திரு.வைகோ அவர்களின் வாதம் – ஒரு சிகரெட் டிஸ்டிரிப்யூட்டர் துவக்கிய பட்டிமன்றம் …!

.

திரு.வைகோ அவர்கள் ஒரு பட்டிமன்றத்தை துவக்கி
வைத்திருக்கிறார். உள்ளே போகும் முன்னர் சில விவரங்களை
பார்ப்போமா …?

mukesh-1

இவர் தான் முகேஷ் – சினிமா பார்க்கும் அத்தனை
பேருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். காரணம் ….
புகையிலையால் இளம் வயதிலேயே செத்தவர் – தமிழ்நாட்டில்
ஒவ்வொரு திரையரங்கத்திலும் இவரது காட்சி தவறாமல்

திரையிடப்படுகிறது.

mukesh-2

anti smoking -1

anti smoking -3

anti smoking-2

அடுத்தடுத்த படங்கள் – சிகரெட் – புகையிலை பயன்பாட்டினால்
உண்டாகக்கூடிய நோய்களை பற்றிய செய்தி-புகைப்படங்கள்….

—————-
சிகரெட் பிடிப்பவர்கள் அனைவருக்கு அருகிலும் இருப்பவர்களும்
PASSIVE SMOKERS ஆகிவிடுகிறார்கள் ,
சிகரெட் பிடிப்பவர்களை விட அதிக பாதிப்பு
அதை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் …..

—————-

கீழே இருப்பது சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைமை இயக்குனர், டாக்டர் சாந்தா அவர்கள் கூறி இருக்கும் ஒரு செய்தி…. ( தன் வாழ்நாள் முழுவதையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதிலேயே கழித்தவர் இவர்…)

—————-

புகையிலை வேறு, புற்றுநோய் வேறல்ல:
மருத்துவர் சாந்தா விளக்கம்-

First Published : 03 April 2015 11:29 AM IST
—–

புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை
பயன்படுத்தியவர்கள்தான் என்பது தில்லியில் உள்ள டாடா
இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற
நிறுவனத்துடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை
இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

புகையிலைப் பயன்படுத்தியதால் தமிழ்நாட்டில் மட்டும்
ஆண்டுக்கு 55 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.

(அகில இந்திய அளவில் – சுமார் பத்து லட்சம் …)
நுரையீரல் புற்றுநோய் –
புகை பிடிப்பவர்களுக்கே வருகிறது.

புகையிலை பொருட்கள் மீது புகையிலையை
பயன்படுத்தாதீர்கள் என்ற வாசகம் எழுதினால்,
அதுவும் ஆங்கிலத்தில் எழுதினால், இதை படிக்காத
பாமரர்கள் படித்துப் பார்க்காமல் பயன்படுத்துகிறார்கள்.

எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை
பொருட்களின் மீது சுற்றப்பட்ட கவரில் அச்சிட வேண்டும்.

” என்னைக் கேட்டால் –
புகையிலைவேறு – புற்று நோய் வேறு அல்ல,
இரண்டும் ஒன்றுதான் என்பேன் “

——————–

டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குங்கள் என்று
மாணவர்களை தூண்டி விட்டு ஆவேசமாக வைகோ
செய்தியாளர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது –

ஒரு இளம் செய்தியாளர் – வைகோ அவர்களின் மகன்,
புகையிலை வியாபாரம் செய்து வருவது பற்றி
ஒரு கேள்வி கேட்டார்…

ஆவேசமான வைகோ – அந்த இளைஞரை “நீ யார்….?
எந்த பத்திரிகை…? எதற்காக இந்த கேள்விகளை என்னிடம்
கேட்கிறாய்” என்றெல்லாம் கேட்டு விட்டு –

ஆவேசமாக –

”என் மகன் துரை வையாபுரி பினாமியில் வாங்கவில்லை.
அவன் எம்.ஏ. படித்திருக்கிறான். இன்டர்வியூவுக்கு போனான்.
ஐ.டி.சி.யில் அவனுக்கு தென்காசி டவுனுக்கு ஏஜென்சி கிடைத்தது.

அரசியல்வாதிகள் பினாமியில சொத்து சேர்த்து, பினாமியில
தொழில் நடத்துறாங்க. காலேஜ், சாராய தொழிற்சாலை என்று.

