கலைஞரிடமிருந்து உடனடியாக தேவை – கருப்பு, சிவப்பு, வெள்ளை – எதாவது ஒரு கலரில் அறிக்கை….!!!

dayanidhimaran2

கலைஞர் கருணாநிதியின் பேரன் –
இளம் வயதிலேயே –
கலைஞரால் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டவர் –
திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் –
திமுக வின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் –
திரு.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் -உறவினர் –
சன் டிவி பங்குதாரராக இருந்த கலைஞரின் மனைவி
விலகியபோது 100 கோடி ரூபாயை –
அதிகாரபூர்வமாக – பங்குப் பணமாக அளித்தவர்…!

இவ்வளவு நெருக்கமானவர், சொந்தமானவர்,
பாசத்திற்குரியவர், நேசத்திற்குரியவர்,
குடும்ப உறுப்பினர் –

கைது செய்யப்பட்டு –
திகார் சிறையில் அடைக்கப்படப் போகிறார்…

(மூன்று நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில்,
முன் ஜாமீன் பெற முடியாவிட்டால்….! )

பொதுவாக, ஆட்சியில் இருப்பவர்களிடம் தான் –
விவரம், கருத்து அறிய –
வெள்ளை அறிக்கை கேட்கப்படுவது வழக்கம்.

எனவே ஆட்சியில் இல்லாத கலைஞர் இந்த அநியாயம் குறித்து – கருப்பு, சிவப்பு அல்லது வேறு எதாவது ஒரு கலரில்
உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டுமென்று
தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்….

ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருக்கு –
இதை எப்படி சமாளிப்பது எப்படி என்று தெரியாதா என்ன …?

அவர் இதை எப்படி சமாளிக்கிறார் என்பதை அறியவே –
மக்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறார்கள்…!!!

————————————-
இன்று மாலை வெளியான தினமணி வலைத்தள செய்தி கீழே –

தயாநிதி மாறனின் முன்ஜாமீன் ரத்து:
3 நாட்களுக்குள் சரணடைய உத்தரவு
By dn, சென்னை
First Published : 10 August 2015 06:45 PM IST

பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள்
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த
முன்ஜாமீனை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்,
அடுத்த 3 நாட்களுக்குள் சிபிஐ முன் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த மனு மீது
சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் வைத்திருந்ததாக
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட
புகார் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ)
விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தில்லியில்
உள்ள தலைமையகத்தில் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு
சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. இதையடுத்து, தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி
தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தார். அதைத் தொடர்ந்து, அவரை ஆறு வார காலத்துக்கு
கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது.

அப்போது, விசாரணைக்கு தயாநிதி மாறன்
ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் சிபிஐ முறையிடலாம் எனவும்
உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தயாநிதி மாறனிடம் கடந்த

ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில்
சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து தயாநிதி மாறனைக் கைது செய்து காவலில்
வைத்து விசாரிக்கும் வாய்ப்பை சிபிஐ பரிசீலித்து வருகிறது.
அதற்கு ஏதுவாக, தயாநிதி மாறனுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து
செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
வைத்தியநாதன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கலைஞரிடமிருந்து உடனடியாக தேவை – கருப்பு, சிவப்பு, வெள்ளை – எதாவது ஒரு கலரில் அறிக்கை….!!!

 1. seshan சொல்கிறார்:

  But KT brothers are very very clever….already met modi and arun for this…..so only drama…. and indian law implemented always for poor people only…..

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  நீங்கள் குறிப்பிடும் நபர் கலைஞருக்கு டப்பிங் வாய்ஸ் (கைதான சமயம்) கொடுத்து மக்களை முட்டாள் ஆக்கியவர். திகாரில் அவரால் டப்பிங் கொடுக்க முடியாது.

 3. rajalkshmi சொல்கிறார்:

  he will never be touched

 4. paamaran சொல்கிறார்:

  அவரிடம் எப்போது ரெடிமேடாக ஒரே கலர் அறிக்கைதான் கைவசம் இருக்குமே ! ” நீதி செத்துவிட்டது —கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு இருப்பது இதற்கு தானே —- பழி வாங்கும் நடவடிக்கை — ஆளும் கட்சியில் அனைவரும் யோக்கியர்களா ? அவர்மீது மற்றும் இவர் மீதெல்லாம் நடவடிக்கை உண்டா ? என்றெல்லாம் விடுவார் பாருங்க — பாஜக வின் மீது அதிக பழி போடுவாரா ?

 5. today.and.me சொல்கிறார்:

  லக்கி கலர் மஞ்சள்?இல் குடுத்தால் வேண்டாம் என்பீர்களா ஜி

  😀 😀

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   கொடுப்பார் என்கிறீர்களா…?
   எந்த கலரில் கொடுத்தாலும் நாம் ஏற்றுக் கொள்ளத்தயார்….!
   ஆனால் -சப்தத்தையே காணோமே….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Pingback: கலைஞரிடமிருந்து உடனடியாக தேவை – கருப்பு, சிவப்பு, வெள்ளை – எதாவது ஒரு கலரில் அறிக்கை….!!! | Classic Tamil

 7. R.Gopalakrish nan சொல்கிறார்:

  What next? Don’t break your heads friends. As usual like every politician.they will get themselves
  admitted in ICU in a multi specialty hospital near their residence for severe health conditions. What for such hospital exists?

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இரண்டில் ஒன்று நடக்கும்.
  1. ‘முன் ஜாமீன்’ கிடைத்தால், அதைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டார் கருணானிதி. பின்பு எக்காலத்திலோ பத்திரிகையாளர்கள் கேட்கும்போது, ‘உச்ச நீதிமன்றமே’ முன்-ஜாமீன் கொடுத்துள்ளது.. சி.பி.ஐ 10 வருடங்களாக ஒன்றும் செய்யாமல் பா.ஜ.கா தூண்டுதலால் நடவடிக்கை எடுத்தது என்பார். இந்த ஸ்டேட்மண்டுக்கு கே பிரதர்ஸ், தனியாக கருணானிதியைக் கவனித்துக்கொள்வார்கள். ‘முன் ஜாமீன்’ கிடைக்கவில்லையென்றால் பா.ஜ.கா மீதும் சி.பி.ஐ மீதும் பழி போடுவார்.
  2. இன்னும் கே பிரதர்ஸ் மீது கடுப்பாக இருந்தால், அன்றைக்கு ‘மது ஒழிப்பு’ போன்ற சென்சேஷனல் அறிக்கை அல்லது போராட்டம் ஆரம்பித்து, இந்தச் செய்தியை நீர்த்துப் போகச் செய்வார்.

  கே. பிரதர்ஸ், ‘க’வுக்கு கொஞ்சம் % பங்குகளைக் கொடுத்துவைத்திருந்தால் எப்போதும் அவர் ஆதரவைப் பெற்றிருக்கலாம். அதை மிஸ் பண்ணிவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

 9. Ganpat சொல்கிறார்:

  நீதியரசர் வைத்தியநாதன் –இந்த பேர் அறிக்கைக்கு நிறையவே ஸ்கோப் கொடுக்குதே! 😉

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.