“மதுவிலக்கு அறிவிப்பு வேண்டவே வேண்டாம் தாயே “

.

.

ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று “மதுவிலக்கு” தொடர்பாக புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடப்போகிறார் என்று செய்திகள் வந்தாலும் வந்தன –

தாங்க முடியவில்லை சாமி – தொல்லை…..!!!

ஆகஸ்ட் 15ந்தேதி மதுவிலக்கை படிப்படியாகவாவது அமலுக்கு
கொண்டு வருவதாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரை
வலியுறுத்தி –

vaiko with sasi perumal body

vaiko with -sasi-perumal-body

vaiko cooling glass cartoon

– ஆகஸ்ட் 13ல் 5 நகரங்களில் அறப்போரட்டம் –
மக்கள் நலன் கூட்டு இயக்கம் சார்பில் புகழ்பெற்ற சிகரெட் வியாபாரி வைகோ அறிவிப்பு …..

vijaykanth

– 13.08.2015 வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை விஜய்காந்த் கட்சி சார்பில் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி வளாகத்திற்குள், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் – விஜய்காந்த் அறிவிப்பு….

evks

– 14.8.2015 அன்று மது விலக்கு கோரி காங்கிரஸ்
தனியே உண்ணாவிரதம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு…..

stalin-mk

– கலைஞர் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று அறிவித்ததால், பயந்து நடுங்கிக் கொண்டு அம்மையார் மதுவிலக்கைப்பற்றி 15.8.2015 அன்று அறிவிப்பு செய்யவிருக்கிறார்….ஸ்டாலின் பேச்சு….

– மிச்சமிருக்கிற உதிரிக் கட்சிகளும், தலைவர்களும் கூட –
இன்றோ, நாளையோ எட்டு மணி உண்ணாவிரதத்தை
அறிவித்து விடு(ம்)வார்கள்…

——————————

முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
தயவுசெய்து வேறு எப்போது வேண்டுமானாலும்
மதுவிலக்கு அறிவிப்பை செய்யுங்கள். ஆனால் 15.8.2015 அன்று
மட்டும் வேண்டாம் – வேண்டவே வேண்டாம் தாயே.

உங்கள் அறிவிப்பு மட்டும் அன்று வெளிவந்து விட்டால் –
இவர்கள் யாரையும் தரையிலேயே பார்க்க முடியாது….
இப்போதே எங்களால் தாங்க முடியவில்லை தாயே….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to “மதுவிலக்கு அறிவிப்பு வேண்டவே வேண்டாம் தாயே “

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  K.M. sir,

  போட்டொஸ் – சூப்பர் செலக்ஷன்.
  எங்கிருந்து தேடி கண்டு பிடித்தீர்கள் சார் ?

  இவர்களெல்லாம் நமக்கு “தலை”களா ?

  நீங்கள் இன்னும் ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கலாம்.
  ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை எல்லாம்
  அரசு ஏற்காது. தலைவர்கள் யாராவது குறைந்தது
  ஒரு மாதமாவது தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் –
  அவர்கள் வேண்டுகோளை அரசு ” பரிசீலிக்கும் ”
  என்று சொல்ல வேண்டும்.

  people are smarter than the leaders –
  they are enjoying the entertainment
  being provided by the so called leaders !

 2. Raghu சொல்கிறார்:

  KM Sir.,

  Don’t worry, another issue is available for all these parties to condemn for next few months.
  So the scene changes from Prohibition to SUN TV cases. All artists are changing their make up now.

  Raghu

 3. ரிஷி சொல்கிறார்:

  மதுவிலக்கோ அல்லது மது குறைப்போ எதையும் முதல்வர் செய்ய மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏதேனும் ஒரு அறிவிப்பு வெளியிட்டாலும் அது பாரிய வேறுபாட்டினை அளிக்கும் என்றும் தோன்றவில்லை.

  ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் செய்யும் காமெடிகள் சற்றும் பொருந்தவில்லை. சந்தானம் ஒரு படத்தில் சொல்வார். கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாது. கலைஞரிலிருந்து கடைக்கோடி ஒரு நபர் கட்சி வரைக்கும் பண்ற அலம்பலஸ் தாங்க முடியல. கோபம் வர்ற மாதிரியே காமெடி பண்ணிட்ருக்காங்க.

