“நா காவூங்கா – நா கானே தூங்கா ” ( நானும் சாப்பிட மாட்டேன் – மற்றவரையும், சாப்பிட விட மாட்டேன்…)

-purshottam-solanki -gujarat minister

dilip sanghani-2

 

சென்ற வாரம் ( சில ) செய்தித்தாள்களில் ( மட்டும் ) வெளிவந்த செய்தி இது.

2008- ஆம் ஆண்டில், நரேந்திர மோடிஜி குஜராத் முதலமைச்சராக
இருந்தபோது, அவரது நேரடி நிர்வாகத்தில் அமைச்சர்களாக இருந்த-

புருஷோத்தம் சோலங்கி, திலிப் சங்கானி மற்றும் 5 மாநில அரசு
அதிகாரிகள் ஆகியோர் – சம்பந்தப்பட்ட மிகப்பெரிய ஊழல் ஒன்று
தற்போது வெளிவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 58 பெரிய ஏரிகளில்
மீன் பிடிக்கும் உரிமம் குத்தகைக்கு விடப்பட்டது. இதில் ஆட்சியாளர்கள் முறைகேடுக்கு வழி வகுக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் இசாக் மராடியா என்பவர் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறி இருக்கிறார்.

மீன்பிடி குத்தகையில் ரூ.440 கோடி அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறிய அவர் அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்திருக்கிறார்…. இந்த ஊழல் தொடர்பாக அப்போது மோடிஜியின் அரசில் அமைச்சர்களாக இருந்த புருஷோத்தம் சோலங்கி, திலிப் சங்கானி மற்றும் 5 மாநில உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் புருஷோத்தம் சோலங்கி இப்போதும், குஜராத் மாநில கால்நடைத்துறை அமைச்சராக பதவியில் தொடர்கிறார்.
திலிப் சங்கானி தற்போதைய அமைச்சரவையில் இல்லை.
மற்ற 5 அரசு அதிகாரிகளும் பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் –

மீன்பிடி குத்தகை விடுவதில் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை..
வேண்டியவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கி முறைகேடுகளில்
ஈடுபட்டார்கள். சுமார் 440 கோடி அளவிற்கு ஊழல் நிகழ்ந்ததற்கான
அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளன…

இசாக் மராடியா கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர்.

அதையொட்டி, இந்த வழக்கு அகமதாபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது – லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை அறிக்கை மூலம் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வருவதால் தற்போதும் அமைச்சராக பதவியில் தொடரும் அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி, முன்னாள் அமைச்சர் திலிப் சங்கானி மற்றும் 5 முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது லஞ்ச ஊழல் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிபதி ரிஸ்வானா கோகாரி உத்தரவிட்டிருக்கிறார்.

கடந்த வாரம் வெளியான செய்தி இது….

“நானும் சாப்பிட மாட்டேன்…
மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன்”
என்று கூறியவரின் ஆட்சியில்
நிகழ்ந்துள்ள 440 கோடி ரூபாய் அளவிலான ஒரு சாம்பிள் ஊழல் இது.

2008-ல் நிகழ்ந்தது இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
2014 மே வரை இவரது ஆட்சி தானே அங்கு இருந்தது….
இன்னும் – how many skeletons are there
in the cup-board – என்று நமக்குத் தெரியாது….!!!
பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் பாஸ்போர்ட் ஊழல் ….
ராஜஸ்தான் முதல்வரின் – ஓட்டல் பங்கு ஊழல் …
ம.பிரதேச முதல்வரின் “வியாபம்” ஊழல் …

ஆகியவற்றைப்பற்றி பாராளுமன்றத்தில் அமர்க்களம்
நடந்துகொண்டிருந்தபோதே – செங்கோட்டை கொத்தளத்தில்,
தேசியக் கொடியை ஏற்றி விட்டு – “ஒரு வருடமாக என் ஆட்சி
நடக்கிறது…. ஒரு ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு உண்டா ? “

என்று டயலாக் விட்டவர் ….

இதைப்பற்றி கேட்டால் என்ன சொல்வார்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to “நா காவூங்கா – நா கானே தூங்கா ” ( நானும் சாப்பிட மாட்டேன் – மற்றவரையும், சாப்பிட விட மாட்டேன்…)

 1. thiruvengadam சொல்கிறார்:

