திடீரென்று ஜாதிக்கட்சியாகிவிட்ட திருமா…..! கலைஞர் திருமாவை ஒதுக்கி தனிமைப்படுத்துகிறார்…

tks trio

இன்று நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளின் பின்னணி எதுவாக
இருக்கும் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்…..

திரு.டிகேஎஸ் இளங்கோவனின் டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியும்,
அதன் பின்னரான திமுக தலைமையகத்தின் மறுப்பு செய்தியும் …

இது கலைஞரின் ராஜதந்திர முயற்சிக்கு
இன்னுமொரு எடுத்துக்காட்டு.
அவர் இந்த முயற்சியில் ஜெயிக்கிறாரோ இல்லையோ –
நாடகத்தின் சூத்திரதாரி என்கிற முறையில், தனக்கு தேவைப்படும்
ஒரு துவக்கத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்று விட்டார்….

கலைஞரையும், டிகேஎஸ் இளங்கோவனையும் அறிந்தவர்கள் – இளங்கோவன் பேட்டியில் கூறியது நூற்றுக்கு நூறு கலைஞர் எழுதிக் கொடுத்த வசனம் என்பதை உணர்வார்கள்.

முதல் காட்சியான பேட்டி கொடுக்கப்பட்டு,
செய்தி வெளியானதும்,
இரண்டாவது காட்சியான,
ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த
மறுப்பு அறிக்கையும் வெளியாகி விட்டது.

இனி மூன்றாவது காட்சி அரங்கேறும் முன்னர் –
இடையே சிறிது இடைவெளி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்…!

ஆட்சியில், அதிகாரத்தில் – பங்கு கேட்கும் விஷயத்தை துவக்கிய
திருமாவை பழி வாங்கும் படலம் தான் அடுத்த படலம்.
அதற்கு முதல் கட்டமாக, திருமாவின் கட்சியை
ஜாதிக்கட்சி என்று சொல்லி பாமக வுடன் ஒப்பிட்டாகி விட்டது.

இனி -வைகோவை பஞ்ச பாண்டவர் கூட்டணியை விட்டு
வெளியே இழுத்து வரும் முயற்சிகள் துவங்கும்….

துணை முதல்வர் பதவி கேட்போம் என்று சொன்ன
இளங்கோவன்-குஷ்பு காங்கிரசை 30 சீட்டுக்கு மேல் கேட்க
உங்களுக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லி
மட்டம் தட்டியாகி விட்டது.

கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களை தாராளமாக தட்டலாம்…
அவர்களுக்கு திமுகவை விட்டால் வேறு நாதி…..?

170 இடங்களில் போட்டி, தனித்து ஆட்சி என்று சொல்லி
துவண்டு கிடந்த திமுகழக தொண்டர்களை
உற்சாகப்படுத்தியாகி விட்டது.

மீண்டும் மீண்டும் வியக்கிறேன்….
இந்த 92 வயது சாணக்கியரின் சாமர்த்தியத்தைக் கண்டு …..!!!

பின் குறிப்பு –

இளங்கோவன் நிஜமாகவே தவறான பேட்டி கொடுத்திருப்பாரோ
என்று சந்தேகப்படுபவர்களுக்கு –
இளங்கோவன் தலைவர் அனுமதி இன்றி.
தானாகவே டைம்ஸ் ஆப் இந்தியா நிருபரை கூப்பிட்டு இப்படி ஒரு
சென்சேஷனல் பேட்டி கொடுக்க பைத்தியக்காரர் அல்ல…..
தலைமைக்கழக செயலாளர் பொறுப்பில் இருப்பவர்…!!!

ஒருவேளை நிஜமாகவே கொடுத்திருந்தால் – ???
இதற்குள்ளாக கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பார்….

இவருக்கு முன்னதாக தன்னிச்சையாக பேட்டி கொடுத்த
தலைமைக்கழக செயலாளர் கல்யாணசுந்தரம் கதை என்ன ஆயிற்று என்பது – நண்பர்களுக்கு நினைவிற்கு வரலாம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திடீரென்று ஜாதிக்கட்சியாகிவிட்ட திருமா…..! கலைஞர் திருமாவை ஒதுக்கி தனிமைப்படுத்துகிறார்…

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  Mr.K.M.

  This is fantastic way of explaining the developments.
  I am amazed.,

 2. சந்திரசேகரன் சொல்கிறார்:

  திருமாவும் சரி திருக்குவளையாரும் சரி வாக்கு வேட்டையர்கள் தான் ஜாதி ஒன்றே இந்த சூதாடிகளை சேரப்பதும் பிரிப்பதுமான காரணி.தேவை என்றால் அம்பேத்கார் விருது அளித்து முகவுடன் இனைவதும் தம்பி திருமா சமுக நீதியின் போர் வாள் என்று தலைவர் குழாயடிப்பதும் தமிழகத்திற்கும் சரி தமிழனுக்கும் சரி பழகிய ஒன்று தான். எனவே வரும் ஆறு மாதங்களுக்கும் இது போன்ற நிகழ்வுகள் போதும் போதும் என்று கதற கதற அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

 3. thiruvengadam சொல்கிறார்:

  பட்டிமன்ற பேச்சாளர்கள் இரண்டு வாதத்திற்கும் தயாராய் இருந்து தேவைப்பட்ட அணிசார்பில் பேசுவது போல மு க நடந்து கொள்வார் என்பது மீண்டும் காண்கிறோம். நரசிம்மராவும் இவரும் மைனாரிட்டியாகவே முழுக்காலமும் ஆட்சி நடத்திய போது ராவ் போல் சிரமப்படாமல் ஆட்சி நடத்தியவருக்கு எந்த நேரத்தில் எது செய்யவேண்டுமோ அதை செய்வார்.

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நேற்றைய பேட்டியில் லாலு “மத்திய அரசு சிபிஐ-ஐ என்னுடைய பெயிலை நிராகரிக்க நிர்பந்தம் செய்கின்றனர்” என்றார்.
  இன்று, பிஹாரில் உருவான கூட்டணி முறிந்ததாக லாலுவே அறிவித்துவிட்டார்.
  மோடி ராக்ஸ் ஒன்ஸ் அகைன்!

 5. Pingback: திடீரென்று ஜாதிக்கட்சியாகிவிட்ட திருமா…..! கலைஞர் திருமாவை ஒதுக்கி தனிமைப்படுத்துகிறார்… | Classi

 6. kakkoo - Manickam சொல்கிறார்:

  தில்லு முள்ளு – திருகு தாளம் – என்ன சாணக்கிய தனம் வாழுகிறது.? மக்கள் ரொம்பவும் கடுப்பில் இருக்கிறார்கள் இந்த கருமங்களைப்பார்த்து பார்த்து.

 7. Sanmath AK சொல்கிறார்:

  As a man at 93 doing politics and trying all best possible ways to swing things in his way, MuKa is Machiavelli’s “Prince”.

  Ruling govt will do everything for a strong third front which is expected to turn things in its favor…..

 8. seshan சொல்கிறார்:

  looks puppet show…..but who are all puppets……..no doubt MK is good show performer….

  my doubt we are audience or puppets….

  Seshan,Dubai

 9. drkgp சொல்கிறார்:

  இதில் சாமர்த்தியமும் சாணக்கியதனமும் தெரியவில்லை.

  தெரிவது third rate and cheap tactics.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.