ரெயில்வே ரிசர்வேஷன் – முட்டாள்தனமா அல்லது திமிரா….?

train -india

பக்கத்து அடுக்குமாடி வீடு ஒன்றில் குடியிருக்கிறார்
ஒரு முதியவர் ( என்னை விட….!!!).

வெளியில் பார்க்கும்போதெல்லாம் பொதுவான விஷயங்களை
பேசிக்கொள்வோம். நேற்று மிகவும் டென்ஷனுடன் காணப்பட்டார்.

பார்த்தவுடனேயே படபடவென பொரிந்தார் ..” என்ன சார் இது
முட்டாள்தனமா இருக்கு… இவனுக்கெல்லாம் அம்மா, அப்பா,
தாத்தா, பாட்டி யாருமே இருக்க மாட்டாங்களா ..? திமிரெடுத்த
தடியனுங்களா இருக்கானுங்களே….”

சிறிது அமைதிப்படுத்திய பிறகு அவர் வருத்தம் தெரிந்தது.
நான் ஏற்கெனவே கடுப்பாகி, இது குறித்து ரெயில்வே அமைச்சருக்கு ஒரு புகார் அனுப்ப வேண்டுமென்று நினைத்திருந்த விஷயம் தான்.

செய்தியைப் பாருங்களேன் – உங்களுக்கே புரியும்….

——————————————-

குடும்பத்தினருடன் செல்லும் போது மூத்த குடிமக்களுக்கான
ரயில் கட்டண சலுகை ரத்து

புதுடெல்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை
ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரயிலில் பயணம்
செய்யும் முதியோர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை
வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் படி
குடும்பத்துடன் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு
சலுகை கட்டண டிக்கெட் ரத்து செய்யப்படும். அதே நேரத்தில்
அவர்கள் தனியாக டிக்கெட் பெற்றால் மட்டுமே சலுகையுடன்
கூடிய டிக்கெட் கிடைக்கும்.

அனேகமாக இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்
என தெரிகிறது. இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டல
அதிகாரிகளுக்கும் கடந்த மாதம் 31ம் தேதி ரயில்வே நிர்வாகம்
சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததாக
கூறப்படுகிறது. எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள்
வெளியாகும் என தெரிகிறது.

http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?
Nid=80888#sthash.NO5yH8QV.dpuf

————————————————-

அதாவது முதியோர்களுக்கான சலுகைகள் ரத்து என்று
நேரடியாகச் சொல்வதற்கு பதிலாக,
குடும்பத்தோடு பயணம் செய்தால், சலுகை கிடையாது
என்று சொல்லப்படுகிறது.

இதன் விளைவு என்ன ஆகும் –

குடும்பத்துடன் பயணம் செய்யும்போது, முதியவர்களுக்கு
தனியாகவும், மற்ற உறுப்பினர்களுக்கு தனியாகவும்
டிக்கெட் முன்பதிவு செய்தால் தான் சலுகைகள்
கிடைக்கும்… எனவே, அப்படித்தான் செய்வார்கள்….!

அந்த முதியவர்களுக்கு, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன்
சேர்ந்து பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

தனித்தனியாக ரிசர்வேஷன் செய்யும்போது –
தொடர்ச்சியான இருக்கைகள் கிடைக்காது என்பதோடு,
அதே பெட்டியில் இடம் கிடைக்கும் என்கிற உறுதியும் கிடையாது.
அடுத்த பெட்டியிலோ, தொலைவில் வேறு எதாவது பெட்டியிலோ
கூட இருக்கை கொடுக்கப்படலாம்…..

வயதானவர்கள் குடும்பத்துடன் பயணம் செய்வது தானே
அவர்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும்…?
கூடவே உறவினர்கள் இருப்பது,
தன்னிச்சையாக நடமாட இயலாத முதியவர்களுக்கு பெரும்
உதவியாக இருக்கும் அல்லவா …?

கன்செஷன் வேண்டுமானால், தனியாகத்தான் பயணம்
செய்ய வேண்டும்
என்று சொல்லுவது மூர்க்கத்தனம்….

இதில் பிரதமரையோ, ரெயில்வே அமைச்சரையோ
நான் அவசரப்பட்டு குறை கூறத் தயாரில்லை.. இந்த விஷயம் அவர்கள் பார்வைக்கே கூட போயிருக்காது.