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு.
ஆனா, புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்கிறதில்லை.
புகை பிடிக்கறவன் போய் பெண்கள் கையை பிடித்து
இழுக்கிறதில்லை. புகை பிடிச்சதுனால ஒருவனைப் போய்
கை, காலை வெட்டுறதில்லை. புகை பிடிச்சதுனால
பெத்த தாயை பலாத்காரம் செய்யப்போவதில்லை.

புகை பிடிக்கிறதால சமுதாயம்
அடியோடு நாசமாகுறதில்லை.
இதுதான் உண்மை நிலைமை……

நான் அவனுக்கு எந்த சொத்தும் ஏற்படுத்திக் கொடுக்கல.
அவன் முயற்சியில அவன் தொழில் பண்றான்.
நான் நியாயப்படுத்தறேன்”

————

இது குறித்து நாம் சில விஷயங்களை சொல்ல
விரும்புகிறோம்.

சிகரெட் பிடித்தால் கேன்சர் வரும் என்பது
அண்ணனுக்கு தெரியாதா….?
அதன் பிறகும் இவர் அதை எப்படி நியாயப்படுத்த முடியும் …?

சாராயம் குடிப்பவன் தனக்கும், சமுதாயத்திற்கும்
பெரும் கேடு விளைவிக்கிறான். எனவே டாஸ்மாக் கடைகள்
மூடப்பட்டே ஆகவேண்டும் என்பதில், யாருக்கும் எந்தவித
சந்தேகமும் இல்லை.

ஆனால், சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று மாணவர்களை
தூண்டி விடும் வைகோ அவர்கள், அதே மாணவர்களின்
நல் வாழ்வை, உடல்நலத்தை பாழ்படுத்தும் சிகரெட் வியாபாரத்தில்
ஈடுபடுவது சரியா ….?

அவர் மகன் சிகரெட் டிஸ்டிரிபியூட்டர் ஆனது குறித்து
சில வார்த்தைகள் –

ஐடிசி ஏஜென்சி பெற எம்.ஏ., எம்பிஏ – படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டுமென்கிற அவசியமே இல்லை. பத்தாம் கிளாஸ் படித்திருந்தால் கூட போதும்.
உண்மையான தேவை – பெரிய அளவில் டெபாசிட் தொகையும்,
அரசியல் செல்வாக்கும் மட்டும் தான்.
அது இரண்டுமே இவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..!

தன் மகனுக்கு, இவரும், இவரது மனைவியுமாக
சுமார் 50 லட்சம் கடனாகக் கொடுத்திருப்பதாக –
தேர்தல் கமிஷனிடம் இவர் சமர்ப்பித்திருக்கும் affidavit
கூறுகிறதா இல்லையா …?

ஐடிசி யிடம் தன் செல்வாக்கை பயன்படுத்தி இந்த
ஏஜென்சியை அவர் வாங்கிக் கொடுத்திருப்பார்
என்று
கூடவா நம்மால் புரிந்து கொள்ள முடியாது….?

ஒரே மகனுக்கு தந்தையும், தாயும் – தங்கள் சேமிப்பிலிருந்து
50 லட்சம் ரூபாய் கொடுத்தால், அது கடனாக இருக்குமா
அல்லது ……

வருமான வரி இலாகாவிற்கு வேண்டுமானால் இந்த
சாக்கைச் சொல்லலாம் …. நம்மிடம் சொன்னால் ….?

சரி இவர் கடன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வோம்.
அந்த கடன் இதுவரை எவ்வளவு தவணைகள்
திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது…?
அதற்கு வருடாந்திர வட்டி எவ்வளவு…?
சொல்ல முடியுமா …?

சிகரெட் வியாபாரத்தை கைவிடுவீர்களா என்றால் –
தமிழக அரசு சிகரெட் விற்பனையை தடை செய்யட்டும்.
என் மகன் கடையை மூடி விடுவான்
என்று வீராவேசமாக
சொல்கிறார்.

முதல் விஷயம் – அரசு தடை செய்து விட்டால்,
இவர் நினைத்தாலும் அதன் பிறகு –
சிகரெட் வியாபாரத்தை தொடர முடியாது…
மூடித்தான் ஆக வேண்டும்…!

இரண்டாவது விஷயம் –
ஏன்… அரசு தடை செய்தால் தான் கைவிடுவீர்களா…?
உங்களுக்கு தார்மீக கடமை ஒன்றும் கிடையாதா ?.

