் தான் எவ்வளவு diversions ….!!!

வயது முதிர்ந்த,
இந்த சமுதாயத்தின் மீது,
ஏழை மாணவர்களின் மீது – அக்கரையுள்ள,
ஒரு சாதாரண மனிதனாக –
நான் இந்த இடுகையை படிக்கும் நண்பர்களை வேண்டுகிறேன்.

தங்கள் குடும்பத்தில் இருக்கும், தங்கள் உறவினர்கள்,
அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள் குடும்பங்களில் இருக்கும்
மாணவர்களுக்கு,
அவர்களின் பெற்றோர்களுக்கு –
இந்த உண்மைகளை எல்லாம் தயவுசெய்து
கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன்.

அவர்களுக்கு அவர்களின் எதிர்காலமும் –
அவரவர் குடும்பம், அம்மா, அப்பா, உடன்பிறந்தோர்
மட்டுமே தான் முக்கியமாக இருக்க் வேண்டும் என்றும் –

இந்த பாழாய்ப்போன சுயநலவாத அரசியல்வாதிகளை –
நம்பி மோசம் போக வேண்டாமென்றும்
அவர்களுக்கு எடுத்துக் கூறுங்களேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

37 Responses to அடுத்த பலி …? ..மாணவர்களா…? பிணங்களை வைத்து பிழைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் …..

 1. kakkoo சொல்கிறார்:

  தக்க காலத்தில் வந்த ஒரு அருமையான இடுகை. முடிந்தவரை அனைவரையும் சென்றடைய செய்கிறேன்.

 2. stalin சொல்கிறார்:

  Sombu

 3. paamaran சொல்கிறார்:

  அருமையான இடுக்கை —- மாணவர்களும் – மற்றவர்களும் உணரவேண்டிய ” நெத்தியடி ! ” மது கடைகளை சூறையாடுவதும் — வெடிகுண்டுகளை வீசுவதும் — வெடிகுண்டு வீச்சில் ஒரு டாஸ்மாக் ஊழியர் சேலத்தில் பலியானதும் — தீப்பற்றி எரியும்போது கற்பூரத்தை ஏற்றினால் அதன் ஒளி எப்படி எடுபடும் என்று மதுவிலக்கு பற்றி முன்பு வியாக்கியானம், செய்த கருணாநிதியும் — சிகரெட்டுக்கு அரசு தடை கொண்டுவந்தால் எனது மகனின் சிகரெட் வியாபாரத்தை நிறுத்தி விடுகிறேன் என்று கூறும் வை.கோ. வும் — எனக்கு எந்த மது தயாரிப்பு நிறுவனமும் கிடையாது என்று கூறும் டி.ஆர்.பாலுவும் —- மனித சங்கிலி போராட்டம் என்று கூறும் எப்போதும் ” தள்ளாட்டத்தில் ” இருக்கும் விஜய காந்த்தும் —- மத்தியில் ஆளும் தங்களின் கட்சியை மதுவிலக்கு கொண்டுவா வேண்டும் என்று வற்புறுத்தாத — பேருக்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று அறிவிக்கும் தமிழிசை சௌந்தரராஜனும் —- மதுவிலக்கு உடனடி சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் கடையடைப்பு மற்றும் போராட்டம் என்று கூறுகின்ற — காங்கிரஸ் — கம்யுனிஸ்ட் — லேட்டேர்பேடு கட்சிகளையும் பற்றி தங்களின் கருத்து என்ன ? இடுக்கையில் கூறியுள்ளதை போல — ஆட்சி ” வெறி பிடித்து அலையும் ” நாய்கள் தானா ?

