சிவாஜிக்கே பெரும் சவாலாக இருந்திருப்பார்…..!!!

modiji in dubai-1

 

 

புகழின் உச்சியில், தன்னிகரற்ற நடிகராக விளங்கிய
நடிகர் திலகம் சிவாஜிக்கே இவர் பெரும் சவாலாக
இருந்திருப்பார்…!!!

இரண்டு காரணங்களால் சிவாஜி
அந்த ஆபத்திலிருந்து தப்பினார் …..

1) அதிருஷ்டவசமாக – நடிகர் திலகத்தின் காலத்தில் –
இவர் இந்த துறைக்கு வரவில்லை….!!!

2) இவருக்கு தமிழில் பேச வராது ….!!!

இந்தியில் பேசக்கூடிய அதே ஏற்ற இறக்கங்களுடன்,
நெளிவு சுளிவுகளுடன், முக பாவங்களுடன் தமிழில் மட்டும்
இவரால் பேச முடிந்தால் –
எந்தவித சந்தேகமும் இன்றி –
தமிழகத்தின் 234 சீட்டுகளையும் பாஜகவினர் அள்ளிக் கொள்வர்.

இந்தியும் தெரிந்திருந்து, நேற்றைய நேரடி தொலைக்காட்சி
நிகழ்ச்சியை பார்க்கும் பாக்கியத்தையும் பெற்றவர்கள் இதை
நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அந்த பாக்கியம் பெற்றவர்கள்
தாங்கள் பெற்ற பாக்கியத்தை -மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளலாம் – பின்னூட்டங்களின் மூலம்….!

பின் குறிப்பு –
நான் பெற்ற அனுபவத்தைப் பற்றி,
தனியே இடுகையில் எழுதுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to சிவாஜிக்கே பெரும் சவாலாக இருந்திருப்பார்…..!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  உங்களது பதிவிற்காக காத்திருந்தேன். உங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான். எனக்கு ஓரளவு ஹிந்தி புரியும், நேற்றைய தினம் அவரது பேச்சை கவனித்த போது அவரது உடல் மொழியையும் கவனித்தேன். எங்கு சென்றாலும் தேர்தல் பிரசாரம் போலவே பேசுகிறார். அவரது சுதந்திர தின உரை மற்றும் அபுதாபி பயணம் குறித்து உங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம். முந்தைய ஆட்சி குறித்து சில/பல விமர்சனங்கள் இருந்தாலும் நமது வளர்ச்சி என்பது திடீரென இப்போது குதித்து விடவில்லை. காலம் காலமாக சில நல்ல உள்ளங்கள் இந்த மண்ணிற்காக உழைத்திருகிறார்கள் அதை யாரும் மறக்கவும்/மறுக்கவும் முடியாது. கடந்த காலங்களில் யாருமே எதுவுமே செய்யாதது போல ஒரு பிரசாரம் நடக்கிறது. கடந்து வந்த பாதையில் குறை இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். அதை விடுத்து அது சரியில்லை இது சரியில்லை என்பது வீண் பேச்சு. இத்தனை காலம் இந்த மக்கள் எந்த நம்பிக்கையில் பயனிதார்களோ அதை விட கொஞ்சம் கூடுதல் நம்பிக்கையுடன் இப்போது பயணிக்க காத்திருகிறார்கள் என்பதே உண்மை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் புதுவசந்தம் அன்பு,

   நான் துபாய் நண்பர் ஒருவரிடமிருந்து சில தகவல்களுக்காக
   காத்திருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.

   துபாய்/அபுதாபி -யிலிருந்து இந்த இடுகையை
   படிக்கும் நண்பர்கள் யாராவது இந்த நிகழ்ச்சிக்கு
   நேரில் சென்றிருந்தீர்களா …?