  Udane oru oru committee pottuvidalam

 2. Pingback: “நா காவூங்கா – நா கானே தூங்கா ” ( நானும் சாப்பிட மாட்டேன் – மற்றவரையும், சாப்பிட விட மாட்டேன்…) | Cla

 3. paamaran சொல்கிறார்:

  paamaran சொல்கிறார்:
  1:16 பிப இல் ஓகஸ்ட் 20, 2015
  அகமதாபாத்: ரூ440 கோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
  அகமதாபாத்: ரூ440 கோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
  தற்போது குஜராத்தில் கால் நடைத்துறை அமைச்சராக இருக்கும் புருஷோத்தம் சோலங்கி, முன்னாள் அமைச்சர் திலிப் சங்கானி மற்றும் 5 ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீன்பிடி குத்தகை விடுவதில் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேண்டியவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு அகமதாபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது….. இது தற்போதைய செய்தி …! Read more at: http://tamil.oneindia.com/news/india/corruption-taint-on-bjp-gujarat-233834. இது எப்படி இருக்கு …? மோடிஜியின் சொந்த மாநிலத்தில் நடந்துள்ளது …. ஊழலற்றவர்கள் …!!!
  மறுமொழி
  vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
  2:55 பிப இல் ஓகஸ்ட் 20, 2015
  பாமரன்,

  குஜராத் மாதிரியே, மத்தியிலும்
  நடக்கத் துவங்கி விட்டன. ஆனால், ஆட்சி
  தொடரும் வரை விஷயங்கள் வெளியே தெரிய
  விட மாட்டார்கள். வியாபம் கொலைகளை
  பார்த்த பின்னர் யார் பேசத்துணிவார்கள்…?
  ஆட்சி நிச்சயமாக முடிந்தது என்று தெரிந்த பிறகே
  விஷயம் தெரிந்தவர்கள் பேச துவங்குவார்கள்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்
  மறுமொழி;; 20 — 8 — 2015 அன்றைய செய்தாளின் செய்தியும் …. அதற்கு தாங்கள் அளித்த — மறு மொழியும் தான் மேலே உள்ளவைகள் …!!! இன்னும் ஆட்சி முடியும்வரை காத்து இருக்க போகிறார்களா விஷயம் தெரிந்தவர்கள் … ? தற்போது குஜராத்தில் நடக்கும் ” படேல் இனத்தவரின் ” போராட்டம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா … ? பீகார் தேர்தல் முடிவுகள் ஆட்சியாளர்களுக்கு எதையாவது உணர்த்துமா …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   இந்த செய்தியை ஏற்கெனவே நாம் விவாதித்து விட்ட
   விஷயத்தை சுத்தமாக மறந்து விட்டேன். பிற்பாடு இடுகை
   எழுத வேண்டும் என்று குறிப்பு வைத்திருந்ததை வைத்து
   இந்த இடுகையை எழுதி விட்டேன். மறதிக்கு மன்னிக்கவும்.

   “படேல்” இனத்தவரின் போராட்டம் குறித்து –

   அரசியல் தலைவர்கள் யாருடைய தூண்டுதல்களும் இல்லாமல்,
   அனுபவமில்லாத ஒரு 23 வயது பையனின் தலைமையில் –
   20 லட்சம் மக்கள் (12 லட்சம் என்று குஜராத் அரசு சொல்கிறது …)
   ஒரே இடத்தில் திரண்டு போராடுகிறார்கள் என்றால் –

   அரசின் மீதும், அரசு நடைமுறைகளின் மீதும், அவர்களுக்கு
   எவ்வளவு, வெறுப்பு, கோபம் இருக்க வேண்டும்….?!
   எதிர்பார்த்தவை எதுவும் நடக்காததால் உண்டான கோபம்,
   ஏமாற்றம்… வெறுப்பு…

   இத்தனை கோபமும் கடந்த மே மாதத்திற்கு பின்பாக மட்டும்
   உருவானதா …? அல்லது ஏற்கெனவே எழுந்த கோபம் கடந்த
   11 ஆண்டுகளில் குஜராத்தில் இருந்த வலுவான
   ஆட்சியால் அடக்கி வைக்கப்பட்டு,
   இப்போது வெளிப்படுகிறதா …?

   படேல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பது
   மட்டும் தானா இந்த கொந்தளிப்புக்கு காரணம் …?

   நிறைய கேள்விகள் எழுகின்றன…
   பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

   “பீஹார்” குறித்து….
   -இந்த நாட்டின் ஒட்டு மொத்த நலனை முன்னிட்டு,
   பீஹாரில் பாஜக அவசியம் தோற்கடிக்கப்பட வேண்டும்…
   அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சி தான்,
   தொடரப்போகிறது. இருந்தாலும், டெல்லியில் ஆட்சி செய்பவர்களின்
   ஆணவம், எதேச்சாதிகாரம் கொஞ்சமாவது குறைய இது
   கொஞ்சம் உதவக்கூடும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    அய்யா .! இதில் தாங்கள் மன்னிக்க வேண்டும் என்ற பெரிய வார்த்தைகளை குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை — நீங்கள் இந்த இடுக்கையை எழுதியதால் தான் தற்போதைய குஜராத் ” படேல் ” இனத்தவர் போராட்டம் பற்றியும் — பீகார் தேர்தல் பற்றியும் — தெளிவான விளக்கங்கள் உங்கள் பாணியில் எங்களுக்கு கிடைத்தது …!! நன்றி .. நன்றி … !!!

