மோடிஜி – நல்லெண்ணமா அல்லது இயலாமையா …?

PM’s-‘Mann-ki-Baat’-on-All-India-Radio

இது – நேற்று மோடிஜியின் மன் கீ பாத் ….

-// நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட
அவசர சட்டத்திற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
இந்த சட்டத்தை கைவிட முடிவு செய்து இருக்கிறேன்.
அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வரமாட்டோம். எனவே
இதில் எனது அரசு பதவியேற்பதற்கு முன்பிருந்த நிலையே நீடிக்கும்.

என்னைப் பொறுத்தவரை விவசாயிகளின் நலன்கள்தான் முக்கியம். விவசாயிகளுக்கு இதில் எந்த சந்தேகமும், அச்சமும் ஏற்படும் வாய்ப்பை என்றுமே அளிக்கமாட்டேன். இனி எந்த விதத்திலும் சந்தேகம் தேவையில்லை. யார் அச்சத்தை
உருவாக்க நினைத்தாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை.

நில மசோதா தொடர்பாக, ஒரு தரப்பினர் விவசாயிகளிடையே
குழப்பத்தை ஏற்படுத்தவும், பயத்தை ஏற்படுத்தவும்
முயற்சிக்கின்றனர்; இதுபோன்ற முயற்சிகளை, மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது; விவசாயிகளின் நலனுக்காக, எதையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

இது சோனியாஜியின் நேற்றைய பீஹார் தேர்தல் கீ பாத் –

– // ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்து பணக்கார தொழிலதிபர்களுக்கு தாரைவார்க்கத் துடிக்கும் மோடியின் அரசு, மக்கள்விரோத அரசு…

மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளின்
நிலங்களை பிடுங்கி பணக்கார நண்பர்களுக்கு கொடுக்க அவர்கள்
விரும்பினர். இதற்காக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 3 முறை அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகளின் உரிமைக்காக நாங்கள் பாராளுமன்றத்துக்கு
உள்ளேயும், வெளியேயும் வலுவான போராட்டங்களை நடத்தினோம்.
அதன் பயனாக தற்போது மத்திய அரசு இறங்கி வந்துள்ளதுடன்,
நிலம் எடுக்கும் மசோதாவை கைவிடவும் முடிவு செய்துள்ளது’’

இது நம்பள்கி பாத் –

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அரசியல் கட்சிகளும்,
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் அமைப்புகளும் தொடர்ந்து
எதிர்ப்பு தெரிவித்தும்,
சிறிதும் சட்டையே செய்யாமல் விடாமல் பாராளுமன்றத்தில்
விவசாயிகள் விரோத மசோதாவை நிறைவேற்ற முயன்றது
மோடிஜியின் அரசு.

லோக் சபாவில் சுலபமாக நிறைவேற்றியும் –
மெஜாரிடி இல்லாததால் -ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட
முடியவில்லை என்பதால் – மீண்டும் மீண்டும் –
மூன்று முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இப்போது தனக்குள்ள பலத்தைக் கொண்டு பாராளுமன்றத்தில்
இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை
இறுதியாக உணர்ந்து கொண்டதாலும்,

திரும்பத் திரும்ப விவசாயிகளின் போராட்டங்களையும்,
அரசியல் கட்சிகளின் தொடர்ந்த எதிர்ப்பையும் மீறி
மக்கள் விரோத சட்டத்தை நிறைவேற்ற முயன்றதால் –

மக்களுக்கு பாஜக அரசு மீது ஏற்பட்டுள்ள கோபத்தையும்,
வெறுப்பையும் உணர்ந்ததாலும்,
அது வரக்கூடிய மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு பாதகமாக
முடியும் என்பதை நினைத்து பயந்ததாலும் –

ஏற்பட்ட இயலாமையே நில சீர்திருத்த மசோதாவை கைவிடக்
காரணம் என்பதை மக்கள் உணர்கிறார்கள்.

