“ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம் ” – சாக்கடையில் விழுந்து புரளும் திரு.வைகோ…..

.

.

பல வருடங்களாக என் மனதில் ஒரு தனி இடமும், மரியாதையும் பெற்றவராக “இருந்தார்” திரு.வைகோ. (ஆம் …”இருந்தார்” தான்…)
அண்மைக்காலங்களில் அவரது முரண்பாடான செயல்கள்
துவக்கத்தில் வருத்தத்தை தந்தன. ஆனால் – எப்போது அவர் K.D.பிரதர்ஸூக்கு வக்காலத்து வாங்கி சன் டிவிக்காக
“பொங்கி”னாரோ _ அப்போதே அவர் மீதிருந்த மதிப்பும்,
மரியாதையும் வெளியேறி விட்டன. இனி அவரை விமரிசிப்பதில்
எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை…

வரிசையாக பல விஷயங்கள் நடந்து விட்டன – இப்போதும்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி மட்டும்
இன்று நம்மிடையே இருந்திருந்தால் வைகோ அவர்களைப் பார்த்து ” அய்யா – என்னையே தூக்கிச் சாப்பிட்டுட்டியே ” என்று சொல்லி கட்டியணைத்து பாராட்டி இருப்பார்…! அவ்வளவு பிரமாதமான ஒரு நடிப்பு…!

( நாஞ்சில் சம்பத் இவரை விட்டு விலகி வந்த போது சொன்ன
விஷயங்களில் எல்லாம் எனக்கு அப்போது நம்பிக்கை
ஏற்படவில்லை. ஆனால், இப்போது ….? சம்பத் நிறைய
உண்மை பேசி இருக்கிறார் என்றே தோன்றுகிறது… )

உண்மையில் எப்போது ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்கு
கொள்கையை பரிசீலனை செய்து, மீண்டும் மதுவிலக்கை
கொண்டு வர உத்தேசித்து, அதற்கான கலந்தாலோசனைகள்,
திட்டங்கள், முன்னேற்பாடுகள் – ஆகியவற்றில் இறங்கினாரோ
அப்போதே “மதுவிலக்கு” என்பது தமிழகத்தைப்
பொருத்த வரை ஒரு non-issue ( இல்லாத பிரச்சினை )
ஆகி விட்டது. உண்மையான அரசியல் தெரிந்தவர்கள்
அனைவருக்கும் இந்த விவரம் நன்றாகவே புரியும்.

ஆனால், கோட்டையில் இருக்கும், தனது விசுவாசிகளின் மூலம் உத்திரவுகள் பிறப்பிக்கப்படும் முன்னரே இதைத்தெரிந்து கொண்ட தமிழ் நாட்டின் முதுபெரும் ராஜதந்திரி “திமுக ஆட்சிக்கு
வந்தால் மதுவிலக்கை கொண்டு வரும்” என்று அறிவித்தாரே –
அது தான் இன்று தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும்
போராட்டங்களுக்கான துவக்கம்.

அதற்குப் பின், அத்தனை அரசியல் கட்சிகளும், தலைவர்களும்,
போட்டி போட்டுக் கொண்டு, மதுவிலக்கை கொண்டு வந்ததற்கான
சான்றிதழை மக்களிடம் பெற படாத பாடு படுகின்றன….

தமிழ்நாட்டின் மிகப்பெரிய கல்வித்தந்தை, ஒரு “புதிய” செய்தி தொலைக்காட்சியை தனக்கென வைத்திருப்பவர் தான் –
தற்போதைக்கு புரட்சிப்புயலுக்கான நிதியாதாரம் என்று
தகவல்கள் சொல்கின்றன.

பதிலுக்கு ….?

இருவருக்குமிடையே –
ஒரு எழுதப்படாத,
எழுத முடியாத புரிந்துணர்வு.

தொலைக்காட்சி நிர்வாகத்திடம் உங்கள் TRP rating-ஐ
எகிற வைக்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
நேரடி தொலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்
என்று சொல்ல, தமிழ் நாட்டில் வேறு எந்த தொலைக்காட்சியும்
செய்ய முடியாத நிகழ்வாக outstation broadcasting van
2-ந்தேதி கலிங்கப்பட்டிக்கு வந்தது. பிராமிஸ் பண்ணியபடியே,
வைகோவும் “லைவ்” ஆக சுடச்சுட நிகழ்ச்சிகள் தயார்
செய்து கொடுத்ததை தான் தமிழக மக்கள் கடந்த ஞாயிறு
அன்று பார்த்தனர்.

1) 94 வயதான என் தாயாரே முன்னின்று போராட்டம் நடத்திய
பின்னரும் அந்தக் கடையை திறக்க உங்களுக்கு என்ன
துணிச்சல் என்று கர்ஜித்தார் வைகோ…
(94 வயது மூதாட்டி, தானாக சேரைத் தூக்கிக் கொண்டு
போராட்ட களத்திற்கு வந்திருப்பாரா…? பாவம் ..தள்ளாத
வயதிலிருக்கும் தாயாரையும் தன் அரசியல் லாபத்திற்காக
பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குப் போய் விட்டார் அண்ணன்.)