மக்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை
விற்று தான் நீங்கள் பிழைக்க வேண்டுமா…?
எம்.பி.ஏ. படித்தவருக்கு வேறு தொழிலோ, வேலையோ –
கிடைக்காதா என்ன …?

மேற்கு வங்கத்திலும், மஹாராஷ்டிராவிலும்-
“விபச்சாரம்” கூடத்தான் அரசால் தடை செய்யப்படவில்லை.
அரசு தான் தடை செய்யவில்லையே என்று
ஒரு பெரிய மனிதர் அந்த தொழிலில் ஈடுபடலாமா …?

தானே மக்களுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களின்
வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு, டாஸ்மாக் கடையை
மூடு இல்லையேல் அடித்து நொறுக்குவோம் என்று சொல்ல
ஒருவருக்கு என்ன உரிமை இருக்கிறது….?

நாளை வேறோருவர் இதே மாணவர்களை வைத்துக்கொண்டு,
கேன்சர் உண்டாக்கும் சிகரெட் வியாபாரத்தை நிறுத்து
என்று சொல்வாரேயானால் அதில் என்ன தவறு …?

————

பின் குறிப்பு – வைகோ அவர்கள் இந்த கேள்விகள் எதற்கும்
பதில் சொல்ல மாட்டார். எனவே, இந்த வலைத்தள
நண்பர்கள், தாங்களே பட்டிமன்றத்தை
பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம்….!!!!

இந்த இடுகை எப்படியும் வைகோ அவர்களின் பார்வைக்கு
கொண்டு செல்லப்படும் என்று நம்புகிறேன் -விரும்புகிறேன்.

எனவே, வாதங்கள் விவேகமானவையாகவும், நாகரிகமாகவும்,
இருக்கட்டும் என்று வேண்டுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to திரு.வைகோ அவர்களின் வாதம் – ஒரு சிகரெட் டிஸ்டிரிப்யூட்டர் துவக்கிய பட்டிமன்றம் …!

 1. seshan சொல்கிறார்:

  VAIKO….
  He already benefited by so much of crores through LTTE long back (direct and indirect benefit). so he no need to earn anything now. he is simply time passing by attend meeting / dharna running the party. he is not even sessional politician.

  he is very good drama actor……he is creating stages for his play every day. who are all behind him, if they were benefited by him is ok or waste of time only…..

 2. Ganpat சொல்கிறார்:

  நான் சொல்லப்போவது வேறு .கா.மை ஜி விஸ்வரூபம் எடுத்துவிட்டார் .ஆங்கிலத்தில் சொல்வதானால் “He is firing from all the engines!” கனல் தெறிக்கும் பதிவுகள் ஆணித்தரமான வாதங்கள்.வலைதளத்தை இப்படி முழுதும் சமூக தார்மீக பயன்பாட்டிற்காக உபயோகிப்போர் மிக குறைவு.அவர்களின் அரசர் காவிரி மைந்தன்.இவர் கெட்டவர் என்று அடையாளம் காட்ட முடியும் நம்மால் இவர் நல்லவர் என்று ஒருவரைக்கூட காட்டமுடியாமல் நம் நாட்டு அரசியல் சாக்கடையானது நம் பெரும் துரதிருஷ்டமே!
  கா.மை ஜிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கண்பத்,

   உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

   உங்கள் நல்லெண்ணம் – மிகவும் உயர்த்திக் கூறுகிறீர்கள்.
   நான் அந்த அளவிற்கு தகுதி உடையவன் அல்ல.

   என்னால் இயன்ற வரை உங்கள் எதிர்பார்ப்புக்கு
   தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள முயற்சி செய்வேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Pingback: திரு.வைகோ அவர்களின் வாதம் – ஒரு சிகரெட் டிஸ்டிரிப்யூட்டர் துவக்கிய பட்டிமன்றம் …! | Classic Tamil

 4. Sampathkumar. K. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  வைகோ பற்றி சில ஆண்டுகளுக்கு முன்
  தயாநிதி மாறன் கூறியது –

  ஐடிசி சிகரெட் நிறுவனம் தென்னிந்தியாவில் எந்த
  அரசியல்வாதிக்கும் ஏஜென்சி கொடுப்பதில்லை.
  ஆனால்,வைகோவின் மகன் தான் ஐடிசி டெப்போவை
  இங்கே பினாமி பெயரில் நடத்தி வருகிறார்.