இவையெல்லாம் கீழே, அதிகாரிகள் மட்டத்தில்
தீர்மானிக்கப்படுகின்ற விஷயங்கள். அந்த அதிகாரிகளை
முட்டாள்கள் என்று நான் சொல்ல மாட்டேன் …
ஆனால் திமிர் பிடித்தவர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை –
மனிதாபிமானமற்ற விதத்தில், மமதையோடு, பிரயோகம்
செய்கிறார்கள்.

” கன்செஷன் வேண்டுமா …அப்போ கஷ்டப்படு ” என்று
நினைப்பதும், சொல்வதும் – அயோக்கியத்தனம்.

“இவனுக்கெல்லாம் அம்மா, அப்பா,
தாத்தா, பாட்டி யாருமே இருக்க மாட்டாங்களா ..?”
என்று நண்பர் நினைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் –

அவர்கள் எல்லாம் ” ப்ரீ ரெயில்வே பாஸ்” -ல் பயணம்
செய்பவர்கள். மற்றவர்களுக்கு கன்செஷன் கிடைத்தால் என்ன –
கிடைக்காவிட்டலென்ன …? அவர்களை இது எந்த விதத்திலும்
பாதிக்கப்போவதில்லையே….!

——————————————————————-

பின் குறிப்பு –
( பின் சேர்க்கப்பட்டது – at 4.30 pm )

ஒரு யோசனை தோன்றியது. இது குறித்து,
ரெயில்வே அமைச்சருக்கு நிறைய பேர் தனித்தனியே
ஒரு வேண்டுகோள் அனுப்பி வைத்தால் என்ன ….?

முயன்று தான் பார்ப்போமே…

நானே துவக்கி விட்டேன்… உடனே அனுப்பியும் விட்டேன்.
நான் ரெயில்வே அமைச்சருக்கு அனுப்பிய மெயிலின் நகலை
கீழே தந்துள்ளேன். (அனுப்ப வேண்டிய – அமைச்சரின்
email ID யுடன் )

நண்பர்கள், இயன்றால், தனித்தனியே இதே போல்
ஒரு email வேண்டுகோள் அனுப்ப
கேட்டுக் கொள்கிறேன்.

வாசகங்களை மிகவும்
மென்மையாகவே அமைத்திருக்கிறேன்.

——————————————————

froa@rb.railnet.gov.in

subject – continuation of concessions to senior citizens

respected sir,
understand from newsreports that the
train travel ticket concessions that are
presently allowed to senior citizens
are being withdrawn and hereafter concessions
will not be allowed if they travel
alongwith their family members.

reports also say that they will be
eligible for the concessions only if they
travel alone.

this will cause serious hardships,
mental and physical agony and also
safety problems to the elderly citizens
of the nation.

request – reconsider the issue and
arrange for the continuance of the
present arrangements.

thanking you.
with all best wishes,

——————————————————————-

இன்னுமொரு பின் குறிப்பு ( இரவு 8.50 ) –

இந்த செய்தி பற்றிய திருமதி கீதா சாம்பசிவம்
என்கிற நண்பரின் சந்தேகத்தை போக்க வேண்டி –
அந்த செய்தி வெளிவந்த –

தினகரன் மற்றும் தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களின்
ஸ்க்ரீன் ப்ரிண்டை கீழே வெளியிட்டிருக்கிறேன்.

r-1

r-2

r-3

r-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

33 Responses to ரெயில்வே ரிசர்வேஷன் – முட்டாள்தனமா அல்லது திமிரா….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  இது ஒரு தற்காலிக கவலை மட்டுமே. உமது நண்பர் போல் கேரளக்காரர் யாராவது ஒருவர் இதனால் பாதிக்கப்படும்போது கண்டிப்பாக இது நீங்கிவிடும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அனைத்து நண்பர்களுக்குமே,

   மாலை 4.40 க்கு முன்பாக இந்த இடுகையை பார்த்தவர்கள்,
   தற்போது இடுகையில் கீழே சேர்க்கப்பட்டிருக்கும்
   பின் குறிப்பை தயவுசெய்து பார்க்கவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திருமதி ரஞ்சனி நாராயணன்.

