மாயா மாயா – எல்லாம் மாயா ….!!!

.

.

பதவியேற்ற 15 மாதங்களில் 26 நாடுகளுக்கு விஜயம்.
பல நாடுகளிலும் பல ஒப்பந்தங்கள்.
ஜப்பானிலிருந்து – 6 லட்சம் கோடிகள்…
சீனாவிலிருந்து – 3 லட்சம் கோடிகள்…
ஆஸ்திரேலியாவிலிருந்து – 1.5 லட்சம் கோடிகள்….

இன்னும், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா …இப்படி
முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியல்கள்
வளர்ந்து கொண்டே போகின்றன.
இதில் வந்தது எவ்வளவு …
காற்றோடு போனது எவ்வளவு….?
அவரையன்றி வேறு யாரறிவார்….?

கடைசியாக UAE, மற்றும் துபாய் விஜயம்…..
நாலரை கோடி – உபயம்….!!!

துபாயில் சுமார் 45,000 இந்திய சமூகத்தவர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் வரவேற்புக் கூட்டம்.
40,000 free food packets, drinking water bottle –
hand fans etc. etc., இலவச போக்குவரத்து வசதிகள் –
அதற்காகவே பெறப்பட்ட 200 பஸ்கள் …
வெளிநாடுகளிலிருந்து இதற்காகவே வரவழைக்கப்பட்ட
35 இசை மற்றும் நடன கலைஞர்கள் –
அவர்களது கலை நிகழ்ச்சிகள் – அவற்றிற்கு பின்னர்
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நீண்ட உரை…..

மகுடி வாசிக்கும் பாம்பாட்டிக்கு கட்டுப்பட்டது போல்
மயங்கிக் கிடந்த கூட்டம்….
2013-லேயே இஸ்லாமிய வர்த்தகர் ஒருவரால், அபுதாபியில் அக்ஷர்தாம் கோவில் கட்ட நன்கொடையாக கொடுக்கப்பட்ட நிலத்தை, தலைவர் சென்றபோது தான்
அபுதாபி பட்டத்து இளவரசர் allot செய்தது போல் ஒரு புனைவு..!
(இந்த கோயிலிலும், சிலை வடிவம் கூடாது…
படம் மட்டும் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்….!)

– கூடி இருந்த கூட்டத்தை, எல்லாரும் எழுந்து நின்று
கை தட்டி ஒரு தடவை இளவரசருக்கு “ஜே” சொல்லுங்கள்
பார்க்கலாம் என்று சொல்ல அங்கிருந்த சாம்பிராணிகளும்
பலத்த ஓசையெழுப்ப ….

( அந்த கூட்டத்திலிருந்தாலும், இந்த மகுடி வாசிப்புக்கு
மசியாமலிருந்த நண்பர் சேஷன் போன்றவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்…
)

மாயா – மாயா எல்லாமே மாயா …!

– எல்லாமே நன்றாகத்தான் இருந்தன…!
நிகழ்ச்சிகள் எல்லாமே –
-பார்க்கவும், கேட்கவும் நன்றாகவே இருந்தன.
ஆனால் நிஜம், உண்மைத்தன்மை ….?

– இதன் பின்னணியில் இன்னமும் சில விஷயங்கள் –
வெளியில் விவரம் தெரியாத விஷயங்களும் இருக்கின்றன ….அவை என்றும் வெளியில் வரவும் வராது…!
குஜராத்திலிருந்து, டெல்லியிலிருந்து,
பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளிலிருந்து –

சுமார் 600 cheer leaders…. முன்னதாகவே சென்று –
நிகழ்ச்சிகளை, ஏற்பாடுகளை – ஒருங்கிணைக்கவும் –
உற்சாகமாக நடத்தவும் சென்றிருக்கின்றனர்.
கூட்டத்திலிருந்து அவ்வப்போது “மோதி, மோதி” என்று
கும்பலாக கோரஸ் கிளம்பியதே – அவற்றின்
துவக்க உற்பத்தியாளர்கள் (கிக் ஸ்டார்டர்ஸ்…! ) இவர்கள் தான் …!