   உங்கள் அனுபவம் பற்றி சொல்ல முடியுமா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • புது வசந்தம் சொல்கிறார்:

    ஐயா, நேற்றைய தினம் பீகார் தேர்தல் பிரசாரமும் பார்த்திருப்பீர்கள். முதல்வர் நித்திஷ் குமார் அவர்களுடன் வரவேற்பில் சிரிப்பு. பின்னர் மேடையில் விமர்சித்து பேச்சு. ஒரு பிரதமர் இவ்வாறு பேசலாமா ? தரமாக பேசுவது தானே நியாயம், அந்த பதவிக்கும் மரியாதை,

 2. sivasu சொல்கிறார்:

  எந்தவித சந்தேகமும் இன்றி – தமிழகத்தின் 234 சீட்டுகளையும் பாஜகவினர் அள்ளிக் கொள்வர்

  முடியாது ஐயா !!
  ஐம்பது ஆண்டுகளாக இதை செய்து காட்டி(கல்லா கட்டி)யவர் உள்ளூரிலே இருக்கிறார்!

 3. Ganpat சொல்கிறார்:

  கா.மை ji
  Believe me or not!
  நேற்று ஏன் வீட்டில் நான் சொல்லிக்கொண்டிருந்தது..
  “சிவாஜியை மிஞ்சும் performance கொடுக்கிறார்.”
  🙂 🙂

 4. Pingback: சிவாஜிக்கே பெரும் சவாலாக இருந்திருப்பார்…..!!! | Classic Tamil

 5. Ganpat சொல்கிறார்:

  அறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழக வாக்காளர்கள் மேடையில் நன்றாக பேசுபவரை சற்று பயத்துடனே பார்ப்பார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை கண்பத்.

   முன்பெல்லாம் நான் சில சமயம், கண்களை
   மூடிக்கொண்டு வைகோ பேசுவதை – கேட்க மட்டும் செய்தால் –
   சிவாஜி வசனம் பேசுவது போலவே இருக்கிறதே
   என்று வியந்து ரசித்தது உண்டு.
   இப்போது நினைத்துக் கொள்கிறேன் –
   ரசித்ததோடு நின்றிருக்க வேண்டும்….!!!

   பேச்சினாலேயே மக்களைக் கவர்ந்து ஆட்சியை பிடித்த
   கதையை நாம் அறுபதுகளிலேயே கண்டு,
   அதன் விளைவுகளை அனுபவிக்கவும் செய்து விட்டோம்…

   எனவே, இப்போதெல்லாம் நன்றாக பேசுபவரை
   கண்டால் …. நீங்கள் சொல்வது போல் பயமாகத்தான்
   இருக்கிறது. அனுபவப்பட்டவர்கள் ஏமாற மாட்டார்கள்…

   ஆனால், மற்றவர்கள்…..?

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. seshan,Dubai சொல்கிறார்:

  Dear Sir

  Parthen, rasithen .

  You are correct. no doubt he is a very trained actor with very good commanding on languages.

  he understood correctly his roll, and opp. people to cover them. real modi masthan……

  his next visit may be Oman soon.

  Seshadri / Dubai

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சேஷன், துபாய்.

   உங்கள் பின்னூட்டங்களை அடிக்கடி பார்க்கிறேன்.
   ஆனால், நீங்கள் துபாயில் இருப்பது இப்போது தான் தெரிந்தது.
   உடனடியாக தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. seshan,Dubai சொல்கிறார்:

  he mentioned, at Abudhabi got a permission for have Hindu temple, if it is truly happens, real mile stone his visit . let us wait for official confirmation from govt. so for no hindu temple in abudhabi expect very old siva_krisha temple at dubai.

 8. seshan,Dubai சொல்கிறார்:

  so for no official confirmation from UAE govt side. no new coverage yet only one of the link

  http://www.aljazeera.com/news/2015/08/uae-allocates-land-abu-dhabi-hindu-temple-150817062426501.html.

