” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!!

jethmalani

முதலில் செய்தி – பிறகு நமது கருத்துக்கள் –

————–

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடியை
பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று
பலமுறை வற்புறுத்தியவர் ராம்ஜெத்மலானி, இப்போது அவரே
மோடியின் அரசுக்கு எதிராக விமர்சித்து வருவது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக
நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில்
முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களது போராட்டம் 78 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது.

போராட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ ஜெனரல் சத்பீர் சிங்,
நாங்கள் இப்போதும் எங்களது நாட்டிற்காக உயிரை கொடுக்க
தயாராக உள்ளோம், ஆனால் அவர்கள் எங்களுக்கு அநீதியை
வழங்கக்கூடாது என்று கூறினார்.
பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி இந்த போராட்டத்தில்
கலந்து கொண்டு ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆதரவு
அளிக்கும் விதமாக பேசினார். செய்தியாளர்களிடம் பேசும் போது
மோடி பற்றியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி பற்றியும்
விமர்சித்தார்….

” அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து நாட்டு மக்களை
கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மீது நான்
மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அவர் அந்த
நம்பிக்கையை சிதைத்துவிட்டார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார்.
இவர்களை போல நானும் ஒரு அரசியல்வாதி என்று கூறுவதில்
வெட்கப்படுகிறேன். ஆனால் நான் அவர்களை போல மக்களையும்
நண்பர்களையும் மறந்து பதவியில் திளைக்கும் அரசியல்வாதி
இல்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசமக்களை
பாதுகாத்த வீரர்களுக்காக நான் இங்கு வந்தேன்” –
என்று கூறினார்.

( http://tamil.oneindia.com/news/india/narendra-
modi-failed-my-dream-ram-jethmalani-on-orop-
delay-234701.html )

—————————-

ராம் ஜெத்மலானி அவர்களின் பேச்சு நமக்கு எந்தவித
அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம் உண்மையை
ஏற்கெனவே உணர்ந்து நாமே புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

இந்த OROP – one rank – one pension –
பற்றி சில தகவல்கள்….

OROP-Protest-1

orop protest-2

இத்தனை நாட்களாக, பாஜக அரசு நிச்சயம் இதை அமலுக்கு கொண்டு வருவோம் என்று தான் சொல்லி வந்தது.
” எப்போ வரும், எப்படி வருமென்று மோடிஜிக்கு மட்டும் தான்
தெரியும். ஆனால் நிச்சயம் வந்து விடும்….
விரைவில் மோடிஜியே தன் திருவாய் மலர்ந்தருளி
அறிவித்து மகிழ்வார் ” என்று 4 நாட்களுக்கு முன்னர் கூட
பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் – நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது
திரு அருண் ஜெட்லி –
இது நடக்கப்போவதில்லை என்று கூறி விட்டார்.
மாதா மாதம், வருடா வருடம் பென்ஷனை மாற்றிக் கொண்டே
இருக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமானதல்ல –
என்று ராணுவத்தினரின் கோரிக்கையை எகத்தாளமாகப்
பேசினார் ஜெட்லிஜி.

இப்போதெல்லாம் மமதை மிகுந்து வார்த்தைகளை வீசும்
திரு அருண் ஜெட்லி நாட்டு மக்களுக்கு தவறான தகவலைத்
தருகிறார்.

முதல் விஷயம் – தாங்கள் பதவிக்கு வந்தால்
one rank -one pension – முறையை அமல் படுத்துவோம்
என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது.
தேர்தலுக்கு முந்தைய தனது அனைத்து பேரணிகளிலும் –
அப்போது பிரதமர் வேட்பாளராகப் பேசிய, மோடிஜி –
தான் பதவிக்கு வந்தால் ராணுவத்தினரின் இந்த நீண்டநாள்
கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவதாக தனிப்பட்ட
முறையிலும் வாக்குறுதி கொடுத்தார்.

இப்போது அது நடைமுறை சாத்தியமில்லை என்று சொன்னால்
என்ன அர்த்தம் ? அவரது வார்த்தையை நம்பி ஓட்டுப்போட்ட
முன்னாள், இன்னாள் ராணுவத்தினரும்,
அவர்களது குடும்பத்தினரும்
முட்டாள்களா ? இளிச்சவாயர்களா ?
தேர்தலில் ஜெயிப்பதற்காக நடைமுறை சாத்தியமில்லாத
ஒரு வாக்குறுதியை மோடிஜி கொடுத்தது மோசடி இல்லை
யா ?

