வைகோ அவர்கள் தூண்டி விடுவது யாரை …? மாணவர்களையா அல்லது ……?

vaiko-angry

தற்போது வெளியாகியுள்ள செய்தி இது….

பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக்
கடையை அடித்து நொறுக்கியவர்களை போலீஸ் துரத்திப்
பிடித்து கைது செய்ததை, தொலைக்காட்சிகளில்
நேரடிச்செய்தியாக காண்பித்ததை பார்த்தோம். அந்த கூட்டத்தில்
15 மாணவர்கள் சிக்கினார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டு,
மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள்
நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
என்றும் நேற்று செய்திகள் வந்தன.

நேற்று வரிசையாக, திருவாளர் ஸ்டாலின், விஜய்காந்த்,
திருமதி தமிழிசை, வைகோ மற்றும் இதர தலைவர்கள்
புழல் சிறையில் சென்று சந்தித்துப் பேசி வந்ததாக தகவல்களும்
புகைப்படங்களும் வெளிவந்தன.

இன்று காலை பச்சையப்பன் கல்லூரி முதல்வர்
காவல் துறைக்கு தெரிவித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி –

அந்த பதினைந்து பேர்களில் – இருவர் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாம்.
மற்ற 13 பேர்களுக்கும் தங்கள்
கல்லூரிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று
கல்லூரி முதல்வர் கூறி விட்டாராம்…..!!

ஆக, மாணவர் கூட்டத்தில் கலந்து டாஸ்மாக் கடைகளை
அடித்து நொறுக்கி கைது செய்யப்பட்ட மீதி 13 பேர்கள் யார் ….?
மாணவர்கள் போர்வையில் அங்கே புகுந்தவர்கள் யார் ..?
அனுப்பியவர்களைக் கேட்டால் தெரியும் …..
திருவாளர் வைகோவை விட வேறு யாரால்
இதைச் சொல்ல முடியும் …?

இத்தனை தலைவர்களும் புழல் சிறைக்கு சென்று
கலங்காதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி விட்டு
வந்தது யாரை …?
சிறைக்கு சென்று பார்த்து விட்டு வந்தவர்கள் யாரும்
இது குறித்து ஏன் வாயே திறக்கவில்லை ….?

காவல் துறை இது குறித்து விளக்கமான செய்தியை
விரைவில் வெளியிடுவது எல்லாருக்கும் நல்லது….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to வைகோ அவர்கள் தூண்டி விடுவது யாரை …? மாணவர்களையா அல்லது ……?

 1. paamaran சொல்கிறார்:

  ஆக 6
  2015
  00:31

  சென்னை: ”மாணவர்களின் புரட்சி வந்தால் மட்டுமே, அனைத்து பிரச்னைகளுக்கும், தீர்வு காண முடியும்,” என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசியல் வரலாற்றில் ஆகஸ்ட், 4ம் தேதி, மிகவும் முக்கியமான நாள். ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை, நான் தான் துாண்டினேன். இந்த விஷயத்தில், மாணவர் மூலம் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் ? இது இன்றைய செய்தி …. ஆனால் பச்சையப்பன் கல்லூரி முதல்வரின் செய்தி வேறு விதமாக இருப்பது — திரு.கா.மை . அய்யா கூறுவதைப்போல மாணவர்களின் போர்வையில் வை.கோ. வின் கூலிபடையை சேர்ந்தவர்களா ? சிறைக்கு சென்று பார்த்த மற்றவர்கள் எப்படி வாயை திறப்பார்கள் ? அவர்களும் தங்கள் பங்குக்கு இதை போலவே ஆட்களை வைத்து காரியம் ஆற்றினாலும் ஆச்சர்யமில்லை !! ஏனென்றால் தற்போது நடப்பது உண்மையான மதுவிலக்கு தேவை என்பதல்ல இவர்களின் குறிக்கோள் — யார் முந்துவது என்கிற போட்டியியல்லவா இவர்களுக்குள் — நடந்து கொண்டு இருக்கிறது …. !!! அரசின் நிலைப்பாடு இதற்கு பிறகு எப்படி இருக்கும் ….?

  • today.and.me சொல்கிறார்:

   //அரசின் நிலைப்பாடு இதற்கு பிறகு எப்படி இருக்கும் ….?//

   ———–வரும் ஆகஸ்ட்15 சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் விற்பனை நேரம் மற்றும் அவுட்லெட் அமைப்புகள் வரைமுறைப்படுத்தப்பட்டு தமிழகஅரசுஆணையாக வரலாம். நல்லசெய்திக்காக காத்திருக்கிறேன்.

 2. today.and.me சொல்கிறார்:

  இது போன்ற சாக்கடைஅரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் இதைச் செய்த கூட்டத்தை முழுமையாக சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர வேண்டும்.

