எழுத்தாளர் பாலகுமாரனும் – அரசியல்வாதி வைகோவும்…..!!!

.

.

dash board -ல் கவனித்தபோது, பல வாசகர்கள் ஒரு பழைய விமரிசனம் இடுகையை இப்போது தேடி எடுத்து படித்துக்
கொண்டிருப்பது தெரிந்தது….
நம் நண்பர்கள் மகா புத்திசாலிகளாயிற்றே….
என்ன விஷயம் என்று நானும் விரித்துப் படித்தேன்….

இப்போதெல்லாம் மறதி அதிகம்…
நான் எழுதிய பல விஷயங்கள் என் நினைவில் இல்லை.
இது முன்னரே நினைவிற்கு வந்திருந்தால், நேற்றைய
இடுகையிலேயே சேர்த்திருப்பேன்….

இன்றிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக நான்
சிகரெட் பிடிப்பது பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள்
சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாக எழுதி
விவாதித்திருந்த இடுகை அது.

அதிலிருந்து ஒரு பகுதி கீழே –
திரு வைகோ அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…..

—————————————-

எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்…..
Posted on ஓகஸ்ட் 7, 2012

எனக்கு பாலகுமாரன் அவர்களின் எழுத்து மிகவும்
பிடிக்கும். முக்கிய காரணம் – சமூக அக்கரை
உள்ள எழுத்தாளர் அவர். அவர் எழுத்துக்கள்
எல்லாவற்றிலும், சமூகத்திற்கான செய்தி- message
– எதாவது நிச்சயம் ஊடுருவி இருக்கும்.

இளைஞனாக இருக்கும்போதே படிக்க ஆரம்பித்தது.
கடந்த சுமார் 30-35 ஆண்டுகளில் அவர் எழுதியவற்றில்
கிட்டத்தட்ட 90 % வரை நான் படித்திருக்கிறேன்
என்று சொல்லலாம்.

அண்மைக் காலத்தில் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு
நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

ஒருவழியாக, கொஞ்சம் உடல்நலம் மேம்பட்டு
வீடு திரும்பி இருக்கிறார். நோயின் பாதிப்பிலிருந்து
அவர் இன்னும் விடுபடவில்லை. அவர் விரைவில்
முழு உடல் நலம் பெற வேண்டுகிறேன்.

வெளிவந்தவுடனேயே முதல் காரியமாக –
அவரது நோய்க்கான காரணத்தையும்,
அவர் பட்ட அந்த அவஸ்தையை பற்றியும்,
விவரமாக எழுதி இருக்கிறார்.
அதைப் படிக்க
வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக, அந்த கட்டுரையிலிருந்து
சில பகுதிகளை மட்டும் இங்கு எடுத்துத்தர விரும்புகிறேன்.

கீழே –

———————————–——

என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது,
அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட
சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன. நுரையீரல்கள்
முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை.
வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல
வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல்
அடைப்பும் சேர்ந்து கொண்டு என்னை பழி வாங்கியது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு
நான் அவஸ்தைப்படும்படி ஆயிற்று. முகம் முழுவதும்
மூடி, ஆக்ஸிஜனை வேகமாக செலுத்தினால் தான்
நான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை ஏற்பட்டது.
என்.ஐ.வி.என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு
தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

ப்ராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை
விட்டு சோதனை செய்து – அங்கே அடி நுரையீரலில்
அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக
சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதை வேறு எப்படி சரி செய்வது ? வலியை பொறுத்துக்
கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால்
அவ்விதமே நடந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பிடி
மூச்சு பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவது
என்பது கடினமாக இருந்தால் என்ன செய்வது –
எப்படிச் சமாளிப்பது. தினசரி மரண போராட்டமாக
அது மாறி விட்டது. மூச்சு வேக வேகமாக இழுத்து
இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான்
என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

பத்தொன்பது வயதிலிருந்து குடித்த சிகரெட்டுகள்
அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை
காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மைலாபூர் பூராவும்
சுற்றித்திரிந்த எனக்கு சிறை தண்டனை போல வீட்டில்
அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய
வலி இல்லை. ஜூரம் இல்லை. ஆனால், அந்த ஆக்ஸிஜன்
குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும்.
ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்க முடியாது. பேச முடியாது.
உணவு உண்ண முடியாது. எதுவுமே செய்ய முடியாது.

