1915 -முதல் உலகப்போரில் இந்திய சிப்பாய்களின் பங்கு – சில அபூர்வ புகைப்படங்கள்

.
.

முதல் உலகப்போரில் ஆயிரக்கணக்கில் இந்தியர்களும் போரிட்டு கண்காணாத இடங்களில் மடிந்து போயினர் என்பது அதிகம் வெளியில் வராத வரலாற்று உண்மை.

பிரிட்டிஷ் அரசில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறாகள் என்கிற
சந்தோஷத்தில், பஞ்சத்தில் அடிபட்ட பாவப்பட்ட இந்தியர்கள்
ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாக போய்ச்
சேர்ந்தனர்.

தாங்கள் எதற்காக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறோம், தங்களுக்கு என்ன வேலை, எங்கே வேலை என்பது எதையும் அறியாமலே, பிரிட்டிஷ் ராணுவத்தில் எடுபிடிகளாகச் சேர்ந்து, முறையான போர்ப் பயிற்சி எதுவும் இல்லாமலே போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.

தங்கள் எதிரி யார் ?
யாரோடு போரிட்டுக் கொண்டிருக்கிறோம் ?
எந்த தேசத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் –
போர் முனையில் சொல்லப்பட்ட விதத்தில் போரிட்டு –
முன் வரிசையில் நின்று உயிரை விட்டவர்கள் அந்த அப்பாவிகள்.

அதில் ஒரே போர் முனையில் சுமார் 15,000 ஊர், பேர் தெரியாத இந்தியர்கள் பலியாயினர். Gallipoli Peninsula என்பது
மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள அந்த இடத்தின் பெயர்.
இன்றைக்கு சுமார் 100 வருடங்களுக்கு
முன்பாக நடந்த அந்த போரின் சில அரிய புகைப்படங்கள்
கிடைத்தன. நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பி,
அவற்றை கீழே தருகிறேன் –

gallipoli map location-1

1915 -Army camp at Gallipoli-2

மேலே உள்ளது 100 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படம் –

அதே இடம் இன்று எப்படி இருக்கிறது பாருங்கள் –

2015 - gallipoli

indian sikh soldiers

indian soldiers in gallipolli-4

gv-1

g.v.2

isg-1

isg-3

isg-4

isg-5

isg-6

isg-7

lndian-mountain-battery-gallipoli

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to 1915 -முதல் உலகப்போரில் இந்திய சிப்பாய்களின் பங்கு – சில அபூர்வ புகைப்படங்கள்

 1. தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

  மிகவும் அரிதான அருமையான புகைப்படங்கள்; // யாருக்காகப் போரிடுகிறோம் என்றே தெரியாமல்// நன்றி! நண்பரே!

 2. Pingback: 1915 -முதல் உலகப்போரில் இந்திய சிப்பாய்களின் பங்கு – சில அபூர்வ புகைப்படங்கள் | Classic Tamil

 3. Sundar சொல்கிறார்:

  Thanks for sharing such kind of rare photographs friend.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  மிகவும் அருமை…

 5. Kamal சொல்கிறார்:

  It has been the fate of Indian army. Even in SriLanka they died in hundreds without knowing to whom are they fighting..

 6. P.Chellamuthu சொல்கிறார்:

  Ariya pukaipadangal!

 7. மிகவும் வேதனையான விடயங்கள் ஐயா பகிர்வுக்கு நன்றி.

 8. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  உண்மையிலேயே மிக அரிய புகைப்படங்கள்தாம்.

  உலகப்போர்கள் தொடர்பான மிகச் சிறு சிறு பொருட்கள் கூட இந்திய மதிப்பில் மிகப் பெரிய தொகைக்கு வெளிநாடுகளில் விலை போகின்றன. சேகரிப்பாளர்களால் தேடித் தேடி வாங்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், நாமோ நம்மவர்கள் இந்தப் போர்களில் கலந்து கொண்டதற்கான முறையான சான்றுகள் கூட இல்லாமல் இருக்கிறோம். இந்தியக் குருதிக்கு மதிப்பு அவ்வளவுதான். எங்கே வேண்டுமானாலும் அது சிந்தலாம். 😦

 9. gopalasamy சொல்கிறார்:

  இதே போல, கடுமையான (செயற்கை) பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு, எங்கே ச்ல்கிறோம், எந்த வேலை செய்ய போகிறோம் என்று தெரியாமலே, பிரிட்டிஷ் அரசால், ஏற்றுமதி செய்யப்பட்டு சென்ற அப்பாவிகளின் போட்டோ கிடைத்தால் வெளியிடவும். நெஞ்சை உருக்கும் காட்சிகள் அவை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.