இரண்டாவது விஷயம் – திரு ஜெட்லி அவர்கள் கூறுவது போல், இது மாதா மாதம் அல்லது வருடா வருடம்
மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம் அல்ல.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ராணுவத்தினருக்கும் –
சம்பள மற்றும் பென்ஷன் விகிதங்கள் பத்து வருடங்களுக்கு
ஒரு முறை தான் மாற்றி அமைக்கப்படுகின்றன.
1973 க்குப் பிறகு 1986-ல் தான்,
பிறகு 1996, பிறகு 2006,
இப்போது 2016-ல் due.

இப்போது முதல் தடவையாக ராணுவத்தினருக்கு
பென்ஷன் விகிதங்களை மாற்றி அமைக்கும்போது
கூடுதல் செலவு பிடிக்கும் என்பது உண்மையே. ஆனால்,
அதன் பின்னர் தொடர்ந்து வரக்கூடிய மாறுதல்கள்
கூடுதல் சுமையை கொண்டிராது.

இதன் பிறகு – பத்து வருடத்திற்கு ஒரு முறை
பென்ஷன் விகிதங்களை மாற்றினால் போதும்.

திரு.ஜெட்லி சாதாரண பொது மக்களுக்கு இந்த விஷயங்கள்
புரியாது என்ற நம்பிக்கையில் வேண்டுமென்றே குழப்புகிறார்.
வருடா வருடம் என்று அவர்கள் கூறுவது சில
marginal adjustments – அதைக்கூட தவிர்த்து விட முடியும்.

பெரும் தொழிலதிபர்களுக்கு ஐந்து லட்சம் கோடி வரியை
சத்தமில்லாமல் தள்ளுபடி செய்யும் அரசுக்கு –

பெருங்கடன்காரர்களிடமிருந்து வாராக்கடனாக நாலு லட்சம் கோடி
ரூபாயை வசூலிக்காமலே விடும் அரசுக்கு –

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களை
காக்க பென்ஷன் கொடுப்பது மட்டும் நடைமுறை சாத்தியமில்லாத விஷயமாகிப் போவது எப்படி …?

இந்த one rank -one pension முறை –
அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும்
வேண்டுமென்று அவர்கள் கேட்கவில்லை.

கேட்பது ராணுவத்தினருக்கு மட்டும் தான்.
அதற்கும் மிக பலமான காரணம் இருக்கிறது.
வாழ்க்கையில் ரெண்டாங்கெட்டான் வயதில் ராணுவத்தினர்
வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுகின்றனர். பெரும்பாலானோர்
35 முதல் 40 வயதிற்குள் ( அவர்களது பதவியைப் பொறுத்து )
ரிடையராக்கப்பட்டு விடுகின்றனர். ராணுவத்தை இளமையாக
வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அரசின் கொள்கை
முடிவு அது.

ஆனால் – இதற்காக அவர்களை பலிகடா ஆக்குவது எந்த
விதத்தில் நியாயம் …? நீண்ட நாட்களுக்கு அவர்களுக்கு பென்ஷன்
அளிக்க வேண்டி இருக்கிறதே என்று வாதாடுகிறார்
நிதியமைச்சர். இளமையிலேயே வீட்டுக்கு போகிறேன் என்று
அவர்களா சொன்னார்கள் …? அரசு தானே அனுப்புகிறது…?
வாழ்க்கையின் நடுமையத்தில் – 40 வயதுகளில் அவர்களில்
எத்தனை பேருக்கு மறுவேலை கிடைக்கும் …?

ராணுவத்தினரின் DNA -விலேயே ஒழுங்கும் கட்டுப்பாடும்
ஊறிக்கலந்திருக்கிறது. இயல்பாகவே உத்திரவுகளுக்கு கட்டுப்பட்டு
நடந்தே பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் கிடையாது….
பாவம் – அரசை எதிர்த்து போராடக்கூட அவரகளுக்கு தெரியாது….
இப்போது கூட அவர்கள் – கிழவர்கள் – வெறுமனே
உண்ணாவிரதம் தான் இருக்கிறார்கள்.

அவர்களால் அரசை எதிர்த்து என்ன செய்ய முடியும் ?
எத்தனை நாள் போராட முடியும் என்று அரசு நினைக்கக்கூடும்….

– தர்மம், நியாயம் என்றெல்லாம் சில விஷயங்கள்
இருக்கின்றன. மோடிஜியை பொருத்த வரை அவை
பேரணிகளில் உரையாற்றும்போது மக்களை வசியப்படுத்த
மட்டுமே உதவும் டெக்னிக்…….

ஆனால் நிஜமாகவே அந்த தர்மத்திற்கும், நியாயத்திற்கும்
அக்கிரமத்தையும், அநியாயத்தையும் அழிக்கும்
வலு உண்டு – என்ன …. கொஞ்சம் காலம் பிடிக்கும்….!!!