  மேலும் டாடா நிறுவனம் தயாரிக்கும் சுமோ, இண்டிகா
  கார்களை தென் மாவட்டங்களில் விற்க தனது மகனபெயரில்
  ஏஜென்சி எடுக்க வைகோ முயற்சிக்கிறார்.

  http://tamil.oneindia.com/news

 5. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  மூன்று மாவட்டங்களுக்கு வைகோ தன் மகனின் பெயரில்
  distributorship வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
  ஆனால் அவர் தென் காசி distributor என்று தான்
  சொல்கிறார். எது உண்மை ?

  anyway – அவர் ஏரியாவில் சுமார் 50,000 பேர் சிகரெட்
  பிடிப்பதாகவும்,
  சராசரியாக ஒருவர் 5 சிகரெட் பிடிப்பதாகவும் வைத்துக்
  கொண்டால், ஒரு சிகரெட்டுக்கு குறைந்த பட்சம் 50 காசுகள்
  distributor பங்காக கிடைக்கும். 50,000 x 50 காசுகள்
  = 25,000 ரூபாய். இந்த வியாபாரத்திற்கு எந்தவித முயற்சியும்,
  விளம்பரமும் தேவையில்லை. தானாகவே விற்கும்.
  அய்யோ ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரும்படி வரும் தொழிலை
  யார் சார் விடுவார்கள்…? கண்பத் சார் சொல்கிற மாதிரி
  வர வர உங்கள் இடுகைகள் கொதிக்கின்றன. மிக்க நன்றி சார்.

 6. today.and.me சொல்கிறார்:

  //அரசியல்வாதிகள் பினாமியில சொத்து சேர்த்து, பினாமியில
  தொழில் நடத்துறாங்க. காலேஜ், சாராய தொழிற்சாலை என்று. //

  அப்படி பினாமியில் காலேஜ் சாராய தொழிற்சாலைகள் நடத்தும் திமுக குடும்பத்தாரோடு அண்ணனுக்கு என்ன ஒட்டும் உறவும் பாசமும்?
  விளக்குவாரா?

 7. Ganpat சொல்கிறார்:

  இந்திய அரசியலில் நமக்கு(வாக்காளர்களுக்கு) இருக்கும் விருப்பத்தேர்வு:
  கெட்டவன்
  அயோக்கியன்
  ராட்சசன்.
  சரி இருப்பதிலேயே கெட்டவன்தானே தேவலைன்னு அவனுக்கு வாக்களித்தால் அவன் அடுத்த ஐந்தாண்டுகளில் அயோக்கியனாக பதவி உயர்வு பெற்று விடுகிறான்.
  ஆட்சி செய்வது ராட்சசன்
  பிரதான எதிர்க்கட்சி அயோக்கியன்
  உதிரிக்கட்சிகள் கெட்டவன்
  என்ற நிலையிலேயே கடந்த ஐம்பதாண்டு இந்திய அரசியல் உழன்று வருகிறது.
  நாமும் படாத பாடு பட்டு வருகிறோம்.
  பத்தாவது அவதாரத்திற்கு காத்துள்ளோம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிகச்சரியாக சொல்கிறீர்கள் கண்பத்.

   அத்தனை கட்சிகளுமே சொல்லி வைத்தாற் போல் –
   ஒரே மாதிரி செயல்படுகின்றன.

   தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று சொல்லி
   களத்தில் இறங்கிய கட்சிகளால் கூட அரசியல் அதிகாரம்
   என்கிற நப்பாசைக்கு பலியாகி விடுகின்றன.

   லேடஸ்ட் உதாரணம் – திரு தமிழருவி மணியனின் கட்சி…!

   மணியன் அவர்கள் மீது கூட துவக்க காலத்தில்
   ஓரளவு நம்பிக்கை இருந்தது. இப்போது ……!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. paamaran சொல்கிறார்:

  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே – அட
  அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
  யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே – அட
  அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
  பேதம் புரியல்லே

  பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே – இப்போ
  பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
  பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே – இப்போ
  பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
  பேதம் தெரியல்லே—– தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
  நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
  உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா – அட
  உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
  அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா—– முரடருக்கும் {மூடருக்கும் } மனிதர் போல முகம் இருக்குதடா
  மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
  காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா ….. வெல்லுமா .கா.மை.அய்யா …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   நம்புவோம் நண்பரே…..!
   ஓட்டு போடும் மக்கள் அரசியல்வாதிகளை விட
   புத்திசாலிகளாக மாறினால் – இது நடக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.