கே.டி.பிரதர்ஸ் + விசாரணை அமைப்புகள் V/s திரு.குருமூர்த்தி + உண்மை = முடிவு ??????

s.gurumurthy-2

கே.டி.பிரதர்ஸ் குழுவினரின் குறுக்கு வழிகள்
பலன் அளிப்பதைப் பார்க்கும்போது,
உண்மை, நீதி, நியாயம் – இவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை
குறைந்து கொண்டே போகிறது….

நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி எழுதும்போது, மிகவும்
கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. சற்றுப் பிசகினாலும்,
அவமதிப்பாகி விடும் அபாயம் உண்டு.

திரு.குருமூர்த்தி அவர்கள் தினமணி நாளிதழில் இந்த வழக்கு குறித்து, மிகத்தெளிவாக அலசி இருக்கிறார். இந்த வலைத்தள நண்பர்கள் அனைவரும் அதனைப் படிக்க வேண்டும் என்பதற்காக கீழே தந்திருக்கிறேன்.

– வழக்கின் தீவிரத்தன்மையை பற்றியும்,
நீதிமன்றத்தில் சொல்லப்படுவது போல் இது –
சிவில் பிரச்சினை அல்ல,
திட்டமிட்ட மோசடி,
கிரிமினல் குற்றம் என்பதையும்,
ஒரு கோடி அல்ல பல நூறு கோடிகள் நாட்டிற்கு இழப்பு
ஏற்பட்டுள்ளது என்பதையும் –

– சி.பி.ஐ. அமைப்பு – நீதிமன்றத்திடம் தெள்ளத் தெளிவாகத்
தெரிவிக்கவில்லையா அல்லது அது நீதிமன்றத்தின்
கவனத்தைக் கவரவில்லையா?

– விவேகமும், முன்யோசனையும் அறிவாற்றலும் உள்ள நீதிபதிகள்
அவசரப்பட்டு எந்தக் கருத்தையும் முன்வைக்க மாட்டார்கள்.


– பளிச்சென்று, சுள்ளேன்று, கேட்கிறார்….
இனியாவது புலன் விசாரணை அமைப்பு
செய்ய வேண்டியதென்ன என்பதையும் விளக்குகிறார்….

குருமூர்த்தி அவர்களின் கட்டுரை கீழே –
————————————

பழிவாங்கும் நடவடிக்கையா? அதிகார துஷ்பிரயோகமா?
By எஸ். குருமூர்த்தி

First Published : 15 August 2015 01:48 AM IST

( http://www.dinamani.com/editorial_articles/2015/08/15/ )
——————————-

தயாநிதி மாறன் முன்ஜாமீன் வழக்கில் அவரைக் கைது செய்ய
உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், அவரைக் கைது செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஏன் கருதக் கூடாது
என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதையும் ஊடகங்கள் தலைப்புச்
செய்திபோல பிரதானப்படுத்தியுள்ளன.

2013-ஆம் ஆண்டிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் இரண்டு ஆண்டுகளாக தயாநிதி மாறனைக் கைது செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.
“மேலும், சட்டவிரோத இணைப்பு மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.2 கோடி என நீங்கள் (சி.பி.ஐ.) மதிப்பிட்டுள்ளீர்கள். அந்தத் தொகையை கட்டுவதற்குத் தயாநிதி மாறன் தயாராக இருக்கிறார்.

இதில் அதிகார துஷ்பிரயோகம் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அவரைக் கைது செய்யும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய ஊழல் இல்லை’ என்று சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள்
வெளிவந்துள்ளன.

