“சத்யமேவ ஜெயதே ” – கே.டி.சகோதரர்களுக்கு – பாஜக அடைக்கலம் தருகிறது…..!

satyameva jayate-1

கெட்டிக்காரத்தனம் இல்லாமலா இவ்வளவு உயரத்திற்கு
வந்திருக்க முடியும் …!!!
இறுதியாக, பாஜக தலைமையையும் வசப்படுத்தி விட்டனர்
சகோதரர்கள்….

சன் குழுமத்திற்கு பாதுகாப்பு லைசென்சு கொடுக்க மத்திய அரசின் உள்துறை இலாகா அனுமதி மறுத்ததால் – சன் குழுமத்தின்
தொலைக்காட்சி சானல்கள் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல்
ஏற்பட்டது. இதே போல் FM radio விற்கான ஏலத்தில் அவர்கள்
பங்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது…. தொடர்ந்து நீதிமன்றம்
சென்று அவர்கள் தற்காலிக relief பெற்று வந்தது
நண்பர்களுக்கு நினைவு இருக்கலாம்.

நிதியமைச்சரான திரு அருண் ஜெட்லி வசம் தான் செய்தி மற்றும்
ஒளிபரப்பு இலாகாவும் இருக்கிறது. சகோதரர்கள் ஏற்கெனவே, சென்ற மாதம் பிரதமரையும், ஜெட்லி அவர்களையும் நேரில் சந்தித்து விவரமாகப் பேசியது – டெல்லி செய்திகளில் வெளிவந்தது.

சன் தொடர்பான விவகாரங்களுக்கு
இறுதி முடிவு எடுப்பது ஜெட்லி அவர்களின் இலாகா தான்
என்றாலும் கூட,
உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு லைசென்சு கொடுத்தால் தான்
மேற்கொண்டு இவர்கள் உதவ முடியும்.

செய்தி மற்றும் ஒளிபரப்பு இலாகா எவ்வளவு முயன்றும் –
இவ்வளவு நாட்களாக, உள்துறை அமைச்சகம்,
பாதுகாப்பு லைசென்சை தர மறுத்து வந்தது. இதற்கான
காரணமாகச் சொல்லப்படுபவர் எல்.சி.கோயல் என்கிற
உள்துறை அமைச்சகத்தின் மூத்த செயலாளர் என்றும்- அவர்
விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் அமல்படுத்துவதில்
சற்றும் விட்டுக் கொடுக்காத போக்கு உடையவர் என்றும்
சொல்லப்படுகிறது.

அருண் ஜெட்லி அவர்களின் அமைச்சரகமான, செய்தி மற்றும்
ஒளிபரப்புத் துறை எவ்வளவு முயன்றும் – விதிமீறல்களுக்கு
அவர் உடன்படவில்லை என்பதால் – இறுதியாக நேற்று மாலை
அவரது பொறுப்பிலிருந்து கழட்டி விடப்பட்டார்.

மே, 2015-ல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு – என்கிற
ஒப்புதலுடன் இந்த பதவியில் நியமிக்கப்பட்டவர்,
நான்கே மாதங்களில் –

சுயகாரணங்களுக்காக பதவி விலகுவதாக எழுதிக் கொடுத்து விட்டு. வெளியேறும்படி நேற்று காலையில் கூறப்பட்டார் என்றும்,

அவர் வெளியே இது பற்றி எதுவும் பேசாமல் இருப்பதற்காக, இன்று முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு – ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான வேறு ஒரு பதவியில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் – டெல்லியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

புதிய உள்துறை செயலாளராக, மோடிஜி அவர்களே
தேர்ந்தெடுத்துள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த

மூத்த அதிகாரி ராஜீவ் மஹரிஷி
என்பவர் இன்று காலை முதல் பொறுப்பேற்கிறார்….!!!

இனி எல்லாருக்கும் எல்லா வளமும் கிடைக்கும்….
வாழ்க வளமுடன் …!!!