   தொடர்ந்து இடுகையிலேயே – இரண்டாவது பின் குறிப்பு
   ஒன்றையும் பதிவிட்டிருக்கிறேன் – ஒரு சகோதரி
   எழுப்பி இருந்த சந்தேகத்தைப் போக்குவதற்காக. பார்க்கவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ranjani135 சொல்கிறார்:

    உங்களுடைய பதிவுகளின் பேரில் எனக்கு மட்டுமல்ல தொடர்ந்து படிக்கும் அத்தனை பேருக்கும் இருக்கும் நல்ல கருத்து என்றும் மாறாது, ஸார்!
    என் பதிவில் இந்தச் செய்தியைப் படிக்கும் எல்லோரும் இங்கு வந்து பார்த்து உண்மையை அறிவார்கள். நீங்கள் இந்தச் செய்தி உண்மையே என்று authenticate செய்ததற்கு நன்றி.
    முதன்முதலில் ரயில் அமைச்சருக்கு எல்லா முதியவர்கள் சார்பிலும் கடிதம் எழுதி முன்னுதாரணமாக செயல் ஆற்றியதற்கு நன்றி.

 2. chollukireen சொல்கிறார்:

  இருப்பதையும் பிடுங்கும் உத்தேசம். வயதானால்தான் நிலைமை புரியும்.

 3. Geetha Sambasivam சொல்கிறார்:

  அந்தத் தமிழ் முரசு பக்கத்துக்கே போக முடியலை. என்றாலும் இது குறித்துத் தெளிவான செய்தி இன்னும் வரவில்லை. விசாரிக்கணும்.

 4. நல்ல செய்தி நானும் அனுப்பி விட்டேன்

 5. அன்புடையீர் வணக்கம்
  தாங்கள் என்போன்ற குடிமக்கள் சார்பாக எழுதியுள்ள பதிவிற்கு மிக்க நன்றி! இதுபற்றி என்
  வலைத் தளத்திலும் , முகநூலிலும் நான் எழுதிய பதிவை கீழே, தந்துள்ளேன்! தங்களின் மனித நேயம் கண்டு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

  மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

  கீழ் வரும் செய்தி உண்மையானால் அது ,என் போன்ற(வயது83)
  மூத்த குடிமக்களுக்கு சலுகையா தண்டணையா இது ,முறையா? நியாமா!
  என் போன்றோர் குடும்பத்தோடு (ஒரேயிடத்தில்) செல்வதுதானே பாதுகாப்பாகும்! இதுவரை நடைமுறையில் இருந்த இதனை மாற்ற முற்படுவதால் என்ன பயன்! இருந்த சலுகையைப் பறிப்பதா முன்னேற்றம்
  அது மட்டுமல்ல, படுக்கை வசதிகூட மூத்த குடி மக்களுக்கு முன்னுரிமையாக
  கீழ் படுக்கை களை ஒதுக்கும் பழைய நடைமுறை வசதியும் சத்தமின்றி நீக்கப்
  பட்டுள்ளது
  எனவே , காரணமின்றி காரியமாற்றும் நீதியற்ற இம் முறைகளை
  தடுத்து ஆவனசெய்ய வேண்டுகிறேன்
  பாதிக்கப்படும் மூத்த குடிமக்கள் சார்பாக வேண்டும்
  புலவர் சா இராமாநுசம்

 6. Geetha Sambasivam சொல்கிறார்:

  இந்தச் செய்தி உண்மையல்ல என ரயில்வேயில் உயர்பதவி வகிக்கும் நண்பர் கூறுகிறார். ஆகவே இதை நம்ப வேண்டாம்.

  Vasu Balaji (Bala)
  5:36 PM

  We are not aware of any such moves. No circulars, proposals. And normally such policy decisions will be conveyed only through Budget speech in Parliament.

  • அன்புள்ள சகோதரி வணக்கம்! நன்றி!
   ஆனால் இது நியாமா? மனித நேயமா! என்பதையும் கேட்டுச சொல்ல வேண்டுகிறேன்
   புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்புக்கு வர இப்போதே(ஒரு மாதம் முன்பாக)பதிவு செய்தும் கீழ் படுக்கை வசதி எதிலும் கிடைக்கவில்லை என் போன்ற மூத்த குடி மக்களுக்கு முன்னிருந்த முன்னுரிமை பறிக்கப் பட்டுள்ளது
   இதுதான் மனித நேயமா!!?
   புலவர் சா இராமாநுசம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கட்கு,

   1200 பதிவுகளையும் கடந்த பிறகு –
   முதல் தடவையாக ஒரு நண்பர் இந்த வலைத்தளத்தில்
   வந்திருக்கும் செய்தி உண்மையல்ல – நம்ப வேண்டாம்
   என்று எழுதி இருப்பதைக்கண்டு மிகவும் வருந்துகிறேன்.