ஒரு மாதத்திற்கும் முன்னதாகவே திரு ராம் மாதவ் சென்றிருந்து,
அனைத்து மனிதர்களையும், நிறுவனங்களையும், நிகழ்ச்சிகளையும்
முன்னின்று ஒருங்கிணைத்து செயல்பட வைத்தார்.
துபாய், அபுதாபியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும்,
குஜராத்தி மற்றும் சிந்தி வர்த்தக பிரமுகர்கள்
மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் செயல்பட்டனர்.

இவை எல்லாவற்றிற்கும் –
மொத்தம் எவ்வளவு செலவு ஆகி இருக்கும்….?
இவற்றை எல்லாம் யார் கொடுத்திருப்பார்கள் …?

community funding என்று சொன்னார்கள்…
இத்தனை கோடிகள் அப்படி முடியுமா ?
வேறு எப்படி திரட்டி இருப்பார்கள்…?
யார் கண்டது …!!!
ஒவ்வொரு பயணத்தின் மூலமும் பயன்பெறுகிறார்களே,
அடானி, அம்பானி, சோட்டானி, படானி என்றெல்லாம் –
அவர்களைக் கேட்டால்,
அவர்கள் சொன்னால் –
ஒருவேளை தெரிய வரலாம்..

போயாயிற்று …. வந்தாயிற்று….
சென்றார்…. வென்றார்… வந்தார்…
இனி அடுத்த மாதத்திற்கான
அடுத்த பயணத்தை கவனிக்க வேண்டும்…
அதற்குள் பீகார் தேர்தல் கூட்டங்கள் வேறு …!

உள்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை யார் கவனிப்பது ….?
பிரச்சினையா …? ஏது பிரச்சினை ? இங்கு ராமராஜ்ஜியம்
அல்லவா நடந்து கொண்டிருக்கிறது….
மாதம் மும்மாரி பொழிகிறது…ஒரு குறையுமில்லை…
மக்கள் சந்தோஷ வெள்ளத்தில் திளைக்கிறார்கள் –
– யாராவது சொல்ல முடியுமா …?

நான்கு நாட்களுக்கு முன்னர் தான்
சுதந்திர தினம் கொண்டாடினோம்…

கலர் கலராக முண்டாசு அணிந்து கம்பீரமாக –
கோட்டை மீது, கொடியின் கீழ் நின்று –
ஒன்றரை மணி நேரம் உரை நிகழ்த்தியாயிற்று…

எனக்கு பாரதி பாடலின் சில வரிகள் நினைவிற்கு வருகின்றன….
————

தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்.

————-

2500 மைல்கள் நீளமுள்ள பாரத நாட்டின்
வடக்கு, கிழக்கு, மேற்கு – எல்லைகளை
இரவும் பகலும், 24 மணிநேரமும் தொடர்ந்து காக்கும் வீரர்கள் –

“காணரும் வீரர் பெருந்திருக்கூட்டம் –
நம்பற்க்குரியர் அவ்வீரர் – தங்கள் நல்லுயிர் ஈந்தும் –
கொடியினைக் காப்பார்…”

நீங்களும், நானும், இந்த தேசத்தின் 125 கோடி மக்களும்
இரவில் சுகமாகத் தூங்கும்போது –
விழித்திருந்து,
அந்த எல்லைகளைக் காக்கும்,
நம் தாய்த்திரு நாட்டின் கொடியை காக்கும் வீரர்கள் –

OROP-1

அந்த கொடிக்கம்பத்திலிருந்து just –
5 கல் தொலைவிற்குள்ளாகவே –
64 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்….
தங்கள் ஓய்வூதியத்திற்காக….
நேற்று முதல் மூன்று வீரர்கள் “சாகும் வரை உண்ணாவிரதம்”….!

அப்படி என்ன கேட்டு விட்டார்கள் ?
காங்கிரஸ் ஆட்சியில் ஏற்கெனவே போடப்பட்டு
விட்ட உத்திரவை –
தேர்தலுக்கு முன் நடந்த 400 பேரணிகளிலும்,
திரும்பத் திரும்ப அளிக்கப்பட்ட வாக்குறுதியை –
OROP – One Rank One Pension –
நிறைவேற்றிக் கொடுங்கள் என்று தான்.

