திரு.அழகிரியின் பேட்டியும் – திருவாளர்கள் கலைஞர் – ஸ்டாலின் போட்டியும் ….!!!

kalaignar - stalin cartoons-2

 

 

 

தொடர்ந்து சீரியசாகவே இடுகை போட்டுக் கொண்டிருந்தால்,
எழுதுகிற எனக்கும், படிக்கிற உங்களுக்கும்
டென்ஷன் ஏறுகிறதல்லவா …?

எனவே இந்த இடுகை ஒரு மாறுதல்…
கொஞ்சம் லேசான விஷயங்களை தமாஷாகப் பார்ப்போம்…!

நேற்றிரவு திரு.அழகிரி அவர்கள் கொடுத்த பேட்டியை
தொலைக்காட்சியில் பார்த்தேன்….. பல கருத்துக்களை அள்ளி
வீசிக்கொண்டிருந்தார் …. இன்று காலை மீண்டும் தினமலர்
நாளிதழுக்கு விசேஷ பேட்டி …

மீண்டும் ஆரம்பித்து விட்டது –
அண்ணன் – தம்பி, தந்தை -தனயன் மோதல்கள்….

———-

அழகிரியின் பேட்டிக்கு போவதற்கு முன்னர் சில விஷயங்கள்…

லயோலா கல்லூரி தேர்தல் கணிப்புகளில் கலைஞரின் கைவண்ணம் உண்டென்றாலும், இறுதியாக அவருக்கும் மேலே தன் எண்ணத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி விட்டார் ஸ்டாலின் – தன் மருமகன் சபரீசன் மூலமாக…..!!!

என்ன ஆனாலும் சரி – அடுத்த முதல்வர் வேட்பாளர்
ஸ்டாலின் தான் என்பது சபரீசனும், மகேஷ் பொய்யாமொழியும்
எடுத்து விட்ட முடிவென்று தெரிகிறது.

stalin-2

ஸ்டாலினை முன்னிறுத்தி இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வித்தியாசமாக இருந்தாலும், சில சமயம் நேரிடையான கருத்துக்களை உருவாக்கும் விதத்திலும் இருக்கின்றன…..

இந்த விளம்பரத்தை பாருங்கள்….

stalin-1-short

stalin-1

ஸ்டாலின் கை காட்டும் இடத்தில் யார் இருக்கிறார் பாருங்கள்….
” முடியட்டும் ( இவர் ஆட்சி …? )
– விடியட்டும் ( ஸ்டாலின் ஆட்சி ….!!!)”

என்று அர்த்தம் தொனிக்கவில்லை….?

—————-

இனி திரு.அழகிரியின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் –

சமீபத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குடும்பத்தினரால்
ஏற்பாடு செய்யப்பட்ட பொய்யான ஒரு கருத்து கணிப்பை,
‘மக்கள் ஆய்வு மையம்’ தலைவர் ராஜநாயகம், வெளியிட்டுள்ளார்.

அப்படியொரு கருத்து கணிப்பை, அவர் நியாயமாக எடுக்கவே
இல்லை என்பது தான், என் கணிப்பு.

இப்படி கருத்து கணிப்பு வெளியிடுவதன் மூலம், தான் தமிழகத்தின்
முதல்வராக வந்து விடலாம் என, ஸ்டாலின் பகல் கனவு கண்டு
கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்த கருத்து கணிப்புகளையெல்லாம் பார்த்து, மக்கள்
சிரிக்கின்றனரே தவிர, அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

சட்டசபை தேர்தலுக்கு, ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி தி.மு.க., செல்லுமானால், படுதோல்வி உறுதி.