இது காலில் சங்கிலி கட்டி கையில் பெரிய இரும்பு
குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை.
மரணம் எல்லாருக்கும் வரும். எந்த ரூபத்தில்
வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சுத் திணறி
இதோ.. இதோ .. என்று பயம் காட்டுகின்ற நிலைமை
யாருக்கும் வரக்கூடாது.

உள்ளுக்குள் போன மூச்சை வெளியே விட முடியாமல்,
வெளியே இருக்கின்ற பிராணவாயுவை உள்ளே இழுக்க
முடியாமல், திணறி கதறுகின்ற ஒரு வேதனை யாருக்கும்
வரக்கூடாது.

சிகரெட் இன்று உங்களை ஒன்றும் செய்யாது.
பிற்பாடு ஒரு நாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு
விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

—————————————–

பாலகுமாரன் அவர்கள் சமுதாயத்திற்கு
சொல்லியிருக்கும் செய்தியைச் சொன்னேன்…

அடுத்து வைகோ அவர்களின் குடும்பம் சமுதாயத்திற்கு
செய்து வரும் சேவையையும் சொல்ல வேண்டுமே ….!

திருவாளர் வைகோ அவர்கள் முதல் போட்டு, அவர் மகன்
எடுத்து நடத்தி வரும் ITC ஏஜென்சி விற்பனை செய்யும்
சிகரெட்டுகளின் அணிவகுப்பு குறித்த புகைப்படம் கிடைத்தது.
நண்பர்கள் பார்க்க கீழே –

itc -cigarettes-1

ITC’s major cigarette brands include W.D. & H.O. Wills, Gold Flake Kings, Gold Flake Premium,Gold Flake Super Star, Navy Cut, Insignia, India Kings, Classic (Verve, Menthol, Menthol Rush, Regular, Citric Twist, Mild & Ultra Mild), 555, Silk Cut, Scissors, Capstan, Berkeley, Bristol, Lucky Strike, Players, Flake and Duke & Royal.[30][31]

கி.பி.2000 ஆம் ஆண்டிலிருந்து ஏஜென்சி வைத்திருக்கிறாராம்.
இதுவரை எத்தனை கேன்சர் நோயாளிகள் “தென் காசி”யில்
திரு.வைகோ அவர்களால் – உற்பத்தியானார்களோ …..!

ஏஜென்சியை கைவிடுவது பற்றி வைகோ சொல்லி இருக்கிறார் –
” என் மகன் விற்கவில்லை என்றால், வேறு எவனாவது
ஒருவனுக்கு ஏஜென்சியை கொடுப்பார்கள், அவன் விற்பான் –
தமிழ்நாடு அரசு சிகரெட் விற்பனையை தடை செய்யட்டும்
என்று முதல் ஆளாக நான் அறைகூவல் விடுகிறேன் ”

எப்படி இருக்கிறது வாதம்…?
அரசியல்வாதி – கூடவே வக்கீல் வேறு …
வேறு எப்படிப் பேசுவார்…?
ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வருமானம் -விட்டுக் கொடுப்பாரா ?

” வேறு யார் வேண்டுமானாலும் விற்கட்டும் –
ஆனால், சமூக நலனுக்காக, சாராயக்கடையை மூடுவதற்காக,
அடித்து நொறுக்குவதற்காக – உழைக்கும் சமூகப் போராளி
வைகோ அவர்கள் நிச்சயம் சிகரெட் விற்கக்கூடாது –
அதற்கு வக்காலத்து வாங்கவும் கூடாது ”

தொடர்ந்தால்- அவமானப்பட நேரிடும் என்பதை
உணரட்டும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to எழுத்தாளர் பாலகுமாரனும் – அரசியல்வாதி வைகோவும்…..!!!