 4. Pingback: அடுத்த பலி …? ..மாணவர்களா…? பிணங்களை வைத்து பிழைக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் ….. | Classic Tamil

 5. மணிச்சிரல் சொல்கிறார்:

  காலங்காலமாக கட்சி பாகுபாடின்றி, அரசியல்வாதிகள் அனைவரும் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஓரே ஒரு விசயம் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படிப்பவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் வாங்கி, தகவல் தொழில் நூட்ப கூடாரங்களுக்கு வேலைக்காக செல்ல வேண்டுமானால், போராடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  அரசாங்கம் இன்னும் போராடுவதற்கு வயதை நிர்ணயம் செய்யவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் போராடலாம். எதற்காக, எப்படி போராட வேண்டும் என்பதை முதிர்ச்சியே முடிவு செய்கிறது.
  மாணவர்கள் போராட வேண்டுமானால் எத்தகைய வழிகளில் போராட வேண்டும் என்பதை தங்களால் இயன்றளவு சொல்லிக் கொடுக்கலாம், விருப்பம் இருந்தால். .
  கூட்டத்தின் மனநிலையில் (Group Mentality) வரும் வெறியை அடக்குமுறையால் அணைக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் அடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
  தேவையில்லாத ஒன்றை வைத்து ஆதாயம் தேடிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்துவிட்டன. இருக்கின்ற நிலையில், வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். நன்றி.

 6. Mathivanan. G சொல்கிறார்:

  என் போன்றோர் மன ஓட்டத்தினைப் பிரதிபலித்துள்ளீர்கள். Student Mob என்று ஒரு பதம் உண்டு. அதற்கு பொருள் – கும்பலாக செயல்படும்போது ஏற்படும் அசட்டு தைரியமும் அடாவடியும். . ஆனால் தனியாக கூப்பிட்டு கவனித்தால், தரை ஈரமாகும். அதுதான் இப்போது நடைபெறுகிறது.

 7. BC சொல்கிறார்:

  பொறுப்பான தங்களது அக்கறை. இதே போல் இலங்கைக்கு எதிர்ப்பு தொரிவிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் செய்த போது தாங்கள் இப்படி கவனத்தில் எடுக்காதது எமக்கு மிக வருத்தமே நண்பர்.

 8. மோனா சொல்கிறார்:

  எந்த உரிமையும் இலவசமாக கிடைத்ததில்லை. எட்டு மணி நேர வேலை என்று இன்று நாம் அனுபவிப்பது பலர் போராடித் தேடித்தந்தது. சுதந்திரப் போராட்டத்தில் உயிரை இழந்த , சிறையில் இளமையை இழந்தவர்கள் எத்தனை பேர்?
  மதுவால் மாணவர்கள் வாழ்க்கை சீரழிந்தால் பரவாயில்லையா?
  சுயநலம் தான் மனிதனை இவ்வளவு கேவலமாக யோசிக்க வைக்கும். போராட்டத்தை திசை திருப்பும் கேவலமான பதிவு. எந்தத் தியாகங்களும் வீண் போவதில்லை. போராட்டம் இல்லாமல் சுதந்திரம் இல்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்க்கை யில்லை. மதுவிலிருந்து எம் அடுத்த சந்ததியாவது விடுதலை பெற போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை; திசை திருப்பாதீர்கள். எதுவும் தானாக மாறாது ; நாம் தான் மாற்ற வேண்டும்; இந்தப் போராட்டம் மாணவர்களின் சமூக கடமை.

  • Ramachandran. R> சொல்கிறார்:

   மதுவிலக்கு வேண்டாமென்று இங்கு யார் சொன்னது ?
   புரியவில்லையா ? இல்லை புரிந்தும் திசை திருப்புகிறீர்களா ?
   கே.எம்.சார் மாணவர்களை இதில் ஈடுபடுத்த
   வேண்டாமென்றூ தானே சொல்கிறார் ?

   மாணவர்களை முன்னால் கேடயமாக நிறுத்தி
   அவர்கள் பின்னே ஒளிந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள்
   கோழைகள். பேடிகள். சுயநலவாதிகள்.

