விகடன் குழுமத்தை கலைஞர் விலைக்கு வாங்கி விட்டாரா …?

vikatan image

இன்று கலைஞர் வெளியிட்டிருக்கும்
வழக்கமான ஸ்டைலில் –
அவரது கேள்வி-பதில் அறிக்கையில் –

மூன்று இடங்களில் விகடனை மேற்கோள் காட்டி,
பாராட்டு தெரிவித்திருக்கிறார்….

—————————————-

1) // இந்த வாரம், விகடன் எழுதிய தலையங்கத்தின் தொடக்கத்திலேயே “கன்னியாகுமரி மாவட்டம் …..
…….. ……
ஆணவ மௌனம் காக்கிறது தமிழ்நாடு அரசு”
என்றெல்லாம் எழுதியுள்ளது.//

2) // இதுகுறித்து இன்று வெளிவந்துள்ள
விகடன் தலையங்கத்தில்,
“காங்கிரஸ் ஆட்சியில்
எங்கெங்கும் ஊழல்கள்,” …..
……… ……..
என்றெல்லாம் எழுதியிருப்பதில் இருந்தே மத்திய அரசு
எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.//

3) // “கிணற்றில் போட்ட கல்லாக கல்வித் திட்டங்கள்”
என்ற தலைப்பில் “ஜூனியர் விகடன்”….
…… ….. ….
என்பதுதான் கல்வியாளர் களின் கவலை”
என்றும் எழுதியுள்ளது.//

——————————————–

தன்னுடைய ஒரே நாள் கேள்வி-பதில் அறிக்கையில்
மூன்று இடங்களில் கலைஞர் – விகடனை மேற்கோள் காட்டி
பாராட்டியிருப்பதை பார்க்கும்போது –

– விகடன் குழுமம் கைமாறி விட்டதோ என்று
சந்தேகம் வரவில்லை …?

கைமாறல் வெளியில் தெரியாமலிருக்க காரணம் –

திமுகவின் குடும்ப இதழ் என்கிற விஷயம் வெளியில்
தெரியாமல் இருந்தால் –
அதில் எழுதப்படும் விஷயங்களுக்கு மக்களிடையே
கூடுதல் அழுத்தம் இருக்கும் என்பதாக இருக்கலாம்…..

பின் குறிப்பு –
– நண்பர்கள் யாருக்காவது இது குறித்த மேல் விவரங்கள்
எதாவது தெரிந்திருந்தால் – பின்னூட்டங்களில் தெரிவிக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to விகடன் குழுமத்தை கலைஞர் விலைக்கு வாங்கி விட்டாரா …?

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இது கொஞ்ச நாட்கள் முன்னதாகவே கூட நடந்திருக்கலாம்.
  சில மாதங்களாகவே ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்
  பத்திரிகைகள் தொடர்ந்து ஜெயலலிதா அவர்களையும்,
  தமிழக அரசையும் கடுமையாக தாக்கி எழுதி வருவதை
  பார்த்தால் இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  சில மாதங்களுக்கு முன்னர் வைகோ கூட விகடன் குழுமத்தில்
  மாறன் சகோதரர்கள் முதலீடு செய்திருப்பதாகக் கூறி இருந்தார்.
  நன்றி.

 2. thiruvengadam சொல்கிறார்:

  MK is usual to take points which are supportive, irresective of the source. If Ur assumption is true, it can be checked with authorities , since this may not be a small amount transfer.

  • Ramachandran. R. சொல்கிறார்:

   buying the orgn. is different than investing considerable amount
   in it by buying shares.
   it is possible that some shares which would allow gaining
   the control of the orgn. could have been bought.
   many such transactions do not come out openly
   unless the parties
   concerned decide to let out.

 3. எழில் சொல்கிறார்:

  பல மாதங்களுக்கு முன் ‘சவுக்கு’ தளத்தில் விகடன் குழுமத்தின் கணிசமான பங்குகளை ‘கேடி’ சகோதரர்களின் வாங்கி விட்டதாக படித்த ஞாபகம்.

 4. Pingback: விகடன் குழுமத்தை கலைஞர் விலைக்கு வாங்கி விட்டாரா …? | Classic Tamil

 5. raju சொல்கிறார்:

  so far i read your blog, jayalalitha ungalai vaangi vittaraa?

 6. raju சொல்கிறார்:

  so … other than vikatan all bought by jayalalitha?