இப்படிச் சொன்ன உச்சநீதிமன்றம், தயாநிதி மாறனை வருகிற
செப்டம்பர் 14-ஆம் தேதி வரைக் கைது செய்ய இடைக்காலத் தடை
விதித்துள்ளதுடன், மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை
நடைபெற்றுள்ள விசாரணை தொடர்பான விவரங்களை விரிவான
வாக்குமூலமாகத் தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் வாதங்களை ஊடகங்கள் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களும் கடந்த
4 ஆண்டுகளாக “தினமணி’ நாளிதழ் மூலம் பொது மக்களின்
பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குத் தெரிய வேண்டிய

முக்கியமான உண்மைகள் மிகவும்
அதிகமானவை அல்ல.

2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் 341 அதிநவீன இணைப்புகள் கொண்ட பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகத்தை சட்ட விரோதமாக நிறுவினார். இது கணக்கில் வராமல் ரகசியமாகச் செயல்பட்டு வந்தது.

இந்த ஒவ்வோர் இணைப்பையும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வாடகைக்கு விட்டால் ஆண்டுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது, 2004 -05 முதல் 2007-08 வரையிலான காலத்தில்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.136 கோடி வருவாய் கிடைத்திருக்கும்.

இதேபோல தயாநிதி மாறன், போட் கிளப் பகுதியில் உள்ள தனது நவீன பங்களாவில் கூடுதலாக 323 அதிநவீன இணைப்புகளை சட்ட விரோதமாகப் பெற்றிருந்தார். 2007-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இவை செயல்பட்டு வந்தன.

2006-07 மற்றும் 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கு இந்த கூடுதல் இணைப்புகளுக்கான வாடகையைக் கணக்கிட்டால் ரூ.65 கோடி வரும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 764 இணைப்புகளுக்கு வாடகையாக மட்டும் ரூ.200 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.2 கோடியை
வேண்டுமானால் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று தாராள மனதுடன் மாறன் சார்பில் தெரிவிக்கப்பட்டது நீதிமன்றத்தைக் கவர்ந்திருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த ரூ.1.2 கோடி என்பது பி.எஸ்.என்.எல். நிறுவனம் கேபிள் பதித்ததற்கு ஆன செலவுதான்.

அளவிட முடியாத பயன்பாட்டுக் கட்டணங்களைக் கணக்கிடாவிட்டாலும் கூட, குறைந்தபட்ச இழப்பு ரூ.200 கோடி என்பதை நீதிமன்றத்திடம்

சி.பி.ஐ. தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கவில்லையா

அல்லது அது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?

1974-ஆம் ஆண்டில் ரூ.265 (ஆம், வெறும் ரூ.265 தான்) லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு 30 ஆண்டு கால வழக்கு விசாரணைக்குப் பிறகு 2014-இல் அவரது 76-ஆவது வயதில் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற தீர்ப்புகளால்தான் ஊழலை ஒழிக்க முடியும். இப்படியும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஊழலுக்குக் கடிவாளம் போடத்தான் செய்கிறது.

என்ன நோக்கத்துக்காக, என்ன பயன்பாட்டுக்காக 764 இணைப்புகள் கொண்ட இரண்டு இணைப்பகங்கள் தயாநிதி மாறன் வீட்டில் சட்ட விரோதமாக நிறுவப்பட்டன -என்று

அட்டார்னி ஜெனரல் ரோத்தகி
நீதிமன்றத்தில் குறிப்பிட்டாரா
என்பது தெரியவில்லை.

தயாநிதி மாறன் சட்ட விரோதமாகத் தொலைபேசி இணைப்பகத்தை
நிறுவியதுடன், தனது வீட்டிலிருந்து தொலை தூரத்தில் உள்ள
சன் தொலைக்காட்சி குழும அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக
இணைப்பு கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சன் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலரின்
வீடுகளுக்கும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைப்பு
கொடுத்துள்ளார். தனது சகோதரரின் தொழிலை விரிவுபடுத்தும்
நோக்கிலேயே மாறன் இவ்வாறு செய்துள்ளார்.

இந்தத் தகவல்கள் நீதிமன்றத்துக்கு
தெரிவிக்கப்படவில்லையா
அல்லது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?