   தூண்டி விட்ட அரசியல்வாதிகள், தலைவர்கள் எல்லாரும்
   உல்லாசமாக ஏசி காரில் பவனி வரும்போது
   தேவையில்லாமல் கிரிமினல் வழக்கில் சிக்கி சிறையில்
   வாடும், மாணவர்களைப் பெற்ற, சிறைவாசலில் காத்திருக்கும்
   தாய் தந்தையரின் உள்ளம் எத்தனை வேதனைப்படும் ?

   கே எம். சார் – உங்கள் இடுகையில் சொல்லப்பட்டுள்ள
   ஒவ்வொரு வரியையும் நான் அப்படியே ஏற்றூக்கொள்கிறேன்.
   எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
   கல்லூரியில் படிக்கும் வயதில்உள்ள பிள்ளைகளைப் பெற்ற
   மனசாட்சி உள்ள பெற்றோர் ஒவ்வொருவரும் இதை ஏற்பார்கள்.
   உங்கள் கட்டுரை சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும்
   மிக அவசியமான கட்டுரை. நன்றி.

  • இசக்கி சொல்கிறார்:

   அய்யா திமுகாவிற்கு எதிரா போராடினால் மட்டும் வாழ்த்துவார்

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப இசக்கி,
    யாருக்கு எதிராகவும் மாணவர்கள் இறக்(ங்)கத் தேவையில்லை என்பது தான் கருத்து. புரிந்துகொண்டு புரியாததுபோல ஏன் இந்த நடிப்பு.

  • today.and.me சொல்கிறார்:

   //இந்தப் போராட்டம் மாணவர்களின் சமூக கடமை.//

   மாணவர்கள் படிக்கிறவேலையை வைத்துக்கொண்டுள்ளவர்கள். அவர்கள் ஆற்றவேண்டிய முதல்கடமை, இதுவரை அவர்களைப் பெற்று பாலும், சோறும் தண்ணியும் வயிற்றுக்குக் கொடுத்து , உடலை மறைக்கும் துணியைக் கொடுத்து, வேண்டியபோதெல்லாம் பணத்தைக்கொடுத்து வளர்த்த பெற்றோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளே.

   அதைவிட்டுவிட்டு பெற்றோர்கள் பணத்தில் நியாயப்படி அடுத்தவர் பணத்தில் எந்தப்பொறுப்பும் இல்லாமல் பொறுக்கித்தனம் செய்வதற்குப் பெயர் சமூகக்கடமை இல்லை. அன்றைய ஒருநாள் கிடைக்கும் க்வாட்டர்க்கும் சிகரெட்டும் பிரியாணிக்கும் காட்டும் அடிமைவிசுவாசம். அதைப்புரியாத மாணவர்கள் மாணவ்ர்களே இல்லை.

   மோனாஅவர்களே , யார் யாரை திசைதிருப்புவது. நீங்கள் மாணவராக இருந்தால் திருந்துங்கள். இல்லாவிட்டால் மாணவர்களை திசைதிருப்புவர்களாக இருந்தால் ஐயோ பாவம், உங்கள் பிள்ளைகள் மாணவர்களாக ஆகும்போது இதுபோன்ற அரசியல்வாந்திகளால் நீங்களும் உங்கள் மாணவச் செல்வமும் ஆசிர்வதிக்கப்பட வாழ்த்துகிறேன்.

  • today.and.me சொல்கிறார்:

   மோனா அவர்களே,
   //எந்த உரிமையும் இலவசமாக கிடைத்ததில்லை..// குடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமைகொடுக்கிறது. டாஸ்மாக்கில்விற்றால் என்ன? நிங்கள் போய் உங்கள் பணத்தைக்கொடுத்தால்தானே குடிக்கமது கிடைக்கும். சோ, குடிப்பதும் குடிக்காததும் அவனவன் உரிமை. அதில் ஏன் நீங்கள் தலையிடுகிறீர்கள்.

   உங்கள்வீட்டில் யாராவது குடித்து குடியால் கெட்டுப்போய்விட்டார்களா? அவர்களைத் திருத்தவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. அதைமுதலில் செய்யுங்கள். அடுத்தவன் கோப்பையைப் பறிக்கிற வேலை உங்களுக்கு எதற்கு? அதற்குரிய உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?