60 வயது 70 வயது முதியவர்கள், ஓய்வு பெற்ற படைவீரர்கள் –
சுதந்திர தினத்தன்று
பட்டினி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று என்று தானே கேட்கிறார்கள்…?
சிறிதாவது கவலை, குற்றவுணர்வு உண்டா ….?
மனசாட்சி இருப்பவர்களுக்கு தானே குற்றவுணர்வு,
மண்ணாங்கட்டி எல்லாம்…

கிடக்கிறார்கள் பத்து நாட்கள் பட்டினி கிடந்து விட்டு,
தானே வழிக்கு வருவார்கள்…. அதற்குள்
நாம் பீகார் தேர்தலில் ஜெயிக்கும் வழியை பார்ப்போம்.

————————

கொடியின் கீழ், சல்யூட் அடித்து விட்டு அடித்த லெக்சரில்
சொல்லப்படுகிறது ” நான் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள்
ஆகப்போகிறது. ஒரு குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு உண்டா –
என் அரசின் மீது…? “

“கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் –
கேட்பவனுக்கு புத்தி எங்கே போயிற்று ? “
என்று
நம்மூரில் கேட்பார்கள்…

21 நாட்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்
அல்லோலகல்லோலப்பட்டது –
மத்திய பிரதேச முதல்வரின் “வியாபம்” ஊழல் –
ராஜஸ்தான் முதல்வரின் “லலித் மோடி –
கள்ளப்பண ஓட்டல் ” ஊழல் –
வெளியுறவு அமைச்சரின் “லலித் மோடி பாஸ்போர்ட்-விசா” ஊழல்

முதல் இரண்டும் – மாநில முதல்வர்கள் சம்பந்தப்பட்டது,
பிரதமர் எப்படி பொறுப்பு ஆவார் என்று கேட்கலாம்.
பிரதமர் வேறு – கட்சி வேறு என்றா இங்கே இருக்கிறது …? கட்சித்தலைவர் யார் ..?
பிரதமரே பார்த்து “நீ இங்க குந்து ” என்று சொல்லி
உட்கார வைக்கப்பட்டவர் தானே …?

மத்திய அரசு என்கிற முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை
என்றாலும் – கட்சித்தலைவர் என்கிற முறையில்
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது …?

வெளியுறவு அமைச்சர், தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு
பதில் கூறுவதற்கு பதிலாக, செத்துப்போன பிரதமர் பெயரில்
ஊழல்களை பட்டியல் போடுகிறார்.

” யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது –
உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் ”
என்று
எதிர்க்கட்சிகளிடம் சொல்லி விட்டு, GST யை நிறைவேற்ற
காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்று ஜனாதிபதி வீட்டுக்கு
ஆளும் கட்சியினர் ( ! )ஊர்வலம் போகிறார்கள்.

குறைந்த பட்சம் பிரதமர் அவைக்கு வந்து விளக்கமாவது
அளிக்கட்டும் என்று கேட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கொடுத்த
மரியாதை …? 21 நாட்களும், அவையில் தன் திருமுகத்தை ஒரு பக்கமா, திருப்பிக் கூட காட்டவில்லை.

செங்கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி விட்டு – “என் ஆட்சியில் ஒரு ஊழல் புகார் உண்டா? ” என்று கேட்க கொஞ்சமாவது ஒரு கூச்சம், குற்ற உணர்வு இருக்க வேண்டாம் …?

சொரணையை விடுவது தானே
வெற்றிகரமான அரசியல்வாதிகளின் முதல் தகுதி….!

( தொடர்கிறது )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to மாயா மாயா – எல்லாம் மாயா ….!!!

 1. today.and.me சொல்கிறார்:

  1.
  //கடைசியாக UAE, மற்றும் துபாய் விஜயம்…..//
  Are you sure about கடைசியாக ..?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   இருந்தாலும் அவ்வளவு ஆசை கூடாது உங்களுக்கு…..!

   196-26 = இன்னும் 170 நாடுகள் இருக்கின்றன.
   கிட்டத்தட்ட இன்னும் 4 வருட சர்வீஸ் பாக்கி இருக்கிறது.
   உங்கள் கனவு பலிக்க வாய்ப்பே இல்லை….
   so….sorry….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • நண்பர் டுடே அண்ட் மீ அவர்களுக்கு UAE என்பது நாட்டின் பெயர் அதில் அபுதாபி, துபாய், ஸார்ஜா என்பது ஊரின் பெயர்கள்.
   – கில்லர்ஜி

   • today.and.me சொல்கிறார்:

    கில்லர்ஜி,
    நீங்கள் எழுதியுள்ளது உண்மைதான். தெரியும். ஆனால் என்னை ஏன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. காமைஜி எழுதியதைத்தான் நான் மேற்கோளிட்டு காட்டியிருக்கிறேன்.