  Insha allah

 9. paamaran சொல்கிறார்:

  எனக்கு நமது பிரதமரின் நடிப்பு அவர் செல்லும் நாடுகளுக்கு ஏற்ப மாறுவதை பார்க்கும்போது — நமது சிவாஜி என்ன ….. அவரையே மிஞ்சிவிட்டார் என்றுதான் தோன்றும் —- எப்போதோ படித்த ” த , நாகலிங்கம் ” என்பவர் எழுதிய ஒரு சிறிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது …! அந்த கவிதை :—- // எப்படி தான் ஒப்பனை
  இல்லாமல் நடிக்க முடிகிறதோ!
  உலகம் நாடக மேடை
  உண்மைதான் ….
  எத்தனை எத்தனை வேஷங்கள்
  ஒரே முகத்தில்…
  நடிப்பை கற்று கொடுக்கும்
  இயக்குனருக்கே (கடவுள்)
  தெரியாத பொய் நடிப்பு
  ஆயிரங்கள்……
  யாரால் தடுக்க முடியும்
  ஆண்டவனையே மாற்றிவிடும்
  வல்லமை படைத்த
  ஒப்பனையற்ற நடிகர்களை…..? //

 10. P.Chellamuthu சொல்கிறார்:

  K.V.ji நீங்கள் எழுதுவதும் கொஞ்சம் ஓவராகத்தான் (சிவாஜின் நடிப்பு போல)தெரிகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்லமுத்து,

   ஒரு வேளை இருக்கக்கூடும்….

   சில சமயங்களில் சிறிது மிகைப்படுத்தல் அவசியப்படுகிறது.
   சிவாஜி காலத்தில் தேவைப்பட்டது போல…

   எந்த விதத்தில் என்று சொல்லுங்களேன்.
   அவசியமானால், சரி செய்து கொள்ளலாம்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Srini சொல்கிறார்:

   Manjal kamala karan kannuku ellam manjala thaan theriyum… I don’t want to say anything more…

   • today.and.me சொல்கிறார்:

    மஞ்சள் இல்லை என்று நீங்கள் ஒரு புகைப்படத்தை (அதாவது புல் ஆடிட்டோரியத்தை) ப் போட்டிருக்கலாமே நண்ப. ஸ்ரீநி.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக ஸ்ரீநி,

    நீண்ட நாட்களுக்குப் பின் உங்களைப் பார்ப்பதில்
    எனக்கு மிக்க மகிழ்ச்சி. எப்படி இருக்கிறீர்கள்….?

    கோபம் வேண்டாம்… நண்பர் டுடேஅண்ட்மீ – ஜஸ்ட்
    வெறியேற்றுகிறார்….
    உண்மையிலேயே கூட்டம் நிறைய இருந்தது.
    நான் ஒப்புக் கொள்கிறேன்.

    இதெல்லாம் just exchange of thoughts…
    அவரவர் மனதில் தோன்றுவதை இங்கே
    பரிமாறிக் கொள்கிறோம்.
    மாறுபட்ட கருத்துக்களை கொள்ள உங்களுக்கு
    முழு உரிமையும் இருக்கிறது. இங்கு, இந்த தளத்தில்,
    யாரும்-யாரையும், எதற்காகவும் வற்புறுத்துவதில்லை.
    தோன்றுவதைச் சொல்கிறோம் – அவ்வளவே…!

    – வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     புல் ஆடிட்டோரியம் என்று ஒரு க்ளு கொடுத்திருக்கிறேனே, அப்போக்கூட ஆர்க்கியூ பண்ணமாட்டீர்களா நண்ப ஸ்ரீநி.

     “என்னமோ போடா மாதவா”

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர்களுக்கு மற்றும் காமைஜி,

   நான் வெறியேற்றுவதற்காக இந்த இணைப்பைத் தரவில்லை. பின் ஏன் இதைப்போட்டேன் என்கிறீர்களா? உண்மையிலேயே யோசிக்கத்தெரிந்த பாஜகவின் அன்பர்கள் மோடியின் பக்தர்கள் யாராவது இங்கே வந்து கருத்து எழுதுகிறார்களா? அல்லது யோசிக்காமலேயே ஏதாவது காறித்துப்புவார்களா? என்று ஓரிரு நாட்களாகக் காத்திருந்தேன்.