   பொய்யான தகவல் எதையும் இன்று வரை நான்
   இந்த தளத்தில் தந்ததில்லை. அதற்கான எந்த அவசியமும்
   எனக்கில்லை.

   நீங்களும் உங்கள் நண்பர் வாசு பாலாஜி அவர்களும்
   கண்ணார பார்த்து நம்புவதற்காக அந்த செய்தித்தாள்களின்
   ஸ்க்ரீன் ப்ரிண்ட்டை மேலே இடுகையிலேயே –
   இரண்டாவது பின் குறிப்பாக தந்திருக்கிறேன்.

   இதைக் கண்டபிறகாவது உங்களுக்கோ,
   ரெயில்வேயில் உயர்பதவி வகிக்கும் உங்கள் நண்பருக்கோ
   ஒரு செய்தி தெரியவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக
   அது பொய்யான செய்தியாகி விடாது என்பது
   புரிந்தால் சரி.

   ஆமாம் – அது பொய்யான செய்தியாக இருந்தால் நான்
   நான் ரெயில்வே அமைச்சருக்கே மெயில் அனுப்பத்
   துணிவேனா ? இதைக்கூட உங்களால் எப்படி யோசிக்க
   முடியாமல் போனது ?

   நீங்கள் இவ்வளவு அவசரமாக இந்த செய்தி பொய் என்று
   மறுத்ததன் பின்னணி என்ன என்று தயவு செய்து
   எனக்கு சொல்வீர்களா ? ( நீங்கள் ரெயில்வேயில்
   பணி புரிகிறீர்களா …? )

   பொது நலனைக் கருதி நான் ஒரு இடுகையை
   பதிவிட்டிருக்கும்போது, அதில் இந்த மாதிரி நெகடிவ்வாக
   குறுக்கீடு செய்ததற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்
   என்று நான் எதிர்பார்க்கவில்லை.
   ஆனால் – குறைந்த பட்சம், தயவுசெய்து
   இனிமேலாவது இது போல் எதிர்மறை பணிகளில்
   ஈடுபடாதீர்கள் என்று அவசியம் கேட்டுக் கொள்ள விரும்புவேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கட்கு,

    மேலேயுள்ள பதிலை எழுதி இரண்டு மணி நேரங்கள்
    கடந்த பிறகு, என் மனம் சங்கடப்படுகிறது.
    பதில் எழுதும்போது, உங்களிடம் நான் அவ்வளவு கடுமை
    காட்டி இருக்கக்கூடாது என்று இப்போது தோன்றுகிறது.

    நீங்கள் ” பொய் – நம்ப வேண்டாம்” என்று எழுதியது தான்
    என்னை காயப்படுத்தி விட்டது.
    விளக்கத்தில் நான் சொல்லி இருப்பவை உண்மையே
    என்றாலும் என் ” tone ” அவ்வளவு கடுமையாக
    இருந்திருக்க வேண்டாம். மன்னித்து விடவும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. Pingback: ரெயில்வே ரிசர்வேஷன் – முட்டாள்தனமா அல்லது திமிரா….? | Classic Tamil

 8. avudaiappan சொல்கிறார்:

  today i will send the message to the minister…thanks you

 9. Sampathkumar.K. சொல்கிறார்:

  well done Mr. K.M.

  A very positive approach and
  good move by you.
  I have also sent a mail from
  my email ID similar to the one suggested
  by you.

  I am also requesting my friends
  for a similar step.

  Nice and wish you all the best
  in your efforts.

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  சகோதரி கீதா சாம்பசிவம் என்பவர் எழுதியிருந்த
  மறுமொழியால், யாருக்கும் இந்த செய்தியைப்பற்றி
  எந்தவித சந்தேகமும் வந்துவிடக் கூடாதே என்று –
  அந்த செய்தி வந்திருந்த நாளிதழ்களின்
  ஸ்க்ரீன் ப்ரிண்டை, மேலே, இடுகையிலேயே
  இரண்டாவது பின்னூட்டமாக (இரவு 8.50 மணிக்கு)
  பதிவிட்டிருக்கிறேன். பார்க்கவும்.

