கலைஞரின் அசர வைக்கும் அடுத்த படைப்பு – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு …!

karunanithi...

இதென்ன அபத்தம் …
அதிமுக வை முதலாவதாக வரும் கட்சியாக அறிவித்து,
திமுக வே ஒரு சர்வே ரிப்போர்ட்டை தயாரித்தளிக்குமா..?

எத்தனை திரைக்கதைகள்,
நாடகங்கள் – உருவாக்கிய வெற்றிகரமான கதாசிரியர்…!

கலைஞர் என்கிற ஒரு சிறந்த திரைக்கதாசிரியர்,
ராஜதந்திரியின் மூளையில் என்னென்னவெல்லாம்
உதிக்கும் என்பதற்கான ஒரு அத்தாட்சி இது.

இந்த கருத்துக் கணிப்பை எவ்வளவு முறை படித்தாலும்,
இது யாருக்கு சாதகம் என்று சாதாரண மக்களால்
சரியாக உணற முடியுமா …?

லயோலா கல்லூரி திரு ராஜநாயகம் அவர்கள் கடந்த
பல ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்டுள்ள தேர்தல்
கணிப்புகளை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்,
திமுக வுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகளை
ஏற்கெனவே உணர்ந்திருப்பார்கள்.

இப்படி அதிமுக தான் முதலில் வரும் என்று கூறி
ஒரு ரிப்போர்டை தேர்தலுக்கு இன்னும் குறைந்தது
எட்டு மாதங்கள் இருக்கின்றபோது வெளியிட
அவசரக் காரணம் ….?

கலைஞர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டும் –
திமுக வுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் இதுவரை
முன்வரவில்லை.

வைகோவும், திருமாவும் – மக்கள் நலக் கூட்டணியை
( பஞ்ச பாண்டவர் கூட்டணியை )
பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள்.
செப்டம்பர் 15-ல், வெளிப்படையாக தங்கள்
தேர்தல் அணுகுமுறை திட்டத்தை
அறிவிக்கப்போவதாக வைகோ அறிவித்திருக்கிறார்.

அதிமுக அழைப்பு விடக்கூடிய வாய்ப்புகள் குறைந்து கொண்டே
போகின்றன என்பதால் –
ஜிகே வாசன் அவர்களின் தமாகா வும் ஐவரோடு,
அறுவராக இதில் சேர வாய்ப்பு இருக்கிறது.

விஜய்காந்த் இதுவரை வெளிப்படையாக ஒன்றுமே கூறவில்லை
என்றாலும், இரண்டு நாட்கள் முன்னதாக, திருச்சியில்
அவரது மனைவி திருமதி பிரேமலதா வெளிப்படையாகக்
கூறி விட்டார் – தாங்கள் திமுகவுடன் கூட்டு சேர
மாட்டோமென்று.

திமுக – அதிமுக இடையேயான மார்ஜின் மிக மிகக் குறைவு என்றும், திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்
நிறைய இருக்கின்றன என்பதையும்
இந்த கருத்துக் கணிப்பின் மூலம் மற்ற சிறிய கட்சிகளுக்கு புரிய வைத்து,

அதிமுக எப்படியும் தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது என்பதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிற திமுகவோடு கூட்டு வைத்துக் கொள்வதே தங்களுக்கு பாதுகாப்பும், பயனும் என்று சிறிய கட்சிகளை
நம்ப வைப்பதற்கே இந்த சர்வே….!!!

ஆனால் – இவ்வளவு யோசித்து சர்வே ரிப்போர்ட் பார்முலா
தயாரித்த கலஞர் ஒரே ஒரு விஷயத்தை யோசிக்க
மறந்து விட்டார்.

இத்தனை ஆண்டு காலமாக கூடவே இருந்து பழகியதால் –
கலைஞரின் ஒவ்வொரு ” காய் நகர்த்தலையும் ” –
வைகோவும், திருமாவும், மிக நன்றாக அறிவர்.
எனவே தன் திட்டத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்களே
என்பதையும்,

தன்னிடமிருந்து கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு –
ஆகியவற்றிற்கான ஒப்புதல் வராத வரையில், அவர்கள் திமுகவை
நோக்கி வர மாட்டார்கள் என்பதையும் உணரத் தவறி விட்டார்…..

ஒரு வேளை இந்த கோணத்தில் யோசித்திருந்தாலும் கூட –
கல்லை விட்டெறிவோம் –
விழுந்தால் கனி –
போனால் கல் – வேறு நஷ்டம் ஏதுமில்லையே –
என்றும் யோசித்திருக்கலாம்.

