சுவாதியும், தாயும் – நல்ல மனங்கள் வாழ்க …..

manitha neyam

சென்னை போன்ற மாபெரும் நகரங்களில் (நரகங்களில்….? ), இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கிற மனிதர்களின் மத்தியில் இரக்கமும் கருணையும் இன்னமும் உயிருடன் இருப்பதை காண்கையில் –

நல்ல உள்ளங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன
என்பதை நடைமுறையில் பார்க்கும்போது – மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது.

நேற்றைய தினம் இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் டாக்டர் கேஜிபி எழுதியிருந்ததற்கு பதில் அளிக்கையில் இதைத்தான் வியந்து எழுதி இருந்தேன். முழு விவரங்கள் தெரிந்தால் இந்த தளத்தில் எழுதி அவர்களை கௌரவப்படுத்தலாம் என்றும் எழுதி இருந்தேன்.

நாம் எழுதி தான் பிரபலபடுத்த வேண்டும் என்கிற அவசியமே இன்றி, இன்று அனைத்து செய்தித்தாள்களும் இந்த செய்தியை பிரசுரம் செய்திருக்கின்றன. செய்தியை தனியே கீழே தந்திருக்கிறேன்.

அநாதராவாகத் தவித்த இந்த கிராமத்து பெண்களுக்கு (தாயும், மகளும்) தக்க சமயத்தில் உதவி, அவசர உணர்வோடு செயல்பட்ட அந்த நல்ல மனிதர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் இந்த தளத்தின் மூலம்
தெரிவித்துக் கொள்வோம்.

இத்தகைய செயல்கள், பரந்த அளவில், வெளிப்படையாக
பாராட்டப்படுவது, மேலும் பலரை இத்தகைய பணிகளில் ஈடுபடத்
தூண்டும்.

“ஊருணி நீர் நிறைந்தற்றே
உலகு அவாம் பேரறிவாளன் திரு”

என்றார் வள்ளுவர். பணம் பெரிது அல்ல.
இரக்கமும், கருணையும், உதவி செய்ய வேண்டும் என்கிற மனமும் தான் முக்கியம். நல்ல உள்ளங்களிடையே இருக்கும் –
தொடர்புகளும், தொடர்பு சாதனங்களும், எளிய மக்களுக்கு
எந்த விதத்தில் உதவ முடியும் என்பதற்கு இது மிகச்சிறந்த சான்று…

available photographs of those who helped –

saravanan friend

—————————————————————-

(http://www.dinamalar.com/news_detail.asp?id=1315380)

11ஆக
2015
00:33
பதிவு செய்த நாள்
ஆக 10,2015 23:40

கோவைக்கு பதில், சென்னை அண்ணா பல்கலைக்கு வந்த கிராமத்து மாணவிக்கு,

நடைப்பயிற்சிக் குழுவினர் மனிதாபிமான முறையில் உதவி செய்ததால்,

விமானத்தில் சென்று, வேளாண் படிப்பிற்கான, ‘சீட்’ பெற்றார்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர், தங்கப்பொண்ணு. பெண் விவசாயியான

இவர், பசு மாடுகள் வளர்த்து, அதன் பாலை விற்று குடும்பம் நடத்துகிறார். இவரது

மகள் சுவாதி, 18. பிளஸ் 2- அறிவியல் பிரிவில் படித்து, பொதுத் தேர்வில், 1,017

மதிப்பெண் பெற்றார். மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு இடம்

கிடைக்காததால், கோவை வேளாண் பல்கலையில், ‘பயோ டெக்’ படிப்புக்கு

விண்ணப்பித்தார். அவர், அந்த பல்கலை வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில்,

கடந்த, 8ம் தேதி காலை, 8:30 மணிக்கு நடந்த கலந்தாய்வில் பங்கேற்க, 8:00 மணிக்கு

ஆஜராகும்படி, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., வந்தது; தபாலில் அழைப்பு

கடிதமும் வந்தது.

அண்ணா அரங்கு, அண்ணா பல்கலை?

ஆனால், அவசரத்தில், ‘அண்ணா அரங்கு’ என்பதை, ‘அண்ணா பல்கலை’ என, புரிந்து

கொண்ட மாணவி சுவாதி, தாயுடன், சனிக்கிழமை காலை, சென்னை அண்ணா

பல்கலைக்கு வந்துவிட்டார். ஆனால், அங்கு கலந்தாய்வு நடப்பதற்கான எந்த

அறிகுறியும் இல்லை; பல்கலை வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.காந்தி

மண்டபம் எதிரில் உள்ள பல்கலையின் மெயின் கேட்டில் இருந்த காவலாளியிடம்

சுவாதியும், அவரது தாயும் விசாரித்தனர். இன்ஜி., கல்லுாரிகளுக்கான கலந்தாய்வு

முடிந்துவிட்டதை அவர் தெரிவித்தார்.இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல்

சுவாதி தடுமாறிய போது, அண்ணா பல்கலை வளாகத்தில், ‘ட்வாக்கர்ஸ்’

நடைப்பயிற்சி குழுவைச் சேர்ந்த, ‘டெக் மகேந்திரா’ நிறுவன அதிகாரியும், அண்ணா

பல்கலையின் முன்னாள் மாணவருமான சரவணன் வந்தார்.