 9. ramanans சொல்கிறார்:

  காவிரி மைந்தன்

  பலரது மனசாட்சியாக, பலர் மனதில் என்ன இருக்கிறதோ அதை அக்கறையோடு, பொறுப்போடு நீங்கள் பதிவாகப் போட்டு வருகிறீர்கள். வந்தனங்கள்.

  ஒரு அரசியல் வாதி எப்படி இருக்க வேண்டும், குறிப்பாக மாணவர்களை எப்படி நடத்த வேண்டும்? இதோ ஓர் உதாரணம்…

  எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் தொடரிலிருந்து…

  //எல்லோரும் காமராஜருக்கு முன்பாய் போய் நின்று கைகளைக் குவித்து “வணக்கம்” சொன்னோம். எங்களை ஏறிட்டுப் பார்த்த காமராஜர் புருவச் சுழிப்போடு அருகில் இருந்த நபரிடம் கேட்டார். “யார் இவங்க?” அவர் பவ்யத்தோடு குனிந்து சொன்னார். “அய்யா இவங்க நம்ம காங்கிரஸ் கட்சியோட மாணவர் அணி.” “என்னது மாணவர் அணியா…?” “இவங்களுக்கு இங்கே என்ன வேலைண்ணேன்?” “உங்களைப் பார்க்கிறதுக்காக…” “என்னை எதுக்குப் பார்க்கணும்ண்ணேன்?” “கட்சிப் பணி சம்பந்தமாய்…” காமராஜர் கோபமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்னது… கட்சிப் பணியா..? படிக்கிற பசங்களுக்கு என்ன கட்சிப் பணிண்ணேன்! அவங்க பணி ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி ஒரு வேலையைத் தேடிக்கிட்டு பெத்தவங்களைக் காப்பாத்தறதுதான். கட்சிப் பணிகளைப் பார்த்துக்கத்தான் நாம இருக்கோமே…?” படபடவென பொரிந்து தள்ளிய காமராஜர், முதல் வரிசையில் நின்றிருந்த என்னைப் பார்த்தார். “நீங்க எல்லாரும் எந்த காலேஜ்?” “கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்” “இதே ஊர்தானே?” ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினேன். “இப்ப மணி என்னண்ணேன்?” நான் கையிலிருந்த வாட்சைப் பார்த்துவிட்டு, “பனிரெண்டு மணி” என்று சொன்னேன். “இப்போ காலேஜ்ல பாடம் நடக்கிற வேளைதானே?” “ஆமா..!” “பாடம் நடக்கிற வேளையில் வகுப்புக்குப் போகாம உங்களை இங்கே வரச் சொன்னது யாருண்ணேன்?” நாங்கள் மௌனமாய் நின்றோம். காமராஜர் கிட்டத்தட்ட கர்ஜித்தார். “போங்க… எல்லாரும் போங்க..! படிக்கிற பசங்களுக்கு கட்சியில இடம் இல்லை. எம் முன்னாடி யாரும் நிக்கக் கூடாது. போய்ப் படிங்க.. கட்சியை நாங்க வளர்த்துக்குறோம். எங்க கட்சி வளராட்டியும் பரவாயில்லைண்ணேன்..! //

  Read more at: http://tamil.oneindia.com/columnists/rajeshkumar/naan-mugam-paartha-kannadigal-1-rajeshkumar-232378.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ரமணன்,

   நீங்கள் தொடர்ந்து படித்து வருவீர்கள்
   என்று எனக்கு தெரியும் என்றாலும்
   நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டத்தைப்
   பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..

   சரியான இடத்தில், சரியான தகவலை
   தந்திருக்கிறீர்கள்.

   காமராஜர் அவர்கள் பற்றிய செய்தியை படிக்க
   மெய் சிலிர்க்கிறது..
   எப்பேற்பட்ட தலைவர்கள் எல்லாம்
   தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள்…!