 1. Pingback: எழுத்தாளர் பாலகுமாரனும் – அரசியல்வாதி வைகோவும்…..!!! | Classic Tamil

 2. today.and.me சொல்கிறார்:

  Cigarette is ‘Easy accessible product’ by consumers.
  It is available for 1rupee.
  It is available from platform shop to grocery shops.
  No need of hide and seek business.
  No need to marketing / advertising
  No need to seek new customers -The school going children.

  Then how can he abandon the agency?

  ——————–

  மதிமுக ஒருபோதும் ‘கள்’ளை ஆதரிக்காது – வைகோ

  https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11822848_872594706111701_7395656063490080097_n.jpg?oh=828dca1d99b6076f85d17afb3772df77&oe=56520ED9

  Who was the then CM of TN?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட் மீ,

   ப ச் சோ ந் தி களுக்கு எந்த நிறம் தான் சொந்தம்…?
   தேவைக்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டே இருப்பது
   தானே அவற்றின் பிறவிக்குணம்…!

   ஒரு ஆளை பச்சோந்தி என்று புரிந்து கொள்வதிலேயே
   மக்களுக்கு பாதி ஆயுள் முடிந்து விடுகிறதே….!

   அது தான் வருத்தமாக இருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  வை.கோ அவர்களுக்கு ஒரே குறிக்கோள்..தி.மு.கா கூட்டணியில் 20-25 எம்.எல்.ஏ சீட். அதற்காக எந்தவித தரகர் வேலைக்கும் அவர் தயார். தயானிதியின் சன் குழுமத்துக்காக மோடி அவர்களைச் சந்திப்பதற்கும், தி.மு.கா அணிக்கு ஆள் பிடித்துவருவதற்கும் அவர் தயார். மதுவிலக்கு என்ற ஒன்றை அவர் எடுப்பதற்கு ஒரே காரணம், தி.மு.கா கூட்டணி உருவாவதற்குத்தான். மக்களையோ மாணவர்களையோ அவர் பெரிதும் மதித்திருந்தால், சிகரெட் வியாபாரம் செய்வானேன்? இவரையொற்றியே, டி.ஆர்.பாலு மற்றவர்களும், அரசு தடை செய்தால் மது உற்பத்தியை நிறுத்திவிடுவதாகச் சொல்கிறார்கள். வை.கோ மிகவும் தரம் தாழ்ந்துவிட்டார்.

  • today.and.me சொல்கிறார்:

   அரசு தடைசெய்துவிட்டால்- அப்புறம் இவர்கள் நினைத்தாலும் நடத்தமுடியாது. மூடித்தான் ஆகவேண்டும். அப்புறம் அது என்ன அவர்களாக நிறுத்துவது?

 4. P.CHELLAMUTHU சொல்கிறார்:

  வைக்கோவின் கதை “ஊருக்குத்தான் உபதேசம்! உனக்கு இல்லை!!” என்றகதைதான். இவர்கள் அரசு தடை செய்தால் உற்பத்தியை/ஏஜென்ஸியை நிறுத்திவிடுவதாக உறுதி கூறுகிறார்கள்! அதாவது அரசு தடை செய்யாது என்பதில் அவ்வளவு நம்பிக்கை! எல்லாம் அரசியல்தான்! வேறென்ன?

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப செல்லமுத்து,

   அரசு தடைசெய்துவிட்டால்- அப்புறம் இவர்கள் நினைத்ததாலும் நடத்தமுடியாது. மூடித்தான் ஆகவேண்டும். அப்புறம் அது என்ன அவர்களாக நிறுத்துவது?

   அரசு தடைசெய்யாது என்பதை விட இவற்றை தடைசெய்வதில் உள்ள பல்வேறு சிக்கல்கள்.

   ஏன்? இவரே ஒருவேளை முதல்வராக வந்து உட்கார்ந்தாலும் இதைச் செய்யமுடியாது. ஏனென்றால் சிகரெட்கம்பெனிக்காரனும், சாராயஆலை அதிபர்களிடம் இதே வைகோ கைநீட்டி அன்பளிப்பு வாங்கியிருக்கிறாரே….