ஸ்டாலினை நம்பி, தேர்தலை சந்திப்பது என்பது,
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்.
அதனால் தான், தி.மு.க.,வை நம்பி கூட்டணிக்கு வரக்கூட,
மற்ற கட்சிகள் தயங்குகின்றன.இதெல்லாம், ஸ்டாலினுக்கு
மட்டும்அல்ல; அவரது குடும்பத்தினருக்கும் நன்கு தெரியும்.
அதனால் தான், அவர்கள் உண்மையை மறைத்து விட்டு,

கருத்து கணிப்பு என்ற பெயரில், மக்களையும்,
கட்சித் தொண்டர்களையும் ஏமாற்றி மாய்மாலம் செய்து கொண்டுள்ளனர்.

இப்பவும் சொல்கிறேன்; எப்பவும் சொல்வேன். கருணாநிதி இருக்கும் வரையில், தி.மு.க.,வுக்கு அவர் தான் தலைவர். அவர் மட்டும் தான், முதல்வர் வேட்பாளர்.

மற்றவர்கள் எல்லாம், வீட்டில் பொம்மையாக,
ஒரு நாற்காலியை செய்து, அதில்,
‘முதல்வர்’ என எழுதி வைத்துக் கொண்டு, அதில், தினமும்
உட்கார்ந்து எழலாம்; அது வேண்டுமானால், நடக்கும். நிஜத்தில்,
முதல்வர் ஆக முடியாது.

ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். இந்த கருத்து கணிப்பை,
பொதுமக்களோ மற்ற கட்சியினரோ, ஏற்பதும் ஏற்காததும் பற்றி
நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால், தி.மு.க.,வில் யாராவது இதை ஏற்கின்றனரா என்று மட்டும் கேட்டு சொல்லுங்கள்.

தேவையானால் நீங்களே, நான் சொல்லும் தி.மு.க., தலைவர்கள்
சிலருக்கு போன் போடுங்கள். ‘இந்த கருத்து கணிப்பை
நீங்கள் ஏற்கிறீர்களா’ என, கேளுங்கள். அவர்கள் ஏற்பதாக சொல்லி விட்டால், நான் அரசியல் பேசுவதை விட்டு விடுகிறேன்.
இதே மனநிலையில் தான், கட்சியின்
ஒவ்வொரு தொண்டனும் இருக்கிறான்.

கணிப்பில் தி.மு.க.,வுக்கு, 32.6 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்ற விவரத்துக்குள் எல்லாம், நான் ஆழமாக நுழைய விரும்பவில்லை. அடிப்படையே தவறு என்ற போது, அதை ஆழமாக விவாதித்து புண்ணியமில்லை. கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன்.

ஸ்டாலின் எத்தனை கோடி செலவு செய்தாலும் சரி;
எத்தனை கருத்து கணிப்புகள் நடத்தினாலும் சரி…
அவர், தமிழகத்தின் முதல்வராகவே முடியாது.

ஸ்டாலின் முதல்வராகும் எண்ணத்தில் இதுபோன்ற கருத்தை திணிக்க அவரது குடும்பத்தில் சிலர் முயற்சிக்கின்றனர்.

இந்த திணிப்பால் கருணாநிதி மிகவும் கவலையில் உள்ளார். கட்சியில் நான் இல்லாவிட்டாலும் -அவருக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் மட்டும் தான் உள்ளேன்.
கட்சியில் உள்ள தொண்டர்கள் யாரும் இப்போது உணர்வோடு
இல்லை. பணத்திற்காகத்தான் உள்ளனர். பணம் கொடுத்தால் தான் கூட்டத்திற்கு வரும் நிலை உள்ளது. இதற்காக பல்லடம் கூட்டத்திற்காக, ரூ.10 கோடி செலவு செய்கின்றனர்.

————————

பின் குறிப்பு –

நண்பர்கள் எல்லாரும் நடப்பவை எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
உங்களிடம் ஒரு கேள்வி –
உங்கள் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்….

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே –
” ஸ்டாலின் தான் திமுகவின்
முதல் அமைச்சர் வேட்பாளர் ” –
என்று கலைஞர் அறிவிப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திரு.அழகிரியின் பேட்டியும் – திருவாளர்கள் கலைஞர் – ஸ்டாலின் போட்டியும் ….!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  மு க வெற்றிக்கு எது வாய்ப்போ அதற்கேற்ப பொருத்தமான காரணம் சொல்லி முடிவு எடுப்பார். இந்த குடும்ப சண்டை அவ்வப்பொழுது தலையெடுப்பது வெளியாள் முயற்சி தவிர்க்க.