  மதுக்கடைகளை அரசு மயமாக்குவது என்பது எப்படி ஒரு கொள்கை முடிவோ அதே போல மதுக்கடை அகற்றம் என்பதும் முக்கிய கொள்கை முடிவே ….கொள்கை முடிவுகளை தீர ஆராயாமல் எடுக்க முடியாது என்பது வைகோவுக்கு தெரியாதா….திருமாவளவனுக்கு தெரியாதா….ஏன் ஸ்டாலினுக்கும் , கருணாநிதிக்கும் தெரியாதா…..தெரிந்து கொண்டே இவர்கள் இதனை உயர்த்தி பிடிப்பது ஜெயலலிதாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்கிற சூழ்ச்சி எண்ணம் தானே…

  கேரளா நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு தான் மதுவிலக்கை அமுல்படுத்தியது…..அதுவும் Partial Prohibition தான்……பல அனுமதி பெற்ற பார்கள் இப்போது Beer & Wine Parlor ஆக தான் மாற்றப்பட்டுள்ளன…..அரசு மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன……அவ்வளவு தான்……..Beer Parlor களில் நமது அன்பிற்குரிய சாராய அதிபர்கள் ரொம்ப நேர்மையாக பீரை மட்டும் தான் விற்பார்களா……wine மட்டும் தான் விற்பார்களா….கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து Bar Licence வாங்கிகொண்டு திடீரென்று (ஒருவேளை) இப்படி முடிவெடுத்தால் அதை நேர்மையாக Bar அதிபர்கள் ஏற்று கொள்வார்கள் என்று நம்ப நாம் என்ன கூமுட்டைகளா……

  இவர்களுக்கு உடனடியாக இது சாத்தியமில்லை என்பது நன்கு தெரியும். எதிர்வரும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் செய்யப்படும் கடைசி முயற்சி இது. ஐயோ பாவம்.

  கேரளம் முழுமையாக மதுவிலக்கை அமுல்படுத்தவில்லை …..முடியவும் முடியாது……..ஆனால் தமிழகத்தில் மதுகொள்கையை முறைமைப்படுத்த முடியும்…..ஆனால் அதை செய்கிற தைரியமும் நிர்வாக திறனும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது……

  ———–வரும் ஆகஸ்ட்15 சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் விற்பனை நேரம் மற்றும் அவுட்லெட் அமைப்புகள் வரைமுறைப்படுத்தப்பட்டு தமிழகஅரசுஆணையாக வரலாம். நல்லசெய்திக்காக காத்திருக்கிறேன்.

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  இப்போது மட்டுமல்ல. லயோலா மாணவர்கள் என்ற போர்வையில் திருமா வின் ஆட்கள் இரு ஆண்டுகளுக்கு முன் பேயாட்டம் ஆடினார்கள். தி.மு.க. தனது உறுப்பினர்களை இவ்வாறு அனுப்பிக் கொண்டு இருந்தது. இப்போது அந்த பாசறையில் இருந்து வந்த வை.கோ.வும் செய்கிறார். நல்ல அரசியல். நாட்டு நலனுக்கு ஒவ்வாத அரசியல்.

 4. today.and.me சொல்கிறார்:

  //காவல் துறை இது குறித்து விளக்கமான செய்தியை
  விரைவில் வெளியிடுவது எல்லாருக்கும் நல்லது….//

  தமிழக காவல்துறை மற்றும் க்யுபிரிவு விசாரணை செய்துகொண்டிருக்கிறார்கள். ஓரிருநாட்களில் அறிவிப்பு வெளிவரும்.

  —————————-
  நன்றி KKS

  சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்கிற போர்வையில் டாஸ்மாக் கடையை சூறையாடிய கும்பலை அங்கே அழைத்து வந்து கடையை சூறையாட தூண்டியது இந்த நபர் தான் என்று தெரிய வருகிறது , இவரது பெயர் என்னால் அடையாளம் காணமுடியவில்லை என்றாலும் , இவர் தான் கும்பலை ஒருங்கிணைத்துள்ளார் என்றும் தகவல் . வன்முறை கும்பலுடன் மாணவர்களையும் கலக்கும் படி செய்து விட்டு அவர்கள் டாஸ்மாக் கடையை சூறையாடுவதை தவிர்க்க தடியடி நடத்தப் பட்ட பொழுது இவர் அங்கிருந்து எஸ்கேப் … பின்னர் தடியடி முடிந்து மாணவர்கள் கைதாகும் தருணத்தில் மீண்டும் ஆஜரானார் .
  https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11846667_10204825347421871_4477558904847669016_n.jpg?oh=c2ae8ee00b2746c46919fcfef45e6188&oe=564A1246

  ——————

  • சாமி சொல்கிறார்:

   ஏங்க..

   நான் ஒருக்கா பிரதமரை கன்னா பின்னான்னு திட்டினேன். மறுநாளே டெல்லிக்குப் போய் அப்பா ஆயிண்ட்மெண்ட் வாங்கி சால்வை போத்தி சிரிச்சு, போட்டோக்கு போஸ் கொடுத்தேன்.

   ஆனா…

   இந்த முதல்வரை பத்து நாளா எவ்ளோ முயற்சி பண்ணியும் அப்பா ஆயிண்ட்மெண்ட் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. நானும் எப்படியோ முட்டி மோதிப் பார்த்தேன். முடியலை.

   பிரதமரை விட இவங்க பெரிய ஆளா?