மாறன் வீட்டில், அவரது பெயரில் இல்லாமல் சென்னை
தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளர் பெயரில்
இணைப்பகம் நிறுவப்பட்டுள்ளது.

இது ஏன் என்கிற கேள்வியை நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் எழுப்பவில்லையா அல்லது அது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?

தனது மோசடி செயலுக்கு மாறன், பி.எஸ்.என்.எல். தலைமை
அதிகாரியை முகமூடியாகப் பயன்படுத்தியுள்ளார். இதை யாரும் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இது உண்மையான மற்றும் மோசடியான நோக்கத்தை மறைக்கும் நடவடிக்கை

– என்று அட்டார்னி ஜெனரல்
கேள்வி எழுப்பவில்லையா
அல்லது அது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?

இதுபோன்ற கேள்விகளை அட்டார்னி ஜெனரல் இதுவரை
நீதிமன்றத்தில் எழுப்பவில்லை என்றால் –

வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு
வரும்போதாவது

“கனம் நீதிபதி அவர்களே, இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?
அல்லது இது திட்டமிட்ட சதி மற்றும் மோசடி வேலை இல்லையா?’
என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

முறைகேடாகப் பெற்ற 764 இணைப்புகளின் பயன்பாட்டை அளவிட
முடியாமல், கண்காணிக்க முடியாத வகையில் இது அலுவலகப்
பயன்பாட்டுக்கு என முத்திரை குத்தப்பட்டது என்பதையும் –

அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூற வேண்டும்.
நீதிமன்றத்தின்
கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

2007-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொலைத் தொடர்புத் துறை
அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. எழுதிய கடிதத்தில் ஓர் இணைப்பில் ஒரு மாதத்தில் 48 லட்சம் யூனிட் அழைப்புகள் பேசப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஆட்சியில் இருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு 764 இணைப்புகளுக்கு 40 மாதக் கட்டணம் கணக்கிட்டால் அது பல நூறு கோடியாக ரூபாயாக உருவெடுக்கும். 764 இணைப்புகளின் செயல்பாடு

கணக்கில் காட்டப்படாமல்
-மூடிமறைக்கப்பட்டுள்ளதை அட்டார்னி ஜெனரல்
நீதிமன்றத்தில் சொல்லியிருக்க வேண்டாமா?

சி.பி.ஐ.யின் பிரமாணப் பத்திரத்தில் அனைத்து அடிப்படை உண்மைகள் இடம் பெற்றிருக்கும், அட்டார்னி ஜெனரலும் இது தொடர்பான கேள்விகளைக் கேட்பார் என்று நம்புவோமாக. இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக
ஏன் கருதக் கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தனை நாள்களாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தனது தோழமைக் கட்சி என்பதால் அரசியல் பாதுகாப்பு நடவடிக்கையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கைக் கிடப்பில் போட்டுவைத்திருந்தது என்று –

-அதை நீதிமன்றம் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை?

மாறனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அப்போது
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததால் தனது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்தது என்ற

-உண்மையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஏன் தெளிவுபடுத்தவில்லை?

தயாநிதி மாறன் 2004-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2007-ஆம் ஆண்டு
ஜூன் மாதம் வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் சட்ட விரோதமாக 764 இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்பகம் நிறுவப்பட்டது.

அதாவது 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 341 இணைப்புகளும் 2007
ஜனவரியில் 323 இணைப்புகளும் சட்ட விரோதமாகப் பெறப்பட்டுள்ளன.
தனது தாத்தாவும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாறன் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
உடனே சி.பி.ஐ. ஆரம்ப கட்ட விசாரணைக்குத் தயாரானது.

புலன் விசாரணை நடத்த தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம்
சி.பி.ஐ. 2007-இல் அனுமதி கேட்டது. ஆனால், 2008-இல் கருணாநிதியுடன் மாறன் சமாதானமாகப் போனதை அடுத்து விசாரணை மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதுவல்லவா உண்மை?

