லாலு சரி இல்லை – நிதிஷ்குமாரும் சரி இல்லை – இருந்தாலும் – பீகாரில் அவர்கள் தான் ஜெயிக்க வேண்டும்…!!!

.

.

கீழே இருப்பது எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் மதிப்பீடு –

——————–
Coupled with the BJP’s ‘parivartan raths’ or
publicity vans, fitted with 55-inch LCDs and
GPS tracking system, touring the state to spread
Prime Minister Narendra Modi’s call for change,
the activists on the ground appear to have
caught the ruling JD (U)’s grand alliance \
underprepared.

———————

modiji camp in bihar

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத்தில் வெற்றிக்கொடியை நாட்டிட, பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே
பிரதமர் மோடிஜி பத்து நாட்களுக்கு ஒரு முறை பீகார்
விசிட் அடிக்கத் துவங்கி விட்டார். ஏகப்பட்ட வாக்குறுதிகள்….
லேடஸ்ட் – ஒன்றேகால் லட்சம் கோடி உபயம்….!!!

lalu, nitish

லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், காங்கிரஸ் கூட்டணி
வெற்றிக் கனியை பறிக்க தன்னால் இயன்ற அனைத்தையும்
செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

லாலு, நிதிஷ்குமார் இருவருக்குமே தனித்தனியாக –
குறைகள் நிறைய இருக்கின்றன. பாஜக வை தோற்கடிக்க
வேண்டும் என்கிற ஒரே குறிக்கோள் தான் அவர்களை
இணைந்து செயல்பட வைக்கிறது.

யார், எந்த கட்சி, என்ன தான் கொள்கைகளை முன்வைத்துப்
பேசுவதாக காட்டிக் கொண்டாலும் –
உண்மையில் பீகார் தேர்தல் களத்தில் விளையாடுவது,
விளையாடப்போவது –

ஜாதி, மதம், பணம் – ஆகியவை மட்டுமே.
இரண்டு தரப்புமே – இதே ஆயுதங்களை தான் பயன்படுத்தப்
போகின்றன.

பாஜகவுக்கு எதிராக அண்மையில் சொல்லப்பட்ட சில
அடைமொழிகள் பாப்புலராகிக் கொண்டிருக்கின்றன…..

இந்தி பெல்ட் –

பாமரர்களிடையே – “சூட் பூட் கி சர்க்கார்”
(மோடிஜியின் 13.5 லட்சம் கோட்’டை வைத்து ராகுல் காந்தி
உருவாக்கிய சிலேடை )

ஓரளவு படித்தவர்களிடையே –
modiji is not a man of ACTION….
But a man of AUCTION…!!!

(பீகார் தேர்தலை மனதில் வைத்து மோடிஜி அறிவித்த
திட்டங்களை வைத்து ஜெயராம் ரமேஷ் கூறிய வார்த்தை …)

“இவர்கள் தான் அதிகாரத்தை பிடிக்கத் தகுதியுள்ளவர்கள் ” – என்று நாம் அடையாளம் காட்ட – இரண்டு தரப்புக்குமே தகுதி இல்லை…!!!

இருந்தாலும் –
இந்த தேர்தலில் லாலு, நிதிஷ் கூட்டணி
வெற்றி பெற வேண்டும்
என்று நாம் மனதார விரும்புகிறோம்…..

காரணம் –
பீகாரில் ஒரு பலத்த அடி கிடைத்தாலாவது,
மத்தியில் ஆளுபவர்களுக்கு
கால்கள் கொஞ்சமாவது தரையில் பாவும்.
கொஞ்சமாவது ஆணவம் அடங்கும்….

“மக்கள் எங்களுக்கு முழு மெஜாரிடி கொடுத்திருக்கிறார்கள் -நாங்கள் நினைப்பதை எல்லாம் செய்வோம்” என்று
திமிர் பிடித்து அலைபவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்தும்.

மக்கள் விரோத கொள்கைகளை ஓரளவாவது மட்டுப்படுத்தி செயல்பட துவங்கக்கூடும்…..( கூடும் தான் – நிச்சயம் இல்லை…!!! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to லாலு சரி இல்லை – நிதிஷ்குமாரும் சரி இல்லை – இருந்தாலும் – பீகாரில் அவர்கள் தான் ஜெயிக்க வேண்டும்…!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  Accept Ur wish. But if won will be focussed Modi’s success-otherwise will be said “,we didn’t loss. Additionally may be increase in %.

 2. sundar சொல்கிறார்:

  I am reading your blog regularly…. i understand your feeling…. but we have to be patience for atleast 5 years – their term….. Then only we have to take a final call…..

