தலைவ ( ரே…! ) ( ரை ..?) – வேதனைப்படுத்துவது சரியா ….?

.

.

k and s facebook

அதானே….

ஸ்டாலினை ஏன் இப்படியெல்லாம்
வேதனைப்படுத்துகிறார்கள்…..!!

ஏதோ – அவர் பாவம் –
இன்றில்லா விட்டாலும் –
நாளையாவது மாறும் அல்லவா ..????
– என்கிற எதிர்காலத்தை பற்றிய
நினைவுகளுடனும், கனவுகளுடனும் –
உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலினின் ஒரே லட்சியத்திற்கு குறுக்கே நிற்பது யார்….?

ஆளாளுக்கு ” நாளைய முதல்வர் ” என்று விளம்பரம்
செய்து கொள்ளும் அரசியல்வாதிகளும்,
“பத்ரிகா தர்மம் ” மறந்த பத்திரிகைகளும் தானே –
ஸ்டாலின் விரும்பும் இடத்தை அடைய முடியாமல் தடுக்கிறார்கள்…!!

பெற்ற தந்தையும், கூடப்பிறந்த அண்ணனுமே
ஸ்டாலினை வேதனைப்படுத்துவார்களா என்ன ….?
ஸ்டாலின் விரும்பும் இடத்தை அடைய குறுக்கே நிற்பார்களா என்ன …?

இந்த “நாளைய முதல்வர்கள்”- ஐயும், “பத்ரிகா தர்மம் மறந்த
பத்திரிகைகளையும் – மக்கள் பார்த்து கொள்வார்கள்….
நீங்களும் உங்கள் மூத்த மகனும் ஸ்டாலின் வேதனைப்படாமல்
அவர் விரும்புவதை கிடைக்கச் செய்தால் போதும் தலைவரே…!!!

————————–

தமிழக செய்தித்தாள்கள் தான் திமுகவுக்கு எதிராக இருக்கின்றன
என்று இதுநாள் வரை தலைவர் சொல்லிக் கொண்டிருந்தார்…
இப்போது ஆங்கில நாளிதழும் ( times of india ) விரோதமாகி விட்டது……

——-

“பத்திரிகா தர்மம்”என்பதையே அடியோடு குழியிலே தோண்டி
புதைத்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும்
அப்படிப்பட்ட ஏடுகளுக்கு நாமே இரையாகி விடலாமா?
இப்படியெல்லாம் செய்து கழகச் செயல்வீரர்களின் கவனத்தைத்
திருப்ப முயலுகிறார்கள்.

அந்த “டைம்ஸ் ஆப் இந்தியா”பத்திரிகைக்கே, அவர் வரம்பு
மீறியிருக்கிறார் என்பது தெரிந்ததால் தானே, முதல் பக்கத்திலும்,
எட்டாவது பக்கத்திலும் அவரது பேட்டியை மிகப் பெரிதாக
வெளியிட்டுள்ளது.

தலைமைக் கழகத்தினால் செயற்குழுவையோ, பொதுக்குழுவையோ
கூட்டி, அதிலே கலந்துரையாடி அதன் பின்னர் வெளியிடப்பட
வேண்டிய செய்திகளை யெல்லாம், அந்தப் பேட்டியிலே சர்வ
சாதாரணமாக டி.கே.எஸ். இளங்கோவன்
கூறியோ, கூ —– றா —– ம —- லோ ( ? ) ,
அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது. ”

————-

தலைமைக்கழக செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும்
ஒரு அறிவு கெட்ட புத்திசாலி –
பல வருட பாராளுமன்ற உறுப்பினர் –
30 வருடங்களுக்கு மேல் கழகத்தில் இருந்து வருபவர் –

செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி எடுக்க வேண்டிய
முடிவுகளாயிற்றே – இவற்றை எல்லாம் பற்றி
தான் எப்படி கூற முடியும் என்று சற்றும் யோசிக்காமல் –
மெனக்கெட்டு ஆங்கில நாளிதழின் நிருபரை தானே கூப்பிட்டு,
பேட்டியாக கொடுத்து, தகுந்த முறையில்
பிரசுரம் பண்ணி உதவும்படியும் கேட்பாராம்….

இவர் கூப்பிடலுக்கு இணங்கி வந்து,
விரிவாக இவரை பேட்டியெடுத்த times of india நாளிதழ்,
அதை அதன் முக்கியத்துக்கு தகுந்தவாறு பிரசுரம் செய்தது
தான் தவறு….. !!!

இது எப்படி ….?

விஷயம் தெரிந்தவுடன்
அந்த அறிவு கெட்ட அறிவாளியான செய்தித்தொடர்பாளரை
கூப்பிட்டு, யாரைக்கேட்டு இந்த அறிவிப்பை செய்தாய் ..?
என்று விளக்கம் கேட்காமல்

( இன்று வரை கேட்டதாக தகவல் இல்லை )

அது தவறான செய்தி என்று மறுப்பு அறிக்கை மட்டும் விடும்படி
மற்றொரு ( இவர் சொல்வதைக் கேட்கும் )
தொடர்பாளரிடம் ( ஆர்.எஸ். பாரதி….) சொல்வாராம்….