இது பாஜக தலைமையில் ஏற்பட்டு விட்ட எந்தவித
மனமாற்றத்தையோ, நல்லெண்ணத்தையோ குறிக்காது
என்பதையும் மக்கள் அறிவார்கள்.

உண்மையிலேயே பாஜக தலைமை மனம் மாறி விட்டது
என்று மக்களுக்கு தெரிவிக்க நினைத்தால் –

கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட
பல மக்கள் விரோத முடிவுகளையும் –
தற்போது நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்
பல திட்டங்களையும் – கைவிட வேண்டும்.

முக்கியமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்
சங்கங்களும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ள (நாளை மறுநாள்)
செப்டம்பர் 2-ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு
காரணமாக அமைந்துள்ள மசோதாவை மறுபரிசீலனை
செய்ய வேண்டும்.

அரசாங்கம் என்பது மக்கள் நலனுக்காகத்தானே தவிர,
சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களின் வளர்ச்சிக்காகவும் –
பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்யவும்,
கட்சியின் patron களுக்கு சாமரம் வீசவும் மட்டுமே அல்ல
என்பதை உணர்ந்து பாஜக அரசு தன் போக்கை
மாற்றிக் கொள்ள வேண்டும்.

மனமாற்றத்திற்கும், இயலாமைக்கும் உள்ள
வித்தியாசத்தை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மோடிஜி – நல்லெண்ணமா அல்லது இயலாமையா …?

 1. thiruvengadam சொல்கிறார்:

  இதுவரை தன் பலத்தை மட்டும் நம்பி ஆட்சி நடத்தியவர் தற்போது தனக்கும் பலவீனம் என்று உணர்ந்ததின் வெளிப்பாடு. இந்த நிகழ்வு தொடர விரும்புவோம்.

 2. Pingback: மோடிஜி – நல்லெண்ணமா அல்லது இயலாமையா …? | Classic Tamil

 3. எப்படியோ நல்லது நடந்தால் சரி!

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  சில விசயங்களில் பின் வாங்குவது போல இருக்கும், ஆனால் வேறு ரூபத்தில் மீண்டும் வரும். மீதேன் எரிவாயு எடுப்பது வேறு பெயரில் வருவது போல. அரசியல்வாதிகள் அவர்களுக்கு எது எப்போது தேவையோ அப்போது அதை உபயோகிப்பார்கள். தற்போது குஜராத் கலவரம் ஏற்பட்ட போது காந்தி பிறந்த மண், சர்தார் பிறந்த மண் என்றார். ஏன் 2002-இல் அவர்கள் பிறக்கவில்லையா ?.

 5. thiruvengadam சொல்கிறார்:

  Just came across this & making available for Ur perusal ( if not so for) Full text: Leading US academics urge Silicon Valley to be cautious in dealing with Modi government

  http://scroll.in/article/751959/full-text-leading-us-academics-criticise-uncritical-fanfare-ahead-of-modis-silicon-valley-trip

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  குள்ள நரி சொல்லியதாம்…
  “இந்த பழம் புளிக்கும்”

  “விவசாயிகளின் நலனுக்காக, எதையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது” என்று மோடி கூறியவுடன் இந்த பழமொழி தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது!

  காமை சாரின் கடந்த சில பதிவுகளை பார்க்கும்போது “எதிர்பார்ப்பு அதிகமாகும்போது ஏமாற்றங்களும் அதிகமாகும்” என்பது உண்மைதான் போல!

 7. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I see this as a mere stunt due election in Bihar…..This will definitely come up in a different name with a different version of same content……

  JJ & Namo have few similarities like saying – எனது அரசு, இருக்கிறேன் etc……..

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சார்…இது பீகார் எலெக்ஷன் வெர்ஷன். இந்த மூவரின் கூட்டணியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர்களுக்கு மெல்ல அவல் கொடுக்க வேண்டாமே என்று ‘நில கையகச்’ சட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார். மூவர் வென்றால், அவர்களுக்குக் குடைச்சல் நிச்சயம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.