  • புது வசந்தம் சொல்கிறார்:

   ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஐந்து வருடத்திற்கு கடந்த ஒரு வருடம் சான்று…

   • sundar சொல்கிறார்:

    Please go thro another point of view article…..

    http://rajasabai.blogspot.in/2015/08/blog-post_22.html

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் சுந்தர்,

     நீங்கள் மேலே கூறியிருக்கும் வலைத்தளத்தின்
     இறுதியில் கூறப்பட்டிருக்கும் கருத்து –

     //அதுவரை என்ன செய்கிறார்கள்.எதற்கு செய்கிறார்கள்.
     எப்படி செய்கிறார்கள் என்று உற்றுப் பார்ப்போம்.//

     – YES – அப்படி உற்றுப் பார்ப்பது தான் இந்த வலைத்தளத்தின்
     மூலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

     நடக்கும் தவறுகளை அவ்வப்போதே சுட்டிக்காட்டினால்,

     – ஒருவேளை தெரியாமல் செய்திருந்தால் –
     இனி அது தொடராமல் இருக்கவும் –

     தெரிந்தே செய்திருந்தால் –
     கபர்தார் – ஜாக்கிரதை – நீங்கள் செய்வதை
     நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்
     என்பதை உணர்த்துவதும் தான் –

     இந்த வலைத்தளம், மற்றும்
     அதில் பங்குபெறும் நண்பர்களின் குறிக்கோள்…….

     இதைச் செய்ய 5 வருடம் முடியும் வரை காத்திருக்க
     வேண்டிய அவசியமென்ன …?

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் சுந்தர்,

      ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

      தயவுசெய்து எந்த காரணத்திற்காகவும்,
      மகா(மண்டைக்)கனம் பொருந்திய மோடிஜியை –

      மறைந்த மாபெரும் மனிதர் லீ குவான் யூ அவர்களுடன்
      ஒப்பிட்டு, லீ அவர்களை அவமானப்படுத்தி விடாதீர்கள்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

     • sundar சொல்கிறார்:

      Dear Mr. Kavirimainthan,

      I understand your feeling…. but as a common man like me are going thro all other’s opinion….. Request you to please look the below URL too…

      http://panimalar.blogspot.in/2015/08/blog-post_21.html

      We are not suppose to believe everyone but we have to believe someone who is trying something new and whoever the earlier PM’s never try before….

      I hope you understand my stand.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் சுந்தர்,

      உங்களுக்கு எது தேவையோ அதை படிக்கவும்.

      எனக்கு எது தேவையோ, அதை நானே தேடிக்கொள்ள முடியும்.
      நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டாம்.

      இனி அவசியம் இல்லாமல் இங்கே ” லிங்க் ” கொடுப்பதை
      தவிர்க்கவும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

     • புது வசந்தம் சொல்கிறார்:

      மிக்க நன்றி, ஐயா.

     • Sundar சொல்கிறார்:

      Dear Friend,

      To manage a house is how much difficult to manage an organisation is how difficult then a state and a country. When we give importance to corrupt man is it wrong to ask to wait? If we trained in one view would not listen to others. We have to believe people and wait and see….

    • Sampathkumar. K. சொல்கிறார்:

     Mr.Sundar,

     // as a common man like me are going thro all other’s opinion…
     We are not suppose to believe everyone…..
     …….
     but we have to believe someone who is trying something new
     and whoever the earlier PM’s never try before….//

     நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்:
     என்னவேண்டுமானாலும் படித்துக் கொள்ளுங்கள்:
     யாரை வேண்டுமானாலும் நம்புங்கள்.

     லீயையும் மோடியையும் ஒப்பிடுவதிலிருந்தே
     உங்கள் மகிமை புலப்படுகிறது.

     உங்கள் கண்களில் படும் வலைத்தளங்களுக்கு எல்லாம்
     இங்கு விளம்பரம் கொடுத்து எங்கள் நேரத்தை வீணாக்குவதை
     தயவுசெய்து நிறுத்துங்கள்.

 3. paamaran சொல்கிறார்:

  நமது தமிழ்நாட்டின் தற்போதைய செய்தி :—– மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்துகிறது திமுக மகளிரணி. காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பெண்கள் பங்கு பெறும் 100 — ஏக்கர் பரப்பளவில் —-இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்….! என்னமா ” பில்டப் “கொடுக்குறாங்கோ… இவர்களினால் ” மதுவிலக்கு ” அறிவிப்பை ஜெயலலிதா ஏதோ அறிவித்ததை போல பாவ்லா காட்டுவது —- எதற்கு …. மக்களை ஏமாற்றவா … ?
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-women-s-wings-conference-on-august-22-233907.html#slide166596

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   லாலுஜி – நக்கல் செய்வதில் மகா கில்லாடி என்பது
   அவர் பேச்சைக் கேட்டவர்களுக்கு தெரியும்.