2) டாஸ்மாக் கடைக்கு முன்னால், பாதுகாப்பிற்காக
நிறுத்தப்பட்டிருந்த காவலர்ளை, தன் தொண்டர் ஒருவரை ,
சற்றுத்தள்ளி இருந்த செல்போன் டவரின் மீது ஏறி குரல்
கொடுக்கச் சொல்லி அங்கே போக வைத்தார் வைகோ….
பாதி போலீஸ் அதை நோக்கிச் சென்றவுடன்,
வைகோவின் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை
அடித்து நொறுக்கி, உள்ளே இருந்த அத்தனை சாமான்களையும்
வெளியே தூக்கிப் போட்டு நெருப்பு வைத்தனர்.

3) இதனைத் தடுக்க, போலீசார் – மதிமுகவினரை தடியடி நடத்திக்
கலைக்க முற்பட்டனர். நிலைமை மோசமாகவே
கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். சில நிமிடங்கள் கழித்து,
கடை முற்றிலுமாக நொறுக்கப்பட்டு விட்டதால்,
இனி அங்கே இருப்பதில் பயனில்லை என்று போலீஸ்காரர்கள்
அனைவருமே அந்த இடத்திலிருந்து சுமார் 200 அடி தள்ளிப்போய்
பேசாமல் கூட்டத்தையும், வைகோவின் பேச்சையும் கவனித்துக்
கொண்டு “தேமே”னென்றிருந்தனர்….அன்று நேரடி
தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
அனைவரும் இதை கண்டிருக்கலாம்.

4) இதற்குள்ளாக சுற்று வட்டாரத்தில் சங்கரன் கோயில் அருகே எங்கோ வந்திருந்த திருமாவளவன் அவர்கள் –
“லைவ்” தொலைக்காட்சியில்
வைகோவின் performance-ஐ பார்த்து விட்டு,
இதைவிட அருமையான சந்தர்ப்பம் வேறு எப்போது
வாய்க்கும் என்று நினைத்தோ என்னவோ, அவரும்
வைகோ அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டார்.

கையோடு கொண்டு போன சால்வையையும் போர்த்தி விட்டு,
வேனில் ஏறி அண்ணன் அருகே நின்று கொள்கிறார்….!!
( வேன் மீது நின்று கொண்டு வைகோ பேசும்போது,
மக்கள் கைதட்டாமல் இருந்த சமயங்களில், சைகை மூலம்
கை தட்டச் சொல்வதும் “லைவ்” ஆகவே தெரிந்தது. இது “லைவ்”-ல் உள்ள ஒரு அசௌகரியம். பின்னால் தனியே ஒளிபரப்புவதாக இருந்தால் – இது மாதிரி வேண்டாத பகுதிகளை எடிட் செய்து கொள்ள வசதி இருந்திருக்கும்…. )

4) வேன் மீது ஏறி நின்று, ஒலிபெருக்கியை பிடித்துக்
கொண்டு, வைகோ கூறுகிறார் –

KALINGAPATTI-3

”அமைதியாக போராட்டம் நடந்தது. அப்போது எங்கள்
தொண்டர்கள் இங்கே இருந்த மதுபானக் கடையை அடித்து
நொறுக்கினார்கள். ( அமைதி….அடித்து நொறுக்கினார்கள்…..!!. )

kalingapatti-2

அப்போது போலீசாருக்கும், எங்களது தொண்டர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எங்கள்
கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து எறிந்தார்.
( வைகோ மொழியில் – இதுவும் அமைதி வழியே ….?)

அவரை நாங்கள் பிடித்து கட்டி வைத்தோம்….!

ஆனால், அதற்குள் காவல்துறையினர் எங்கள் கட்சியினர் மீது
தடியடி நடத்தியுள்ளனர். என் மீது குறிபார்த்து 6 கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குண்டுகளை வீசி என்னைக் கொல்ல
முயற்சித்தார்கள்…

( கண்ணீர் புகை குண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலையில்
பணி புரிந்தவன் நான்…… கண்ணீர்புகை குண்டு
பட்டு யாரும் உயிர் இழந்ததாக சரித்திரமே கிடையாது…..!
உண்மையில் அதை குண்டு என்று சொல்வதே அபத்தம்…. )

எனது சொந்த ஊரில், நான் பிறந்த இந்த மண்ணில் சாவது
எனக்கு பெருமைதான் ” என்று கூறிய வைகோ இதன் பின்
அங்கிருந்து 200 அடி தள்ளி கைகட்டி, பேசாமல்
நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து –

“ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு ” “காக்கி சட்டை
போட்டிருக்க இல்ல … சுடு…. இறங்கி வரட்டுமா?
இதோ தனியா வர்ரேன்….” என்கிறார்.

இத்தனையும் “லைவ்” தொலைக்காட்சி கிடைத்ததனால்
உண்டான வேகம்….
நல்ல சூடான வியாபாரம் –
இவரால் தொலைக்காட்சிக்கு TRP- யும்,
தொலைக்காட்சியால் இவருக்கும் – win win situation…!!

பின்னர் அவரிடம் சென்று கைதாகும்படி பணிவோடு
வேண்டிக்கொள்ளும் காவல் துறை அதிகாரியிடம் இவர்
கூறுகிறார்…
” நீ யார் என்னைக் கைது செய்ய …?
நீ பிறக்கும் முன்பிருந்தே அரசியலில்
இருப்பவன் நான்…..
போய் விடு இங்கிருந்து.. என்னை கைது
செய்தால் இங்கே கலவரம் வெடிக்கும் “

காவலர்களை கடைசி வரை கலவரம் வெடிக்கும் என்றே
பயமுறுத்தி விட்டு, இரவு எல்லாரும் கலைந்து போய்
விட்டார்கள். வைகோவும் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு
தூங்கி விட்டு, அடுத்த நாள் மதுரை பயணம் மற்றும்
தொலைக்காட்சிகள் முன்பு ஆவேச பேட்டிக்காக
தன்னை தயார் செய்து கொண்டார்…..