  என் மேலும், விமரிசனம் வலைத்தளத்தின் மீதும்
  நம்பிக்கையுள்ள நண்பர்கள், இயன்றால் ரெயில்வே
  அமைச்சருக்கு ஈமெயில் அனுப்பவும் என்கிற
  என் வேண்டுகோளை மீண்டும் புதுப்பிக்கிறேன்.

  ஏற்கெனவே பின்னூட்டங்களில் உறுதி செய்திருந்த
  அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 11. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  “வரும்முன் காப்போம்”
  ஒரு வலைப்பதிவினால் என்ன பயன் என்று கேட்கும் பலருக்கும் இந்த பதிவைக்கொண்டு நாம் உண்மைகளை உறக்க சொல்வோம்.

  //இந்தச் செய்தி உண்மையல்ல என ரயில்வேயில் உயர்பதவி வகிக்கும் நண்பர் கூறுகிறார். ஆகவே இதை நம்ப வேண்டாம்.// என்று சகோதரி கீதா சாம்பசிவம் கூறுவதையே நானும் மற்றும் இந்த பதிவை வாசிக்கும் அனைவரும் விரும்புகின்றோம். இந்த செய்தி பொய்யாகட்டும். அதற்காக நம்மில் ஒவ்வொருவரும் ஒரு email அனுப்புவோம். முடிந்தால் ஒவ்வொருவரும் பல இமெய்ல்-களும் அனுப்பி நம் கோரிக்கையை/எதிர்ப்பை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பதிவு செய்வோம்.

 12. thiruvengadam சொல்கிறார்:

  முன்னாள் ராணுவத்தினர் பென்ஷன் விஷயத்துக்கு இரண்டாம் நாள் மேலும் சலுகை அறிவிப்பு போல் மோடி தலையிட்டு ஆவன செய்யவேண்டும். டிவிட்டரில் நானும் ப்திவு செய்திருக்கிறேன். எந்த நிறுவனமும் எந்தெந்த வழியில் வரவு பெற முயலும் அடிப்படை நிகழ்வு. ஒன்றுபட்டால் தீர்வு கிடைக்கும்.

 13. Geetha Sambasivam சொல்கிறார்:

  🙂 தமிழ் முரசு பத்திரிகையில் வந்ததால் செய்தி உண்மை என்று நம்புபவர்கள் நம்பட்டும். என் பதில் அவ்வளவே! இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதும் என் கருத்தல்ல. ஏனெனில் தமிழ் முரசு பத்திரிகைச் செய்தியை நம்பிப் பதிவு போட்ட உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. செய்தியைத் தான் ஆதாரமற்றது என்கிறேன். எப்படியும் இன்னும் ஒரு வருஷம் (அடுத்த பட்ஜெட் வருவதற்குள்) இதைச் செயலாக்க முடியாது. நடுவில் ஏதேனும் இடைக்கால பட்ஜெட் கொண்டு வந்தால் தான்! பார்ப்போம். நான் அவசரமாக இந்தச் செய்தியை மறுக்கவில்லை.

  ரஞ்சனியின் பதிவுக்கு நான் தொடர்ந்து செல்கிறேன். அங்கே அவர் இந்த இடுகையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அங்கிருக்கும் சுட்டிகள் மூலமே உங்கள்பதிவுக்கு முதல்முறையாக வர நேர்ந்தது. நீங்கள் வலைப்பூ எழுதுவதே நேற்றுத் தான் தெரியும். ரஞ்சனி எழுதவில்லை எனில் இப்படி ஒரு செய்தி சுற்றுவதே எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. அதைப் பார்த்த பின்னரே தென்னக ரயில்வேயில் பணிபுரியும் நண்பரைக் கேட்டேன். அப்படிச் சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என அவர் சொல்கிறார். உங்கள் தமிழ் முரசு மட்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாகச் சொல்கிறது. உங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் நம்பலாம். இத்துடன் என் கருத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம். :)))))))

 14. வணக்கம் ஐயா சர்ச்சைகள் நமக்குள் வேறு திசையை நோக்கிச் செல்கிறது இது அவசியமற்ற கருத்துப்போர் ஆகவே தாங்கள் அடுத்த பதிவை இடுங்கள் ஐயா
  – கில்லர்ஜி –

 15. Ganpat சொல்கிறார்:

  கா.மை ஜி..எனக்கு தெரிந்தவரை தினகரன்,தமிழ் முரசு இரண்டும் வதந்திகளை பரப்புபவர்கள்.எனவே இச்செய்தி உண்மையாக இருக்காது என நம்புவோம்.அப்படி ஒரு வேளை இருந்தால் மோடி அரசிற்கு பெருத்த சரிவை இது ஏற்படுத்தும்.