   ஆனால் – இன்றைய தலைவர்களைப் பார்க்கையில் –
   “நெஞ்சு பொறுக்குதில்லையே ….. ”

   உங்கள் கருத்தூட்டத்திற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ramanans சொல்கிறார்:

    நன்றி காவிரி மைந்தன் அவர்களே!

    நான் அதிகமாக பின்னூட்டம் இடுவதில்லையே தவிர ஒவ்வொரு இடுகையையும் தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம். அருமை.

    இந்த இடுகையைப்பொருத்தவரை ஒவ்வொரு தகப்பனும் தன் மகன் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றுதான் விரும்புவானே தவிர, மது, மாது போன்றவற்றால் அவன் சீரழிய விரும்ப மாட்டான் என்பதையே ஒரு தந்தையாக என் கருத்தைத் தெரிவித்திருந்தேன்..

    இது எல்லா தந்தைகளுக்கும் பொருந்தும். சிலர் மட்டும் ஏனோ இங்கு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அது அவர்களது எண்ணப் போக்கு போலும்.

    மது போன்றவற்றால் சீரழியாமல் எல்லாரும் நலமாக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். அவர் மக்களின் மனங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவாராக!

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப ரமணன்,
   சரியான நேரத்தில் சரியான சம்பவத்தை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.
   நன்றி.

   • ramanans சொல்கிறார்:

    நன்றி.

    today.and.me அவர்களே.

    இன்றைய ஸ்டிரைக், போராட்டம் போன்றவற்றைப் பார்க்கும்போது எனக்கு “முகமது பின் துக்ளக்” நாடகமும் அதில் வரும் மாணவர்கள்,. அரசியல்வாதிகளின் போராட்டமும் தான் ஞாபகத்திற்கு வருகிறது 🙂

 10. theInformedDoodle சொல்கிறார்:

  நூற்றுக்கு நூறு சத்யமான வார்த்தைகள்..

  மதுவிலக்கு தேவை.. எல்லாருடைய எதிர்காலத்தையும் மது அழிக்கிறது என்ற கருத்து சரி.. ஆனால் இதற்காக மாணவர்கள் இப்படிப் போராடினால் அவர்கள் எதிர்காலம் மேலும் பாழாகும்..

  பிரச்சனைகளை மாணவர்களுக்கு தள்ளிவிட்டு பலனை மட்டும் எடுத்துக் கொள்ள துடிக்கும் அரசியல் வாதிகளை நினைத்தால் எரிகிறது!

 11. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  காமராஜாின் கர்ஜனை படித்து இப்போதும் கூட மெய்சிலிா்கிறது.
  மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ளுபவர்கள் எத்துனை பேர் இதுவரை மதுவை ருசிக்காதவர்கள்.கடவுளுக்கும் அவரவர் மனசாட்சிக்குமே வெளிச்சம்.
  வைகோ அவர்மீது இருக்கும் மதிப்பு நாளுக்குநாள் சரிந்து வருகிறது.
  சரியான நேரத்தில் சரியான பதிவு.
  கருணாநிதியைத் தவிர தமிழகத்தை வேறு யார் ஆட்சி செய்தாலும் கறபுரம் எரியாது

  • Ramachandran. R. சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   இது லேடஸ்ட் செய்தி –

   மதுவுக்கு எதிராக போராட மாணவர்களை மீண்டும்
   தூண்டுவேன்… ராமதாசுக்கு

   வைகோ பதிலடி…

   மதுக்கடைக்களுக்கு எதிராக மாணவர்களை வைகோ
   தூண்டிவிடுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
   குற்றம்சாட்டியுள்ளார்.