வைகோ உண்மையிலேயே ஒரு தீர்மானத்தை விரும்பியிருந்தால்-
அவர் வேறு வழிகளை தேர்ந்தெடுத்திருக்க முடியும்.
அராஜகத்தில் இறங்கவோ,
மாணவர்களை தூண்டி விட்டு கலவரம் செய்யவோ முனையாமல் –

மதிமுக வுக்கு நாற்பது லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக
அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
அதில் பத்தில் ஒரு பகுதியை வெறும் 4 லட்சம் பேரை மட்டும்
திரட்டி –

தமிழகத்தில் முக்கியமாக 5 மதுபான தொழிற்சாலைகளிலிருந்து
தான் அத்தனை டாஸ்மாக் கடைகளுக்கும் சப்ளை ஆகிறது.
இந்த தொழிற்சாலைகளை முடக்கினால் – மொத்த டாஸ்மாக்
கடைகளும் – தன்னாலே மூடப்படும்.
ஒரு நாளோ, இரண்டு நாளோ, ஐந்து நாட்களோ –
இந்த நான்கு லட்சம் மதிமுக வினரும் இந்த 5 மதுபான
உற்பத்தி தொழிற்சாலைகளின் முன்பும் தொடர்ந்து மறியல்
செய்து, அவற்றின் உற்பத்தியை, சப்ளையை முடக்கினால் ….?

அதைச் செய்ய ஏன் முன்வரவில்லை ….?
கைது செய்யப்பட்டால் காலையில் பிடித்து – மாலையில்
விட மாட்டார்கள். சிறையில் தள்ளுவார்கள்.
வழக்குகள் தொடரப்படும்.
மாதக் கணக்கில் சிறைக்கு போக – தொண்டர்கள்
கிடைக்க மாட்டார்களே என்கிற பயமா….?

சுலபமாக மாணவர்களையும், மற்றவர்களையும் தூண்டி விட்டு, கடைகளை நொறுக்குவதிலும்,
தொலைக்காட்சிகளுக்கு ஆவேசமாக பேட்டி கொடுப்பதிலும்
கிடைக்கும் சுகமும், போதையும் இதில் கிடைக்காது என்பது
தானே காரணம்….?

எனக்கு அவமானமாக இருக்கிறது….
இவரையும் ஒரு உயர்ந்த தலைவர் என்று பல வருடங்கள்
நானும் நம்பினேனே….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

42 Responses to “ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம் ” – சாக்கடையில் விழுந்து புரளும் திரு.வைகோ…..

 1. chollukireen சொல்கிறார்:

  திட்டமிட்டு நாடகம் நடத்திய மாதிரித் தோன்றுகிறது. உங்கள் பதிவுதான் படித்தேன். இதுவே இவ்வளவு தத் ரூபமென்றால் . லைவ் பார்த்தால்… சினிமா தயாரிக்கலாம்.

 2. appannaswamy சொல்கிறார்:

  அன்பார்ந்த நண்பரே,
  இந்தக் காலத்து அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள். ஒருவனாவது அவனது சொந்த நிதியை பொதுமக்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறானா? (டியூப் லைட்டை மற்றவர்கள் காசில் காணிக்கையாய் கொடுத்து. அதில் வெளிச்சம் வராதபடி அவனுகளின் பெயரை எழுதி வைக்கும் அற்பங்கள்.)
  இந்த சாக்கடைகளின் நற்பண்புகளை (!!!! ?????) விமர்சிப்பதை தயவுசெய்து விட்டுவிட்டு , பொதுமக்களுக்கு சுயநலம் கருதாது பெயர் வெளிவராத எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பற்றி வெளியிட்டால். படிப்பவர்கள் தாங்களும் அதுபோல் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுமல்லவா?

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப அப்பண்ணசுவாமி,

   சாக்கடைகளின் நற்பண்புகள் பற்றியும் மக்களுக்கு குறிப்பாக இளந்தலைமுறையினருக்குத் தெரிந்தால்தான் அந்த சாக்கடையில் குதிக்காமல் தங்களைக் காத்துக்கொள்வார்கள். இல்லையென்றால் இந்நேரத்திற்கு எத்தனையெத்தனை மாணவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள்.

   இதுவும்தான் விமரிசனத்தில் வேண்டும் என்று நினைக்கிறேன்

   பி.கு. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து கா.மைஜி விரக்தியில் திருந்திவிடப்போகிறாரோ என்ற எண்ணத்தில் இந்தப் பின்னூட்டம்.
   🙂 🙂

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் அப்பண்ணசுவாமி.

    நான் அவ்வப்போது சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி,
    தியாகிகளைப் பற்றி எல்லாம் எழுதுகிறேனே –
    நீங்கள் பார்க்கவில்லையா …?

    வர வர – இருக்கின்ற அரசியல்வாதிகள் யாரையும்
    (அதிகாரத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பவர்கள்…)
    நம்ப முடியவில்லை…. யாரையும் வழிகாட்டி
    என்று என்னாலேயே ஏற்க முடியாத நிலையில்,
    நான் யாரைப்பற்றி எழுத …..?