    Anyway,

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பின்னூட்டத்தில் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    பி.கு. ஆனாலும் உங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சியை ஆப்செண்ட் ஆக்கிவிட்டீர்களே. மோடிஜிக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்.
    😦

    • நண்பர் டுடே அண்ட் மீ அவர்களுக்கு வணக்கம் புரிதலின் தவறு என்பதை ஒத்துக்கொள்கிறேன் இந்தியா வந்திருந்தேன் ஆகவே வலைப்பக்கம் குறைவு நன்றி நண்பரே..

     பி.கு. நான் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதை மோடிஜிக்கு தெரியாமல் வைத்திருக்கிறேன் தாங்கள் மோடிஜியிடம் போட்டுக்கொடுக்காமல் இருந்தால் சந்தோஷமே…

 2. சதிஸ் சொல்கிறார்:

  அருமையான கட்டுரை , ஆனால் இங்குள்ளவர்வகள் மாயை என்பதை இன்னும் அறியவில்லை.

 3. வணக்கம் ஐயா நலமா ? அனைத்தும் பிரமாண்டமான தகவல்கள் நான் காண்பதற்க்கு போகவில்லை ஐயா இத்தனைக்கும் நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரமே… காரணம் எனது பணத்திலும் இவர் நாடு சுற்றுகின்றாரே… தொடர்கிறேன்…. நன்றி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நலம் விசாரிப்புக்கு நன்றி கில்லர்ஜி,

   அடிக்கடி வந்து போகலாமே…
   தொடர்பு விட்டுப் போகாமல் இருக்கும் …..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: மாயா மாயா – எல்லாம் மாயா ….!!! | Classic Tamil

 5. drkgp சொல்கிறார்:

  போனமுறை பிரதமராக இருந்தவர் இதில் பாதி – இல்லை கால் வாசியாவது பேச நடிக்க கற்று
  வைத்திருந்திருப்பாரேயானால் வெளிவந்த ஊழல்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டிருக்கும்
  அல்லது சாமர்த்தியமாக மறுக்கப்பட்டிருக்கும் என்று எண்ணத்தொன்றுகிறது.

  • புது வசந்தம் சொல்கிறார்:

   உங்கள் வார்த்தை முற்றிலும் உண்மை.

  • Ganpat சொல்கிறார்:

   அருமையான கருத்து.முன்னவருக்கு பேசத்தெரியவில்லை.இல்லையெனில் இவ்வளவு ஊழல் வெளி வந்திருக்காது.இனிமேல் அப்படி எதுவும் நடக்காது 😉

  • today.and.me சொல்கிறார்:

   போனமுறை இருந்தவருக்கு பேசுவதற்கு பெர்மிஷன் கொடுக்கப்படவில்லை.

   இந்தமுறை வந்திருப்பவருக்கு பெர்மிஷன் தர ஆளே இல்லை.

   🙂 🙂

   சுனாமி பாஜகவின் பினாமி காங்கிரஸ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் கேஜிபி,

   நீங்கள் சொல்வதும் சரியே.
   ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல்கள் வெளிப்பட்டதற்கு
   இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது…

   ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்….
   தயாநிதியை – ராஜாவும்,
   ராஜாவை – ப.சி. யும் ….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  ஐயா, உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் உங்களது கோபமும் வலியும் தெரிகிறது. உண்மை எட்டு திக்கும் எட்ட வேண்டும்.