   இதற்து பதிலளித்து சென்னை விமான நிலையத்தில்
   செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மதுவுக்கு எதிராக
   மாணவர்களை மீண்டும் தூண்டி விடுவேன் என்று ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும்,

   தமிழக அரசியல் வரலாற்றில்

   ஆகஸ்ட் 4 ம் தேதி மிகவும் முக்கியமான நாள்.
   டாஸ்மாக் கடைகளுக்கு

   எதிரான மாணவர்களின் போராட்டத்தை நான் தான் தூண்டினேன்.
   மாணவர்கள்

   புரட்சி வந்தால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும்
   தீர்வு காண முடியும்.

   http://tamil.oneindia.com/news/tamilnadu/i-
   will-stimulate-again-students-against-liquor-vaiko-
   232633.html?utm_source=vuukle&utm_medium=referral

 12. drkgp சொல்கிறார்:

  எதைவைத்து ஆதாயம் தேடலாம் என பறந்து கொண்டே இருக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்

 13. R.Palanikumar சொல்கிறார்:

  migavum sariyaana katturai.maanavargalukku poraattam thevai illai…(aanalum namma amma kalingapattiyil panjayathu theermaanam niraivetriya pinnarum athai meeri TASMAC kadai thiranthirukka thevai illai thaan..)

 14. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி

  // நாங்கள் இருக்கிறோம் உங்கள் பின்னால் என்று சொல்லி உசுப்பி விட்டு வருகிறார்கள்.( முன்னால் வந்து உதை வாங்க எந்த அரசியல்வாதி
  தயாராக இருக்கிறான்….? )//
  “அப்படியெல்லாமும்கூட சொல்லுவதில்லை.
  எங்களால் முடியாது, அரசியல்வியாதிகளாகிய எங்களால் இதை தடைபண்ணமுடியாது ” என்று வெட்கம்கொஞ்சமும் இல்லாமல் ஒப்புக்கொண்டுவிட்டு “மாணவர்களாகிய நீங்கள் தான் இதைச்செய்யமுடியும், செய்யவேண்டும். என்ன 10நாள் உள்ளே வைப்பார்களா? 15நாள்? என்று கேள்வியும் கேட்டுக்கொண்டே உள்ளேதள்ளப்பார்க்கும் கயவர்கள்”

  இப்படியெல்லாம் யார் சொன்னார் என்று ஆச்சரியப்படாதீர்கள். உங்கள் பெருமதிப்பைப் பலகாலம் பெற்றிருந்த சிகரெட்வியாபாரி வைகோபால்சாமி தான்.

  கலிங்கப்பட்டியில் மதுக்கடை இருப்பது எனக்கே அவமானம் என்கிறார். அங்கு மதுக்கடை திறந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன.ஏன் இவர்இதுவரை அங்கே போகவில்லையா?

  காவலரையும்,பத்திரிகையாளரையும் ‘நீ ஆம்பளயா இருந்தா?” என்று கேட்கிறார். பின்ஏன் பொம்பளயான தன் அம்மாவை போராட்டக்களத்துக்கு ஆடுபோல தள்ளிச்சென்றார்.

  மாணவர்களே சற்று சிந்தியுங்கள். இப்பொழுது உங்கள் வேலை படிப்பது மட்டும்தான். அதைமட்டும் செய்யுங்கள்.

  பின்னொருநாளில் நீங்கள் வைகோ-வாகவே கூட ஆகலாம்.
  ஆனால் அவர்பேச்சைக் கேட்டு இன்று களத்துக்குப் போனீர்களானால் நிச்சயம் சைக்கோவாக்த்தான் அலைவீர்கள்.

 15. Raghu சொல்கிறார்:

  KM Sir.,

  I used to read your blog regularly – but never responded. A sort of hesitation – not sure why?. But this one broke the hesitation.

  This is a perfect example of people who get prominence at other’s cost. By looking at Vaiko’s statements, he is more emotional than logical. He knows by any chance he will never get to rule and can talk anything. There are magazines which will be against ruling party all the time and they will support likes of Vaiko, ramadoss and Thiruma – All of them act only counter productive.

  It can be noted that in the recent past, DMK makes statement for everything – just to claim in future that ‘they said so’ already. Vijayakanth has to react anti ADMK – else other parties will question his stand. Congress and BJP thinks that they have grown in the last 8 months – God only knows by what percentage.