 2. ravi சொல்கிறார்:

  NOOOOOOOOOOOOOOOOOOOO

 3. R.Gopalakrish nan சொல்கிறார்:

  Enna Sir theriya mathan kekkaringala. This is also one of the cheapest tricks of MK to counter
  Stalin. Donn’t you all understand?.

 4. Pingback: திரு.அழகிரியின் பேட்டியும் – திருவாளர்கள் கலைஞர் – ஸ்டாலின் போட்டியும் ….!!! | Classic Tamil

 5. paamaran சொல்கிறார்:

  // paamaran சொல்கிறார்:
  5:34 பிப இல் ஓகஸ்ட் 30, 2015
  // கலைஞரின் அசர வைக்கும் அடுத்த படைப்பு – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு …! // உண்மை…. முற்றிலும் உண்மை …! இன்றைய தினமலர் செய்தி : —Dinamalar Banner Tamil நியூஸ்
  ஒன்றிரண்டு சதவீதம் ஓட்டுகளை வைத்திருக்கும் கட்சிகளும், கூட்டணி சேர நிபந்தனை விதிப்பதால், கடும் கொதிப்படைந்துள்ள,தி.மு.க., தலைமை, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து, தீவிரமாக ஆலோசிக்க துவங்கி உள்ளது.போக்கு காட்டும் கட்சிகளுக்கு, ‘செக்’ வைக்கும் விதமாக, ‘தனித்து போட்டி’ என்ற அதிரடி முடிவைவிரைவில் அறிவிக்க, தி.மு.க., தயாராகி வரும் தகவலும் வெளியாகி உள்ளது…..! அதாவது லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வந்த பின் இந்த அறிக்கை . கருத்து கணிப்பில் உள்ள ” ஹை லைட் ” விஷயம் என்வென்றால் எப்போதுமே கட்சிகளுக்கு இடையேயான கணிப்புகள் மட்டுமே வெளியிடுவது வழக்கம் …. ஆனால் இதில் மட்டும் ஒரே கட்சியை சேர்ந்த தி.மு.க.வின் உயிர்நாடியான கலைஞர் மற்றும் — ஸ்டாலின் இருவருக்கும் — யார் முதலமைச்சர் என்கிற போட்டியில் ஸ்டாலின் முந்துவதை போல வெளியிட்டு உள்ளது மேலும் பல சந்தேகங்களை கிளப்புகிறது …. ஸ்டாலினுக்கு அதிக சதவீதம் ஆதரவு போல காட்ட வைத்து மகனுக்கு முடிசூட்டுவதில் உள்ள பல சிக்கல்களை { அழகிரி உட்பட } தீர்க்க முயன்று உள்ளது வியப்பளிக்கிறது …. !!! இவ்வாறான கதை — வசனமெல்லாம் கலைஞர் ஒருவரால் தான் முடியும் …. அப்படித்தானே …. ? — கருத்து கணிப்பில் உள்ளது போல் அ .தி.மு.க வுக்கும் — தி. மு. க. வுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை மக்களிடம் காட்டவும் —— ஒன்று — இரண்டு சதவீதம் மட்டுமே உள்ள கட்சிகளுக்கும் இவரை போல ” பயம் காட்ட ” யாரால் முடியும் …? இடுக்கைக்கு அருமையான தலைப்பு …. !!! // —– 30 — 08 — 2015 – அன்றைக்கு பிறகு நடந்து வரும் கூத்துகளை பார்க்கும் போது ” டிராமா ” ரொம்பவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் போல தெரிகிறது …? அவை : —- 170 இடங்களில் போட்டி, ஜாதிக் கட்சிகளுக்கு “நோ”.. டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டியால் திமுகவில் சலசலப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-may-contest-170-seats-the-assembly-polls-234887.html …… இது முதல் செய்தி …! —— தொகுதி பங்கீடு… டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி தவறு- கட்சிக்கு சம்பந்தமில்லை- திமுக தலைமை மறுப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-refutes-tks-elangovan-s-interview-toi-234910.html …. இது அடுத்த செய்தி …!!—— கூட்டணி விவகாரம்… தி.மு.க.வில் கனஜோராக உள்குத்து? புதிய பலியாடு டி.கே.எஸ். இளங்கோவன்?
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-faces-hurdles-form-mega-alliance-234925.html …. இது மற்றுமொரு செய்தி …!!! இன்னும் என்னென்ன செய்திகள் வரபோகின்றன ….? இதையெல்லாம் படித்தால் தமாஷாக இருக்கிறதோ — இல்லையோ …. தலை சுற்றுவது உண்மைதானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   புதிய இடுகையை பார்க்கவும்…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. gopalasamy சொல்கிறார்:

  NO

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எல்லா இடுகைகளையும் பார்த்தேன். நாளாகிவிட்டாலும் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

  கருணானிதி, ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு, கருணானிதி தனக்கு உடம்பில் ஆற்றல் இருக்கிறதாக எண்ணுகிற வரையில் (ie unless bedridden) கொஞ்சம்கூட வாய்ப்பே இல்லை. காரணம் கீழே.

  தலைமைப் பதவி என்பது ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். அதாவது முடிவெடுக்கும் நிலையில் ஒருவர்தான் இருக்க முடியும். அவரை மட்டும்தான், அதிகாரம் மிக்கவர் என்பதால் காக்காய்கள் சூழ்ந்துகொள்ளும். ஸ்டாலின் முதலமைச்சர் என்று அறிவித்தால், கருணானிதியின் முக்கியத்துவம் மறைந்துவிடும். அரசர் மறைவது வரை இளவரசனுக்கு முடிவெடுக்கும் வாய்ப்போ, தலைமை தாங்கும் வாய்ப்போ கொடுப்பது ராஜனீதியல்ல.

  இன்றைக்கு, அதிமுக தவிர, மற்ற தலைவர்கள், கருணானிதியை வெறுத்தாலும், மதிக்கின்றனர் (என்றைக்குனாலும் அவரை எதிர்த்துக்கொள்ளக்கூடாது என்றும், கூட்டணி சேர நேர்ந்தால், அவர் தலைமையில் செயல்படுவதில் சங்கடம் ஏதுமில்லை என்பதாலும்). இன்றைக்கு ‘முதலமைச்சர்’ கோஷம்போடும் எல்லோரும், கருணானிதி தலைமையில் செயல்படத் தயங்காதவர்கள்தான். ஆனால், அவர்கள் நிச்சயமாக ஸ்டாலின் தலைமையில் செயல்படமாட்டார்கள். முடியாது. அவர் தி.மு.க தலைவராக இருக்கலாம்.. ஆனால் கருணானிதியில் ஆளுமை நிச்சயம் அவருக்கு இல்லை.

  இன்றைக்கு ஸ்டாலினின் பணி, திமுக தொண்டர்களைக் கட்டியாள்வது. (கருணானிதி வயதின் காரணமாக நிறைய கூட்டங்களில் பங்குபெற முடியாது. ஸ்டாலின் கருணானிதியில் Representative. அதுவும்தவிர, நாளைக்கு ஆட்சி அதிகாரம், கருணானிதியின் குடும்பத்தை விட்டு வெளியே செல்லாது. கருணானிதியின் கழுத்துக்குக் கீழே இருக்கும்வரை ஸ்டாலினுக்கு நல்லது. அதை மீற எத்தனித்தால், ஸ்டாலினிடமே தன் அரசியல்வாதி முகத்தைக் காண்பிக்க கருணானிதி தயங்கமாட்டார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   என் பார்வையில் இது
   மிகச்சரியான விளக்கம்.. பாராட்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.