உச்சநீதிமன்றத்தில், சென்ற மாதம்
முன் ஜாமீன் வழக்கு வந்தபோது –
அரசின் மூத்த வழக்குரைஞர் நடந்துகொண்ட
” வழ வழா – கொழ கொழா ”
முறைக்கான காரணம் இப்போது உறுதியாகி விட்டது.

நமது அரசின் சின்னத்தில் மூன்று சிங்க முகங்களுடன்
கீழே ஒரு வாசகமும் இருக்கும் – கவனித்திருக்கிறீர்களா …?

” சத்யமேவ ஜெயதே ” ( உண்மையே வெல்லும்…! )

ரொம்ப சரி…ஆனால் – எங்கே, எப்போது, எப்படி ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to “சத்யமேவ ஜெயதே ” – கே.டி.சகோதரர்களுக்கு – பாஜக அடைக்கலம் தருகிறது…..!

 1. உண்மையே வெல்லும் ஐயா ஆனால் அப்பொழுது வாதியும் இருக்க மாட்டார்கள் அதைப் பார்க்க நாமும் இருக்க மாட்டோம் கொ……..ஞ்……..ச……..ம்…….லே……ட்…..டா….கு……ம்……

 2. சந்திரசேகரன் சொல்கிறார்:

  மலிஞ்சா மார்கெட்டுக்கு வந்து தானே ஆகனும் அப்போ யாருகூட யாரு,
  கேடி ஜோடி மோடியானு

 3. Pingback: “சத்யமேவ ஜெயதே ” – கே.டி.சகோதரர்களுக்கு – பாஜக அடைக்கலம் தருகிறது…..! | Classic Tamil

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  புதிய மாற்றங்கள் வரும் என்று ஏமாற்றப்பட்டோம். அவர்கள் எல்லோருமே அவர்களுக்கான நிலையில் கூட்டணியோடு செயல் படுவார்கள். தமிழில் இன்னும் அழகாக கூறலாம் “ஒத்தாசையாக”. நாம் தான் தொடர்ந்து ஏமாறுகிறோம். இதில் நீதி, நேர்மை, சத்தியம்… அப்படின்னா என்ன ???

 5. ssk சொல்கிறார்:

  குமாரசாமிக்கு ஒரு வாய்ப்பு போய் விட்டது ….

 6. paamaran சொல்கிறார்:

  // நமது அரசின் சின்னத்தில் மூன்று சிங்க முகங்களுடன்
  கீழே ஒரு வாசகமும் இருக்கும் – கவனித்திருக்கிறீர்களா …?

  ” சத்யமேவ ஜெயதே ” ( உண்மையே வெல்லும்…! )

  ரொம்ப சரி…ஆனால் – எங்கே, எப்போது, எப்படி ….? // நான்காவதாக உச்ச நீதிமன்றம் என்ற ஒரு சிங்க முகம் பின்பக்கம் இருந்து அனைத்தையும் கவனித்து — கண்காணித்து கொண்டுதான் இருக்கிறது என்கிற மக்களின் நம்பிக்கை கூட சில நேரங்களில் நடக்காமல் போவதுதான் வருந்த தக்கதா … அய்யா ….? இதைவிட நம் தமிழ்நாட்டில் முதல்வர் பதவி ஆசை பிடித்து பலரும் அலைவதை பார்த்தால் தங்களுக்கு என்ன தோன்றுகிறது …. ? முதல்வர் ரேஸில் முந்திய ஸ்டாலின்… பின்னணியில் மருமகன் சபரீசன்? அதிருப்தியில் கருணாநிதி Posted by: Mayura Akilan Published: Tuesday, September 1, 2015, 18:04 [IST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின் பின்னணி குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் ரேஸில் கருணாநிதியை ஸ்டாலின் முந்தியதன் பின்னணியில் அவரது மருமகன் சபரீசனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. வுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-upset-over-stalin-s-son-law-234764.html ……… இந்த செய்தியை படித்தவுடன் என்ன தோன்றுகிறது — அன்பானவர்களே ….. ?