    ஏற்கேனவே பலமுறை இந்த தளத்தில் சொல்லப்பட்டது போல்,
    எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி “பெட்டர்” என்று
    பார்க்கிற நிலையில் மட்டும் தான் நாம் இருக்கிறோம்…!!!

    அவ்வப்போது, “மோசமான கொள்ளி” களை அடையாளம்
    காணும் பணியைத்தான் இந்த விமரிசனம் தள நண்பர்கள்
    செய்து வருகிறோம்…

    சரி தானே நண்பர் டுடேஅண்ட்மீ….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 3. seshan சொல்கிறார்:

  From Today Dinamalar….. is it true… any idea sir,

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1308191

  கருணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கலாம் எதிர்ப்பு தெரிவித்தார்… ஆம் இந்த செய்தி உண்மைதான்..சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகளில் அடிபட்டது..கருணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று டி ஆர் பாலு..மற்றும் சில மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள்..திமுக எம்பிக்கள்..இப்படி பலரும் காவடி தூக்கி சென்றார்கள்.. யாரிடம்..? வேறு யார்..? நம்ம மணிமேகலையிடம்தான்..சோனியா காந்தியிடம்.. தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் சோனியா..எதனை வைத்து இவர்கள் பாரத ரத்னா விருதை கருணாவுக்கு வழங்க சொல்லி கேட்கின்றார்கள் என்று புரியாமல் தவித்தார்..ராகுல் செம எதிர்ப்பு..சோனியாவிடம் சண்டைக்கே சென்றுவிட்டாராம்.. இருந்தாலும் கூடா நட்பு கூட்டணி என்று இருந்தாலும்..சரி சொல்லிவைப்போமே..என்று காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதிக்கு ..நம்ம கலாம் அவர்களிடம் கோரிக்கை வைத்தாராம்..கலாம் அவர்கள் நியாயவான்..நீதி நேர்மை பார்ப்பவர்..சரி சில தினங்கள் அவகாசம் கொடுங்கள்..அவருக்கு பொருத்தம் இருந்தால் நிச்சயம் பரிசீலிப்பேன் என்று கூறியதை..உடனே சென்னைக்கு கோபாலபுரம் போனுக்கு தலீவா..உங்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க சோனியா ..சாரி அன்னை சோனியா காந்தி மூலம் கலாம் சார் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம் என்று துள்ளி குதித்தார்கள்..உச்சி குளிர..ஆஹா நமக்கு பாரத ரத்னா விருது கிடைத்துவிடும் என்று ஏக குஷியில் இருந்தாராம் தலீவர்.. அவ்வளவு கடுமையான பரிசீலனை கூட இல்லையாம்..சற்றே அதிகாரிகளிடம் அந்த கோரிக்கையை அனுப்பி வைத்து ஆராய சொன்னாராம்..நம்ம கலாம் சார்..உடனே வந்த பதிலை கண்டு அசந்துபோய்விட்டாராம் நம்ம கலாம் சார்..இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க சிபாரிசு செய்ததே மிகப்பெரிய தவறு என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளிடமிருந்து செய்தி வந்ததும் கலங்கிப்போனாரம் நம்ம கலாம் சார்..உடனே ஓர் அறிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார் கலாம் சார் அவர்கள்..இனி இந்த மனிதருக்கு யாரேனும் வேறு ஜனாதிபதியே வந்தாலும் கூட எந்த காரணத்தை கொண்டும் இவருக்கு மட்டும் கொடுக்கவே கொடுக்காதீர்கள்.. என்று நோட் எழுதி வைத்து..சிவப்பு இங்க் மூலம் டெலிட் நோட்டையும் நிரந்தரமாக எழுதி வைத்துவிட்டாராம நம்ம கலாம் சார் அவர்கள்..ஏன் என்று காரணம் எழுதும்போது..நமது நாட்டில் மிகப்பெரிய ஊழல்வாதி இவர்..என்று ஒரே ஒருவரியில் எழுதி வைத்து..எந்த காலத்திலும் இனி பாரத ரத்னா விருதே கிடைக்காமல் செய்துவிட்டு..அதனை சோனியா காந்திக்கும் தெரிவித்துவிட்டாராம்..பின்னர் கூட பிரதிபா பட்டீல் மூலமும் முயற்சி செய்ய..பிரதிபா சொன்னபின்னர் தான் ஆஹா இந்த கருணாவுக்கு இனி அல்ல எந்த பிறவியிலும் பாரத ரத்னா விருது என்பதே கிடைக்காது என்று தெரிந்து போன கோபத்தால்தான்..கலாம் என்றால் கலகம் என்று தனது கோபத்தை கூவம் வாயால்..கடுமையான சொற்பிரயோகம் செய்தார்..இப்போது புரிகின்றதா செய்தி..இது இட்டு கட்டிய செய்தி அல்ல..உண்மையான நிகழ்வு செய்தி.. முன்னாள் எம் பி ஒருவர் மூலம் பேச்சுவாக்கில் அறிந்துகொண்ட செய்தி இது..