பின்னர், 2011-ஆம் ஆண்டில் “தினமணி’ நாளிதழ் இந்த மோசடியை அம்பலப்படுத்தியது. 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இது தொடர்பாக
ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து
நீதிமன்றத்தின் நிர்பந்தம் காரணமாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் பதவியேற்ற பின்னர்தான் வழக்கு
விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வேறு சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், கீழமை நீதிமன்றங்களில் இருந்த செல்வாக்கு காரணமாக மாறனைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கமுடியவில்லை.

764 அதிநவீன இணைப்புகளை அவர் பெற்றது எப்படி, அதை
எப்படி அவர் சன் தொலைக்காட்சிக்குத் தொடர்புபடுத்தினார்,
அதன் மூலம் அவர் எப்படி பயனடைந்தார், தனது அமைச்சக
அலுவலகத்தை மாறன் சன் தொலைக்காட்சி
அலுவலக வளாகத்திலேயே நடத்தினாரா அல்லது சன் தொலைக்காட்சி தனது நிகழ்ச்சிகளை இலவசமாக அப்-லிங்க் செய்ய உதவினாரா, திமுக தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் அந்த இணைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொண்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு

-மாறனைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான்
விடை கிடைக்கும் என சி.பி.ஐ. கருதுகிறது.
தனது வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சி குழும அலுவலகத்துக்கு
எதற்காக மாறன் இணைப்பு கொடுத்தார், அங்கிருந்தால்தான் அவரால் செயல்பட்டிருக்க முடியுமா, ஏன் வீட்டில் இருந்தவாறே அவரால் செயல்பட்டிருக்க முடியாதா?

வீட்டில் இருந்தபடி செயல்பட்டிருந்தால் அவருக்கு ஓர் இணைப்பே
போதுமானதாக இருந்திருக்கும். பேராசைக்காரராக இருந்தால்கூட
இரண்டு இணைப்புகள் போதுமானவை.
764 இணைப்புகள் எதற்கு
-என்ற கேள்விகளை அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் எழுப்ப வேண்டும்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குழிதோண்டி புதைக்க முற்பட்ட ஒரு வழக்கை இப்போதைய அரசு புலன் விசாரணை நடத்த முற்படுவது எந்த வகையில் அரசியல் பழிவாங்கும் செயலாகும் என்றும் சி.பி.ஐ. கேள்வி எழுப்ப வேண்டும்.

முறைகேடாக, சட்ட விரோதமாக, கள்ளத்தனமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தை வைத்திருப்பது தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகாதா?

மாறன் அமைச்சராவதற்கு முன்னரே, மத்திய தொலைத் தொடர்புத்
துறை செயலாளர் தலைமையில் 2003 ஏப்ரல் 26-இல் நடைபெற்ற
கூட்டத்தில் சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு அல்லது
இணைப்பகம் இருப்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காதா என்பது பற்றி விரிவாக பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உளவுத் துறையினரும், செல்லிடப்பேசி
நிறுவனத்தினரும் பங்கேற்றனர். “சட்ட விரோதமாக, மறைமுகமாக தொலைபேசி இணைப்பு இருந்தாலோ அல்லது இணைப்பகம் செயல்பட்டாலோ அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும்.

இதைத் தடுக்க எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று தொலைபேசி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2010-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி வெளியிட்ட தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மாறன் தாராள மனதுடன் ரூ.1.2 கோடியைச் செலுத்தி வழக்கை
முடித்துக் கொள்ள தயார் என்று சொல்லும் அளவுக்கு இது ஒன்றும்
சாதாரண வழக்கு அல்ல. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
தொடர்பான வழக்கு என்ற கோணத்தில் இதை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும்.