அப்போது நடந்த நிகழ்வுகள் குறித்து சரவணன் கூறியதாவது:நான், சென்னை,

கோட்டூர்புரத்தில் வசிக்கிறேன். கடந்த, 8ம் தேதி காலை, 6:40 மணிக்கு, நான்,

அண்ணா பல்கலை மெயின் கேட் அருகே வந்த போது, சுவாதியும் அவரது தாயும்

காவலாளியிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.அங்கு வந்த என்னை அணுகி,

கலந்தாய்வு குறித்து கூறினர். நான் அந்த மாணவியின் அழைப்புக் கடிதத்தை வாங்கி

பார்த்த போது, அதில், தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பெயர்
ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு, ‘கவுன்சிலிங் நேரம்: 8:30 மணி, இடம்: அண்ணா

அரங்கம்’ என, இருந்தது. மேலும் கோவையிலுள்ள போன் எண்

குறிப்பிடப்பட்டிருந்தது; வேறு முகவரி எதுவும் இல்லை.அப்போது, நடைப்பயிற்சிக்

குழுவைச் சேர்ந்த, எஸ்.பரமசிவம் மற்றும் ஜே.ஜெய்சங்கர் ஆகியோர் அங்கு

வந்தனர். அவர்களில், ஜெய்சங்கர், அண்ணா பல்கலை அதிகாரிகளை உடனடியாக

அணுகினார். வேளாண் பல்கலைக்கு சென்னையில் கலந்தாய்வு இல்லை;

கோவையில் தான் நடக்கிறது என்பதை உறுதி செய்தார்.இதையடுத்து, மாணவியை

எப்படியும் கோவைக்கு அனுப்ப முடிவு செய்தோம். முதலில், சுவாதி மற்றும் அவரது

தாய், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் இருப்பதை உறுதி செய்ய

புகைப்படம் எடுத்தோம். ஜெய்சங்கர் தன் நண்பர் மூலம் கோவை பல்கலை

பதிவாளருக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் அப்படத்தை அனுப்பி வைத்து விவரத்தைக்

கூறினார். மாணவியின் பெயர் மற்றும் பிற விவரங்களை தெரிவித்தோம்.

ரூ.9,880 விமான கட்டணம்:

பின், இருவரையும் காலை உணவு சாப்பிட வைத்தோம். அவர்களை, கோவைக்கு

விமானத்தில் அனுப்ப முடிவானது. நண்பர் பரமசிவம் மூலம் விமான டிக்கெட் பதிவு

செய்தோம். சுவாதிக்கும், அவரது தாய்க்கும், ‘இன்டிகோ’ நிறுவன விமானத்தில்

செல்ல, 9,880 ரூபாய் டிக்கெட் கட்டணம். அந்த தொகையை எங்களுக்குள் பகிர்ந்து

கொள்ளலாம் என்று பேசி, டிக்கெட் எடுத்து கார் மூலம் சென்னை விமான

நிலையத்துக்கு அனுப்பினோம். அங்கு மாணவியும், அவரது தாயும் விமானத்தில்

ஏற தேவையான உதவிகளை, ‘இண்டிகோ’ நிறுவன ஊழியர்கள் செய்து கொடுத்தனர்.

காலை, 10:05 மணிக்கு விமானம் புறப்பட்டது. 11:35 மணிக்கு, கோவை விமான

நிலையத்தில் இருவரும் இறங்கினர். அங்கு, இருவரையும் அழைத்துச் செல்ல, பெயர்

பலகையுடன் நண்பர் ஒருவர் காத்திருந்தார். ஆனால், பதற்றத்தில் இருந்த மாணவி,

கோவை விமான நிலையத்தில் இறங்கி, வெளியே வந்து எனக்கு போன் செய்தார்.

இதையடுத்து மீண்டும் காலதாமதம் ஆகக் கூடாது என்பதற்காக, இருவரும் ஆட்டோ

மூலம், நண்பகல், 12:20 மணிக்கு, வேளாண் பல்கலைக்கு சென்றனர். அதற்குள்

நாங்கள், பல்கலையிலும் பேசி, மாணவிக்கான கலந்தாய்வு நடைமுறைகளை

முடித்து வைத்தோம்.அந்த மாணவியை, பல்கலை பதிவாளரை நேரில் சந்திக்க

வைத்து, 1:10 மணிக்கு, ‘பயோ டெக்’ படிப்பிற்கான இடம் வழங்கப்பட்டது. போன்

மூலமாகவே நாங்கள் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி, இடம் கிடைத்ததை உறுதி

செய்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சலுகை காட்டவில்லை!

