( பகுதி-2 )- மாயா -மாயா ….! அலட்சியம், அகம்பாவம், ஆணவம் ….

PTI8_18_2015_000097B

PTI8_18_2015_000097B

மத்திய அரசின் நிதி என்பது பல வேறுபட்ட வரிகளாலும்,
மாநில அரசுகள் வசூலிக்கும், நேரடி மற்றும் மறைமுக
வரிகளாலும் ( direct and indirect taxes ) திரட்டப்படுவது.

இந்த நிதியை எப்படி செலவழிக்க வேண்டும் –
இதில் பல்வேறு மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுக்க
வேண்டும் என்பதை அரசியல் சட்டமும், அதன் கீழ்
அமைக்கப்பட்டுள்ள நிதி கமிஷனும் வழியமைத்துக் கொடுத்துள்ள
விகிதங்களின்படியும், வழிமுறைகளின்படியும் தான்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நடைமுறையில் இதில் கொஞ்சம்
நீக்கு போக்குகளை கையாள முடியும்…

ஆனால் – சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகு –
முதல் முறையாக பிரதம மந்திரியாக செயல்படும் ஒருவர் –
மத்திய அரசின் நிதியனைத்தும், தன் பாக்கெட்டில் இருப்பதாக
ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, தான் நினைக்கும் யாருக்கும் – எந்த மாநிலத்திற்கும் – தன் விருப்பம் போல் அதை பங்கு போட்டு கொடுக்க முடியும் என்பது போலவும் பேசுகிறார்….

வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும்
பீகார் மாநிலம் ஏலத்தில் எடுக்கப்படுகிறது…. மோடிஜியால் …
.
———
50 ஆயிரம் கோடி, 60 ஆயிரம் கோடி , 80 ஆயிரம் கோடி,
ஒரு லட்சம் கோடி, ஊஹூம் ….. எல்லாவற்றையும் தாண்டி – ஒண்ணேகால் லட்சம் கோடி ரூபாய் விசேஷ நிவாரணமாக, பீகாருக்கு தருகிறேன். பதிலுக்கு, வருகின்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டு, நிதிஷ்குமாரை தூக்கியெறிய வேண்டும்….

————
நான் சொன்னால் நம்பிக்கை வருகிறதோ இல்லையோ –
கீழே இருக்கும் செய்திக் கட்டத்தை பாருங்கள்….
(தினமலர் – 18 ஆகஸ்ட், 2015 )

dinamalar- 18.8.2015 -bihar-modiji -

நான் இவ்வளவு கோடிகள் கொடுக்கிறேன் –
எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வெளிப்படையாகவே
சொல்கிறார்….
துபாயிலிருந்து திரும்பியதும் நேரே பீகார் தேர்தல் கூட்டத்தில்
பேசிய பேச்சு தான் இது……

யார் அப்பன் வீட்டுப்பணம் இது …
பீகாரை ஏலத்தில் எடுக்க கொடுக்கப்படும் பணம் யாருடையது ..?
மோடிஜியுடையதா …?
பாஜக வுடையதா …?

இந்த நாட்டு மக்களின் வரிப்பணம். அதை செலவிடுவதற்கு,
கொள்கைகளை தீர்மானம் செய்யும் அமைப்புகள் இருக்கின்றன…
வழிமுறைகள், நெறிமுறைகள் இருக்கின்றன….
பாஜக வுக்கு ஓட்டு வாங்க அந்த பணத்தை செலவிடுவது
அப்பட்டமான அயோக்கியத்தனம் அல்லவா ?

அரசியல் சாசன விதிகளுக்கே முரணானவை அல்லவா …?
இதை என்னவென்று பொருள் கொள்ள …
ஆணவம் ? அகம்பாவம் …?

—————————————-

பொதுவாகவே – அரசு நிறுவனங்கள் அரிதாகவே லாபம்
சம்பாதித்துக் கொடுக்கும். ஆனால், கடந்த ஆண்டு –
தமிழ்நாட்டின், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஈட்டிய லாபம்
1,843.74 கோடி ரூபாய்…

இங்கு நாளொன்றுக்கு சுமார் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. ( இதில் தமிழ்நாடு மட்டுமே
1450 மெகாவாட் மின்சக்தியை கொள்முதல் செய்கிறது.)
இந்த நிறுவனம் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின்
நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது.

இங்கு ஜூலை 30ந்தேதி முதல் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக,
தொடர்ந்து வேலைநிறுத்தம் நடக்கிறது. நல்ல லாபத்துடன்
நாட்டின் வளர்ச்சிக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும்
மின்சக்தியையும், நிலக்கரியையும் உற்பத்தி செய்யும் இந்த
நிறுவனத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தால் கூட –
அது நாட்டிற்கு நஷ்டமே.

மற்ற சில காரணங்களுடன் –
2012-லேயே சீரமைக்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்கள்
இன்னும் சீரமைக்கப்படவில்லை என்பது ஒரு முக்கிய காரணம்.

பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தாலும்,
எந்தவித முடிவும் இன்று வரை எட்டப்படவில்லை.

1850 கோடி வரும் லாபத்தில், 50 அல்லது 100 கோடியை
ஊழியர்களுக்கு விட்டுக் கொடுத்தால் தான் என்ன …?
ஆனால், மத்திய அரசு –
எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்தது போல்
சுரணையற்று கிடக்கிறது. ஏன் இந்த அலட்சியம்….?

வளம், வளர்ச்சி, உற்பத்தி -பொருளாதார உயர்வு – இவை தான்
எங்கள் தாரக மந்திரம் என்று டமாரம் அடித்துக் கொண்டிருக்கும்
ஒரு அரசு இப்படி செயல்படாமல் இருப்பது எதனால்…..

அத்தனை அலட்சியமா ? தொடர்ந்து சம்பளத்தை இழந்து
எத்தனை நாட்கள் தான் வேலைநிறுத்தம் செய்ய முடியும் …?
Ignore ( அலட்சியம் ) செய்தால், தானாக தொழிலாளர்கள்
வழிக்கு வருவார்கள் என்கிற எண்ணம் தானே ….?

—————————-

நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகள், பள்ளிகளில் உள்ள
மதிய உணவுத் திட்டத்திற்கு (சத்துணவு திட்டம்), இதுகாறும்,
எல்பிஜி சிலிண்டர்கள் மான்ய விலையில் கிடைத்து வந்தன.
அவற்றின் சமையல்கூடங்கள் எல்பிஜி வாயுவை
பயன்படுத்துவதால், சுகாதாரமாகவும், சுத்தமாகவும்,
மலிவாகவும் சமையல் செய்யப்பட்டு வந்தது.

( தமிழ்நாட்டின் அத்தனை சத்துணவு சமையல்கூடங்களுக்கும்,
தமிழக அரசு இலவசமாக, ஸ்டவ்வும், முதல் சிலிண்டர்
இணைப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது ) இதற்கு
முன்னதாக குச்சிகள், குப்பைகள், சுள்ளிகளை பொறுக்கி
எரித்து தான், திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில்
குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கப்பட்டு வந்தது )

திடீரென்று மே 15-ந்தேதி, ஒரு நிர்வாக உத்திரவின் மூலம்,
மத்திய அரசு – அங்கன்வாடிகளுக்கும், சத்துணவு கூடங்களுக்கும்
மான்யவிலையில் எல்பிஜி சிலிண்டர் அளிப்பதை
தடை செய்து, இனி அவை சந்தை விலையில் தான் பெறப்பட
வேண்டும் என்று கூறி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டுமே, 42,500 சத்துணவு கூடங்களும்,
54,400 அங்கன்வாடிகளும் செயல்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, அரசு ஒதுக்கும் நிதியில், சமையல் பொருட்கள்,
காய்கறிகள், முட்டை ஆகியவற்றை வாங்கவே திணறும்
இந்த சமையல்கூடங்களில் பணி புரிவோர் – இனி சுள்ளி,விறகு தேடி அலையும் பரிதாபத்திற்கும் ஆட்படப்போகின்றனர்.

இந்த நிலை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல…
நாடு முழுவதும் செயல்படும் அனைத்து
மதிய உணவுக் கூடங்களுக்கும் தான்.

கோடிகளில் வாங்கும் சினிமா நடிகர்கள்,
மந்திரிகள்,
எம்.பி.க்கள்,
எம்.எல்.ஏக்கள்,
பெரும் தொழிலதிபர்கள், மொத்த வியாபாரிகள் –
அத்தனை பேரும் இன்னமும் –
மான்ய விலையில் தான் சிலிண்டர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கவர்ச்சியான விளம்பரங்களின் மூலம் அவர்களை –
மான்யத்தை “கைவிடச் சொல்லி” மத்திய அரசு
மாதக்கணக்கில் வேண்டுகோள்
விடுக்கிறது…விடுக்கிறது…. விடுத்துக் கொண்டே இருக்கிறது.

ஆனால், சமுதாயத்தின் கடைசி மட்டத்தில் உள்ள மக்களின்
குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில் just an
administrative order மூலம் கைவைத்து விட்டது..

இந்த நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை
கொண்டு வந்தது எதற்காக …? இன்னும் வளங்களையும்
வசதிகளையும், ஊழலற்ற நல்ல நிர்வாகத்தையும் எதிர்பார்த்தா ?
அல்லது இருக்கின்ற சலுகைகளையும் ஒவ்வொன்றாக
இழப்பதற்காகவா …?

தேர்தலுக்கு முன்னதாகவே சொல்லி இருக்கலாமே –
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சலுகைகள் அனைத்தும் –
தொழிலதிபர்களுக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும்
மட்டும் தானென்று…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ( பகுதி-2 )- மாயா -மாயா ….! அலட்சியம், அகம்பாவம், ஆணவம் ….