   அண்மையில் மோடிஜி பீகாருக்கு வந்து “ஏலம்”
   போட்டதை கிண்டல் செய்து இன்று பீகார் கூட்டத்திலேயே
   பேசி இருக்கிறார்.

   “ரொம்ப சத்தமாக கத்தாதீர்கள் மோடிஜி –
   தொண்டை நரம்பு வெடித்து விடும் ”

   என்று சொல்லி விட்டு –

   மோடிஜி சொன்னது மாதிரியே இமிடேஷன் வாய்ஸில் –
   50 தௌசண்ட் க்ரோர், 60 தௌசண்ட் க்ரோர்,
   80 தௌசண்ட் க்ரோர் – என்று பிரமாதமாக நக்கல் செய்கிறார்.

   இந்தி தெரிந்தவர்கள் கேட்டும், பார்த்தும் ரசிக்கவும் –
   மொழி தெரியாதவர்கள் – பார்த்தாவது ரசிக்கவும் –
   அந்த வீடியோ கீழே –

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: லாலு சரி இல்லை – நிதிஷ்குமாரும் சரி இல்லை – இருந்தாலும் – பீகாரில் அவர்கள் தான் ஜெயிக்க வேண்டு

 5. மீதி வருடங்களையும் பார்ப்போம் வேறென்ன செய்ய முடியும்….

 6. gopalasamy சொல்கிறார்:

  Bihar’s power production capacity is only 1000 MW. (Tamlnadu’s capacity around 12000 mw}Nithish was not taking care of Bihar people.

 7. ravi சொல்கிறார்:

  கே .எம் .. உங்களுக்கு மோடி பிடிக்கவில்லை,,சந்தோசம் ..
  ஆனால், எதற்காக பிகாருக்கு சாபம் , லாலு ஜெயிக்க வேண்டும் என்று!! ..
  நான் லாலு,ராப்ரி முதல்வராக இருந்த போது பிகாரில் வேலை பார்த்து உள்ளேன் .. கடந்த பத்து வருடங்களாக தான் (நிதிஷ் , பி.ஜே.பி ) ஆட்சியில் , பிகார் ஒரு இயல்பு நிலைக்கு வந்து உள்ளது ..ஒரு இளம் இ.ஆ.ப அதிகாரியை நடு ரோட்டில் வெட்டி கொன்றவர்கள் இவர்கள் (1994) . கடத்தல்கள், சாதி வைத்து அரசியல் போன்றவை சர்வ சாதாரணம் .
  ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். கண்டிப்பாக நிதிஷ் ஜெயித்து இருப்பார்..
  ஆனால் , லாலுவுடன் சேர்ந்து ஜெயித்தால் ,நிதிஷிக்கு நித்ய கண்டம் பூரண ஆயுசு தான் ..தன் பிள்ளைகளின் அரசியல் ஆதாயத்திற்காக , கண்டிப்பாக பிகாரை லாலு நாசம் செய்வார். சாதி அரசியல் செய்ததை தவிர லாலுவின் உண்மையான சாதனை என்ன ??

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ரவி,

   தயவுசெய்து மீண்டும் ஒரு முறை தலைப்பை படியுங்கள்…
   லாலு எதையாவது சாதித்திருக்கிறார் என்றா நான் சொல்லி இருக்கிறேன்….?

   வேறு என்ன செய்யலாம் – நீங்கள் தான் சொல்லுங்களேன்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    தலைப்பை பார்த்து விட்டு தான், நான் எழுதினேன் . லாலு சரி இல்லாமல் இருந்தால் பரவாயில்லை .. ஆனால் அவர் மற்றும் அவர் சுற்றம் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதே பிரச்னை …

    வழி .. நிதிஷ் தனியாக நிறைய சீட்டுகள் வாங்குவது , லாலுவை நம்பி இல்லாமல் ஆட்சி நடத்துவது …
    அல்லது பி.ஜே.பி வருவது …
    அல்லது அரசியலில் எதுவும் நடக்கலாம். பி.ஜே.பி மற்றும் நிதிஷ் திரும்பவும் சேருவது ..
    இதற்கு மேல் தொங்கு சட்டசபை வரவும் வாய்ப்பு உண்டு …

    நிதிஷ் தன் நல்ல பெயரை லாலு வுடன் சேர்ந்து கெடுத்து கொண்டார் அவ்வளவே..
    நிதிஷ்/பி.ஜே.பி வந்தால் தேனாறும் பாலாரும் ஓட போவதில்லை .. குறைந்த பட்சம் சட்டம் ஒழுங்கு ஒரு கட்டுக்குள் இருக்கும் ..அவ்வளவே… மற்றபடி சாதி அரசியல் தாண்டி ஏதாவது நடந்தால் நல்லது தான் ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.