கலைஞருக்கு இணை – கலைஞரே தான்……!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to கலைஞரின் அசர வைக்கும் அடுத்த படைப்பு – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு …!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  ஆனாலும் வை.கோ.வும் திருமாவும் சூடு கண்ட பூனைகள். அவர்களுக்கு இடம் இதயத்தில் தானே தவிர ஆட்சியில் அல்ல என மூக்கறுப்பு பெற்றவர்கள்.

 2. Pingback: கலைஞரின் அசர வைக்கும் அடுத்த படைப்பு – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு …! | Classic Tamil

 3. paamaran சொல்கிறார்:

  // கலைஞரின் அசர வைக்கும் அடுத்த படைப்பு – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு …! // உண்மை…. முற்றிலும் உண்மை …! இன்றைய தினமலர் செய்தி : —Dinamalar Banner Tamil நியூஸ்
  ஒன்றிரண்டு சதவீதம் ஓட்டுகளை வைத்திருக்கும் கட்சிகளும், கூட்டணி சேர நிபந்தனை விதிப்பதால், கடும் கொதிப்படைந்துள்ள,தி.மு.க., தலைமை, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து, தீவிரமாக ஆலோசிக்க துவங்கி உள்ளது.போக்கு காட்டும் கட்சிகளுக்கு, ‘செக்’ வைக்கும் விதமாக, ‘தனித்து போட்டி’ என்ற அதிரடி முடிவைவிரைவில் அறிவிக்க, தி.மு.க., தயாராகி வரும் தகவலும் வெளியாகி உள்ளது…..! அதாவது லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வந்த பின் இந்த அறிக்கை . கருத்து கணிப்பில் உள்ள ” ஹை லைட் ” விஷயம் என்வென்றால் எப்போதுமே கட்சிகளுக்கு இடையேயான கணிப்புகள் மட்டுமே வெளியிடுவது வழக்கம் …. ஆனால் இதில் மட்டும் ஒரே கட்சியை சேர்ந்த தி.மு.க.வின் உயிர்நாடியான கலைஞர் மற்றும் — ஸ்டாலின் இருவருக்கும் — யார் முதலமைச்சர் என்கிற போட்டியில் ஸ்டாலின் முந்துவதை போல வெளியிட்டு உள்ளது மேலும் பல சந்தேகங்களை கிளப்புகிறது …. ஸ்டாலினுக்கு அதிக சதவீதம் ஆதரவு போல காட்ட வைத்து மகனுக்கு முடிசூட்டுவதில் உள்ள பல சிக்கல்களை { அழகிரி உட்பட } தீர்க்க முயன்று உள்ளது வியப்பளிக்கிறது …. !!! இவ்வாறான கதை — வசனமெல்லாம் கலைஞர் ஒருவரால் தான் முடியும் …. அப்படித்தானே …. ? — கருத்து கணிப்பில் உள்ளது போல் அ .தி.மு.க வுக்கும் — தி. மு. க. வுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை மக்களிடம் காட்டவும் —— ஒன்று — இரண்டு சதவீதம் மட்டுமே உள்ள கட்சிகளுக்கும் இவரை போல ” பயம் காட்ட ” யாரால் முடியும் …? இடுக்கைக்கு அருமையான தலைப்பு …. !!!

  • Joseph சொல்கிறார்:

   because this is a open question. They just ask who will act best as a CM and they didn’t give any name list. so people give the name they like. that is the reason Stalin and MK come twice. Even Ambumani and Ramadas also come in the list as Ramadas % is too low it didn’t come in the top 10 list.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ஜோசப்,

    நீங்கள் தவறான தகவலைத் தருகிறீர்கள்.

    திரு.ராஜநாயகம் அவர்களே சொன்ன விளக்கம் கீழே –

    கருத்துக் கணிப்பில்,
    ஒவ்வொருவரிடமும், அவர்கள் – சிறந்த முதலமைச்சராக
    பணியாற்றக்கூடியவர் என்று கருதும் 3 பெயர்களை
    வரிசைப்படி குறிப்பிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    திமுக வுக்கு ஆதரவானவர்கள் ஸ்டாலின், கலைஞர்
    இரண்டு பேர் பெயர்களையும் எழுதியிருக்கிறார்கள்.
    இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்டாலின் பெயரை
    எழுதிய பலர் கலைஞரை கைவிட்டு விட்டனர். அதனால் தான்
    ஸ்டாலினை விட, கலைஞர் குறைவான எண்களை
    பெற்றிருக்கிறார்.