  ————————————–

 4. today.and.me சொல்கிறார்:

  //(94 வயது மூதாட்டி, தானாக சேரைத் தூக்கிக் கொண்டு
  போராட்ட களத்திற்கு வந்திருப்பாரா…? பாவம் ..தள்ளாத
  வயதிலிருக்கும் தாயாரையும் தன் அரசியல் லாபத்திற்காக
  பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குப் போய் விட்டார் அண்ணன்.)//

  தூக்கிக்கொண்டு இல்லை ஜி…. தள்ளிக்கொண்டு. ச்சை.

  வேதனை.
  இப்படிப்பட்ட மகனைப் பெற்ற அந்தத் தாய்க்கும்,
  இப்படிப்பட்ட நிலையில் தாயை வைத்திருக்கும் அந்த மகனுக்கும்

  https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11822448_916204311772849_236627056397536799_n.jpg?oh=d900e0bccd81187766a1b56de74d9322&oe=563FBD3E&__gda__=1451245571_b2daf71b0d4d27cc4f4a9772bd1b9561

  • today.and.me சொல்கிறார்:

   இந்தப் புகைப்படம் அவர் போராட்டக்களத்திற்கு தள்ளிவரப்பட்டபோது எடுத்தபடம், மதிமுகவின் அதிகாரப்பூர்வ வெளியீடும்கூட. வைகோ கலிங்கப்பட்டிக்கு வருவதற்கு முன்னேயே இவரைத் தள்ளிவந்துவிட்டார்கள். பாவம் அம்மையார்.பெற்றமகனுக்கு எப்படியெல்லாம் உதவவேண்டியிருக்கிறது.

 5. paamaran சொல்கிறார்:

  வைகோ விடம் உள்ள பெரிய பிரச்சனை “உணர்ச்சி வசப்படுதல்”. எந்தப் பிரச்சனை என்றாலும் உடனே பொங்கி விடுவார். எந்த ஒரு நபர் உணர்ச்சிவசப் படுகிறாரோ அவர் ஒரு சிறந்த தலைவராக வர முடியாது. எந்த ஒரு பிரச்சனையிலும் அதை பக்குவமாக கையாள வேண்டும். இது வைகோவிடம் இல்லை, இது தான் இவரிடம் உள்ள பிரச்சனை.! இது பழைய வை.கோ. வின் நிலை — ஆனால் தற்போது இதையும் மீறி வேறு பாதையில் மற்றவர்களின் துணையோடு பயணிக்க ஆரம்பித்துள்ளார் போல தெரிகிறது !! போராளியாய் — நல்ல அரசியல்வாதியாய் இருந்தவர் : — சேராத இடம் சேர்ந்து — வஞ்சத்தில் விழுந்து விட்டாரா ? யு டு வை . கோ ?

 6. today.and.me சொல்கிறார்:

  //கண்ணீர் புகை குண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலையில்
  பணி புரிந்தவன் நான்//

  காமைஜி, நீங்கள் அதிலே வேலைசெய்ததால் அதைப்பற்றித் தெரியும்.
  வைகோவின் உணர்சசிகரமான பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அப்பாவித் தொண்டர்களுக்கு அதுதெரியுமா?

  அதனால்தான் அவர் வண்டி இவ்வளவுநாள் ஓடிக்கொண்டிருக்கிறது.

  🙂

 7. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,

  உங்கள் மகன் ஐடிசி சிகரெட் ஏனென்சி உரிமையாளர் என்று தெரியவருகிறதே, மதுவிலக்கு வேண்டும் என்று போராடும் நீங்கள் மதுவைவிட பாஸிவ் பாதிப்புகள் அதிகம் இருக்கின்ற சிகரெட்டு விற்பனையை உங்கள் மகனே நடத்துகிறாரே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட நிருபரை, நீ எந்த மீடியா, எந்த டீவி உன் பெயர் என்ன என்று விவரங்களைக் கேட்டுவிட்டு,அத்தனைபேர் மத்தியிலும் நீ ஆம்பளயா இருந்தா………. என்னையே கேள்வி கேட்கிறாயா உனக்கு எவ்வளவு விஷம், உனக்கு எவ்வளவு விஷம் இருக்கவேண்டும் என்று மிரட்டுகிறார்.

  சன்டிவியின் மதுரை அலுவலகத்தில் 3பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது தன்னைப்பார்த்து கேள்விகேட்ட நிருபரை முகருணாநிதியும் இவ்வாறுதான், நீ தான் கொலைபண்ண..நீதான் கொலைபண்ண என்று மிரட்டிக் குற்றம் சாட்டினார். இருவரும் ஒரே பட்டறையில் இருந்து வெளியே வந்தவர்கள் என்பதை அவ்வப்போது காட்டிக்கொண்டே இருந்தாலும்,

  இப்போது தன் இருப்பைக் காட்டிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு நேர்ந்திருக்கிறது. அதனால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இது என்றே நினைக்கிறேன்.

 8. today.and.me சொல்கிறார்:

  //வைகோ உண்மையிலேயே ஒரு தீர்மானத்தை விரும்பியிருந்தால்-
  அவர் வேறு வழிகளை தேர்ந்தெடுத்திருக்க முடியும்./
  சட்டம் படித்தவர், அரசியலை கரைத்துக்குடித்தவர்
  அவருக்குத் தெரியாத வழிகளா?

  என்ன பாதிப்பு அவருக்கு வராத மாதிரி இருக்கவேண்டும். அதற்குத்தான் சசிபெருமாள்கள், மாணவர்கள் தேவை.