  • today.and.me சொல்கிறார்:

   //other than vikatan all //
   விகடன் மட்டும்தான் கொஞ்சநாள் நடுநிலை மாதிரி .. கவனிக்கவும், மாதிரி எழுதிக்கொண்டிருந்தது. அதையும் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை கணக்காக முக மூன்றுமுறை எடுத்துச்சொல்லியிருப்பதால் அதுவும் அங்கேதான் இருக்கிறது என்று தெரிகிறது…

   // by jayalalitha?-//
   என்னுடைய கருத்து: ஜெயலலிதாவுக்கு பத்திரிகைகளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை, ஒருவேளை அவர் அவற்றை மதிப்பதில்லை என்பதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால், எல்லாப்பத்திரிகைகளுமே தொலைக்காட்சிகளுமே ஜெ-வை எப்படிவேண்டுமானாலும் எழுதும் சுதந்திரத்தோடுதான் இயங்குகின்றன. அது முக ஆட்சியில் நிச்சயமாகக் கிடையாது. தினசரி இதழ்களைப் படித்தீர்களானாலேயே இது தெரிந்திருக்கும்.

   அச்சு இதழ்களையும் படிப்பதில்லை, தொலைக்காட்சி ஊடகங்களையும் பார்ப்பதில்லை, வெறும் விமரிசனம் தளத்தை மட்டும் படித்துவிட்டு கருத்து சொல்லியிருக்கிறீர்கள் என்றால் …“

   அதையும் சரியாகப் படிக்கவில்லை என்றுதான் சொல்லுவேன். ஜெ-யையும் இங்கு விமரிசித்திருக்கிறோம்.

   • mannimaithan சொல்கிறார்:

    intha 4 aandu porgala aachiyai pattriya ungallin oru vimarisanathai sutti kattungal parpom?

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப மண்ணின்மைந்தன்,

     உங்கள் தளத்தில் உங்கள் கருத்தை எழுதுங்கள்.படிக்கக் காத்திருக்கிறேன் நண்பரே.

     விமரிசனம் காவிரிமைந்தன் தளம், அவர் எழுத்து-அவர் உரிமை- அவருடைய பிரையாரிட்டியில் நீங்களோ நானோ தலையிடமுடியாது. இந்த அடிப்படையைக்கூட புரிந்துகொள்ளமுடியவில்லையா?

     உங்கள் தளத்தில் நீங்கள் எழுதப்போவதை நானோ அவரோ கையைப்பிடித்து நிறுத்தமுடியாது… எடுங்கள் உங்கள் பேனாவை. விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    • Ramachandran. R. சொல்கிறார்:

     திரு. மன்னி மைதான்,

     (ஆங்கிலத்தில் உங்கள் பெயரை உச்சரித்தால் இப்படித்தான்
     இருக்கிறது)

     மன்னி மைதான், நீங்கள் விரும்புவது போல் காவிரிமைந்தன்
     எழுத வேண்டும் என்று என்ன கட்டாயம் ? அவருக்கு
     எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று தோன்றுகிறதொ
     அதைத்தான் அவர் எழுதுவார். நீங்கள் யார் அவரை இப்படித்தான்
     எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்த ? 60 வயது இளைஞரணித்
     தலைவரிடமிருந்து வருகிறீர்களா ? அவர் எதை எழுதினாலும்,
     அந்த எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறார் – ஆதாரபூர்வமான
     கருத்துக்களைத்தான் கூறுகிறார். எங்களைப் போல் பலரும் அவரது
     எழுத்தில் உள்ள நியாயங்களை ஏற்கிறோம். அதிக மக்கள்
     இதை விரும்புவதால் தான் பல மாதங்களாக விமரிசனம் தளம்
     தமிழ்மணத்திலும், வொர்டுபிரஸ்ஸிலும் முதன்மை பெற்றிருக்கிறது.

     திரு டுடேஅன்மீ சொல்லியிருப்பது போல், உங்கள் விருப்பப்படி
     எதாவது எழுத வேண்டுமானால், அதை நீங்களே உங்கள் தளத்தில்
     எழுதிக்கொள்ளுங்கள். விலாசத்தை கொடுங்கள் – வந்து படிக்கிறோம்>

 7. today.and.me சொல்கிறார்:

  KM ji,
  இது என்ன சொல்கிறது?
  //http://hotmachihot.blogspot.in/2006/05/vaiko-alleges-that-sun-tv-is-trying-to.html//

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் டுடேஅண்ட்மீ,

    Very Interesting …..
    எங்கிருந்து தான் இதையெல்லாம் பிடிக்கிறீர்களோ ….!

    please keep it up…!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • Rajalakshmi சொல்கிறார்:

    For more than five years now vikatan face has turned to ,be a leftist and just the oppsoite of what it used to be.My inner mind was telling me to stop paying attention to this meaningless pathrika.Buying vikatan and reading it before friday night was an unmovable idea with me.But for the past 6 months we stopped
    buying all vikatan publications.Taken for granted that all the readers are with them they are poisoning the society.We feel as if an elderly member of the family has passed away
    and avoiding that magazine.We also request our relatives to follow us.