   வரிசைஎண் 11-காஜா பீடி, வரிசை எண் 14.எம்ப்பீ மதுவகைகளில் என்னென்ன விற்பனை செய்கிறார்கள் என்ற லிஸ்ட் பெரியது…

   https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11825598_1020655544633739_9158554785334670357_n.jpg?oh=2ff3d01351e7d3ff856b21dc8fa953a8&oe=563ED5D3

   எல்லா அரசியல்வியாதிகளுக்கும் இப்படிப்பட்டவர்கள்தான் பணம் சப்ளை செய்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் இவர் மட்டும் ஏன் யோக்கியசிகாமணி போல வேடம்போடவேண்டும்?

   • today.and.me சொல்கிறார்:

    வரிசை எண்.16

    • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

     எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள் இந்தத் தகவல்களை… நாளைக்கு சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலை விபத்து பற்றியோ அல்லது பட்டாசுகளைப் பற்றியோ வைகோ பேசினால், இந்த இடுகை உபயோகமாயிருக்கும். ஸ்டெரிலைட் ஆலைக்கும், தேர்தல் நிதி தராததோ அல்லது தன் உறவினருக்கு கான்டிராக்ட் கொடுக்காததோ காரணமாயிருக்கும். இப்போது ஸ்டெரிலைட் ஆலையைப் பற்றி வைகோ பேசுவதில்லையே.

 5. paamaran சொல்கிறார்:

  இன்றைய செய்தி —- சென்னை: ஈழ தமிழர்களை பற்றி மோடியும், ஜெயலலிதாவும் என்ன பேசினார்கள் என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார் ! { ஆனால் இவர் தற்போது ஈழ தமிழர்களை மறந்து மது பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்துகிறார் !! } மேலும் .. செய்தியாளர்களிடம் பேசிய அவர்,1929ல் தந்தை பெரியார் திராவிட இயக்க பயிற்சி பட்டறையை அப்போது 15 தொண்டர்களை வைத்து தொடங்கினார். தமிழகத்திற்கு இன்றைய சூழலில் திராவிட இயக்க சிந்தனை மிகவும் அவசியமானது என்பதால் மதிமுக பயிற்சி பட்டரை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்றார்…. இந்த பயிற்சி பட்டறையின் ” நோக்கம் ” என்னவாக இருக்க போகிறது ? இயக்க சிந்தனைகளை பரப்பவா அல்லது ” மதுக்கடைகளை ” சூரையாடவா ? வைகோ ஒரு சமுக நலத்தை விரும்பும் மனிதர் அல்ல என்பதும் ..அரசியல் பிழைப்பு நடத்த அரசு இயந்திரத்தை இயங்கவிடாமல் தடுக்கும் ஒரு மனிதர் என்பதும் ….புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று அரசாங்கம் கூறினாலும்.. தனது மகன் செய்யும் இழி தொழிலை சட்டத்தை காரணம் கட்டி மேன்மை படுத்தி வருமானத்தை பார்க்கும் ஒரே மனிதர் வைகோ என்பதுதானே உண்மை ?

 6. paamaran சொல்கிறார்:

  மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில், சென்னை, மதுரை, தஞ்சாñர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் …..! இது 10 — 8 — 2015 இன்றைய செய்தி —-
  மக்கள் நலன் காக்கும் அறப்போர் ?…… என்றால் முதலில் மகனின் சிகரெட் டீலர் கடையை மூடிவிட்டு செய்யுங்கள் ! மது கடையை அடியுங்கள் — உடையுங்கள் — ஆம்பளையா இருந்தால் சுடு பார்க்கலாம் என்று அவேசபடாமல் இருப்பிர்களா ? திரு .வை.கோ. அவர்களே !! அறப்போராட்டம் என்கிறாரே ….? அப்படிஎன்றால் ….?

 7. R.Gopalakrish nan சொல்கிறார்:

  Mr.KM indralla, endrumE namadhu arasiyal mara mattargal.So don’t waste your time and energy.
  Enjoy life with your grand children.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.