 9. today.and.me சொல்கிறார்:

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுவதாக மக்களை ஏமாற்றிவந்த இவர் நிறுவன நிர்வாகத்தை மிரட்டி தனது தம்பி ரவிச்சந்திரனின் மனைவியின் சகோதரர் (மைத்துனர்) ஜெகதீஸ் என்பவருக்கு அதே ஸ்டெர்லைட் ஆலைக்கான எரிபொருள் சப்ளை செய்யும் ஏஜென்சியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

  இப்போது மதுவுக்கு எதிராக போராட்டநாடகம் நடத்துகிற வைகோ தன் உறவினர்கள் பெயரில் ஏதேனும் உரிமங்களை எதிர்பார்க்கிறாரோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

  வெளியில போராளி, உள்ளுக்குள்ள புரோக்கர் வேலை. ச்சை.

 10. kakkoo சொல்கிறார்:

  என்னால் முடிந்தது, G+,fb இவைகளில் போஸ்ட் செய்கிறேன். தொடருங்கள்.

 11. today.and.me சொல்கிறார்:

  //மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளின் முன்பும் தொடர்ந்து மறியல்
  செய்து, அவற்றின் உற்பத்தியை, சப்ளையை முடக்கினால் ….?//

  பதிலுக்கு பாமக அன்பர்கள் அன்புமணியார் தலைமையில் மக்கள் தொலைக்காட்சியின் நேரலையில், தென்காசியில் உள்ள வைகேவின் மகன் நடத்திவரும் ஐடீசீ டீலர் ஏஜென்சி நிறுவனத்தின் முன்பு சப்ளையை முடக்கினால்,

  ஐயகோ…. வைகோ.

 12. today.and.me சொல்கிறார்:

  இது விமரிசனத்தின் முந்தைய பதிவு. அங்கே பின்னூட்டமிட வசதியைக் காணோம். இங்கேயும் போடலாம், தப்பில்லை, ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. எனவே நண்பர்கள் அறிவதற்காக இங்கேயே:

  //https://vimarisanam.wordpress.com/2015/04/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F///

  இப்பதிவின் கடைசிப்பின்னூட்டத்தில் டாக்டர் சாந்தா அவர்களின் கருத்துக்களைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்து இங்கே தொடர வேண்டுகிறேன்.

  டாக்டர் சாந்தா அவர்களே
  இவரை மன்னித்து, இன்னும் பல கேன்சர் ஆஸ்பத்திரிகளை நிறுவ வேண்டுகிறேன்.

  சிகரெட்டுக்கு பிராண்ட் அம்பாசிடர்களாகப் போகவேண்டியவர்கள். மக்கள் பிரதிநிதிகளாம்.. கடைந்தெடுத்த அயோக்கியர்கள்.

  time: from 7.15

  முழுவதும் பார்த்தாலும் நன்கு பொழுதுபோகும் உணர்ச்சிகரமான ஒளிச்சித்திரம்.
  🙂 😀 😀 🙂

  • today.and.me சொல்கிறார்:

   இந்தப் பேட்டியிலேயே என் மகனுக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை, அவனுக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார். ஆனால் தன் மகனுடைய தொழிலுக்காக 50+ லட்சங்கள் கடன்கொடுத்ததாக வேட்பாளர்மனுவில் பதிவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 13. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,
  ஆனாலும் நீங்கள் இவ்வளவு இடியாப்பச் சிக்கலான பிரச்சினையை எழுதியிருக்கக்கூடாது. எனக்கு பின்னூட்டம் எழுதி எழுதி …. ம்ஹூம்.. உங்கள் பதிவில் வரிக்கு வரி பதில் எழுத ஆசைதான்.

  ம்ஹூம்.. ..முடியல.

  நான் அப்பீட்டு

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   பின்னூட்டங்களால் பிய்த்து உதறி விட்டீர்கள்….!!!
   உங்கள் அனைத்து பின்னூட்டங்களும் பிரணமாதம்….

   actually – நாளைக்கு நான் “ஒரு புகையிலை வியாபாரியின்
   சாகசங்கள்” என்று வைகோ பார்ட் -2 எழுதுவதாக
   இருந்தேன். முக்காலே மூணு வீசம் பாயிண்டுகளை
   நீங்களே அள்ளி விட்டீர்கள்….!!!

   இருந்தாலும் அண்ணன் வைகோ என்னை கைவிட மாட்டார்
   என்றே நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Sharron சொல்கிறார்:

   Don’t escape. Still write some more please.It’s quite interesting and eye opening for many.Please continue your work.

 14. Pingback: “ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம் ” – சாக்கடையில் விழுந்து புரளும் திரு.வைகோ….. | Classic Tamil

 15. theInformedDoodle சொல்கிறார்:

  அவர் கணக்கு கருணாநிதியின் நீண்ட ஆயுளால் தவறி விட்டது. இன்று உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தை கைப்பற்ற எல்லோரும் துடிக்கிறார்கள். இவரும் துடிக்கிறார். அவ்வளவுதான். வைகோ வைப் பொருத்தவரை, சந்தர்ப்பங்கள் சரியாக இருந்த போதும் அவற்றை உபயோகப் படுத்தத் தெரியாமல் வீணடித்தவர் என்றே நினைக்கிறேன்.

