ஆறுமுக நாதன் ….( ! ) முதலாளிக்கு துரோகம் செய்வாரா ? முடியுமா ?

.

என்ன சார் பெயர் மறந்து விட்டதா என்று கேட்கிறீர்களா ..? அதெல்லாம் ஒன்றுமில்லை….
நம் நண்பர்களுக்கு தெரியாதா – கந்தா, கடம்பா,
சுப்ரமணியம், ஆறுமுகம் – எப்படிச் சொன்னால் என்ன ..?
எல்லாமே அந்த ஷண்முகத்தை தானே சென்றடைகிறது…!!!

ஆறுமுக நாதன் 35-40 வருடங்களாக ஒரே முதலாளியிடம்
விசுவாசத்தோடு உழைத்து வருகிறார்.
முதலாளியின் ஏற்றத்திலும் சரி,
இறக்கத்திலும் சரி, முகத்தில் எந்தவித பாவனையும் இன்றி,
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கிடப்பவர்.

சும்மாவா செய்கிறார்…என்று கேட்கலாம்…
இருந்தாலும் முதலாளிக்கு கிடைப்பதில் நூற்றில் ஒரு பங்கு கூட இவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே…!

முதலாளி குடும்பத்தில், சின்னம்மா, முதலாளியின் பெண்,
மகன், பேரன் – என்று ஆளாளுக்கு போடும் ஆட்டங்கள்
அனைத்தையும், அருகிலேயே இருந்து பார்த்த அவருக்கு –

ஒரு சமயம் – நடக்கும் தில்லுமுல்லுகளைப் பார்த்து, என்று இருந்தாலும், நாமும் மாட்டி விடுவோம் என்று நினைத்து
விலகிக்கொள்ள பார்த்தார். வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்…
எவ்வளவு கூப்பிட்டு அனுப்பியும் –
போகாமலே இருந்தார்.

கடைசியில் முதலாளி ஒரு அஸ்திரத்தை பிரயோகித்தார்…
பத்து நாட்கள் பொறுத்திருந்து பார்த்த பின் –
“அவன் வர்ரானா இல்லையன்னு கேளு. அரசு பைலை
தூக்கிட்டு போயிட்டான்னு கமிஷனர் கிட்ட கம்ப்ளைண்ட்
கொடுப்பேன்” னு அவங்கிட்ட போய்ச்சொல்லு
என்றாரே
பார்க்கலாம். சத்தம் போடாமல் “சிக் லீவை” முடித்துக் கொண்டு ட்யூட்டிக்கு வந்து விட்டார் ஆறுமுகநாதன்.

சார் எனக்கு வயசாயிடுத்து.. முடியலை… நான் ரிடையர்
ஆயிடறேன் என்றும் சொல்லிப் பார்த்தார்.
விடுவாரா முதலாளி…?
தனியாக ஆறுமுகநாதனை விட்டால் – பொன் முட்டையிடும் வாத்து என்று யாராவது கொத்திக் கொண்டு போய் விட்டால்…? அவரை வெளியே விட்டால் –
ரகசியங்கள் வெளியே போய்விடும் – தனக்குத்தான் ஆபத்து…
“யோவ்… நான் இருக்கற வரைக்கும் நீயும் எங்கூட தான்
இருக்கப் போறே” என்று கூறி விட்டார்.

ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து
கடைசியில் ஆறுமுகநாதன்
அருகிலேயே வந்து விட்டது என்கொயரி.
ஆறுமுகநாதன் யாரிடமோ போனில் பேசியது “டேப்” ஆகி
ரொம்ப நாள் கழித்து மாட்டி விட்டது..

என்கொயரிக்கு கூப்பிடுகிறார்கள்.
“குரல் மாதிரி” எடுக்க வேண்டுமாம்….
எடுத்தால் மாட்டிக் கொள்வது உறுதி…
நாதனுக்கே நம்பிக்கை இல்லை….

இவரை விட முதலாளிக்கு இன்னும் பயம் அதிகம்..
இந்த ஆள் ஒன்று கிடக்க ஒன்று எதையாவது
உளறி விடப்போகிறாரே என்று.

ஆறுமுகம் தேற்றிக் கொள்கிறார்…..
சார் … இப்போதைக்கு வக்கீல் கிட்ட சொல்லி கொஞ்சம் டைம் வாங்கிக்கலாம். அதுக்குள்ள நான் குரலை கொஞ்சம்
மாற்றிக்கொள்ள முயற்சி பண்றேன்.
அது என் குரலே இல்லைன்னு சொல்லிடறேன்…..