   எதிர்பார்த்தபடியே ஒரே ஒருவர் நண்பர் ஸ்ரீநி மட்டும் வந்து எனக்கு காமாலைக் கண் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

   உங்கள் பங்குக்கு நீங்களும் வந்து வெறியேற்றுகிறேன் என்றுவிட்டீர்கள்.

   ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் பார்த்த கூட்டமும் உண்மைதான், நான் போட்டிருக்கும் புகைப்படமும் உண்மைதான்.

   இதை யாராவது (யோசிக்கத் தெரிந்த பாஜகவினர்) யோசித்து சொல்லியிருந்தால் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

   ஆனால் அவர்களை யோசிக்கவிடாமலேயே கமறும் நாற்றத்தை நீக்க பழுதை சுத்தப்படுத்தாமல் மேலேமேலே செண்ட் அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் தலைகள்.
   __________________________________________________
   என்டிடிவியின் அதிகாரப் பூர்வ புகைப்படம்

   பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பிரதமரை எல்லாரும் நேர்கோணத்திலேயே பார்க்கவேண்டும் என்பதற்காகவும் அவர்பக்கமிருந்த (40+40) 80டிகிரி கோணத்தின் சேர்கள் யாருக்கும் அலாட் பண்ணப்படவில்லை. ஆனால் அய்யோ பாவம், பாஜகவின் மீடியா டீமும் உழைத்து உழைத்து டயர்ட் ஆகிவிட்டதுபோல. க்ளோசப்பில் இந்தப் புகைப்படம் மீடியாக்களில் வந்துவிட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கவில்லை. இதிலே மோடிஜி புகைப்பட வெறியர் வேறு. 😀 😀
   ___________________________________________________________

   பின்குறிப்பு : மோடி உண்மையிலேயே 90சதவீத இந்தியமக்களுக்கு நன்மையை விரும்பியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் மீதி இருக்கும் 10சதவீத இந்தியப் பணக்காரர்களுக்கு மட்டுமே இவர் நன்மையை விரும்புகிறார் என்று தெரிந்துதொலைப்பதால் வந்த வினைதான் இது.

   எனக்கு மூளை என்ற வஸ்துவை இறைவன் வைத்துவிட்டான். அதிலே கொஞ்சம் செலவு செய்யும் அறிவையும் தந்துவிட்டான்.

   எனக்கு நரேந்திர மோடி ஆண்டால் என்ன? மன்மோகன் சிங் ஆண்டால் என்ன? என் சகோதரனுக்கு நன்மை செய்யப்படுகிறதா என்றுதான் பார்ப்பேன். அதைவிடுத்து அவன் கோவணத்தை உருவி தோளில் துண்டாகவும் தலையில் தலைப்பாகையாகவும் தான் கட்டுவேன் என்றால் விமரிசிக்கதான் செய்வேன்.

   பின்குறிப்புக்குப் பின் ஒரு பி.கு.:

   இது மோடி பக்தர்களை வெறியேற்றுவதற்காக உள்ள இணைப்பு :
   நமோ நம 🙂 🙂
   யோசிக்கவே செய்யாதீர்கள் மக்களே, Enjoy…
   😀 😀

   கல்ஃப் நீயூஸ் இணைப்பு
   http://gulfnews.com/news/uae/government/uae-and-india-agree-on-strategic-partnership-1.1568885

   மோடிஜியின் இந்த யுஏஇ ட்ரிப்பின் பாஸிட்டிவ் அப்ரோச் போட்டோக்களைப் போடாததற்காகவும், நான் வெறியேற்றுகிறேன் என்று என்னை வெறியேற்றமைக்காகவும்
   கா.மைஜிக்கு என் கண்டனங்கள்.