    ஒரு பெயரை மட்டும் தான் கேட்டிருக்க வேண்டும்.
    மூன்று பெயர்களைக் கேட்டது வேண்டுமென்றே
    குழப்பம் ஏற்படுத்த தான்.

    இந்த தவறான கேள்வியால் வந்த குழப்பம் தான்
    முதல்வர் பட்டியலில் ஸ்டாலின், கலைஞர் இருவரின் பெயர்களும்
    வரக்காரணம்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  தேர்தல் பு(கி)லி வருது..
  பயந்தவங்கள்ளாம் என்மேல படுத்துக்குங்க…
  ——————————————-
  வைகோவும் திருமாவையும் மட்டுமல்ல
  அழகிரியையும் இவர் மறந்துவிட்டார்
  கனிமொழி-ராஜா இவர்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்றும் நினைத்துவிட்டார்.
  ——————————————-
  ஜெயலலிதா 31.56 %
  ஸ்டாலின் 27.98%
  கருணாநிதி 21.33%
  விஜயகாந்த் 6.24%
  அன்புமணி 2.27%
  வைகோ 1.85%
  திருமாவளவன் 1.13%
  ஜிகே வாசன் 1.01%
  தமிழிசை0.93%
  சீமான் 0.84%

  திமுக தலைவர் கருணாநிதியைவிட ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்று குறிப்பிடும்போதே, கருத்துக் கணிப்பில் உள்ள மற்ற முதல்வர் வேட்பாளர்களை பார்த்தால் . இந்திய தேசிய காங்கிரஸ் லிஸ்ட்டுக்கு உள்ளேயே வரவில்லையே ஏன்? பாரதிய ஜனதாவை தேசியக்கட்சி என்ற கணக்கில் வைக்காமல் முதல்வர் வேட்பாளர் என்று அவர்கள் சிலமாதங்களுக்கு முன் கூறிய (முரளிதரராவ் என்று நினைவு) வேட்பாளரைக் குறிப்பிடாமல்ல தமிழிசையைக் கூறியது ஏன். இதுவரை தமிழிசையோ பாஜகவோ அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறவே இல்லை. பின் ஏன் அவரைக் குறிப்பிட்டுள்ளார்கள்?

  • Joseph சொல்கிறார்:

   because this is a open question. They just ask who will act best as a CM and they didn’t give any name list. so people give the name they like. that is the reason Stalin and MK come twice. Even Ambumani and Ramadas also come in the list as Ramadas % is too low it didn’t come in the top 10 list.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ஜோசப்,

    நீங்கள் தவறான தகவலைத் தருகிறீர்கள்.

    திரு.ராஜநாயகம் அவர்களே சொன்ன விளக்கம் கீழே –

    கருத்துக் கணிப்பில்,
    ஒவ்வொருவரிடமும், அவர்கள் – சிறந்த முதலமைச்சராக
    பணியாற்றக்கூடியவர் என்று கருதும் 3 பெயர்களை
    வரிசைப்படி குறிப்பிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    திமுக வுக்கு ஆதரவானவர்கள் ஸ்டாலின், கலைஞர்
    இரண்டு பேர் பெயர்களையும் எழுதியிருக்கிறார்கள்.
    இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்டாலின் பெயரை
    எழுதிய பலர் கலைஞரை கைவிட்டு விட்டனர். அதனால் தான்
    ஸ்டாலினை விட, கலைஞர் குறைவான எண்களை
    பெற்றிருக்கிறார்.

    ஒரு பெயரை மட்டும் தான் கேட்டிருக்க வேண்டும்.
    மூன்று பெயர்களைக் கேட்டது வேண்டுமென்றே
    குழப்பம் ஏற்படுத்த தான்.

    இந்த தவறான கேள்வியால் வந்த குழப்பம் தான்
    முதல்வர் பட்டியலில் ஸ்டாலின், கலைஞர் இருவரின் பெயர்களும்
    வரக்காரணம்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 5. today.and.me சொல்கிறார்:

  எப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்போவதாக அறிவித்தார்கள்? எந்தத் தரப்பு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்? அதைப்பற்றிய அறிவிப்பு எங்கும் வந்தமாதிரித் தெரியவில்லையே?

  போடுகிற ட்ராமாவை டைட்டில் கார்டிலிருந்தே போடக்கூடாதா? லிங்க் மிஸ் ஆகுதில்ல.