– துரதிருஷ்டவசமாக அட்டார்னி ஜெனரல் இதுபோன்ற கேள்விகளை முன்வைக்க முடியாது. ஏனெனில், வேறு ஒரு வழக்கில் அவர் மாறனுக்கு ஆதரவான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

வழக்கின் முக்கிய அம்சங்களை அவரிடம் எடுத்துச் சொன்னால்தானே
அவரால் நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியும்.
இனியாவது, அவர் முக்கியக் கேள்விகளை
நீதிமன்றத்தில் எடுத்துரைப்பாரா? கடவுளுக்குத்தான் தெரியும்.

இதை அவர் எடுத்துரைக்கவில்லை எனில், முக்கியமான
இந்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்துக்குத் தெரியாமலே போய்விடும்.

எதிர்தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல்,
நீதிபதி ஒரு கருத்தை கூறுவாரேயானால் சட்டத்தில் அதற்கு
மதிப்பு இருக்காது. இதைப் புரிந்து கொள்ளாத ஊடகங்கள்
ஏதோ மாறன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதுபோல்
செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

விவேகமும், முன்யோசனையும் அறிவாற்றலும் உள்ள நீதிபதிகள் அவசரப்பட்டு எந்தக் கருத்தையும் முன்வைக்க மாட்டார்கள்.

ஊழல் வழக்கில் தவறு செய்தவர் யார் என்பதுதான் முக்கியம்.
தவறு செய்பவர் உயர் பொறுப்பில் இருந்தால் நீதித் துறை
கடுமையாகச் செயல்பட வேண்டும். ஆனால், நீதித் துறை இதற்கு மாறாகச் செயல்படுகிறது.

வெறும் ரூ.265 லஞ்சம் பெற்றவருக்கு சிறைத் தண்டனையும்,
அபராதமும் விதிக்கப்படுகிறது. செல்வாக்குள்ளவர்களுக்கு
அனுசரணையாகச் செயல்படுகிறது.

மாறனுக்கு வேண்டுமானால் ரூ.1.2 கோடி பெரிய தொகையாக
இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேசத்துக்கு அது பெரிய தொகை.
அமைச்சர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தால்,
அவர் தவறு செய்ததாக நிரூபணமானால் தண்டனை
கடுமையானதாக இருக்க வேண்டும்.

மற்றவர்கள் விஷயத்தில் –
இது குற்றம் அவ்வளவுதான்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துப் பதவி வகித்த அமைச்சர் விஷயத்தில் அப்படியல்ல.

சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே தவறு செய்தால்,
தண்டனையை இன்னும் கடுமையாக்குவதுதான்
அரசியலமைப்புச் சட்டப்படி நீதிபதியின் கடமையாகும்.

கலியுகத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு என்பதைப்
பொருத்துதான் நீதி அமைவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

கலியுகத்தின் ஆயுள் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளாகும்.
நல்லவேளையாக, இப்போதுதான் 5,116 ஆண்டுகள் முடிந்துள்ளன.
கலி முற்றுவதற்கு நீண்ட காலம் உள்ளதால், மாறன் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் தப்பிவிடமாட்டார்கள் என நம்பலாம்.

——————————————————————-

பின் குறிப்பு – இந்த வலைத்தள நண்பர்களின் சார்பில்,
திரு.குருமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க
விரும்புகிறேன். இந்த இடுகையை, அதற்கு வரும்
பின்னூட்டங்களுடன் சேர்த்து திரு.குருமூர்த்தி அவர்களுக்கு
அனுப்ப முயற்சிக்கிறேன். பின்னூட்டமிடும் நண்பர்கள்
தயவுசெய்து அதற்கேற்ப செயல்பட வேண்டுகிறேன்
.

