மோடிஜி – இப்ப தான் என்றில்லை – அப்பவே இப்படித்தான்….!!!

ippa dhaan yenrillai - appave

1993-ல் ( இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் )
ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக மட்டும் இருந்தபோதே –

மோடிஜியின் புகைப்படம் ஒன்று –
அமெரிக்கா, ஹாலிவுட், யுனிவர்சல் ஸ்டுடியோவில் –
முதல் தடவையாக டூர் போனபோது எடுக்கப்பட்டதாம்…..
( NRI ஒருவர், அருகில் அமர்ந்திருப்பவர்
sponsor செய்தாராம்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to மோடிஜி – இப்ப தான் என்றில்லை – அப்பவே இப்படித்தான்….!!!

 1. அடடே பிரமாதம்.

 2. Pingback: மோடிஜி – இப்ப தான் என்றில்லை – அப்பவே இப்படித்தான்….!!! | Classic Tamil

 3. Srini சொல்கிறார்:

  KM sir,
  nindral kutram, nadanthaal kutram, kuninthu vanakam sonnal kutram… ovvondrukum oru pathivu…. KM sir, konjam overa illa?? 🙂

  oru naalaiku 15 manikum mela work senchukittu irukara orutharidam, oru positive koodava ungaluku theriyala…. ethanayo nalla vishayangal indha 12 months la nadanthu irukku….

  comment poda vendamnu thaan paarthen….mudiyala sir… 🙂

  vaanga, nanbar today and me… edhavathu veriyethunga…..wait panren…. 🙂

  regards
  srini

  • Rajalakshmi சொல்கிறார்:

   obsessed with modiji.

  • today.and.me சொல்கிறார்:

   Dear srini,
   பேஷா பன்னிடலாமே…
   காமை ஜி தனியா தொடர் பதிவு ஒன்னு ஆரம்பிச்சிடுங்களேன்….
   மோடிஜியின் சாகசங்கள்… அப்டீன்னு…
   ஆதரிக்கும் நண்பர்கள் இதை வழிமொழிந்து காமை ஜி யை ஊக்குவிக்கவேண்டுகிறேன்.

   //ethanayo nalla vishayangal indha 12 months la nadanthu irukku….//
   ஒன்னு ரென்டை இங்க எடுத்துவிடறது…

   அதாவது
   உண்மையிலேயே ஏதாவது நல்லதா இருந்தா,
   அதுவும் அவர் செஞ்சிருந்தா..
   90% காமன் இந்தியனுக்கு உதவறாமாதிரி ஏதாவது இருந்தா,
   என்னைப் போன்ற தமிழனுக்கு உதவறாமாதிரி ஏதாவது இருந்தா,
   🙂
   🙂

   • Srini சொல்கிறார்:

    nanbare.. neenga tamil nattin google… ungalukku theriyadhathaiya naan sollida poren…

    onnu enna… nooru sonnalum.. neenga ethuka maatinga… I know u r problem of selective hearing…

    vidunga sir…. neenga vera idea kudthutinga… KM sir engeyavathu ennoru pudhu blog pottura porar… naan escape…..:)

  • today.and.me சொல்கிறார்:

   இப்பொழுதுகூட Srini,
   அந்தக்காலத்தில் அவர் வாலன்டியர்தான். யாராவது ஸ்பான்ஸர் பண்ணா தான் வெளி நாடு போக முடியும். அதுல போனா என்ன தப்புன்னு கேக்கமுடியலை பாருங்க..

   அதனாலதான் ..
   யோசிக்கவிடாமலேயே கமறும் நாற்றத்தை நீக்க பழுதை சுத்தப்படுத்தாமல் மேலேமேலே செண்ட் அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் தலைகள்.

   • Srini சொல்கிறார்:

    same reply again……pidikaatha maamiyaruku… nindral kutram, nadanthaal kutram, kuninthu vanakam sonnal kutram……. oruvelai naan appadi solli irudha.. neenga adharku pathil vachu irupiga… naatram scentnu pesa arambichutinga… naan varalai indha attathuku…. bye for now

    • today.and.me சொல்கிறார்:

     //pidikaatha maamiyar//

     கண்பத் ஜி,
     மோடிஜி நாடு பழக வந்த புதுமருமகளா? இல்லை மருமகளைப் படுத்தும் பழைய மாமியாரா? ஒரு டவுட்டு.