 7. paamaran சொல்கிறார்:

  அமீரக எஃபெக்ட்: அரபு மொழியில் ட்வீட் செய்த மோடி ;—Narendra Modi ✔@narendramodi
  وكانت زيارة الإمارات العربية المتحدة خارقة للطريق، حصلت فرصة التفاعـل مع قيادة الإمارات العليا والإجمتاع مع المستثمرين والمجتمع الهندي
  11:05 PM – 17 Aug 2015 Narendra Modi ✔@narendramodi
  سوف تنمو العلاقات بين الدولتين بوتيرة تاريخية، إكتشفنا المجالات الجديدة للتعاون ودعوت المستثمرين لمشاهدة التغييرات فى الهند…!
  11:06 PM – 17 Aug 2015…… ! அப்புறம் என்ன சார் …. குறை …!! நமெக்கெல்லாம் …… ? இவ்வளவு திறமையான ” சகஜ்ஜால ” கில்லாடியை பிரதமராக பெற்றபின் —- ” குறையொன்றும் இல்லை — மறைமூர்த்தி கண்ணா ” என்று பாடி சந்தோஷ படுவதை விட்டு —- மாயா மாயா — எல்லாம் மாயா ….!!! என்று எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் …..?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   ஓ… அமீரகம் சென்று அரபியில் ட்வீட் செய்யும் “நமது” பிரதமர், தமிழகத்தில் வந்து ஹிந்தியில் மட்டும் பேசுவது…
   அங்கேதான்யா நிக்கிறார் நாயக்… க(h)ல் நாயக்!

   • today.and.me சொல்கிறார்:

    அஜீஸ்ஜி
    தமிழிலும் ட்வீட்டியிருக்கிறார் மோடிஜி

 8. Ramachandran. R. சொல்கிறார்:

  அய்யோ : இந்த நாட்டு மக்களை எப்படி எல்லாம்
  ஏமாற்றி வருகிறார். இன்னமும் பலர் மோடி மஸ்தான் மயக்கத்திலேயே
  இருக்கிறார்களே. இவர்களை இந்த மயக்கத்திலிருந்து
  விழிப்படைய செய்வது எப்படி கே.எம்.சார் ?

 9. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஓ… அமீரகம் சென்று அரபியில் ட்வீட் செய்யும் “நமது” பிரதமர், தமிழகத்தில் வந்து ஹிந்தியில் மட்டும் பேசுவது…
  அங்கேதான்யா நிக்கிறார் நாயக்… க(h)ல் நாயக்!

 10. seshan,Dubai சொல்கிறார்:

  As you said, OROP – One Rank One Pension – i could not understand why these govt’s are not implementing immtly. they are not asking hike. need to regular/ uniform based on rank.

  else they are expecting some commission from the benefitery like general politician right.

  When 95 yrs ex-military man came and done the final salute to APJ body at Delhi, i am really pissed off by this non action new govt.

  they know. military/ex military not like bankers/ other govt staff they will do the strike on their duty.

  they word Maya is the appropriate word for modi masthan & co.

 11. paamaran சொல்கிறார்:

  சொல்லின் செல்வர் .ஈ.வி. கே . சம்பத் அவர்களின் புதல்வர் —- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் சொல்லினை பற்றி ….. திரு.கா.மை. தங்களின் ஒப்பீடு .?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சொல்லின் செல்வர் தந்தை….!

   சாக்கடைச் செல்வர் மகன்…!!!

   எப்பேற்பட்ட தந்தைக்கு –
   இப்பேற்பட்ட ஒரு பிள்ளை….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM,

  சென்றார்…. வென்றார்… வந்தார்… – What has he won ? And for whom ? …….Arab Sheikhs are not any other people to allow an ardent Hindu ruler to portray his popularity in their soil….. something is there…… as I always believe – In a macro level, every political decision has some business behind it and every business decision has some politics behind it………….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக சன்மத்,

   நீங்கள் சொல்வது உண்மையே.

   இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டினால்,
   மேலும் விவரங்கள் கிடைக்கக்கூடும்.
   பார்ப்போம் … நண்பர்கள் todayandme மாதிரி
   யாராவது உதவி செய்வார்கள்…. !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   //every political decision has some business behind it
   and
   every business decision has some politics behind it///

   LOVELY

 13. Sharron சொல்கிறார்:

  KMji sir, delete the Australian investment 1.5 from the list.I think it’s gone.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஷரோன்,

   நிறைய வாக்குறுதிகள் இப்படித்தான்
   காற்றோடு போய் விட்டன என்று
   நினைக்கிறேன்.

   யாராவது தொடர்ந்து follow பண்ணி
   கண்டு பிடித்தால் தான் தெரிய வரும்.
   அதுவும் இதற்கெல்லாம் காலவரம்பு இல்லையே…
   வரும் வரும் என்று சொல்லிக்கொண்டே
   இருப்பார்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.