போராடும் கிழவர்களில் ஒருவர் 92 வயது நிரம்பியவர்.
அவர் கேட்கிறார் ” மோடிஜி.. என் காலம் முடிவதற்குள் OROP
கொடுத்து விடுவீர்களா ?” – என்று…

ஆனால், இதெல்லாம் இப்போதைக்கு இவர்கள்
காதுகளில் விழாது… தலையில் ஏறாது…
…. காரணம் – மமதை, போதை – அதிகார போதை…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!!

 1. சந்திரசேகரன் சொல்கிறார்:

  ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை ஒன்றும் வந்த பின்பு ஒன்றும் என்பது நமது அரசியல் கட்சிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆட்சி அதிகாரத்திற்கு வரவோமா என்ற நிச்சயமற்ற நிலையில் வாக்குறிதிகளை அள்ளி தெளிப்பதும் விதிவசத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டால் தடம் புரள்வதும் வண்ண வேறுபாடுகளை கடந்து நமது அரசியல்வாதிகள் அனைவருக்கும் பொதுவான விதி இதில் மோடி மட்டும் விதிவிலக்கா அதே நேரம் செயல்படாத அரசு விட்டு செல்லும் இது போன்ற சுமைகள் புதிய அரசுக்கு ஒரு தலைவலி என்பது தான் உண்மை.

 2. seshan சொல்கிறார்:

  Dear Sir

  pl inform us , what is the situation of Central govt and state govt . staff pensioners. like 65/75/80 batch retired persons. is they are getting correct one or scale is differ.

 3. seshan சொல்கிறார்:

  if they did for Central govt, why not military is there any special arrangement. it looks something fishy.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சேஷன்,

   குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் பணி புரிந்தால்,
   அவர்கள் கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளத்தில்
   பாதி, பென்ஷனாக கிடைக்கும்.

   ஆனால், ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணிபுரியும்
   பாக்கியம் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே
   கிடைக்கிறது.
   கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் 15 முதல் 20 ஆண்டுகளில்
   ரிடையராகி விடுகிறார்கள். (இது அவரவர் வகிக்கும்
   பதவியை பொறுத்தது). எனவே அவர்களுக்கு
   அடிப்படை சம்பளத்தில் பாதி கூட பென்ஷனாக
   கிடைப்பதில்லை.

   ஒவ்வொரு சம்பள கமிஷன் வரும்போதும்,
   புதிதாக ரிடையர் ஆகிறவர்களை விட, ஏற்கெனவே
   ரிடையர் ஆனவர்கள் குறைவாகவே பென்ஷன்
   வாங்குவார்கள் ( பழைய சம்பள விகிதங்களில் )

   ஒவ்வொரு சம்பள கமிஷன் வரும்போதும்,
   பென்ஷனையும், புதிய சம்பள விகிதங்களில் கொண்டு
   வாருங்கள் என்பது தான் ராணுவத்தினரின் கோரிக்கை.

   மத்திய / மாநில – சிவில் சர்வீஸ்களுக்கும் கிட்டத்தட்ட
   இதே விதிமுறைகள் தான். ஆனால், அவர்கள்
   58 அல்லது 60 வயது வரை பணி புரிய அனுமதிக்கப்படுவதால்,
   ரிடையர் ஆகும்போது கிடைக்கும் பென்ஷன் ஓரளவு
   திருப்திகரமாக இருக்கிறது. மேலும், அவர்களது
   முக்கிய குடும்ப கடமைகளான, பிள்ளைகளின் படிப்பு,
   திருமணம் ஆகிய பொறுப்புகள் நிறைவேறி விடுகின்றன.

   35-40 வயதில் ரிடையராகும் ராணுவத்தினர் –
   வாழ்க்கையின் நடுப்பகுதியில், திக்குத் தெரியாத காட்டில்
   விடப்பட்டது போல் தவிக்கின்றனர்.

   இவர்களை மத்திய அரசு கவனித்து தகுந்த உதவி
   அளிக்கவில்லை யென்றால்,
   அதுவும் செய்வதாக வாக்குறுதி கொடுத்து
   பதவிக்கு வந்து விட்டு செய்யவில்லை என்றால் –

   இயற்கையே அவர்களை மன்னிக்காது.

   சேஷன் – உங்கள் கேள்வியின் மூலம்
   மற்ற நண்பர்களுக்கும்
   இந்த பிரச்சினையை ஓரளவு புரிய வைக்க முடிந்தது.