 6. R.Gopalakrish nan சொல்கிறார்:

  Not only vaiko and Thiruma.But every individual voter in TN knows MK’scheap and cunning
  game plan. I personally feel that this time DMK will get somewhere between 15 & 20% votes
  even if there is an alliance with above small parties..

 7. kakkoo சொல்கிறார்:

  நடப்பது 2015, 1967 அல்லவென்று அவருக்கு யாராவது எடுத்து சொல்லட்டும்.
  கடந்த 48 வருடங்களாக இவரை தமிழர்கள் மிக நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

 8. MANI சொல்கிறார்:

  THIS IS ONE OF THE MULTITUDE OF PLOYS EMPLOYED BY DMK. THEY HAVE CREATED
  SO MANY OBSTACLES TO JAYALALITHA TO DISLODGE HER BUT THEY FAILED IN EVERY ONE OF THEM. THEIR LATEST DRAMA IS THIS SURVEY WHEN GENERAL ELECTIONS
  ARE MONTHS AWAY AND THEY WANT TO GAUGE OTHER FRINGE PARTIES” INTENTION
  REGARDING ALLIANCE AND MAKE THEM BELIEVE THAT ALLIANCE WITH DMK IS BENEFICIAL TO THEM..bUT THEIR PLOY THIS TIME ALSO WILL NOT SUCCEED AS
  PEOPLE KNOW WHOM TO VOTE. THEY ALWAYS VOTE FOR A WINNING HORSE RATHER
  THAN TO A PARTY WHICH IS MIRED IN CORRUPTION FROM 1967 ONWARDS, REMEMBER
  THE SUREVYS ON 2011 ASSEMBLY ELECTIONS AND 2014 PARLIAMENT ELECTIONS
  WHAT HAPPENED TO THEM IS EVERYBODY’S GUESS.

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தேர்தலுக்குத் தயாராவது என்பது இதுதான் போலிருக்கு. கருணானிதி, அறிவியல்பூர்வமான ஏமாற்றுவேலைகள் செய்வதில் மிகவும் கெட்டிக்காரர். இப்போது, தினமலர் கருத்துப்பகுதியில், திமுகாவுக்கு ஆதரவான கருத்துக்களுக்கு ‘லைக்ஸ்’ போடவும், திமுகாவின் எதிர்ப்புக்கருத்துக்களுக்கு ‘டிஸ்லைக்ஸ்’ போடவும் தனிப் படையே இயங்குகிறது. இது படிப்பவர்கள் மனத்தில், திமுகாவுக்கு ஆதரவு பெருகுவதான தோற்றத்தை உருவாக்குவதற்காகச் செய்யப்படுகிறது.

  இருந்தபோதிலும், மக்கள் எப்போதாவது திமுகாவையோ அதிமுகாவையோ வெறுத்தால், அவர்கள் ஆதரிப்பதற்கு இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது.

  மற்ற எவரையும் கருதுவதற்கான தகுதியை வேறு எந்த அரசியல்வாதியும், தற்சமயம் பெறவில்லை. அன்புமணிக்கு ஆதரவு கூடுகிறது என்பது தெரிந்தாலே, மற்ற எல்லாச் சாதியினரும் (பெரும்பான்மை) அதிமுகா (ஜெயிக்கற கட்சி என்பதால்)விற்கு ஓட்டளிப்பார்கள். விஜயகாந்த், அதிமுகாவுடன் கூட்டுச் சேர்ந்ததிலும், சட்டசபைக்குப் போகாமல், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் இருந்ததாலும், தனது செல்வாக்கைக் குறைத்துக்கொண்டார். (அவர் அமைதியாக இருந்திருந்தால், ஜெ.விற்குப் பிறகு, கருணானிதிக்கு (திமுகாவிற்கு) மாற்றாக மக்கள் அவரை நினைத்திருப்பார்கள்.

  பிரேமலதா சொல்வது முடிவல்ல. இது 100 சீட்டுகள் (அல்லது 70ஆவது) வாங்குவதற்கான பேரம்தான். விஜயகாந்த் சொல்வதே அங்கு இறுதியானதாக இருக்கும்.