   😀 😀

   • today.and.me சொல்கிறார்:

    கல்ஃப் நீயூஸ் இணைப்பு
    http://gulfnews.com/news/uae/government/uae-and-india-agree-on-strategic-partnership-1.1568885

    CLICK ON “MORE PICTURES” ON THE BOTTOM OF THE ARTICLE.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் டுடேஅண்ட்மீ,

    இப்போது தான் வந்தேன்…..
    பின்னூட்டங்களை பார்த்தேன்…..
    முதல் முறையாக உங்கள் கண்டனத்தைக் கண்டேன்…
    நன்றிகள்…..நீங்கள் எதைக் கொடுத்தாலும்
    மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வேன்….!!!

    “வெறியேற்றுகிறார்” – கமெண்ட்ஸ் பற்றி..
    ஸ்ரீநி என் நீண்ட நாள் (நேரில் பார்க்காத) வலை நண்பர்.
    அதிதீவிர மோடி அன்பர்.
    நான் மோடிஜியை தொடர்ந்து குறை சொல்கிறேன்
    என்கிற ஒரே காரணத்தால் –
    கொஞ்ச நாட்களாக “புறக்கணிப்பு” செய்து கொண்டிருந்தார்…
    அதனால் தான் அந்த “சமாதானம்”…

    அடுத்து “காலி மைதானம்” ….!
    நான் முதல் நாளே அத்தனை புகைப்படங்களையும்
    பார்த்து விட்டேன். என்ன காரணங்களால் அந்த 2 ஏரியாக்கள்
    காலியாக இருந்தன என்பதையும் அப்போதே புரிந்து கொண்டேன்.

    நிஜமாகவே கூட்டம் நிறையத்தான் வந்திருந்தது.
    மைதானத்திற்கு வெளியேயும் ஸ்க்ரீன் வைத்திருந்தார்கள்…
    நிறைய பேர் அங்கும் உட்கார்ந்து பார்த்தார்கள்.
    இது உங்களுக்கும் நிச்சயம் தெரியும்…..
    என்பதும் எனக்கு தெரியும்…

    கூட்டம் நிறைய இருந்தது என்று தெரிந்தே
    நீங்கள் “காலி நாற்காலிகள்” ஏரியா புகைப்படத்தை
    போட்டதால் தான் நண்பர் ஸ்ரீநியிடம் –
    கூட்டம் நிறைய இருந்தது – நீங்கள் சும்மா
    “வெறியேற்றுகிறீர்கள்” என்று குறிப்பிட்டேன்.

    நீங்கள் நினைத்தது போலவே தான் நானும் –
    பாஜக நண்பர்கள் யாராவது இதை கண்டுபிடித்து
    சொல்கிறார்களா பார்ப்போம் என்று தான்
    அப்போதும் கூட
    அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.


    – என் நிலையை சரியாக விளக்கி விட்டேனா என்று
    இன்னமும் நிச்சயமாகத் தெரியவில்லை.
    நிச்சயம் ஓரளவாவது சரியாக ( ! ) விளக்கி இருப்பேன்
    என்று நம்புகிறேன்.

    என்றும் அன்புடனும் –

    -வாழ்த்துக்களுடனும்,
    காவிரிமைந்தன்

    பின் குறிப்பு –
    உங்கள் பின் குறிப்பிலிருந்து என் பின் குறிப்பு
    மாறுபட்டு இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்…?
    அதே பின் குறிப்பு தான் எனக்கும்…..!!!

    ( இவ்வளவு நாட்களாக முயன்றும் இன்னும்
    ஸ்மைலீஸ் மட்டும் போட வரவே மாட்டேனென்கிறது… !! )

    • today.and.me சொல்கிறார்:

     புரிந்துணர்வுக்கு நன்றி ஜி.
     🙂 🙂

     • today.and.me சொல்கிறார்:

      //( இவ்வளவு நாட்களாக முயன்றும் இன்னும்
      ஸ்மைலீஸ் மட்டும் போட வரவே மாட்டேனென்கிறது… !! )//

      colon hyphen close bracket space/enter 🙂
      colon hyphen open bracket space/enter 😦
      colon hyphen capital D space/enter 😀

      இப்போதைக்கு இதுபோதும்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      குருவே சரணம்…. 🙂 😦 😀

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.