இந்த வயதில் குரலை மாற்றி முயற்சி பண்ணுவதெல்லாம்
சாத்தியமா …? ஆறுமுகநாதனுக்கே அந்த நம்பிக்கை இல்லை.
போனால் நிச்சயம் உளறி விடுவோம்.

பேசாமல் எல்லா உண்மைகளையும்
சொல்லி விடலாமா …?

தொலைந்தது … அவ்வளவு தான் கதி…
பாட்ஷா …. மாணிக் பாட்ஷா…கதி தான்…நன்றாகப் புரிகிறது.
நினைத்தாலே பயமாக இருக்கிறது…

என்ன செய்வார் ஆறுமுகநாதன்….?
பாவம் – அவர் இடத்தில் இருந்தால் –
நீங்கள் தான் என்ன செய்வீர்கள்…?

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to ஆறுமுக நாதன் ….( ! ) முதலாளிக்கு துரோகம் செய்வாரா ? முடியுமா ?

 1. thiruvengadam சொல்கிறார்:

  As of prrvious enquiries this is just feed for media till next one.

  • today.and.me சொல்கிறார்:

   வேற வழி இல்லை. அவங்க டிசைனே அப்படித்தான். எதையாவது செய்ஞ்சு மீடியாவுக்கு தீனிபோடனும்னு நினைக்கிறவங்க.

   ஆனா நினைப்புலே மண்விழவும் சான்ஸ் இருக்கு..
   எனக்கென்னவோ ஆறுமுகநாதன் இன்னொரு சாதிக்பாட்சாவா ஆகப்போறாருன்னு தோணுது..

 2. எல்லாம் மேலே இருக்கும் அந்த 6முகக் கடவுள்தான் காப்பாற்றனும்.

  • today.and.me சொல்கிறார்:

   நெத்திப்பொட்டையே டேஞ்சர் சிக்னல்-ன்னு சொல்ற இவுங்களுக்கு எப்புடி ………கடவுள்?

   ஓஓஓஓ டெல்லியில் இருக்கிற சு.சுமியைச் சொல்றீங்களா? புரிஞ்சிடுச்சு…

 3. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //பாவம் – அவர் இடத்தில் இருந்தால் – நீங்கள்தான் என்ன செய்வீர்கள்…?// – ஒரு நிமிடம் திகைப்படைய வைத்த கேள்வி. இருந்தாலும், இதற்குப் பதில் இல்லாமல் இல்லை.

  நான் அவர் இடத்தில் இருந்திருந்தால், ஒன்றரை இலட்சம் அப்பாவி உயிர்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட அவர் காரணமாக இருக்கப் போகிறார் என்பது தெரிய வந்தவுடனேயே எதிர்க்கட்சியில் சேர்ந்து, எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்புத் தேடிக் கொண்டு, முதலாளி செய்திருக்கும் ஊழல் முறைகேடுகள் பற்றித் தகுந்த இடத்தில் போட்டுக் கொடுத்து ஆட்சியைக் கலைத்திருப்பேன். அதன் மூலம் அந்தப் பெரும் இனப்படுகொலை நடக்க விடாமல் தடுத்திருப்பேன். அவருடைய ஊழல்கள் தொடர்பான சான்றுகளை எதிர்க்கட்சியில் இருந்தபடியே தக்க இடத்தில் ஒப்படைத்து இனத்துக்கே துரோகம் புரியத் துணிந்த அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகுப்பேன்.

 4. Pingback: ஆறுமுக நாதன் ….( ! ) முதலாளிக்கு துரோகம் செய்வாரா ? முடியுமா ? | Classic Tamil

 5. வானரம் . சொல்கிறார்:

  அம்னிசியா, அல்சைமர் னு டாக்டர் சேர்டிபிகட் வாங்கிட்டு வீட்டுக்கு வர்ற ஜட்ஜு கிட்ட

  நான் யாரு எனக்கேதும் தெரியலியே …

  என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே …

  சின்ன ஜாமீன் சினிமா பாட்ட பாடிகிட்டு போய்ட்டே இருப்போம் .

