ராஜா ( ஆறரை கிலோ….!!! ) தங்கம் வைத்திருக்கக்கூடாதா என்ன ….?

a raja

கீழே இருப்பது ராஜா மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் இரண்டு நாட்கள் முன்பாக சிபிஐ சோதனை நடத்தியது பற்றிய ஒரு செய்திக் குறிப்பு –

——————-

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி,
ஜாமினில் வெளிவந்துள்ள,
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, டில்லியில், செல்வந்தர்கள் வசிக்கும், ‘குல்மொகர் பார்க்’ பகுதியில் உள்ள, தன் வீட்டில் தங்கியிருந்தார்.

அவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக, 28 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்த சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள்,
ராஜாவின் டில்லி வீடு, சென்னை, பெரம்பலுார், திருச்சி,
கோவையில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும்
அலுவலகங்கள் என, 24 இடங்களில், இரு நாட்கள்
சோதனை நடத்தினர்.

6.5 கிலோ நகைகள் :

இதில், 200-க்கும் மேற்பட்ட சொத்துகளின் ஆவணங்கள்;
6.5 கிலோ, வைரம் பதித்த தங்கநகைகள்;
20 கிலோ வெள்ளி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி,
சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

ரூ.45 கோடி சொத்து ஆவணம்:

இதேபோல், டில்லி நீதிமன்றத்திலும், சில ஆவணங்களை பெற வேண்டியுள்ளது. ராஜாவின் வீட்டில் ஐந்து டைரி மற்றும்,
45 கோடி ரூபாய் சொத்து ஆவணம், முந்தைய சோதனையில்
சிக்கியது. சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு போட்டு,
அதை மீண்டும் பெற்று, இந்த வழக்கு விசாரணைக்கு, அவை பயன்படுத்தப்படும்.

( தினமலர் – 21 ஆகஸ்ட் 2015 )
———————————————–

சிபிஐ- ன் இந்த நடவடிக்கைகள் குறித்து –
இன்று காலை
திமுக அலுவலகத்தில்
( அண்ணா அறிவாலயம் )

செய்தியாளர்களிடம் பேசும்போது
திருவாளர் ராஜா அவர்கள்
கேட்கிறார் –

” ராஜா தங்கம் வைத்திருக்கக்கூடாது என்று எதாவது
சட்டம் இருக்கிறதா ….?”

அதானே …..!
அப்படி எதாவது சட்டம் இருக்கிறதா நண்பர்களே..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ராஜா ( ஆறரை கிலோ….!!! ) தங்கம் வைத்திருக்கக்கூடாதா என்ன ….?

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  அய்யய்யோ இது என்ன அநியாயம் ?
  சிபியைக்கு இது கூட தெரியவில்லையா ?
  ராஜா எங்கிற பேரே போதுமே; எவ்வளவு வேண்டுமானாலும்
  வைத்துக்கொள்ளலாமே.

 2. Pingback: ராஜா ( ஆறரை கிலோ….!!! ) தங்கம் வைத்திருக்கக்கூடாதா என்ன ….? | Classic Tamil

 3. paamaran சொல்கிறார்:

  ” ராஜா தங்கம் வைத்திருக்கக்கூடாது என்று எதாவது
  சட்டம் இருக்கிறதா ….?” கண்டிப்பாக இல்லை …. பரம்பரை ஒரிஜினல் ராஜாக்களுக்கு ! அதுவும் மன்னர் மானிய ஒழிப்பு சட்டம் போட்டபின் ஒன்றும் இல்லாமல் போனது .. !! — ஆனால் மத்திய மந்திரியாய் இருந்த சாதாரண ஆண்டிமுத்து வின் மகன் ராஜாவுக்கு இல்லை —- என்னமோ பரம்பரை மகாராஜா ரேஞ்சுக்கு பேட்டி கொடுக்கிறார் ….? நேற்று அவருடைய ” beloved leader ” அவர்களை சந்தித்தபின் — இன்றைய பேட்டி இது .

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பேட்டியை இத்தோடு நிப்பாட்டிக்கிட்டாங்களேண்ணு சந்தோஷப்படுங்க காமை சார்.
  ஐயோ கொள்ளை அடிக்கிறாங்களே… கொள்ளை அடிக்கிறாங்களேண்ணு தங்களுடைய டிவி-யில் நேரடி ஒளிப்பரப்பு பண்ணாமல் விட்டாங்களே!
  அதுமட்டுமில்லாமல் பேட்டியில் இந்த ராஜா ஒரு தாழ்த்தப்பட்டவன் என்பதாலேயே இப்படி ரெய்டு செய்றாங்க என்று ஒரு “பிட்”-ஐ சேர்க்காமல் விட்டதுக்கு இறட்டிப்பு சந்தோஷப்படுங்க சார்!!

 5. Sharron சொல்கிறார்:

  Raja can have but not JJ.

 6. Ganpat சொல்கிறார்:

  எனக்கு ரொம்ப bore அடிக்கிறது சார் !! இவிங்க மக்களுக்கும் பெப்பே ,மகேசனுக்கும் பெப்பே சொல்லும் இனம் ஒண்ணும் செய்ய முடியாது.நாட்டில எவ்வளோ பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க அவிங்க அப்படி நிச்சயமா செய்துகிறதுன்னு முடிவெடுத்துட்டா, ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டு போனால்தான் உண்டு!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   ” கலியுகத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு என்பதைப்
   பொருத்துதான் நீதி அமைவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
   கலியுகத்தின் ஆயுள் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளாகும்.
   நல்லவேளையாக, இப்போதுதான் 5,116 ஆண்டுகள் முடிந்துள்ளன.
   கலி முற்றுவதற்கு நீண்ட காலம் உள்ளதால், …… போன்ற
   செல்வாக்கு மிக்கவர்கள் தப்பிவிடமாட்டார்கள் என நம்பலாம்.

   இது திரு.குருமூர்த்தி அவர்கள் சொல்வது –
   ————-

   அரசன் அன்று கொல்வான் …
   தெய்வம் நின்று கொல்லும்

   – என்று அற நூல்கள் சொல்கின்றன..

   ————
   அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் –
   ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் ….

   – என்று சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சொல்கிறார்….

   —————

   ஆனால் நாம் – நிஜத்தில் காண்பது – ?

   – பொறுப்போம்…
   யாராவது ஏற்கெனவே பிறந்திருப்பார்கள்….!!!

   – இப்போதிருக்கும் மக்கள் கூட்டத்தில் தான்
   அவரும் கலந்திருப்பார்.. நாம் அவரை கண்டுபிடித்து
   விரைவாக வெளிக்கொண்டு வர வேண்டும்.
   தவறினால், காலமே நிச்சயம் வெளிக்கொண்டு வரும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.