 1. Pingback: ( பகுதி-2 )- மாயா -மாயா ….! அலட்சியம், அகம்பாவம், ஆணவம் …. | Classic Tamil

 2. வணக்கம் ஐயா மக்கள் மனதில் மாற்றம் வராதவரை மாற்றம் வரப்போவதில்லை இதனால் நியாயமான மனிதர்களும் அக்கட்டத்துக்குள் அடைக்கப்படுகின்றார்கள்

  கோடி, கோடி, எல்லாமே கோடி யாருடையது ? தெருக்கோடியில் நிற்கும் என்னுடையதும் கூட…
  ஊரான் விட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே”ன்னானாம்…

 3. ஐயா நான் இந்தியா வந்திருந்தேன் ஆகவே வலைப்பக்கம் வரவு குறைந்து விட்டது தொடர்வேன்
  நட்புடன் கில்லர்ஜி

 4. seshan சொல்கிறார்:

  Sir

  Now you can recall mr.advani comment will fit autimatically.

  Recently when i watching lok saba sushma argement mr advani was sitting next her watching her with painful face able to understand the expression of diiernt feelings. Poor modi not lucky to watch because he was too busy and not able to reach ls.

 5. paamaran சொல்கிறார்:

  அகமதாபாத்: ரூ440 கோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
  அகமதாபாத்: ரூ440 கோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
  தற்போது குஜராத்தில் கால் நடைத்துறை அமைச்சராக இருக்கும் புருஷோத்தம் சோலங்கி, முன்னாள் அமைச்சர் திலிப் சங்கானி மற்றும் 5 ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீன்பிடி குத்தகை விடுவதில் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேண்டியவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு அகமதாபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது….. இது தற்போதைய செய்தி …! Read more at: http://tamil.oneindia.com/news/india/corruption-taint-on-bjp-gujarat-233834. இது எப்படி இருக்கு …? மோடிஜியின் சொந்த மாநிலத்தில் நடந்துள்ளது …. ஊழலற்றவர்கள் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   குஜராத் மாதிரியே, மத்தியிலும்
   நடக்கத் துவங்கி விட்டன. ஆனால், ஆட்சி
   தொடரும் வரை விஷயங்கள் வெளியே தெரிய
   விட மாட்டார்கள். வியாபம் கொலைகளை
   பார்த்த பின்னர் யார் பேசத்துணிவார்கள்…?
   ஆட்சி நிச்சயமாக முடிந்தது என்று தெரிந்த பிறகே
   விஷயம் தெரிந்தவர்கள் பேச துவங்குவார்கள்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி: லாலு தாக்கு!
  http://www.vikatan.com/news/article.php?aid=51240

 7. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  This not related to this post. But wish to bring to your notice a poem by the an IPS officer sacked :
  “I have principle and no power
  You have power and no principle
  You being you
  And I being I
  Compromise is out of the question
  So let the battle begin…
  I have truth and no force
  You have force and no truth
  You being you
  And I being I
  Compromise is out of the question
  So let the battle begin…
  You may club my skull
  I will fight
  You may crush my bones
  I will fight
  You may bury me alive
  I will fight
  With truth running through me
  I will fight
  With every ounce of my strength
  I will fight
  With my last dying breath
  I will fight…
  I will fight till the
  Castle that you built with your lies
  Comes tumbling down
  Till the devil you worshipped with your lies
  Kneels down before my angel of truth.”

 8. Sella சொல்கிறார்:

  Dear KM:
  i/வளம், வளர்ச்சி, உற்பத்தி -பொருளாதார உயர்வு/
  only to the corporates.

  We have supported Modi strongly, they formed a strong government and returning the fire to us. Similar thing will happen with JJ also. With your opinion of ‘better among the lots’ will sure fit to JJ but we should have the heart the oppose any misdeed of her government at any stage (any government should get the same watchful comments).

  Lesson: Don’t support JJ strongly, let the readers think and decide. Nevertheless I pray KK and his family are to be eradicated from the politics; let them do the business openly elsewhere.

 9. paamaran சொல்கிறார்:

  சிறார்களுக்கான சத்துணவு — மற்றும் அங்கன்வாடிகளுக்கு மானியத்தில் கேஸ் சிலிண்டர்களை கொடுக்க மறுப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை —- ஏனென்றால் குழந்தைகளுக்கு சத்துணவில் கொடுக்கும் “கடலை மிட்டாயிலேயே ” ஆட்டய போட்டவர்களாச்சே — இவர்கள் ….. !

 10. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Had any strong condemnation come from our state govt so far reg cut on subsidized cylinders??…… What I feel is, some work can be done on subsidy to people who earn more than 10lakhs per annum…..

  One thing is for sure…… They will go in the same pace and direction….. when election comes closer(like an year ahead or so), again they would rope in some jewish PR agency to do all gimmicks….. BJP must be thinking like this

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.