தவறான பேட்டியை கொடுத்த அறிவு கெட்ட அறிவாளி
மீது இது வரை எந்தவித நடவடிக்கையும் கிடையாது.
அவர் அதே பதவியில் இன்னும் நீடிக்கிறார் ….!!!

———————————–

தலைவர் நடத்தும் facebook-ல் அவரது ஒவ்வொரு
இடுகைக்கும் கீழே பல வாசகர்கள் கருத்து சொல்கிறார்கள்.
அவற்றை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா
என்று தெரியவில்லை…
படித்தால் …. ஒருவேளை தன் facebook கணக்கையே
கூட மூடி விடுவாரென்று நினைக்கிறேன்….

சில samples –

Ashokkumar Velusamy –
தளபதி தான் தமிழ் நாட்டிண் அடுத்த முதல்வர்… !!!

Bala Bharathy –
லட்சமே லட்சியமாய் , கோடியே கொள்கையாய் ,
பரணில் வைத்த திராவிடநாடு கோரிக்கையுமாய் ,
நீங்கள் உழைத்தது வீண் போகாது தலைவரே.

ஒரு லட்சம் இலங்கை தமிழர்களை ஒரு ராஜீவுக்காக
சோனியா கொன்றபோதும் ,
கொண்ட கொள்கை மாறாமல்
கடைசி வரை அதிக மத்திய மந்திரி போராடி பேற்றோமே,
இதுவல்லவோ “”” கடமை கண்ணியம கட்டுப்பாடு “””

தளபதி குமார் –
உங்கள் மூத்த பிள்ளையை கண்டியுங்கள்…
ஊரில் உள்ளவன் வம்பு இழுத்து விடுகின்றான்…
இவருக்கு எங்கே போச்சு புத்தி… அறிவை அடகு கடையில்
அடகு வைத்து விட்டாரா…
உங்களுக்கு இப்படி ஒரு பிள்ளையா தலைவரே… அசிங்கம்…

Sri Murugan –
தலைவ இந்த தடவை நம்ம எதிர் கட்சி வாரேம்

Seralathan Manickam –
உங்களிடம் பிடித்தது இதுதான். எல்லாவற்றுக்கும் ஒரு
ஒப்புக்கொள்ள தக்க பதில் அளிக்கும் திறமை.

ஆனாலும் டிகேஎஸ் யார்? சாதரணத் திமுக அனுதாபியா ?
உங்களுக்கு தெரியாமல் இப்படிப்பட்ட பேட்டியை
எப்படி கொடுக்க முடியும் அல்லது முடிந்தது?

கட்சி, ஆட்சிக்கு அவசரப்பட வேண்டாம்.
நீங்கள் கடந்து வந்த பாதையில், பொறுமையை பற்றி
யாரும் சொல்லித்தர வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை.
சுவடுகளை நிதானமாக பதியுங்கள்.
ஊடகங்கள் திமுக எது செய்தாலும் அதை கடுமையாக
விமர்சிக்கும் காலம்தான் இது. புதிய இளைஞர்களை கவர
நேர்மையான முயற்ச்சி வேண்டும்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தலைவ ( ரே…! ) ( ரை ..?) – வேதனைப்படுத்துவது சரியா ….?

 1. சந்திரசேகரன் சொல்கிறார்:

  தலைவரி்ன் தேர்தல் சதுரங்க வேட்டை ஆரம்பம் ஆகிவிட்டது இனி உருளப்போகும் சிப்பாய்களின் தலைகளுக்கு கணக்கே இருக்காது என்ன மூத்தவர் மட்டும் பல்லிடை சிக்கிய பாக்கு துணுக்காக உறுத்தாமல் இருந்திருந்தால் 60 வயதிலும் இளைஞரணி தலைவராக வலம் வரும் இளையவரின் ஆசைகளை என்றோ நிறைவேற்றி இருப்பார்.இவிகேஸ் சம்பத் முதல் தற்போதைய வைகோ வரை குடும்பத்திற்காக வெட்டிய சிப்பாய்களின் எண்ணிக்கை கொஞ்சமா என்ன ஆனால் விதி மூத்தவர் வடிவில் நின்று விளையாடுகிறது ஊழ் வினை துரத்துகிறது.
  ராஜதந்திரத்தை கரைத்து குடித்தவரல்லவா பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று.

 2. Pingback: தலைவ ( ரே…! ) ( ரை ..?) – வேதனைப்படுத்துவது சரியா ….? | Classic Tamil

 3. thiruvengadam சொல்கிறார்:

  நீங்களும் ரீடர்ஸ் டைஜெஸ்ட் போல் ( முகநூல் பதிவுகள்) கமென்ட் பார்க்காதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கசெய்துள்ளீர்க்ள்.

 4. paamaran சொல்கிறார்:

  உலகமகா நடிப்புடா … சாமி …! தலைவரும் — அதிகார பூர்வ செய்தி தொடர்பாளரும் யாருக்காக இந்த ” நாடகத்தை அரங்கேற்றினார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் …. !! மற்றவர்களின் ரியாக்ஷன் எப்படி என்று தெரிந்து கொள்ள நடந்த கோல்மால் —- முக்கியமாக அழகிரி —- ஸ்டாலின் இருவரின் கருத்து எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த ஜுஜுபி ” டிராமா ” …!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.