 4. ரிஷி சொல்கிறார்:

  இச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தாலும், ஒரு பகிர்விற்காக :
  http://patrikai.com/diffrent-prohibition.html

 5. paamaran சொல்கிறார்:

  மக்களை ஏமாற்றும் ” நடிகர்களின் பட தொகுப்பு ” அபாரம் ! நாளொரு மேடை — பொழுதொரு நடிப்பு — என்பது இதுதானா ? டுடே & மீ என்னுடைய முந்தைய கருத்துக்கு பின்னூட்டம் போடும்போதே ஆகஸ்ட் 15 — சுதந்திர தினத்தில் தமிழக அரசின் நல்ல செய்திக்காக காத்து இருக்கிறேன் — என்று கூறி இருந்தார் !! ஆனால் தற்போது கா.மை அய்யா ” அறிவிப்பு மட்டும் அன்று வெளிவந்து விட்டால் –
  இவர்கள் யாரையும் தரையிலேயே பார்க்க முடியாது….
  இப்போதே எங்களால் தாங்க முடியவில்லை தாயே….!!! ” என்று கூறியுள்ளது முற்றிலும் உண்மை !!! ஜெயலலிதா அவர்களின் ” நெத்தியடி ” வேறு விதமாக —- இவர்கள் மீண்டும் மக்களிடம் நடிக்காமல் இருக்கும்படி இருக்குமா …?

 6. drkgp சொல்கிறார்:

  மரித்துபோன நாகரிக அரசியல் – தங்களது இடுகை சொல்லும் செய்தி
  மரிக்காத மனிதநேயம் – வழியறியாமல் நேர்முக தேர்வுக்காக முசிரியில்
  இருந்து கிண்டி அண்ணாபல்கலைக்கு வந்து தவித்த மாணவியையும் அவரது
  தாயாரையும் உடனே விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி தேர்வில் பங்கு
  பெறச்செய்த அன்பு உள்ளங்கள் கூறும் நற்செய்தி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dr.KGP

   நானே எழுத நினைத்தேன்.
   நீங்கள் இங்கு எழுதியது மிகவும் நல்லதானது.

   அந்த இரக்கமுள்ள மனிதர்கள் மனதார பாராட்டப்பட
   வேண்டியவர்கள். சாதாரண மனிதர்கள் மனதில்
   இன்னமும் ஈரம் இருக்கிறது –
   கருணை இருக்கிறது –
   மனித நேயம் இருக்கிறது.

   அரசியல்வாதிகளால் இன்னும்
   முழு சமுதாயத்தையும் கெடுக்க முடியவில்லை.

   அந்த பெண்ணால் திரும்ப கொடுக்க இயலாது
   என்று தெரிந்திருந்தும், சில நிமிடங்களில்
   12,000 ரூபாய் அளவிற்கு திரட்டி,
   விமான டிக்கெட், பயணம், கோவைக்கு தகவல் –
   அத்தனையும் செய்திருக்கிறார்கள்.

   சம்பந்தப்பட்ட நண்பர்களின் பெயரோ, புகைப்படமோ
   கிடைத்தால் – அவசியம் இங்கே போட்டு கௌரவிக்கலாம்.

   இந்த விஷயத்தை இங்கு நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி டாக்டர்.
   நன்றி டாக்டர்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Pingback: “மதுவிலக்கு அறிவிப்பு வேண்டவே வேண்டாம் தாயே “ | Classic Tamil

 8. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி
  நீங்கள் எழுதியிருப்பதுபோல படிப்படியாக மதுவிலக்கு என்று எந்தக்கட்சியும் கோரியதாகத் தெரியவில்லை.

  இந்த உதிரிக்கட்சிகளின் ஒரே நோக்கம் உடனடியாக எந்த அரசாலும் அமல்படுத்தஇயலாத பூரணமதுவிலக்கு/டாஸ்மாக்க்குக்கு பூட்டு. இதனால் கடந்த நாட்களில் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்புவழக்கின் / பெங்களுரு சிறைவாசம் / ஜாமின் தடை / விடுதலை / முதல்வர் பதவி ஏற்பு / மேல்முறையீடு இவற்றால் மக்களிடையே உண்டாயிருப்பதாக அவர்கள் நம்பும் அனுதாப அலையை அழி்ப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அவலை நினைத்து உரலை இடிக்கிறார்கள் உதிரிகள்.