 8. gopalasamy சொல்கிறார்:

  கடந்த 58 வருடங்களாக விகடன் படித்து வந்தேன். சில வாரங்களாக விகடன் குழும பத்திரிக்கைகளை படிப்பதை நிறுத்தி விட்டேன். முரசொளியே நானும் அளவிற்கு கட்டுரைகள் உள்ளது. பல நேரங்களில் திவீரவாதிகளுக்கு ஆதரவு. காரணம் ஆசிரியர் குழுவா அல்லது முதலாளி மாற்றமா தெரியவில்லை

  • today.and.me சொல்கிறார்:

   முதலாளி மாறினால் ஆசிரியர் குழுவும் மாறத்தானே செய்யும். அதே குழு என்றாலும் ரொட்டியைப்போடும் முதலாளிக்கு ஏற்றமாதிரித்தானே குலைத்தாகவேண்டும் நாய்.

 9. Shyam Sundar K.S சொல்கிறார்:

  I had this doubt from past six month, now I got clarified

 10. nithya சொல்கிறார்:

  அன்பின் ஐயா அவர்களுக்கு,

  இந்த மாதிரி பதிவை நான் முன்னரே எதிர் பார்த்தேன்!

  இதே போல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெ ஜெ புகழ் பாடும் குமுதத்தை, ரேபோர்டரை துக்ளக்கை ஜெ ஜெ வாங்கி விட்டார் என்று சொல்லலாமா?

  எந்த ஒரு பத்திரிக்கையும் ஆளும் கட்சியின் தவறுகளை தான் அதிகமாக சுட்டி காட்டுவார்கள் ..நீங்கள் மோடி ஆள்வதால் தான் அதை அதிகமாக அதன் செயல் பாடுகளை சொல்கிறீர்கள் .. அது தான் நியதி ..

  2006ல் சர்வேயில் DMK கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக விகடன் எழுதிய பொழுது வைகோ அவ்வாறு குற்றச்சாட்டு கூறினார் பிறகு அவரே அதை தவறு என்று கூறினார்

  சவுக்கு இணைய தளமே 2 G ஊழலில் கனி மொழி மற்றும் ஜாபர் செட் பேசிய ஒலி நாடவை வெளியிட்டது இன்னும் பல கட்டுரைகள் KD சகோதரர்களை பற்றி எழுதுகிறது

  அவர்கள் ஜெ ஜெயக்கு எதிராக எழுதினால் திமுக ஆதரவாளர்களா ஜெ ஜெ க்கு எதிரானவர்களா

  நீங்கள் அதானிய பற்றி எழுதினீர்கள், தமிழ் நாடு அரசு அதானியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பற்றியோ ..தமிழ் நாட்டில் நடந்து வரும் மோசமான நிர்வாகத்தை பற்றியோ எழுதினீர்களா என்றால் எனக்கு நினைவில்லை — இதை சொன்னால் நான் உங்களை dictate பண்ண கூடாது என்று நண்பர்கள் திட்டுவார்கள் என்னை திமுக சொம்பு என்று.. நீங்களும் எரியிற கொள்ளியில் ஜெ ஜெ தான் சிறந்தவர் என்பீர்கள் …ஆனால் நீங்கள் உங்கள் சிறந்த எழுதுத்துக்கள் மூலம் பொது கருத்தை உருவாக்க வேண்டும் ஒரு நடுநிலை வாதியாக இருக்க வேண்டும் என்ற ஆவலினால் இதை எழுதுகிறேன் தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் நித்யா,

   உங்கள் நோக்கம் என்ன என்பது எனக்கு நன்றாகவே
   புரிகிறது…….

   குமுதம், ரிப்போர்ட்டர் இதழ்களின்
   சொந்தக்காரர் தன்னை வெளிப்படையாகவே
   ஜெ. அவர்களின் ஆதரவாளர் என்று காட்டிக் கொள்பவர்.
   கலைஞர் முதல்வராக இருந்தபோது –
   குமுதம் குழுமத்தை அவரிடமிருந்து கட்டை பஞ்சாயத்து
   செய்து பிடுங்க முயற்சி செய்ததால் –
   இந்த நிலை ஏற்பட்டது…

   துக்ளக் பற்றியும், ஆசிரியர் சோ அவர்களின் நிலை பற்றியும்
   நான் சொல்லி யாருக்கும் புதிதாகத் தெரிய வேண்டிய
   அவசியமே இல்லை.

