” தயாநிதி மாறன் வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது ” – கலைஞரின் வெள்ளை அறிக்கை …..

kd+kk

கலைஞர் அவர்கள் – தன் பேரனின் வழக்கு குறித்து –
கருப்பு, சிவப்பு, வெள்ளை – அல்லது எதாவது ஒரு கலரில்
அறிக்கை வெளியிட வேண்டுமென்று மன்றாடி
கேட்டுக் கொண்டிருந்தோம்.

( விமரிசனம் இடுகை – தேதி ஆகஸ்ட் 10, 2015 ) )

நேற்று கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை மூலம்
இதை நிறைவேற்றி விட்டார்….
உச்சநீதிமன்றத்தின் ” அதிரடி ” தீர்ப்பின் மூலம் ( ? )
தயாநிதி மாறன் ” கேபிள் திருட்டு வழக்கு”
மன்னிக்கவும்,
“திருட்டு கேபிள் வழக்கு ”
முடிவிற்கு வந்து விட்டதாகக் கூறி இருக்கிறார்.

கீழே – கலைஞரின் கேள்வி-பதில் ஸ்டேட்மெண்ட்

————————–

கேள்வி :- மத்திய முன்னாள் அமைச்சர், தயாநிதி மாறன் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அதிரடித் தீர்ப்பு பற்றி?

கலைஞர் :- நீங்களே ( யாரு !! ?? ) அதிரடித் தீர்ப்பு என்றுதானே
கேட்டிருக்கிறீர்கள்…..?

தயாநிதி மாறன் மீதான வழக்கு பற்றிய விவரங்களைத்
தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் எந்த அளவுக்குக் கடுமையான செய்தியாக வெளியிட்டன என்பதும், அது ஏன் என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கே புரியும்.

தி.மு. கழகம் இந்தப் பிரச்சினையில் விலகியே இருக்கிறது என்று யாரோ தி.மு. கழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூறியதாக எழுதிப் பார்த்தார்கள்.

அவர் எதுவும் லஞ்சம் வாங்கியதாகவோ, வருவாய்க்கு அதிகமாகச்
சொத்து குவித்து விட்டார் என்றோ,
வெளிநாட்டுப் பணத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார் என்றோ,
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றோ
வழக்கு இல்லை.

தொலை தொடர்புத் துறை அமைச்சராக அவர் இருந்த போது அவரது இல்லத்தில் பல தொலைபேசிகள் பயன்பாட்டில் இருந்தன என்று கூறி சி.பி.ஐ.யின் காலம் கடந்த
வழக்கு இது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல நியாயமான
கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

தயாநிதி மாறனைக் கைது செய்வதில் சி.பி.ஐ.
அவசரம் காட்டுவது ஏன்? தொலைபேசிகளுக்கான கட்டணத்தை
வசூல் செய்யாத
அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கைதானே இது ? என்றும் குறிப்பிட்டு,

இந்தப் பிரச்சினைக்கு ஏறத்தாழ ஒரு
முற்றுப்புள்ளியே வைத்திருக்கிறார்கள்

என்றுதான் சொல்ல வேண்டும்.

( http://www.nakkheeran.in/Users/
frmNews.aspx?N=148854 )

—————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ” தயாநிதி மாறன் வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது ” – கலைஞரின் வெள்ளை அறிக்கை …..

 1. today.and.me சொல்கிறார்:

  🙂 😀

 2. knvijayan, சொல்கிறார்:

  அற்ப சந்தோசிகள்.என்றைகாவது ஒருநாள் விடாது கருப்பு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருத்தம் வேண்டாம் நண்பரே,

   தங்களுக்கு சாதகமான உத்திரவு வந்த மகிழ்ச்சி வெள்ளத்தில்
   கலைஞர் பல விஷயங்களை கவனிக்கத் தவறி விட்டார்.

   இப்போது டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது
   “முன் ஜாமீன் ” கோரிக்கை பற்றிய விண்ணப்பம் மட்டுமே.

   ஒரிஜினல் வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகையே
   தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும்,
   அந்த வழக்கு – இந்த நீதிமன்றம் மற்றும் –

   இந்த அறிவார்ந்த நீதிபதி முன்பு நிச்சயமாக விசாரணைக்கு
   வராது என்பதையும் அருகில் இருக்கும் அறிவாளிகள்
   யாராவது கலைஞருக்கு எடுத்துச் சொன்னால் –
   அவரது “முற்றுப்புள்ளி” சந்தோஷம் காணாமல் போய் விடும்.

   “There is many a slip between the cup and the lip…”.

   -மிகுந்த நம்பிக்கையுடன், ( யார் மீது ….!! )
   காவிரிமைந்தன்

 3. thiruvengadam சொல்கிறார்:

  A time out in this game. Only a detail answer to today’s article in Dinamani by Gurumoorthi will give relief.

 4. paamaran சொல்கிறார்:

  மானமே பெரிதென்றெண்ணும்
  மறத் தமிழ் குலத்தார் மீது
  மாசுகள் கற்பித்தேனும்
  மகுடத்தைப் பறிக்கலாமென்று
  மத்தியில் உள்ளோர் சிலர் – அவதூறுக்
  கத்தியை வீசுகின்றார் – அவர்தம்
  புத்தியைத் தீட்டிடவே
  பொழிந்திடுக வானமே நீதான்! இது முரசொலியில் ” வானமே பொழிக ” என்கிற கலைஞர் கவிதை 1975 — ல் வெளிவந்ததை தற்போது பிரசுரம் செய்துள்ளார்கள் ! —— ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரையின்போது, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்றைய தினமணி செய்தி !! இந்த இரண்டும் என்ன என்று திரு கா.மை . அவர்களுக்கு புரியும் …..!!!