  • Palani Velu சொல்கிறார்:

   ஸ்ரினி அவர்களே! எங்கேயோ இடிக்குதே! நீங்கள் சொல்வது உண்மையானால் ரூபாய் மதிப்பு கூடி இருக்க வேண்டுமே? இல்லையே! மாறாக, என்றுமில்லாத அளவு குறைந்துள்ளதே! ரூ.65.37 ஒரு டாலர் இன்று. பெட்ரோல் ரூ 25/- கீழ் விற்க வேண்டும் கச்சா எண்ணெய் விலை மிக குறைந்துள்ளது. 43 டாலர்/ பீப்பாய். ஆனால் ரூ.63.47/ லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. காரணம் என்ன? பெட்ரோல் விலை குறைந்தால் சகல பொருள்களின் விலையும் தானாய் குறையுமே ரூ 25/- கீழ் வந்தால் எப்படி இருக்கும்? மோடியால் பலனடைவது அமேரிக்காவும் இந்திய அரசாங்கத்தை நடத்தும் ஒரு சிலரே என்ற கூற்றில் உண்மையுள்ளது என்றே நினைக்க தோன்றுகிறது. வளர்ச்சி விகிதம் 7% தொடுவதே மிகச் சிறமம் என்று அரசாங்க அமைபபே சொல்கிறது. என்னமோ போங்க! நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் பரவாயில்லை. வேறு எதையோ குளிப்பாட்டி.. வைத்துவிட்டார்கள்.
   மேலும், வாராக்கடன்கள் கடந்த ஒரு வருடத்தில் 56000 கோடியாம். இந்திய கார்பரேட் நிருவணங்கள் இந்தியாவுக்கு செய்த சேவை! யார் கேட்பார்? கேட்க முடியும்? மோடி இருக்கும்வரை இந்த வலிக்கும் பற்களை தொடக்கூட முடியாது.

 4. today.and.me சொல்கிறார்:

  KMji
  மோடிஜியின் இந்த யுஏஇ ட்ரிப்பின் பாஸிட்டிவ் அப்ரோச் போட்டோக்களைப் போடாததற்காக Srini-ன் கண்டனங்கள் – என் சார்பில்.
  😀 😀

  • Srini சொல்கிறார்:

   pottu irundha mattum paarati irupingala…. no way… ungalukku bayanthu naan KM sir ku thaniya maila anupi irundhen.. kettu paarunga avarkitta…

   • today.and.me சொல்கிறார்:

    Dear srini,
    எனக்கு பயந்தா… உங்களை மாதிரி இங்கே நானும் ஒரு ரீடர் தான். ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
    நன்றி
    🙂

    NB: இப்போ எனக்குத் தான் பயந்து பயந்து வருது கமெண்ட் போட..
    😦 😦

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஸ்ரீநி,

  ஒரு மனிதரை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கலாம்.

  நீங்கள் ஒரு கோணத்திலிருந்து பார்க்கிறீர்கள்.
  ஏற்கெனவே ஒரு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.
  உங்கள் பார்வைக்கு எல்லாம் சரியாகவே தெரிகிறது…!!!
  எனவே, அடுத்த கோணத்திற்கு நகர மறுக்கிறீர்கள்…. 😦

  நாங்களும் முதலில் நீங்கள் பார்க்கும் அதே கோணத்திலிருந்து தான்
  பார்த்துக் கொண்டிருந்தோம்.
  ( வித்தவுட் கண்ணாடி ..! )
  object கலங்கலாக இருந்தது –

  நகர்ந்து கொண்டே வந்தோம்
  ஒரு இடத்திற்கு வந்ததும், உருவம்
  பளிச்சென்று தெளிவாகத் தெரிகிறது. இந்த கோணம் தான்
  சரியென்று உணர்கிறோம். 🙂

  இனிமேல் எங்கள் கோணத்தை மாற்றிக்கொள்ள
  வேண்டுமானால், object தன் நிலையை மாற்றிக் கொண்டால் தான்
  உண்டு. இல்லையேல், நாங்களும் உங்கள் கண்ணாடியை
  மாட்டிக் கொள்ள வேண்டும்.

  அல்லது நீங்கள் கண்ணாடியை கழட்டி விட்டு, எங்கள்
  கோணத்திலிருந்து பார்த்தாலும் சரியே…!!! 😀 😀

  கிடக்கிறது விடுங்கள் – நண்பரே.
  parellels have no chance of meeting…!!!

  Ok யா நண்பர் டுடேஅண்ட்மீ…. 😦 🙂 😀 😀

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இப்படியும் வைத்துக் கொள்ளலாம்…..

  “ஆளப்பிறந்தவர்”
  என்று நினைக்கிறார்கள் சில அன்பர்கள்…

  “அனுபவிக்கவென்றே வந்தவர்”
  என்று நினைக்கிறார்கள் இன்னும் சிலர் ..