——————————————————————-

திரு குருமூர்த்தி அவர்களுக்கு,

உண்மை நிலை நிறுத்தப்பெற வேண்டும் –
இந்த நாட்டை கொள்ளையடித்தவர்கள்,

– தங்கள் அரசியல் செல்வாக்கால் –
மோசடிச் செயல்களின் மூலம் – சட்டவிரோதமாக
கொள்ளையடித்து சேர்த்துள்ள

கேடிகள், கோடிகளால் –
நீதியை விலைக்கு வாங்கி விட அனுமதிக்கக் கூடாது

என்கிற நோக்கத்துடன் நீங்கள் செயல்படுவதை
முழுமனதோடு வரவேற்கிறோம்.
உங்கள் முயற்சியை உளமாறப் பாராட்டுகிறோம்.
வெற்றி பெற வாழ்த்துகிறோம்

விசாரணை அமைப்புகளும்,
மூத்த அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொள்ளும் விதம் –
எங்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

நீங்களும் –
இந்த வழக்கில் உங்களை ஒரு புகார்தாரராக
இணைத்துக்கொண்டு,
செயல்பட முடியுமா ?
– தயவு செய்து முயற்சித்துப் பாருங்களேன்.

– விமரிசனம் வலைத்தள நண்பர்கள்.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to கே.டி.பிரதர்ஸ் + விசாரணை அமைப்புகள் V/s திரு.குருமூர்த்தி + உண்மை = முடிவு ??????

 1. sundar சொல்கிறார்:

  கண்டிப்பா எல்ல மக்களும், இத்த பார்க்கோணும். இந்த கேடி கேப்மாரியோட பக்கத்துலயும் ஒரு நாயம் கீதுன்னு அல்லாரும் கண்டுகோனும்.

 2. Pingback: கே.டி.பிரதர்ஸ் + விசாரணை அமைப்புகள் V/s திரு.குருமூர்த்தி + உண்மை = முடிவு ?????? | Classic Tamil

 3. nparamasivam1951 சொல்கிறார்:

  திரு குருமூர்த்தி அவர்கள், நீங்கள் கூறியது போல், தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள, வேண்டுகோள் வைக்கின்றேன்.

 4. gopalasamy சொல்கிறார்:

  To
  Mr. Gurumoorthy
  நீங்களும் –
  இந்த வழக்கில் உங்களை ஒரு புகார்தாரராக
  இணைத்துக்கொண்டு,
  செயல்பட முடியுமா ?
  – தயவு செய்து முயற்சித்துப் பாருங்களேன்.

 5. drkgp சொல்கிறார்:

  Mr Gurumurthy has good rapport with the BJP government. There are a few elements in the govt
  helping the brothers to niggle away from the law. The much respected auditor can activate
  the prosecution for a better presentation of the case.

  • Sampathkumar. K. சொல்கிறார்:

   drkgp கூறுவது போல, கேடி பிரதர்ஸ் தற்போதைய
   மத்திய அரசிலும் சில முக்கிய பதவிகளில் உள்ளவர்களை
   வளைத்து விட்டார்கள். சிபிஐ மற்றும் அரசு வழக்கறிஞரின்
   மெத்தனத்திற்கு அதுவே காரணம். திரு குருமூர்த்தி
   இந்த அதிகார வளையங்களின் செல்வாக்கையும் தாண்டி
   செயல்பட வேண்டியிருக்கும். வழக்கு மேலும் தாமதம் ஆகலாம்.
   குருமூர்த்தி அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் ஒழிய
   வழக்கு சரியான திசையில் பயணிக்க வாய்ப்பில்லை.
   திரு குருமூர்த்தி அவர்கள் தன்னையும் இந்த வழக்கில்
   இணைத்துக் கொள்வது தான் சிறந்த வழி. பாஜக அரசுக்கு
   ஏகப்பட்ட diversions. அதைபயன்படுத்தி கேடிகள் தப்பிக்க
   விடக்கூடாது.