   எனவே உங்களுக்கு விசேஷ நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    2004 பிறகு வேலைக்கு சேர்த்தவர்களுக்கு முழு அரசாங்க பென்ஷன் கிடையாது .. பொது துறை நிறுவனங்களுக்கு பென்ஷன் கிடையாது .. வங்கிகளுக்கு சில மாறுதல்களுடன் பென்ஷன் வசதி உண்டு ..
    உண்மையிலே ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கும், இ.ஆ.ப உயர் அதிகாரிகளுக்கும் orop வகை பென்ஷன் உண்டு .. இவர்கள் இரண்டு பேருமே அமுக்கமாக இருக்கிறார்கள் ..
    சம்பள கமிஷன் வரும் போது, பென்ஷன் அளவு கொஞ்சம் மாறுபடும் ..

    • ravi சொல்கிறார்:

     ///அதுவும் செய்வதாக வாக்குறுதி கொடுத்து
     பதவிக்கு வந்து விட்டு செய்யவில்லை என்றால் –
     இயற்கையே அவர்களை மன்னிக்காது.////

     எங்கள் பகுதியில் மணல் கொள்ளை நிறுத்துவேன், மின்சார பிரச்னை சரி செய்வேன் என்று அம்மா சொன்னார் தேர்தல் முன் .. இன்று வரை ஒரு துரும்பும் நடக்கவில்லை .. சட்டசபை , நாடாளமன்றம் , உள்ளாட்சி அமைப்புகள் , அனைத்திலும் அம்மா தான் ஜெய்தார்,, இந்த முறையும் சட்டசபையில் அம்மா ஜெயிக்க வாய்ப்பு அதிகம் . ..
     நாங்களும் சமாளித்து வாழ பழகிவிட்டோம் ..அதே போல தான் மற்ற மாநிலத்து மக்களும் … யாரும் ஒன்றும் செய்ய போவதில்லை … …

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இப்போதான் சாரே பிரச்சனை புரிந்தது. அதை நீங்கள் இடுகையிலேயே சொல்லியிருக்கலாம். எல்லோருமா வேறு வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்? To take care of inflation, pension revision கேட்பது நியாயம்தானே..

 4. Pingback: ” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!! | Classic Tamil

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  இராணுவ அதிகாரிகளுக்கு அவர்களுக்குரிய பென்ஷன் கொடுப்பதால் இவர்களுக்கு என்ன பயன் ?. அடுத்த முறை வெறும் ஓட்டுகள் வேண்டுமானால் கிடைக்கும். பெரும் தொழில் அதிபர்களுக்கும், பெரும் கடன்காரன்களுக்கும் சலுகை அளித்தால் எதாவது கிடைக்கும்…கட்சி நிதி, சொகுசு கப்பல் உலா இப்படி பல…
  http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7606894.ece?homepage=true&theme=true

 6. jigopi சொல்கிறார்:

  திரு. காவிரி மைந்தன், மற்றொரு கருத்தை இங்கு கூற விரும்புகிறேன். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பல வீரர்கள் மீண்டும் அரசு மற்றும் வங்கி அல்லது பொதுத்துறை ஊழியர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அப்பணியில் இருந்து ஓய்வு பெரும்போது மீண்டும் ஒரு ஓய்வூதியம் கிடைக்கிறது. (இரண்டு ஓய்வூதியங்கள்) சிலர் இது போன்ற பணி கிடைக்காமல் இருப்பதால் சொந்த வாழ்க்கையில் சிரமப்படுவார்கள். எனவே அரசாங்கம் அவர்கள் அனைவரையும் தகுதிக்கேற்ப அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் முன்னுரிமை கொடுத்து எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு வாய்ப்பிருக்காது.

 7. ravi சொல்கிறார்:

  காரணம் – மமதை, போதை – அதிகார போதை…!!! ////
  எல்லாம் சரி தான் சார் ..ஆனால் இப்படி பட்ட ஆட்களை தானே மக்கள் விரும்பிகிறார்கள் ..
  இந்திரா காந்தி, மம்தா , மாயாவதி , ஜெயலலிதா , முலாயம் , லாலு . எல்லோரும் திரும்ப திரும்ப ஜெய்கிரார்கள் .. அகம்பாவத்தில் இவர்களில் யாரும் சளைத்தவரில்லை ..

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   அகம்பாவம் இல்லாத ஒரு அரசியல்வாதியைச் சொல்லுங்கள்.

   • ravi சொல்கிறார்:

    கண்ணனுக்கு எட்டியவரை யாரும் இல்லை (திரு நல்லகண்ணு !! – விதிவிலக்கு )…
    அப்படி இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் … (காமராஜ்,ராஜாஜி,கக்கன்)

 8. Pingback: ” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!! | chandhan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.