  ஆனால் இவர்கள் நினைப்பதுபோல தற்போதைய அரசாங்கம் செய்யாது என்பதே என் எண்ணம்.
  1. விற்பனைநேரம் (மாணவர்களை தவிர்க்கும்பொருட்டு) குறைக்கப்படலாம் (12-4), 2. சிசிடிவிக்கள் (கண்காணிப்புக்காக)பொருத்தப்படலாம்,
  3. ஒருவருக்கு இவ்வளவுதான் என்று அளவு நிர்ணயம் செய்யப்படலாம்
  4. 5கிமீ க்கு ஒரு கடை என்று கட்டுப்படுத்தப்படலாம்.
  5. விற்பனைவிலை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

  ஜெ ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை.
  அது உதிரிகளை நிர்வாகம் செய்வதானாலும் சரி, அரசு இயந்திரத்தை நிர்வகிப்பதானாலும் சரி, கட்சியை நிர்வாகம் செய்வதானாலும் சரி.

  இந்த விதமான மாற்றங்கள் வந்தாலே 2016ல் மீண்டும் அதிமுக சிரமமின்றி அரியணை ஏறும்.

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சசி பெருமாளுக்கு ரொம்ப லக். சுதந்திரப் போராட்டத்தில் சம்பாதிக்க முடியாததை அவர் இறந்தபின் இந்த அரசியல் கட்சிகள் கொடுக்கின்றன. இன்னும், அவர் மகளுக்குத் திருமணம், மகனுக்கு வீடு போன்றவைகள்தான் சொல்லப்படவில்லை. (இந்தச் சமயத்தில் கும்பகோணம் தீ விபத்துக்குப்பின் எல்லோரும் அது தருவேன் இது தருவேன் என்று சொன்னதும் அந்த நிகழ்சி அடங்கியதும் ஒன்றும் தரவில்லை என்பதும் நினைவுக்கு வருகிறது). அன்புமணி படிப்புச் செலவு ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னதும்தான் எனக்கு, சசிபெருமாளின் ஜாதி என்ன என்று தெரிந்துகொள்ளத் தோன்றியது.

  மதுவிலக்குக்காகப் போராடும் இந்தத் தலைவர்கள் எல்லாம் மதுவில் மூழ்கி எழுந்தவர்கள்தான். கடை ஆரம்பிக்கும்போதே இவர்களுக்குத் தெரியாதா, மாணவர்களுக்கும் இந்தப் பழக்கம் வரும் என்பது? இவர்கள் வீட்டு நடிகர்கள் படத்தில் எல்லோரும் குடிப்பது சர்வ சாதாரணமாகக் காண்பிக்கப் படவில்லையா?

  இந்த அரசியல் நடிகர்களால், ஜெ. அறிவிப்பு தள்ளிப்போகுமேயன்றி, ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட மதுவிலக்கை ஜெ. அறிவிப்பது உறுதி.

  • today.and.me சொல்கிறார்:

   //அன்புமணி படிப்புச் செலவு ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னதும்தான் எனக்கு, சசிபெருமாளின் ஜாதி என்ன என்று தெரிந்துகொள்ளத் தோன்றியது.// வீரப்பனின் மகள்களின் படிப்புச்செலவை ஏற்றுக்கொண்டபோது அவர் ஜாதி பற்றி அறியத்தோன்றவில்லையா நண்பரே. அதுதான் அங்கே பேஸிக் க்வாலிபிகேஷன். வன்னியர் எழுச்சி சங்கத்தின் அரசியல் கிளைதான் பாமக என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் கிடையாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்லா,

   நன்றி. யார் எந்த காரணங்களை சொன்னாலும் சரி –
   தமிழ்நாட்டில் -தேர்தலுக்கு முன்னால், மதுவிலக்கு
   அமலுக்கு வரும் என்பதில் எனக்கு எந்தவித
   சந்தேகமும் இல்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.