  Only surprise that Romadoss did not act these people’s way. Is he shell shocked that others took his role (both prohibition and atrocity)?

  OF the so called student mob – how many really shouted for the cause and how many took a chance to get free liquor from the loot? Does vaiko aware of this fact?

  What is the compensation provided to the person who died in the shop due to petrol bomb?

  Hope I did not cross the limits.

  Regards

  RAGHU

 16. today.and.me சொல்கிறார்:

  நண்பர்கள் கவனத்திற்கு,
  தற்போது கிடைத்துள்ள தகவல்படி சிறையிலடைக்கப்பட்டுள்ள 15பேரில் 2பேர்தான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என அக்கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். மீதி 13பேரை விசாரிக்கவேண்டியவிதத்தில் விசாரித்தால் யார் அவர்கள் என்பது தெரியவரும். எனவே மாணவர்களே, படிக்கிறகாலத்தில் படிக்கிறவேலையை மட்டும்……….செய்யவும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   நானும் இந்த தகவலை கேள்விப்பட்டுத்தான்,
   கிட்டத்தட்ட இதே செய்திக்காக இடுகையை பதிவிட்டுக்
   கொண்டிருந்தபோது உங்கள் பின்னூட்டத்தை
   கண்டேன். நன்றி.

   ஊடகங்கள் வேண்டுமென்றே இந்த செய்திக்கு
   முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது.
   இதுவரை, தகவல் வலைத்தளங்கள் எதிலும்
   இந்த செய்தி பதிவாகவில்லை….( ஒரே ஒரு
   தொலைக்காட்சியில் தெரியாத்தனமாக ஒருக்கணம்
   சொல்லி விட்டார்கள்….! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • ramesh சொல்கிறார்:

   ஐயா…

   இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அவர்கள் மாணவர்களே அல்ல; புமா. இ.மா.வி.மா என்ற வெட்டிக் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இதே வேலை. கைதான பெண்களும் மணமானவர்கள். மாணவர்கள் அல்ல. ஆனால் சில “ஊடகங்கள்” மட்டும் “வேண்டுமென்றே” மாணவர்கள் கைது, மாணவர்கள் காயம் அது, இது என்று சொல்லி வன்முறையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றன.

   எங்கே அந்த மாணவர்களை தங்கள் கல்லூரி அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

   வெட்கக் கேடு!

   காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவரும்!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ரமேஷ்,

    நீங்கள் சொல்வது சரியே.
    காவல் துறை முழு விவரங்களையும் வெளியிடும்போது –
    இவர்கள் கொடுக்கப்போகும் விளக்கங்களை
    பார்க்க வேண்டும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 17. Ganpat சொல்கிறார்:

  மிக சரியான நேரத்தில் மிக சரியான அவசியமான பதிவு மிக்க நன்றி கா.மை ஜி..today.and.me உள்ளிட்ட நண்பர்கள் வெளுத்து வாங்கியபின் எனக்கு தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.இருப்பினும் உங்கள் அப்பாவித்தனத்தை எண்ணி வியக்கிறேன்..அதாவது..//ஒரு FIR பதிவானாலும் முடிந்தது அவர்கள் எதிர்காலம்…
  அவர்கள் எந்த அரசு வேலைக்கும் தகுதியற்றவர் ஆகிறார்கள்.// ஆனால் அரசு அமைக்க முழு தகுதியும் பெற்று விடுகிறார்களே அதை மறந்து வருத்தப்படு கிறீர்களே !! 😉 🙂

  • today.and.me சொல்கிறார்:

   மறந்ததை நினைவூட்டத்தான் உங்களை எல்லாப்பதிவிலும் எதிர்பார்க்கிறேன் நண்ப கண்பத்.

   😀 😀

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   என் இப்போதைய வருத்தம் –
   கண்பத் அவர்களை அடிக்கடி இங்கே காண
   முடிவதில்லையே என்பது தான்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 18. KuMaR சொல்கிறார்:

  அருமையான பதிவு. நன்றி ஐயா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.