   அப்போ நான் பெரிய ஆளுன்னு ஃப்ரூப் பண்ண வேண்டாமா?

   அதான், இந்த மேட்டரை கையில எடுத்தேன்.

   இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னு?

   ஹ ஹ நாங்கள்லாம் யாரு!

   இனிமே தமிழ்நாட்டுல ஒரு சாராயக்கடை இருக்கக் கூடாது. ஆனா எல்லாரும் சிகரெட் குடிக்கலாம். அதுவும் ஐடிசி பிராண்ட் சிகரெட் மட்டும் தான் குடிக்கணும். அதுதான் உடம்புக்கு நல்லது. ஓகேவா.

   அடுத்து என்ன செய்யலாம்னு மீட்டிங் இருக்கு

   பசங்கள வேற அங்கங்க அதுக்கு அனுப்பி வக்கணும்.

   வரட்டா. பை. பை. சாமி.

   • today.and.me சொல்கிறார்:

    //பிரதமரை விட இவங்க பெரிய ஆளா?//

    You may know today, who is coming to here in Chennai all the way from Delhi, whom to meet and where to meet.

    LOL

    • Sharron சொல்கிறார்:

     today.and.me did u get the news about Adani’s mining business in Australia?.It was dropped by Supreme court of Australia. So he needs another project now.

     • today.and.me சொல்கிறார்:

      Yes. I am aware of that.
      I am waiting for a post from KMji to reply.
      🙂

     • today.and.me சொல்கிறார்:

      தமிழ்நாட்டை விட்டு மத்தியிலே உள்ளவற்றைப் பற்றியே எழுதுகிறீர்களே என்று யார் விட்ட சாபமோ, மதுவிலக்கு-சசிபெருமாள் மரணம்- தமிழக அரசியல்வியாதிகளி்ன் நடிப்பரசியல் – என்று கா.மைஜியை தமிழ்நாட்டைவிட்டு வெளியே வரவிட மாட்டேன் என்கிறார்கள். இருக்கட்டும்.

      இதையும் காமைஜி யாரையெல்லாம் நல்லவர் என்று நம்பினாரோ அவர்களின் சுயரூபம் வெளியே தெரிய சந்தர்ப்பமாக நினைத்துக்கொள்கிறேன். அவர் மற்றவர்கள் அறிய அதை விவரமாக அடுத்த பதிவில் எழுதியிருக்கிறார். 🙂

      நன்றி நண்ப ஷரான்.

 5. Pingback: வைகோ அவர்கள் தூண்டி விடுவது யாரை …? மாணவர்களையா அல்லது ……? | Classic Tamil

 6. adirai anbudasan சொல்கிறார்:

  today .and . me அய்யா அவர்களே, நான் எதையுமே பார்கவில்லை அய்யா நீங்க சொன்ன ஒரு விஷயம் மட்டும் ரெம்ப வேடிக்கைங்க!!!!!!!!!!!

  …………… .நம்ப நாம் என்ன கூமுட்டைகளா……”
  இப்படியெல்லாம் உண்மையை போட்டு ஓடைகாதீங்க please

 7. today.and.me சொல்கிறார்:

  https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11825740_871438036227368_2567581905111724137_n.jpg?oh=9bfaa25fd3b2f90b49322bf321a9ab8b&oe=56371238

  மாணவர்களே, இந்த சாக்கடைகளின் பின்னால் போகாதீர்கள்.

  உங்கள் சடலத்துக்கு கொள்ளிவைக்கக் கூட உங்கள் பெற்றோர்களுக்கு – உறவினர்களுக்கு அனுமதி கிடைக்காது.

  நீங்கள் நல்லநோக்கத்துக்காக கொல்லப்பட்டாலும்கூட
  உங்கள் பிணத்தை உடனே மண்ணுக்குள் போடமாட்டார்கள்.
  அழுகி
  நாற்றமெடுத்து
  மார்ச்சுவரியில் டாக்டக்கள்கூட அருகில் வரமுடியாத நிலைக்குக் கொண்டுவந்து,
  பின்னர் அதையும் தானே தூக்கிக்கொண்டு
  அடாவடி அரசியலில் காலாகாலத்துக்கும்
  உங்கள் பெயரை நாறடித்துக்கொண்டிருப்பார்கள்.

  மாணவர்களே, படிக்கும் காலம் படிப்பதற்கு மட்டும்தான்.
  படிக்கிற வேலையை ஒழுங்காய்ப் பாருங்கள்.
  உண்மையில் இந்த மாணவப்பருவத்தில் நீங்கள் கடனாளிகள்,
  உங்களைப் பெற்றவர்களுக்கு.
  அதை முழுமையாக செலுத்தித் தீராதவரையில் வேறுயார்பின்னாலும் போய் இ்துபோல் நாறிவிடாதீர்கள்.

 8. மனசாட்சி சொல்கிறார்:

  மாணவர்கள் எதிர்ப்பு யாருக்கு எதிராக நடத்தபடுகிறதோ அந்த அரசின் தலைவி ஜெயலலிதா.இலங்கைக்கைக்கு எதிராக மாணவர்கள் துண்டிவிடபட்டபோது today dnd me எங்கே போயிருந்தார்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.