   ஆக உங்கள் நோக்கம் – நான் கலைஞர் அல்லது திமுகவுக்கு
   எதிராக எதுவும் எழுதக்கூடாது.
   ஜெ. அவர்களுக்கு எதிராக விமரிசனம் செய்தால் மிக்க
   மகிழ்ச்சி அடைவீர்கள்….. சரி தானே …?

   நடுநிலை என்பது நல்லவர்களையும்,
   கெட்டவர்களையும் – ஒரே நிலையில் வைத்து பார்ப்பது அல்ல.

   கலைஞர் – தமிழருக்கும், தமிழ் நாட்டிற்கும் பச்சை துரோகம்
   புரிந்தவர். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும்போது
   தன் சுயநலன் கருதி மௌனம் காத்தவர்.
   கடற்கரையில் 4 மணிநேர உண்ணாவிரத நாடகம் ஆடியவர்..
   இந்த நாட்டின் வளம் அனைத்தையும், தன் குடும்பத்தினர்
   சுரண்டிச் சேர்க்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்.
   வேறு எவருடனும் ஒப்பிடவே முடியாத அளவிற்கு
   தமிழகத்திற்கும், தமிழருக்கும் துரோகம் புரிந்த இவரை
   நடுநிலையில் வைத்துப் பார்க்க என் மனசாட்சி இடம் கொடுக்காது.

   மற்ற அனைவரையும் எடை போட்டு பார்க்கையில்,
   ஜெ. அவர்கள் நிச்சயம் பல மடங்கு சிறந்தவர் என்பது
   என் கருத்து.

   இதைச் சொல்ல எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
   இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை.

   நான் நடுநிலையானவனா இல்லையா என்பதை விட
   என் எழுத்தில் உண்மையும், சத்தியமும் இருக்கிறதா இல்லையா
   என்பதே முக்கியம்.
   அதை இந்த வலைத்தளத்து நண்பர்கள் அறிவார்கள்.
   யாரை ஆதரித்தாலும், யாரை எதிர்த்தாலும் –
   என் மனசாட்சிக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன்.
   அது போதும் எனக்கு.

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஐயா! வெகு காலம் கழித்து மீண்டும் உங்கள் வலைப்பூவுக்கு வருகிறேன். இப்படி ஒரு பதிவைத் தங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை.

  மேலே நித்யா அவர்கள் கூறுவதுதான் என் கருத்தும். நடுநிலை இதழ்கள் பெரும்பாலும் ஆட்சியாளர்களைத்தான் தாக்கும். எதிர்க்கட்சியினர் அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அவ்வளவுதானே? அப்படித்தானே இதைப் பார்க்க வேண்டும்? அதுதானே இயல்பான பார்வையாக இருக்க முடியும்? மாறாக, ஒரே நாளில் மூன்று முறை கருணாநிதி விகடனைப் பாராட்டிவிட்டதாலேயே அது அவருடையது எனக் கருதலாமா?

  இதே விகடன், தி.மு.க ஆட்சியின்பொழுது, இனப்படுகொலை நடந்த அந்தக் கொடூரக் காலக்கட்டத்தில் கருணாநிதியின் இரண்டக நாடகங்களையும், போலி உண்ணாநிலைப் போராட்டத்தையும் இன்ன பிற பச்சை துரோகங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகக் கிழி கிழியெனக் கிழிக்கவில்லையா? சொல்லப் போனால், விகடன்தான் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்தே அதைப் பற்றித் தொடர்ந்து கண்டித்து வந்தது. அது நடந்து முடிந்த பிறகும் நடிகர்கள், தலைவர்கள், பெரும்புள்ளிகள் என யாரை நேர்காணல் செய்தாலும் தவறாமல் தமிழினப் படுகொலை பற்றிய கருத்துக்களையும் கேட்டு வாங்கி வெளியிட்டது. இவற்றையெல்லாம் தாங்கள் மறந்து விட்டீர்களா?!

  அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு புரிந்து வரும் ஒரு நடுநிலை ஊடகத்தை ஒரே ஒரு நிகழ்வை வைத்து ஐயப்பாட்டிற்கு ஆளாக்கலாமா? அது முறையா? மற்றபடி, வை.கோ கூறிய அந்தப் பழைய கருத்துக்கு இத்தனை காலம் கழித்து, அதுவும் இனப்படுகொலை போன்ற அவ்வளவு தலைபோகும் தறுவாய் ஒன்றில் அந்த இதழ் எப்படியெல்லாம் சேவையாற்றியது என்பதையெல்லாம் பார்த்த பிறகு, அதற்கு முன்பு வெளியிட்ட அந்தக் கருத்துக்கு இப்பொழுது எந்த மதிப்பும் இல்லை என்பதே என் கருத்து.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.