 6. paamaran சொல்கிறார்:

  ஏகப்பட்ட கேள்விகள் மனதை குடைந்தாலும் எங்கே நீங்கள் கூறியுள்ளதுபோல் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி எழுதும்போது, மிகவும்
  கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. சற்றுப் பிசகினாலும்,
  அவமதிப்பாகி விடும் அபாயம் உண்டு. என்கிற எண்ணம் வந்து தடுக்கிறது —- 2004 — ல் ஆரம்பித்து — கலைங்கருக்கும் கே.டி… க்களுக்கும் பிரச்னை ஏற்பட்ட பின் ஆ . ராசா தயாநிதிக்கு பின் மந்திரியானவுடன் வழக்கு பதிவாகியது —- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றால் அது — ஒன்று கருணாநிதியையும் — காங்கிரஸ் ஆட்சியையும் குறிப்பதா ? பின் இரண்டு தரப்பும் ஒன்றான பின் கிடப்பில் போடப்பட்டது —- அதன் பிறகு 2009 — ல் மத்திய சென்னை தேர்தல் பிரசாரத்தில் ” ஜெயலலிதா ” இதைபற்றி விலாவரியாக பேசி கேள்வி கேட்டதும் — அதன் பிறகு உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு 2011 — ல் சி.பி. ஐ விசாரிக்க உத்திரவு இட்டதும் —- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா ? தயாநிதி மாறனின் பெயரில் எந்த இணைப்பும் இல்லாதநிலையில் அவர் 1.20 கோடியை ஏன் கட்டுவதற்கு தயாராக இருக்கிறார் … ? அவர் அவ்வாறு கட்டினால் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி என்று ஆகிவிடாதா …. ? தயாநிதியின் போட்கிளப் வீட்டில் இருந்து — சன் டி .வி. வரை கண்ணாடி இழை கேபிள் ஏன் எதற்க்காக பதிக்க பட்டது …? கலைஞர் பல ஆண்டுகளுக்கு முன்பே தன் பங்காக 100 — கோடி சன் டி.வியில் இருந்த பெறும்போது இந்த 1.20. கோடி என்ன ….. அதைவிட அதிகமாக கூட கட்டிவிட்டு வழக்கில் இருந்து வெளி வர தாத்தா ஐடியா கொடுக்காமலா இருந்து இருப்பார் …? குருமூர்த்தி கூறுவதைப்போல அட்டர்னி ஜெனரல் தன் வாதங்களை வலுவாக வைக்க வில்லையோ என்று சந்தேகம் ஏற்படுவது சகஜம் …! அவர்தானே பண்பலை வழக்கில் இவர்களுக்கு தடை தேவை இல்லை என்று கூறியவர் …!! முக்கியமாக திரு கா.மை .அவர்களுக்கு :— நம் தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகள் விவாதம் என்கிற பெயரில் இப்போது தைரியமாக ஒலிபரப்பு செய்வது ” சுமங்கலி கேபிள் விஷன் ” இருந்து இருந்தால் செய்ய முடியுமா …? அரசு நடத்துவதால் இவர்களால் செய்ய முடிகிறது என்பது தானே — உண்மை … ? அப்படியிருந்தும் இந்த கே.டி.பிரதர்சை பற்றி யாருமே விவாதிப்பது இல்லையே — அது ஏன் …? அதனால் தான் இதை பற்றி கலைஞர் குறிப்பிடும் போது ” பிரிண்டெட் மீடியாவை விட எலக்ட்ரானிக் மீடியா ” ரொம்ப நல்லவர்கள் இன்று கூறினாரோ …?

 7. kakkoo சொல்கிறார்:

  திரு . குரு மூர்த்தி அவர்கள் நிச்சயம் இந்தவழக்கில் தன்னையும் சேர்த்துக்கொண்டு கே.டி சகோதர்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய தொகையினை அபராதத்துடன் வசூலிக்கவும்,இவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தரவும் வேண்டும் இதுவே ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுகோளாகவும் இருக்கும். அவர்களிடம் இருக்கும் பணத்தால் எதையும் செய்யும் வாய்ப்புகள் மிக அதிகம்.