 5. சந்திரசேகரன் சொல்கிறார்:

  கேடி பிரதர்ஸ் சட்டரீதியாக வேண்டுமானாலும் இன்று பாதுகாப்பாக இருக்கலாம் ஆனால் சிபிஐ விலை போகாமல் விசாரணை மேற்கொண்டால் அன்று தெரியும் குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி என்பது இல்லை என்று தாத்தா பேரன் குரூப்புக்கு தெரியவரும்.
  பின்குறிப்பு – கேபிள் திருட்டு வழக்கு பற்றி இன்றைய தினமணியில் குருமூர்த்தியின் நடுபக்க கட்டுரையை படிப்பது நல்லது.

 6. paamaran சொல்கிறார்:

  மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது: தமிழிசை
  By dn, சென்னை
  First Published : 15 August 2015 11:25 AM IST
  தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய சுதந்திர தின உரையில், மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாதது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையில், மதுவிலக்கு பற்றியோ, சில டாஸ்மாக் கடைகளையாவது மூடுவது பற்றியோ, அதுவும் இல்லை என்றால், மதுவிலக்கு பற்றிய ஏதேனும் ஒரு குறிப்போ இடம் பெறாதது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

  மதுவிலக்கு பற்றி ஏதேனும் இடம்பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஏமாற்றத்தையே தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்…..! பாவம் தமிழிசைக்கு மற்றுமா ஏமாற்றம் …? கலைஞர் —- வை.கோ.—- விஜயகாந்த் — ஈ.வி.கே.எஸ்.— போன்றவர்களுக்கும் தான் ….! இவர்களின் நினைப்பு – பொழப்பை கெடுத்து விட்டது …..!! நினைப்பதெல்லாம் — நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை —- நடந்ததையே நினைத்து இருந்தால் —- { இவர்களுக்கு }அமைதி என்றும் இல்லை …. ஆனால் ஆகஸ்ட் 10 — ம் தேதி திரு .கா. மை . அவர்கள் எழுதியது …. // கலைஞர் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று அறிவித்ததால், பயந்து நடுங்கிக் கொண்டு அம்மையார் மதுவிலக்கைப்பற்றி 15.8.2015 அன்று அறிவிப்பு செய்யவிருக்கிறார்….ஸ்டாலின் பேச்சு….

  – மிச்சமிருக்கிற உதிரிக் கட்சிகளும், தலைவர்களும் கூட –
  இன்றோ, நாளையோ எட்டு மணி உண்ணாவிரதத்தை
  அறிவித்து விடு(ம்)வார்கள்…

  ——————————

  முதலமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
  தயவுசெய்து வேறு எப்போது வேண்டுமானாலும்
  மதுவிலக்கு அறிவிப்பை செய்யுங்கள். ஆனால் 15.8.2015 அன்று
  மட்டும் வேண்டாம் – வேண்டவே வேண்டாம் தாயே.

  உங்கள் அறிவிப்பு மட்டும் அன்று வெளிவந்து விட்டால் –
  இவர்கள் யாரையும் தரையிலேயே பார்க்க முடியாது….
  இப்போதே எங்களால் தாங்க முடியவில்லை தாயே….!!! // ஆனால் ஆகஸ்ட் 10 — ம் தேதி திரு .கா. மை . அவர்கள் எழுதியது மற்றும் அவரின் வேண்டுகோள் நிறைவேறி உள்ளது …!!! —– அப்படித்தானே ….?

 7. Pingback: ” தயாநிதி மாறன் வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது ” – கலைஞரின் வெள்ளை அறிக்கை ….. | Classic Ta

 8. theInformedDoodle சொல்கிறார்:

  இது ஒரு ஆபத்தான வழியை காட்டியிருக்கிறது..
  திருட்டுத் தனமாக கேபிள் பதித்து தொலை தொடர்பை துஷ் பிரயோகம் செய்த ஒன்றை பில் கட்டாத வழக்காக மாற்ற முடியும் என்றால்.. சொத்துக் குவிப்பு வழக்கை , வருமான வரி கட்டத் தவறிய வழக்காக மாற்றிக் கொள்ள முடியும்.. திருட்டு வழக்கேன்றால், எடுத்த பொருளுக்கு இன்னும் பில் கொடுக்காத வழக்காக.. கிட்ட தட்ட.. எதுவுமே தப்பில்லை!

 9. Naresh சொல்கிறார்:

  மாறன்கள் வழக்கு விஷயத்தில் சி.பி.ஐ யும் அமலாக்கதுறையும் ஆரம்பத்திலேயே மிக மிக மெதுவாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஏர்செல் மேசிஸ் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகி முன்ஜாமீன் கோரி ஒவ்வொருமுறை விசாரணைக்கு வந்தாலும் வழக்கு 6 மாதத்திற்காவது ஒத்திவைக்கபடுவது வாடிக்கையாக உள்ளது. அமலாக்கத்துறையோ முறைகேடாக 700 கோடி வந்த வழக்கில் இன்னும் குற்றபத்திரிக்கையே தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. 742 சொத்துக்களை மட்டும் முடக்கி வைத்திருந்தாலும் சட்டப்படி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். சன் நிறுவன சொத்துக்களை சென்ற மாதம் 23ஆம் தேதி வரை கையகபடுத்த உச்சநீதிமன்றம் தடை விதிதிருந்து அடுத்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் 2ஜி பெஞ்ச் பிறப்பிக்கும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியது. அந்த வழக்கு என்னவானது என்றே தெரியவில்லை. இந்த மாதம் 23ஆம் தேதியும் கூட வந்துவிடும் போலிருக்கிறது. இந்த தாமதம் நீதியையே கொன்றுவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.