  இவர் பதவிக்கு வரும் காலம் முடிந்து விட்டது!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே ( theInformedDoodle ),

   இப்போது வைகோ எதற்கும் துணிந்தவராக –
   சொரணையற்றவராக மாறி விட்டதால் –
   யாரையாவது பிடித்து, எதாவது ஒரு கூட்டணியில்
   சேர்ந்து, குறைந்த பட்சமாக – எதாவது ஒரு வாரியத் தலைவர்
   பதவியையாவது பெற்று விடுவாரென்று தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 16. Arun சொல்கிறார்:

  Sir, you are saying govt is already planning to implement prohibition. If they had just mentioned by now that govt is already considering it there might not be so many protests. Instead members of the ruling party are saying it is not possible in every TV debate and interview. What is the political reasoning behind not making an announcement about the plan?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அருண்,

   தமிழக அரசு அறிவிப்பை வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகளில்
   இறங்கியபோது தான், அதை இவர்கள் முன் கூட்டியே தெரிந்துகொண்டு,
   மதுவிலக்கை கொண்டு வரும்படி தாங்கள் அழுத்தம் கொடுத்து
   போராடியதால் தான் அரசு பயந்து, பணிந்து – மதுவிலக்கை
   கொண்டு வந்தது என்னும் தோற்றத்தை உண்டுபண்ண பார்க்கிறார்கள்.

   இதெல்லாம் அரசியல் விளையாட்டு….!

   இப்போது இவர்கள் போராட்டம் தொடகின்ற நிலையில் தமிழக அரசு
   மதுவிலக்கை அறிவித்தால், இவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதாக
   ஆகி விடும்.

   எனவே தான் அரசு முடிவை தள்ளிப் போட்டிருக்கிறது.
   போராட்டங்களை அடக்கிய பிறகு –
   தமிழக அரசு நிச்சயம் புதிய மதுவிலக்கு கொள்கையை
   நடைமுறைக்கு கொண்டு வரும்.
   அது வெகு சீக்கிரமே நடைபெறும் என்றும் எதிர்பார்க்கலாம்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 17. Raghu சொல்கிறார்:

  Dear KM Sir.,

  I was reading an article about show cause notice issued to three channels regarding discussion about recent hanging.

  Interesting to note that one of the section mentioned in the notice covers the following

  Section 1(e) states that no programme should be carried in the cable service which is “likely to encourage or incite violence or contains anything against maintenance of law and order or which promote anti-national attitudes.

  Raghu

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ரகு,

   மத்திய அரசு நோட்டீஸ் கொடுத்திருப்பது உண்மையே.
   அது யாகூப் மேமன் தண்டனை பற்றியது…!

   இந்த நோட்டீசுக்கு, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகள்
   என்ன பதில் அளிக்கின்றன, எப்படி விளக்கம் சொல்கின்றன
   என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

   சில சமயங்களில் தொலைக்காட்சிகளும் வரம்பை மீறுகின்றன.
   அதை பயன்படுத்திக் கொண்டு அரசும் – அதீத கட்டுப்பாடுகளை
   கொண்டு வர முயற்சிக்கிறது.

   இரண்டு எல்லைமீறல்களும் தவறு தான்.

   பொறுத்திருந்து பார்ப்போமே – விஷயம் எப்படி செல்கிறது என்று….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 18. எழில் சொல்கிறார்:

  ஐயா, வைகோ பற்றி மேலும் ஒரு செய்தி அரசல் புரசலாக உலவுகிறது. அதாகப்பட்டது, இறுதிகட்ட ஈழ போரின் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு விடும், தான் பாராளுமன்ற உறுப்பினராகி விடுவேன். சில தினங்கள் பொறுத்துக் கொண்டால் நிலைமை சரியாகி விடும் என்று அடித்து கூறி புலிகள் தலைமை ‘பிளான் B ‘ க்கு போகவிடாமல் நேரத்தை விரயம் செய்து கடைசியில் அவர் ‘மறைவுக்கு’ காரணமானவர் என்பதே அது. அவர் இதை வேண்டும் என்று செய்யவில்லை ஆயினும் அதனால் ஏற்பட்ட மனசிக்கலினால் தான் சிலகாலம் ஏதேதோ எல்லாம் பேசி திரிந்தார். இதை தற்போதைய ஈழ தமிழ் தலைவர்களும், ஆதரவாளர்களும் அறிந்து கொண்டதனால் தான் இவரை ‘களட்டி’ விட்டுவிட்டார்கள் என்றும் இதை தொடர்ந்தே வேறு வழியற்று ‘கருணா’வுக்கு காவடி தூக்க தலைப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இவை உண்மையாயின் இவரை ஈழ மக்கள் மட்டுமன்றி முத்துகுமாரின் ஆவி கூட மன்னிக்காது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   நீண்ட நாட்களுக்குப் பிறகு – உங்கள் பின்னூட்டத்தை பார்ப்பதில்
   மிக்க மகிழ்ச்சி.

   என்ன ஆயிற்று என்று தெரியவில்லை – அண்மைக் காலங்களில்
   வெளிப்படையாகவே தெரிகிறது – வைகோ அவர்கள் அளவுகடந்த
   சுயநலனுடன் செயல்படுவது..
   வெட்கம் சிறிதும் இல்லாமல் ஏதேதோ பேசுகிறார்.
   என்னென்னவோ செய்கிறார்.

   மே மாத நிகழ்வுகளுக்குப் பிறகு,
   கலைஞர் ஈழப்படுகொலைகளுக்கு துணைநின்றது
   வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த பிறகு –

   -மீண்டும் அவருடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு –
   வைகோ போவார் என்று
   நான் கனவில் கூட நினைக்கவில்லை.