 7. drkgp சொல்கிறார்:

  தாங்கள் நாளையாவது மாறும் என ஏக்கத்துடன் எதிர்பார்ப்பது கானல் நீர் என்று
  முன்பு ஒருமுறை நான் சொல்லியதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன்.
  மாறாதையா மாறாது மணமும் குணமும் மாறாது.
  நடிகர்கள் மாறுவார்கள் ஆனால் நாடகம் மாறாது.
  It is for sure that KD brothers will ever remain in the good books of any ruling combination.

 8. Ezhil சொல்கிறார்:

  மோடி ஜி பிரதமராக வேண்டும் என்று அந்நாளிலேயே குரல் கொடுத்து அப்போதைய பாஜக ‘பெரிய’ தலைகளை வெறுப்பேற்றியவரே இன்று பொதுவெளியில் புலம்பும் நிலைக்கு வந்து விட்டார். இதில் நீங்கள் என்ன நான் என்ன…

  http://zeenews.india.com/news/india/narendra-modi-failed-my-dream-ram-jethmalani-on-orop-delay_1665128.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக எழில்,

   இன்றைய இடுகைக்கு அடிப்படை ராம் ஜெத்மலானியின்
   “புலம்பல்” தான். பல உண்மைகளை மறைத்து,
   பொய் வாக்குறுதிகளையே அஸ்திவாரமாக வைத்து
   மயன் மாளிகையை கட்டி உள்ளே புகுந்து கொண்டு விட்டார்கள்…

   அவர்களை வழிக்கு கொண்டு வருவதோ,
   வெளியே கொண்டு வருவதோ மிகவும் சிரமமான செயல்.,

   இப்போதைக்கு நம்மால் முடிந்தது – நமக்கு தெரிய வரும் உண்மைகளை
   பகிர்ந்து கொள்வோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அரசியல்வாதிகள் சொந்தத் தொழில் செய்வதால்தான் இந்தப் பிரச்சனை. எல்லோரும் கூட்டுக்களவாணிகளாக ஆகின்றனர். இல்லாவிட்டால், கேடிக்காக வைகோ புரோக்கர் வேலை பார்ப்பாரா (மோடியைச் சந்தித்தது இதுக்காகத்தான்). தந்தை நிதி அமைச்சர். தனயன் சொந்தத் தொழில். அப்புறம் நாடு ஏன் நாசமாகப் போகாது? ஸ்டாலின் தமிழகத்துக்கே உழைக்கிறார்; திமுகாவுக்காக இரவும் பகலும் பாராது உழைக்கிறார் என்று சொல்கிறார்கள். பின் எப்படி கணக்கில் காட்டும் 50 கோடி வந்தது? நீங்களும் நானும் உழைத்து லட்சங்களைப் பார்ப்பதே லட்சியமாகிவிட்டதே..
  குடும்ப உறுப்பினர்கள் தொழில் செய்தால், அமைச்சராக முடியாது. சொந்தத் தொழில் இருந்தால், எந்த எலெக்ஷனிலும் நிற்க முடியாது என்று ஒரு சட்டம் போட்டால், அரசியல்வாதிகள் நாட்டுக்கு வேலை செய்ய ஆரம்பிப்பார்கள். இந்த அயோக்கியத்தனத்துக்கு, கம்யூனிஸ்டுகளைக் கையெடுத்துக் கும்பிடவேண்டும். (வலதோ இடதோ… பணத்தை வீட்டுக்காகக் கொள்ளையடிப்பதில்லை)

 10. Ganpat சொல்கிறார்:

  நிஜங்களில் மூன்று வகை உண்டு..
  1 தித்திக்கும் நிஜம்:
  பத்தாண்டுகள் ஊழலாட்சியை தந்த மன்மோகன் என்ற Dummy ஐ தூக்கி அடித்து சக்தி,ஆற்றல்,தேசபக்திஆகியவை அதிகமாக காணப்பட்ட மோடியை ஆதரித்து 2014 தேர்தலில்நான் போட்ட ஓட்டு!
  2.சுவையற்ற நிஜம்:
  2019 தேர்தலிலும் நான் மோடியையே ஆதரித்து போடப் போகும் ஓட்டு
  3.கசக்கும் நிஜம்
  26/5/14 முதல்2/9/15 வரை மோடி அரசின் செயல்பாடுகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.