 8. srinivasanmurugesan சொல்கிறார்:

  To
  Mr. Gurumoorthy
  நீங்களும் –
  இந்த வழக்கில் உங்களை ஒரு புகார்தாரராக
  இணைத்துக்கொண்டு,
  செயல்பட முடியுமா ?
  – தயவு செய்து முயற்சித்துப் பாருங்களேன்.

 9. Naresh சொல்கிறார்:

  மாறன்கள் வழக்கு விஷயத்தில் சி.பி.ஐ யும் அமலாக்கதுறையும் ஆரம்பத்திலேயே மிக மிக மெதுவாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஏர்செல் மேசிஸ் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகி முன்ஜாமீன் கோரி ஒவ்வொருமுறை விசாரணைக்கு வந்தாலும் வழக்கு 6 மாதத்திற்காவது ஒத்திவைக்கபடுவது வாடிக்கையாக உள்ளது. அமலாக்கத்துறையோ முறைகேடாக 700 கோடி வந்த வழக்கில் இன்னும் குற்றபத்திரிக்கையே தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. 742 சொத்துக்களை மட்டும் முடக்கி வைத்திருந்தாலும் சட்டப்படி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். சன் நிறுவன சொத்துக்களை சென்ற மாதம் 23ஆம் தேதி வரை கையகபடுத்த உச்சநீதிமன்றம் தடை விதிதிருந்து அடுத்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் 2ஜி பெஞ்ச் பிறப்பிக்கும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியது. அந்த வழக்கு என்னவானது என்றே தெரியவில்லை. இந்த மாதம் 23ஆம் தேதியும் கூட வந்துவிடும் போலிருக்கிறது. இந்த தாமதம் நீதியையே கொன்றுவிடும்.

 10. seshan சொல்கிறார்:

  முகுல் ரோத்தகி……………………very famous for all…..if possible he will sell anything….so do not expect from him….waste of time…..

 11. Bala சொல்கிறார்:

  யார் தவறு செய்திருந்தாலும் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தருவதுதான் நேர்மையான நடைமுறை. அப்படி இல்லாமல் நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே விசாரணை என்ற பெயரில் சிறைக்குள் தள்ள முனையும் செயல்தான் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
  விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டியது குற்றவாளி என்று என்று கருதப்படுபவரின் கடமை அல்ல. விசாரிக்கும் நேரத்தில் தன் வாயை மூடிக்கொண்டிருக்கும் உரிமையை அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது. குற்றத்தை நிரூபிக்கவேண்டியது அரசின் கடமை. அதைச் செய்யுமாறு நீங்கள் உங்கள் அரசிடம் சொல்லுங்கள்.

 12. Ganpat சொல்கிறார்:

  அட்டர்னி ஜெனெரல் மத்திய அரசின் கீழ் வருபவர்.எனவே மேற்கண்ட அத்தனை கேள்விகளுக்கும் நம் சட்டத்துறை அமைச்சரின் பதில் என்ன?இந்த விஷயத்தில் மோடி அரசின் நிலைப்பாடு என்ன? உண்மையாகவே அவர்கள் மாறனை தண்டிக்க நினைத்தால் அது முடியாதா? அல்லது வரப்போகும் 2016 பொதுதேர்தலுக்கு இது ஒரு ஆயுதமா?(கூட்டணிஅமைவதை வைத்து முடிவெடுக்கப்படுமா?)
  எனக்கென்னமோ “நான் அடிக்கிறா மாதிரி அடிக்கிறேன் நீ அழறா மாதிரி அழு!” நாடகமே நடப்பதாக படுகிறது.

 13. Swamynathan சொல்கிறார்:

  I want to take an illegal EB power connection for my house, use it for 5 years and when someone takes it up, I will accept to pay the bill to Govt. Hope Supremecourt will support me in this case. All Indian citizens can follow me and enjoy free current at their house. This is certainly not conetempt of court.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.