  ஆண்டு, அனுபவிக்க என்றே பிறந்தவர்
  என்று வைத்துக் கொண்டால் போயிற்று… 😀

 7. paamaran சொல்கிறார்:

  அன்புள்ள அய்யா …! ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கே. உச்சத்தில் இருந்த போது காலையில் அவருடைய பங்களாவில் ” பழைய சோறு [ பழையது ] ” சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது — ஒரு வசதி படைத்தவர் பார்க்க வந்தார் .. வந்தவர் என்ன சாப்பிடுகிறிர்கள் என்று கேட்டதுக்கு — என்.எஸ்.கே. இது பழைய சாதம் என்று கூறியவுடன் வந்தவர் முகம்சுளித்து — அய்ய … என்னங்க நீங்கபோய் இதையெல்லாம் என்றவுடன் கலைவாணர் அவரிடம் ஒரு 100 — ரூபாய் நோட்டை கொடுத்து — பழைய சாதம் வாங்கிவாருங்கள் என்று கூறியவுடன் அவரும் காரை எடுத்துக்கொண்டு போய் எங்கெங்கேயோ அலைந்து பெரிய — சிறிய ஓட்டல்களில் எல்லாம் கேட்டும் எங்கும் பழைய சாதம் கிடைக்கவே இல்லை என்று கூறி பணத்தை என்.எஸ்.கே. விடம் திருப்பி கொடுத்தவுடன் : கலைவாணர் இப்போது தெரிகிறதா இதனுடைய அருமை —- இதை எங்கேயும் வாங்க முடியாது — நாமே முதல் நாளே தயார் செய்தால் தான் — அடுத்த நாளைக்கு உண்ண கிடைக்கும் — என்று கூறியவுடன் வந்த மாபெரும் செல்வந்தர் அதன் அருமை உணர்ந்துஅசடு வழிய — மன்னிப்புகேட்டார் ….. !!! இதை போல சுவாரஸ்யமான ” அந்த கால நகைசுவை நடிகர்களை பற்றி கொஞ்சம் ” ரிலாக்ஸா ” எழுதலாமே — நாங்களும் ரசிக்க முடியுமே …… இந்த வீணாப்போன மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை பற்றி என்னதான் எழுதினாலும் — ” செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் அவர்களையும் —- ஒருவித மாயகண்ணாடியை மாட்டிக்கொண்டு ” அவர்களை ஆதரிப்பவர்களையும் திருத்தவே முடியாது — என்பதுதானே உண்மை …? கலைவாணர் போல் எத்தனைபேர் நலம்பயக்கும் பழைய சோறை உருவாக்க போகிறார்கள் ….?

 8. sundar சொல்கிறார்:

  மோடிஜிக்கு நன்றி !!! அமீரகம் வந்து சென்றவுடன் திர்ஹம் மதிப்பு நிறைய ஏறிவிட்டது. 1 திர்ஹாம் = 18.03 ரூபாய் . முன் எப்போதில்லாத மாற்றம். ஒரே நாளில் 20 பைசா ஏற்றம்
  http://www.khaleejtimes.com/gold-forex

  2013-ல் மன் மோகன் சிங் ஆட்சியில் அமெரிக்க டாலர் 60 ரூபாய் வந்த போதே , இந்தியாவே மூழ்கிவிட்டது போல் குதித்தவர்கள் , இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ ? தற்போது 1 USD = 66.70 ரூபாய் .
  http://www.xe.com/currencyconverter/convert/?Amount=1&From=USD&To=INR

  வெளிநாட்டில் சம்பாதிப்பவருக்கு இது சாதகம் தான். ஆனால், இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், ரூபாயின் மதிப்பு குறைகிறது, அதாவது , இந்தியாவில் விலைவாசி ஏறுகிறது.

  மோடிஜிக்கு ஜிந்தாபாத்(வாழ்க). வோட்டு போட்டவர்கள் முர்தாபாத்(சாவுங்கடா)

 9. Ganpat சொல்கிறார்:

  1.தனி நபர் வருமானவரி உச்ச வரம்பை ஐந்து லட்சம் வரை உயர்த்தலாம் என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இதுவரை ஏன் செய்யவில்லை?
  2.சுவிஸ் வங்கியில் கணக்கில் வராத பணம் போட்டோர் பட்டியல் என்ன ஆயிற்று?
  3.ஊழலுக்கு எதிராக கடந்த 15 மாதங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
  4.மாறன் போன்றோர் மீது ஏன் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
  5.நதி நீர் பங்கீடு,நதிகள் இணைப்பு போன்ற திட்டங்கள் எங்குள்ளன?
  6.ஒரு குறிப்பிட்ட துகைக்கு (ரூ.100000 என தொடங்குவோம்) மேல் எந்த தனி நபரும் cash வைத்துக்கொள்ளக்கூடாது போன்ற அதிரடி நடவடிக்கைகள் கொண்டுவர ஏன் தாமதம்?
  7போலி PAN அட்டைகளை களைய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?
  8.ஆதார் அட்டை விநியோகம் எந்த அளவில் உள்ளது? அந்த விவரங்களை ஏன் மாதம் ஒருமுறை வலைத்தளத்தில் அறிவிக்க கூடாது?
  இவையெல்லாம் ஒரு சாதாரண இந்தியனின் கவலைகள் கேள்விகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.