  • today.and.me சொல்கிறார்:

   //பாட்ட பாடிகிட்டு போய்ட்டே இருப்போம் //

   அப்டியெல்லாம் போகவிட்ருவாங்களா
   ஒரு டவுட்டு தான்.
   பாடையில வேணா ஏத்திவிட்ருவாங்க

 6. paamaran சொல்கிறார்:

  // என்கொயரிக்கு கூப்பிடுகிறார்கள். //… ? நானாக இருந்தால் …. அதற்குள் எனக்கோ —– என் குடுபத்தில் உள்ளவர்களுக்கோ …. எதுவும் நடந்து விடாமல் இருக்க — அந்த ” நிஜ கடவுளான ” ஆறுமுக நாதனை — மொட்டை போட்டு — அலகு குத்தி உனக்கு நேர்த்திகடன் செய்து விடுகிறேன் — என்னை எதுவும் செய்து விடாதே கருணா மூர்த்தியே என்று வேண்டி கொள்வேன் ….!!!

 7. ssk சொல்கிறார்:

  குமாரசாமி அருள் இவருக்கும் கிடைக்குமா?

  • today.and.me சொல்கிறார்:

   அவர் இவர்களுக்கு சரிப்படமாட்டார்
   மேலும் அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

   அருள்கொடுக்கும் வேறு சாமிகளை அனுப்பும் இடங்களில்
   வேண்டிய சாமியை அனுப்பச்சொல்லி ஒருவேளை முயலலாம்.

   நான் சுப்பிரமணிய சாமியைச் சொல்லலீங்க.

 8. today.and.me சொல்கிறார்:

  காதலுக்காகவெல்லாம் அவனவன் என்னென்னத்தையே அறுத்துக்கொள்கிறான்.

  இப்படிப்பட்ட முதலாளியிடம் வேலைசெய்ய நேர்ந்த கொடுமைக்காக நானானால் என் நாக்கையே அறுத்துக்கொள்வேன்.

  வேறு வழி ?
  இல்லையென்றால் அவர்கள் அறுத்துவிடுவார்களே..

  🙂 🙂

 9. today.and.me சொல்கிறார்:

  //சார் எனக்கு வயசாயிடுத்து.. முடியலை… நான் ரிடையர்
  ஆயிடறேன் என்றும் சொல்லிப் பார்த்தார். விடுவாரா முதலாளி…?//

  இந்த சேவல் கூவினால்தானே, ஓய்வறியாத சூரியனே உதயமாகும்..
  பேராசிரியருக்கே ஓய்வு கிடையாதாம்,,, இவருக்கு ஓய்வாமா?

 10. today.and.me சொல்கிறார்:

  //முதலாளிக்கு கிடைப்பதில் நூற்றில் ஒரு பங்கு கூட இவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே…!//

  லட்சத்தில் ஒருபங்கு கிடைத்தாலே இவர் கோடீஸ்வரர்தான்.

  நீங்கள் முதலாளிக்கு கிடைப்பது பற்றி உங்கள் கால்குலேஷன் இன்னமும் அண்டர்எஸ்டிமேஷனிலேயே இருக்கிறதே கா.மைஜி

  இன்னும் எத்தனை ஊழல்வழக்குளைப் பார்த்தால் ஆவரேஜ் எஸ்டிமேஷனுக்கு வருவீர்கள்….

 11. today.and.me சொல்கிறார்:

  கண்டந்திப்பிலியை, தேனுடன் குழைத்து நாக்கில் காலை மாலை இருவேளையும் தரவிவர குரல் பிசிறுகள் நீங்கி இனிமையாகும்…

  ஆனால் இந்த டிப்ஸ் பகுத்தறிவுவாதிகளுக்கு ஒத்துவராது. மாறாக நாக்கை இழுத்துவைத்து வசம்பை கொறகொறவென்று தேய்க்கலாம்.

  எங்கள் அம்மா நான் வளர்த்த கிளிக்கு ஒன்றிரண்டு நாட்கள் இதைச் செய்தார்கள்,அப்புறம் நான் பேசியதையெல்லாம் அம்முவும் ரிபீட் பண்ண ஆரம்பித்துவிட்டது.

 12. today.and.me சொல்கிறார்:

  //கடைசியில் முதலாளி ஒரு அஸ்திரத்தை பிரயோகித்தார்…
  பத்து நாட்கள் பொறுத்திருந்து பார்த்த பின் – “அவன் வர்ரானா இல்லையன்னு கேளு. அரசு பைலை தூக்கிட்டு போயிட்டான்னு கமிஷனர் கிட்ட கம்ப்ளைண்ட்
  கொடுப்பேன்” னு அவங்கிட்ட போய்ச்சொல்லு என்றாரே
  பார்க்கலாம். சத்தம் போடாமல் “சிக் லீவை” முடித்துக் கொண்டு ட்யூட்டிக்கு வந்து விட்டார் ஆறுமுகநாதன்.//