    • ravi சொல்கிறார்:

     அய்யா .. ஒரு சிறு கூடத்திற்கே பல ஆயிரங்கள் ரூபாய் தேவைப்படும் போது , இந்த பெரிய கூட்டத்திற்கு, எதனை கோடிகள் தேவைப்படும் … இதை பல தொழில் அதிபர்கள் கொடுத்து இருப்பார்கள் .. படேல் ஆட்கள் பலர் பெரும் கோடிஸ்வரர்கள் .. வைர வியாபாரிகள் பலர் உள்ளனர்.
     சாதி வாரியாக அணி திரட்டுவது எளிது !! . ஒரு முகம் மட்டுமே தேவை .. தமிழ் நாட்டில் ராமதாசும் , கொங்கு அமைப்புகளும் மிக எளிதாக இதை செய்கின்றன .
     கேஷுபாய் படேல் இன்னமும் உள்ளார் ..

     இந்த பிரச்சனைகள் இன்னமும் அதிகமாகும் .. காரணம் , நம்முடைய அரசியல்வாதிகளின் சேட்டைகள் .. இரண்டாவது , அரசு அதிகாரிகளின் அதிகாரம், பணம் செல்வாக்கு .. இவை மேல் அனைத்து சாதிகளுக்கும் மோகம் உண்டு ..
     தமிழ் நாட்டில் கிட்ட தட்ட 70% இட ஒதுக்கீடு (கிட்ட தட்ட எல்லா சாதிக்கும் , பிராமணர்கள், வேறு சில சாதி தவிர ) . மற்ற மாநிலத்தில் இல்லை .. ஆகவே , இந்த பிரச்சனைகள் இன்னும் அதிகமாக வரும் ..
     சாட், குர்ஜார் , இப்போது படேல் ..
     உ.தா .. ஜாட் சாதி , ஹரியானாவில் , உ.பி யில் பெரும் எண்ணிக்கை உள்ள சாதி ..பெரும் அமளி செய்கிறார்கள் இட ஒத்து கீடிர்காக .இத்தனைக்கும் ஹரியானாவில் பாதி அரசியல் வாதிகள் ஜாட்கள் தான் …கெட்டிகார அரசியல்வாதி இதை சமாளித்து விடுவார் .. இல்லையென்றால் மாட்டி கொள்வார்.

     ஏன், 90 களில் ராமதாஸ் இட ஒதுகீடிர்காக ஒரு பெரும் கூட்டத்தை கூடவில்லையா !.. அப்போது அவர் ஒரு சாதாரண ஆள் தான் ..
     அரசின் மேல் கோவம் என்றால் , நம் தமிழ் நாட்டில் பெரும் கலவரம் வெடித்து இருக்கும் ..
     நம்மவர்கள் அமைதி வடிவானவர்கள் .. சிறந்த உதாரணம் , இலங்கை பிரச்னை . தருமபுரி , செஷபுரம் , சாதி கலவரங்கள் .. ஒரு சில நாட்கள் பதட்டம் , பின்பு அமைதி …

     உண்மையிலே கோவம் வர வேண்டும் என்றால் , அடித்தட்டு , சாமானியர்கள் அவர்களுக்கு கோவம் வர வேண்டும் … அவர்கள் தான் நேரிடையாக பாதிக்கபடுகிறார்கள் படேல் சமூகம் அல்ல ..
     குஜராத் அரசில் பெரும் எண்ணிக்கை அளவில் இருக்கும் (கிட்ட தட்ட 25% மேலான ச.ம.உ , பா.உ , மந்திரிகள் ,பல நிறுவனங்கள் , தொழில் , வணிகம் , வைர வியாபாரம் . அதிக அளவு அமெரிக்காவில் உள்ள மக்கள் – படேல் சமூகம் )
     வழக்கம் போல மற்ற கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றன ..

     • ravi சொல்கிறார்:

      இந்த அமைச்சர் விவகாரம் 5 வருடங்கள் முன்பே வந்து விட்டது .. இந்த அமைச்சர் மேல் கை வைக்க முயன்ற போது , இவரின் சாதி ஆட்கள் பெரும் அமளி செய்தார்கள்.. இதுவும் செய்தியாக வந்தது ..