   அத்தனையும் சுயநலம்…..அவரது நடிப்புத் திறன் நம் எல்லாரையும்
   ஏமாற்றி விட்டது. இப்போதாவது நாம் அவரை இனம் கண்டு
   கொண்டோமே என்று ஆறுதல் கொள்ள வேண்டியது தான்..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    ஐயா, அடிக்கடி எழுதுவது இல்லையே தவிர உங்கள் ஒரு பதிவையும் தவற விடுவதில்லை. நீங்கள் மேலே கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அன்று கலைஞரை கரித்து கொட்டி, ஈழ தமிழரின் ரத்தம் தோய்ந்தவர் என்று வர்ணித்து விட்டு இன்று அவருடன் கை கோர்க்க தயாராகி வருவது இவர் ஈழ தமிழரையும், முத்துகுமாரையும் வைத்து இதுவரை பார்த்தது அப்பட்டமான சுயநல அரசியல் என்றாகி விடுகிறதல்லவா. He is a man of colossus failure!

 19. drkgp சொல்கிறார்:

  2006 தேர்தல்உச்சகட்டம், திருச்சி தி முக மாநாடு , வைகோ கூட்டணியின் அங்கம், கருணாவுக்கு
  இணையாக வைகோவுக்கு மலையுயர கட்டவுட் , விடிந்ததும் மாநாடுதுவக்கம். இரவுமுடியுமுன்
  வைகோ கூட்டணி மாறி தொகுதி பங்கீட்டுடன்அறிவிப்பு வந்தது.40 கோடி பரிவர்த்தனை என்று பேச்சு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் KGP,

   மீண்டும் தேர்தல் நெருங்குகிறது.
   திரை மறைவு –
   மேடை நாடகங்கள் நிறைய நடக்க காத்திருக்கின்றன.
   யார் யார் என்னென்ன வேடங்கள் போடப்போகிறார்களென்று –
   பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

   எல்லாருமே – வெட்கங்கெட்டவர்கள்….
   எதற்கும் துணிந்தவர்கள்…
   எந்த பக்கம் வேண்டுமானாலும் சேருவார்கள்…
   எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 20. sathiyamoorthy சொல்கிறார்:

  I also feel like you 100 percent. I want to post this to my fb under ur name. please help me how to do this

  moorthy

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சத்தியமூர்த்தி,

   மேலே – இடுகை முடிவடைந்தவுடன் –
   Share க்கு கீழே Face book என்று இருக்கிறதல்லவா ?
   அதை க்ளிக் செய்து விட்டு, வரக்கூடிய பெட்டியில்
   உங்கள் ஈமெயில் விலாசத்தை கொடுங்கள்.
   உங்கள் Face book -ல் வந்து விடும் –

   …..என்று நினைக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 21. sathiyamoorthy சொல்கிறார்:

  just test

 22. sathiyamoorthy சொல்கிறார்:

  sirantha thalivan unarchi vaspattu mudivu edukka mattan. I also beleive this guy is hero. but now vijayakanthukku aduthapadiya inth aluthan big comedian

  moorthy
  alathur

 23. drkgp சொல்கிறார்:

  You have spent too much of your valuable time on this useless pseudo leader.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Dr.KGP,

   I agree.
   But this so called leader has to be FULLY EXPOSED
   before the public eyes – That is also very
   important – is it not so …!!

   with all best wishes,
   Kavirimainthan

 24. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  உள்ளிட்ட அனைத்து நண்பர்கள் பார்வைக்கு,

  ஒரு ஐபிஎஸ் அதிகாரியைப் பார்த்து இந்த வைகோ பேசுவது என்ன? வண்டியின்மீது உடன் இருக்கும் திருமாவைப் பார்த்து இந்த வைகோ சொல்லுவது என்ன? மதிமுக ரவுடிகளைப் பார்த்து இந்த வைகோ தூண்டிவிடுவது என்ன?இதனால் நாம் புரிந்துகொள்வது என்ன? பதில்சொலலுங்களேன்.

  ………………
  பின்குறிப்பு: கலிங்கப்பட்டியில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடத்தில் அவர் கட்டிவாடகைக்கு விட்டுள்ள கடையில் பார் நடத்தப்ட்டு வருகிறது 2009 முதல். இந்த பாரை இவர் மதுவிலக்குப்போராட்டம் என்ற போர்வையில் இப்போதுதான் தன்பார்வைக்கு வந்ததுபோல ஏன் இந்தப் பேயாட்டம்?
  தகவல்:நாஞ்சில் சம்பத் அவர்கள் பேட்டியில்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   இத்தனை பேருக்கு இடையில் இந்த ஆள்
   எப்படி வெறி பிடித்து பேசுகிறார் பாருங்கள்…

   ஒரு வேளை தப்பித்தவறி எதாவது கூட்டணியின்
   மூலம் இவரெல்லாம் என்றைக்காவது
   மந்திரியாகி விட்டால்…….?

   விஜய்காந்த்தாவது அதிகம் படிக்காதவர்…
   புரிந்து கொள்ள முடிகிறது….

   ஆனால் இவர்….?
   இந்த ஆளை நேரில் பார்த்தால் –
   “தூ” என்று காரித்துப்ப வேண்டும் போல் இருக்கிறது.

   வருந்துகிறேன்.
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.