  சென்ற தேர்தலிலேயே, மோடி அலை தமிழகத்தில் அடிப்பதுபோல் தெரிந்ததால்தான், இஸ்லாமியர்கள் அதிமுகாவிற்கு ஓட்டளித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், லட்சக்கணக்கான வித்தியாசத்திற்கு, ஒரு காரணமும் கிடையாது. ஜெவிற்கு ஆரோக்கியம் நன்றாக இருந்தால், திமுகாமீது மக்களின் வெறுப்பை இன்னும் நன்றாக அறுவடை செய்ய முடியும். (ஜெ. நன்றாக ஆட்சி செய்வதாகக் கூறமுடியாது. ஆனால் அவர் ஆட்சி ஒருவருக்கும் தொந்தரவாக இல்லை) Sorry.. to deviate from the original topic.

 10. senthil kumar சொல்கிறார்:

  நீங்கள் கூறுவது நம்பும் படி இல்லை,… லயலோ கணிப்புகள் கடந்த தேர்தல்களில் கிட்டதட்ட சரியானததாகதான் இருந்தது

 11. paamaran சொல்கிறார்:

  தினமணி செய்தி :—-
  First Published : 31 August 2015 12:27 AM IST

  “அரசியலில் பாரம்பரிய குடும்பத்தினரின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும்’ என காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்….! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது …!! இதற்கும் ஏதாவது ஒரு காரணம் கூறாமலா இருக்க போகிறார் … கலைஞர் …?

 12. paamaran சொல்கிறார்:

  கருணாநிதி – ஸ்டாலின் இடையே புகைச்சல் ஆகஸ்ட் 31,2015
  பதிவு செய்த நாள்
  31ஆக
  2015
  00:05

  ‘மக்கள் ஆய்வு மையம்’ வெளியிட்ட கருத்து கணிப்புக்குப் பின், ‘தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்’ என, அவரது ஆதரவு மாவட்ட செயலர்கள் வலியுறுத்துவதால், கருணாநிதி, ஸ்டாலின் இடையே புகைச்சல் உருவாகி உள்ளது.

  அதனால், பெரம்பலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ள ஸ்டாலின், முக்கிய முடிவு எடுக்க, விரைவில் பெங்களூருக்கு செல்ல உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….. !!! தினமலரின் செய்தியின் பின்னால் என்ன ” டிராமா ” ஒளிந்து இருக்கும் ….?

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  ஒரு வேடிக்கை பார்த்தீர்களா….
  தமிழகத்தில் எது நடந்தாலும்
  கேள்வியும் நானே- பதிலும் நானே –
  என்று அனைத்துப் பிரச்சினைகளிலும்
  முந்திக்கொண்டு, கருத்து வெளியிடும் கலைஞர் –

  லயோலா கல்லூரி கருத்து கணிப்பு குறித்து
  இரண்டு நாட்கள் ஆகியும்,
  இதுவரை (31/08 – இரவு 9.30 மணி )
  கருத்து ஏதும் சொல்லவில்லை…..!!!

  – வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • paamaran சொல்கிறார்:

   தினமலர் செய்தி : —-
   பதிவு செய்த நாள்
   01செப்
   2015
   00:15
   கருத்து கணிப்பின் ‘பகீர்’ பின்னணி
   தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின் பின்னணி குறித்து, தி.மு.க.,வுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

   புகார்:

   இதற்கு பின்னணியில், ஸ்டாலின் குடும்பத்தினர் இருப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் புகார் தெரிவித்து உள்ளனர். ‘பேஸ்புக், டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பொருளாளர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்த தனி அமைப்பே இயங்குகிறது. ‘அந்த அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளவரின் வேலை இது’ என்றும், கருணாநிதியிடம், அவர்கள் கூறி உள்ளனர்.இதற்கிடையில், இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து, மற்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், தங்கள் சந்தேகத்தை வலுவாக கிளப்புகின்றனர்….. ! ” இதற்கு தானே ஆசைபட்டாய் ஸ்டாலின் ” — என்று அப்பா கேட்பாரா …? கலைஞர் கருத்துகணிப்பு குறித்து இது வரை எதுவுமே கூறவில்லை !! — ஆனால் ” கலைஞர் வாய் திறக்காமல் ” —- மற்ற வாய்களை வைத்து விளையாடுவததில் —- கில்லாடி தானே …. ? இன்னும் பல சந்தேகங்கள … திருப்பங்கள் …. எல்லாம் இருந்தால் தானே “டிராமா ” களைகட்டும் ….?

 14. Ganpat சொல்கிறார்:

  ராமாயணம் மகாபாரதம் என்பது கற்பனை கதைகளே உண்மையில் நிகழவில்லை என்பது கலைஞர் கருத்து.ஆனால் அவரே சகுனியின் அவதாரமாக இருக்கும்போது அவை கற்பனை என்பதை எப்படி நம்புவது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.