மாணவிக்கு சட்டத்தை மீறி எந்த சலுகையும் தரவில்லை.அவர் காலை, 8:30

மணிக்கு வந்து, கலந்தாய்வு விண்ணப்பத்தை நிரப்பி, சுய விவரம் பதிவு செய்ய

வேண்டும். அதை சென்னையில் இருந்து அனுப்பி விட்டதால், அவர் வருவதற்குள்

அலுவலக பணி முடித்து வைக்கப்பட்டது. மாணவி வரும்போதும் கலந்தாய்வு நடந்து

கொண்டிருந்ததால், அவருக்கு அப்போதைய நிலைமைக்கு ஏற்ப இடம் அளித்தோம்
சி.ஆர்.அனந்தகுமார், கோவை வேளாண் பல்கலை பதிவாளர்

முகவரி தவறியது எப்படி?

மாணவி சுவாதி திருச்சியில் உள்ள வேளாண் பல்கலை
கல்லுாரியில் உள்ள உதவி மையம் மூலமே, ‘ஆன் – லைனில்’ விண்ணப்பித்துள்ளார்.

கோவை பல்கலையுடன் அவருக்கு நேரடி தொடர்பு ஏதும் இல்லை. இதனால்,

கலந்தாய்வு எங்கு நடக்கிறது என்ற விவரத்தை முழுமையாக அறிந்து

கொள்ளவில்லை. மேலும், கலந்தாய்வுக்கு புறப்படும்போது, சுவாதியின் தாய்

தங்கப்பொண்ணு, தன் உறவினரிடம் கேட்டு, கோவையில் தான் கலந்தாய்வு

என்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், சுவாதியின் தோழி ஒருவர், ‘சென்னையில்

தான் அண்ணா அரங்கு உள்ளது; அங்கு தான் கலந்தாய்வு நடக்கிறது’ என்று கூறி

குழப்பி விட்டதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

6 Responses to சுவாதியும், தாயும் – நல்ல மனங்கள் வாழ்க …..

 1. sundar சொல்கிறார்:

  Hats off to all who helped.
  Pity is, a student who scored 1100+ couldn’t recognize/understand geography of TamilNadu.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல செய்தி, நல்ல மக்கள். இதில் மாணவ/மாணவிகளுக்கு அனுப்பப்படும் கடிதம் அல்லது மின்னஞ்சல் முதலியவற்றை தமிழிலும் அனுப்ப வேண்டும். பெரு நகரங்களை நோக்கி செல்லும் கிராமத்து மாணவர்களுக்கு இது மிகவும் அவசியம்.

 3. Pingback: சுவாதியும், தாயும் – நல்ல மனங்கள் வாழ்க ….. | Classic Tamil

 4. Karthik R சொல்கிறார்:

  Humanity lives. Happy to see such helping hands exist. Our newspapers should put such positive behaviors in front page.

  Thanks for sharing this KM sir.

 5. paamaran சொல்கிறார்:

  // நல்ல மனங்கள் வாழ்க //……. நூறாண்டு காலம் வாழ்க — நோய் – நொடியில்லாமல் வாழ்க என்று பாட தோன்றுகிறது …! ஆனாலும் சில தீய மனதுகளின் செயலை பார்த்தால் அய்யா அவர்களுக்கு என்ன தோன்றுகிறது …? :— ‘டாஸ்மாக்’ நிறுவனம், கடந்த நிதியாண்டில், 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மது வகைகளை கொள்முதல் செய்துள்ளது. இதில், தி.மு.க., ஆதரவு முக்கிய நபர்களின், மதுபான ஆலைகளில் இருந்து மட்டும், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள், ‘சப்ளை’யானது அம்பலமாகி உள்ளது. அதாவது, டாஸ்மாக்கில் சரிபாதிக்கு, இவர்களின் சரக்கு தான் விற்பனையாகி உள்ளது….! இது இன்றைய ” தினமலர் ” செய்தி …. இப்படியிருக்க தி.மு.க. தலைவரின் போராட்டம்……? மற்றும் அவரது கட்சியை சேர்ந்த டி. ஆர். பாலு போன்றவர்கள் எங்களுக்கு மதுபான தயாரிப்பு ஆலைகளே இல்லை என்று கூறுவது எப்படி இருக்கிறது …..??

 6. srinivasanmurugesan சொல்கிறார்:

  நல்ல மனங்கள் வாழ்க …. நூறாண்டு காலம் வாழ்க — நோய் – நொடியில்லாமல் வாழ்க

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.