  ஆறுமுகநாதன் மீது தட்சிணாமூர்த்தியின் பிரம்மாஸ்திரப் பிரயோகம்
  பழைய பக்திப்படம்
  🙂

 13. Ganpat சொல்கிறார்:

  கா.மை today.and.me உள்ளிட்ட,நீங்க எல்லாரும் ஐயோ பாவம் ..ஆறுமுகநாதன் ஜாம் ஜாம்ன்னு போய் தன குரலை பதிவு செய்துட்டு வருவார் .அந்த குரல் டெலிபோனில் கேட்ட குரல்தான் என நிபுணர்களும் உறுதி செய்வார்கள்.எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 2016 க்கு தள்ளி வைப்பார் ..சுபம்

 14. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  உற்சாகம் கரைபுரண்டோட நண்பர்கள் எழுதியிருக்கும்
  பின்னூட்டங்களை எல்லாம் கண்டேன்…
  கலைஞர் மட்டும் இதையெல்லாம் கண்டு விட்டால் ….?
  பாட்ஷா…. நான் பாட்ஷா ஆகி விடுவேன்…!!!

  வந்திருக்கும் பின்னூட்டங்களில் நடைமுறை சாத்தியமாகப்
  படுவது நண்பர் கண்பத் சொல்லியிருப்பது தான்
  என்று நினைக்கிறேன்.

  இப்போதைக்கு வாய்தா வாங்கி விட்டால் – அதற்குள்
  எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன….!!!

  ” there are many a slips between the cup and the lips…!!! ”

  முன் ஜாமீன் பெறுவதற்கென்றே ஒரு கோர்ட்
  கிடைக்காதா என்ன ..?

  ” ஒரு மண்ணாங்கட்டி ‘டேப்”பை வைத்துக் கொண்டு
  அரெஸ்ட் பண்ண வந்து விட்டீர்களா ” என்று சிபிஐ -க்கு
  பாட்டு விட ஒரு ஜட்ஜ் கிடைக்காமலா போவார்…!!!

  நம்பிக்கை தான் உலகம் ….
  இப்படியே 92 வருடங்கள் ஓட்டியாகி விட்டது…
  இன்னும் ஒரு 8-9 வருடங்கள் ஓட்ட முடியாதா என்ன …!!!
  முடிந்தால் அதற்கு மேலும் ஓட்டலாம்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Ganpat சொல்கிறார்:

   ” ஒரு மண்ணாங்கட்டி ‘டேப்”பை வைத்துக் கொண்டு
   அரெஸ்ட் பண்ண வந்து விட்டீர்களா ” என்று சிபிஐ -க்கு
   பாட்டு விட ஒரு ஜட்ஜ் கிடைக்காமலா போவார்…!!!

   hahahahaha ji you are firing from all the engines 🙂 🙂

 15. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //நம்பிக்கை தான் உலகம் ….
  இப்படியே 92 வருடங்கள் ஓட்டியாகி விட்டது…
  இன்னும் ஒரு 8-9 வருடங்கள் ஓட்ட முடியாதா என்ன …!!!
  முடிந்தால் அதற்கு மேலும் ஓட்டலாம்…//

  நீரா ராடியா டேப் மற்றும் ஜாஃபர் ஷெரீஃப் டேப் எல்லாம் என்ன ஆச்சோ அதே கதிதான் இதற்கும் என்பதுதான் உண்மை. அதுவரைக்கும் நமக்கு இதுவும் ஒரு மெல்லுவதற்கு அவல்! அவ்வளவே!!

 16. சந்திரசேகரன் சொல்கிறார்:

  தேன் எடு்த்ததை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆறுமுகம் இப்போது அவதியில்,மணலை கயிறாய் திரிக்கும் முதலாளியிடம் இருந்தாலும் வகை தொகை இல்லாமல் வாரிசுகள் விளையாடியதால் வந்த வினையிது. என்ன செய்வது மருமகன் இருந்த வரை ஐன்ஸ்டினுக்கே அறிவியல் சொல்லிகொடுத்து ஆட்டையை போட்டவர்கள் ஆனால் இப்போது அவருடைய வாரிசுகளே கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று ஆகிவிட்ட நிலையில் ஆறுமுகம் என்ற துரும்பு மட்டும் ஆடி காற்றில் தப்புமா.

 17. D. Chandramouli சொல்கிறார்:

  My guess is that Arumuga Nathan wouldn’t let down his boss (probably, rightly so, from his point of view), like Karnan to Duryodhana.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.