 4. paamaran சொல்கிறார்:

  நீதிபதி குமாரசாமியின் சொத்துக்கள் பற்றி இணையதளம் கூறுவதென்ன?… கருணாநிதி பதில்கள்

  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/justice-kumarasamy-got-assets-karnataka-america-said-karuna-234517.html —- நீதிபதி குமாரசாமியின் சொத்துக்களை பற்றி தன்னுடைய கேள்வி — பதில் அறிக்கையில் விலாவரியாக கூறியுள்ள கலைஞர் —- தன்னுடைய சொத்துக்களை பற்றி இவ்வளவு விவரமாக தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டு யாரவது வெளியிட்டு இருந்தால் — கலைஞர் அவர்களின் “ரியாக் ஷன் ” எப்படியிருக்கும் …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   அவ்வளவு தூரம் போவானேன்…..

   – திருவாளர் ஜாபர் சேட்டிற்கும், அவரது மனைவிக்கும்,
   மகளுக்கும் அடுத்தடுத்து மூன்று ப்ளாட்டுகளை சலுகை விலையில்
   வீட்டுவசதி வாரியம் மூலம் விதிகளைத் தளர்த்தி விட்டு,
   கலைஞர் எவ்வாறு வழங்கினார் என்று சொல்லட்டுமே….

   -அவரது துணைவியார் திருமதி ராசாத்தி அம்மாள் என்ன தொழில்
   செய்கிறார்… எவ்வளவு கோடி சொத்து வைத்திருக்கிறார்…
   அது எப்படி வந்தது…,?

   -அவரது மகள் திருமதி கனிமொழி என்ன தொழில் செய்கிறார்.
   எவ்வளவு கோடி சொத்து வைத்திருக்கிறார்…?
   அது எப்படி வந்தது …?

   – அவர் மகன் திரு.ஸ்டாலின் அவர்கள் பிறந்ததிலிருந்தே
   எந்த தொழிலும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவர்
   சொந்த வீடு, கார், கோடிக்கணக்கில் பணத்துடன் வாழ்வது
   எப்படி ….?

   – அவர் பேரன் திரு உதயநிதி கோடிக்கணக்கில் பணம் போட்டு,
   திரைப்படங்கள் எடுக்கிறார்…. விநியோகம் செய்கிறார்…
   அதற்கு முதல் எங்கிருந்து வந்தது…?

   இவற்றை பற்றி எல்லாம் கொஞ்சம் விவரமாக சொன்னால் –
   அடுத்த தேர்தலில் மக்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டு
   மீண்டும் கலைஞரை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்கி
   அழகு பார்க்க சௌகரியமாக இருக்கும்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    // இவற்றை பற்றி எல்லாம் கொஞ்சம் விவரமாக சொன்னால் –
    அடுத்த தேர்தலில் மக்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டு
    மீண்டும் கலைஞரை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்கி
    அழகு பார்க்க சௌகரியமாக இருக்கும்….! // — இதுதான் திரு .கா.மை. அவர்களின் ” நெத்தியடி “…. !

 5. Valampuri சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் ஆட்சி எப்படி??? எழுதினால் நன்றாக இருக்கும்???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் வலம்புரி,

   அதற்கென்ன எழுதினால் போச்சு…

   “மற்ற ஆட்சிகளுடன் ஒப்பிடும்போது இது far better …! ”

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Sharron சொல்கிறார்:

    KM sir excellent .Well said.

    • ravi சொல்கிறார்:

     கே.எம்.. சென்னையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது far better !!
     எங்களை போல் சிறு ஊர்களில் இருப்பவர்களுக்கு , ஒன்றும் இல்லை ..
     குடிநீர் தட்டுபாடு , சாக்கடை பிரச்னை, மின் தட்டுபாடு , பொது போக்குவரத்து போன்றவை மிக மிக மோசம் தான் … எந்த மாற்றமும் இல்லை ..
     குறிப்பாக குடிநீர் , வாரத்திற்கு 1 முறை, அதுவும் நாடு இரவில் வரும் ..மணல் கொள்ளை சர்வ சாதாரணம் ..அரசே ஜே.சி.பி இயந்திரம் வைத்து அள்ளுகிறது .. தண்ணீர் பிரச்னை தலை விரித்து ஆடுகிறது ..பாதாள சாக்கடை பிரசனை இன்னமும் தீர்ந்த பாடில்லை .. சென்னையை தவிர்த்து தமிழ் நாட்டில் பல நகரங்களில் இன்னமும் சாக்கடை சுத்திகரிக்க படாமல் ஆற்றில் விடபடுகிறது …
     எங்கள் நிலங்களில் கிட்ட தட்ட 500 அடி போர்வெல் சர்வ சாதாரணம் …
     கொஞ்சம் காவிரி படுகைகளில் எப்படி மண் அள்ளுகிறார்கள் என்று பாருங்கள் ..
     ஆகவே , இதுவும் கடந்து போகும் …

 6. tamilbm சொல்கிறார்:

  வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.