 16. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை..ஐயா… உங்கள் பதிவு நியாயம்தான். இப்படி அரசு சலுகைகள் கிடைப்பவர்கள், ஏழைகளுக்கு இலவசப் பொருள்கள் கொடுக்கக்கூடாது என்பது என்ன நியாயம்? ஏழைகளுக்கு இலவசம் அவசியம். (எதைக் கொடுக்க வேண்டும் என்பது அவரவர்களின் எண்ணத்தைப் பொறுத்தது. எனக்கு, கல்வி அவசியம்..ஏழைக்கு உணவு அவசியமாக இருக்கலாம்).

  பென்ஷன் வாங்காதவர்களுக்கோ, அல்லது ஏழை முதியவர்களுக்கோ, கட்டணச் சலுகை கொடுப்பது நியாயம். ஒட்டுமொத்த முதியவர்களுக்கு கட்டணச் சலுகை என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? “மனிதாபிமானம்’ என்று சொல்லிவிடாதீர்கள். ஒருவருக்கு அரசு செய்யும் சலுகை, மத்த மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவி செய்யலாம்.. அதன்மூலம் மக்கள் பலனடைவார்கள்.

  ஆனாலும், இந்த அதிகாரிகள் ‘குடும்பத்துடன் போனால் கட்டணச் சலுகை இல்லை’ என்றெல்லாம் சிந்திப்பது ஆணவப் போக்குதான்.

  ரயில்வேயிலேயோ, விமானக் கம்பெனியிலேயோ (அரசு) வேலைபார்ப்பவர்கள் குடும்பமே இலவசமாகப் பயணச்சலுகை தருவது என்ன ஒரு அ’நியாயம்? இது, ‘நாசிக்கில்’ வேலைபார்ப்பவர்கள், ஆளுக்கு இரண்டு ரிம் ரூபாய் நோட்டு பிரிண்டுகள் கொண்டுசெல்லலாம் என்று சொல்வதற்குச் சமம். இதைக் கேள்வி கேட்கவேண்டாமா?

 17. paamaran சொல்கிறார்:

  இந்த இடுக்கை விவகாரத்திலிருந்து ஒரு மாறுதலுக்காக —— முதல் செய்தி : — காந்தியை சுட்ட கோட்சேவுக்கு “இத்தாலி” துப்பாக்கி கிடைத்தது எப்படி? சு.சுவாமி கிளப்பும் புது பூதம்!!
  Read more at: http://tamil.oneindia.com/news/india/subramanian-swamy-raises-questions-on-gandhis-assassination-235214.html —– .!…. இரண்டாவது செய்தி : — இனி போர் வந்தால் பாகிஸ்தானை 4 துண்டாக இந்தியா உடைக்கும்…. சொல்வது சு.சுவாமி ….. !
  Read more at: http://tamil.oneindia.com/news/india/we-will-break-pakistan-into-4-pieces-says-subramanian-swamy-235266.html …… சுப்ரமணியசாமி மீண்டும் களமிறங்கி விட்டார்ரா ?

 18. drtv சொல்கிறார்:

  படித்து புரிந்து கொள்ள http://bit.ly/1XJNqTf

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் drtv,

   தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

   சர்குலரை தயாரித்த நபர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை
   வைத்துக் கொண்டு அதிக பட்சம் எந்த அளவிற்கு
   குழப்ப முடியுமோ, குழப்பி விட்டு – ஆனால் வெளிவந்துள்ள
   செய்தியை உறுதி செய்து விட்டுப் போய் விட்டார்…!!
   எப்படியோ சாராம்சம் புரிகிறது.

   இந்த செய்தியை நம்ப மாட்டேனென்று பிடிவாதம்
   பிடிப்பவர்களை, நம்ப வைக்க நான் முயற்சிகள் எதுவும்
   மேற்கொள்ளப்போவதில்லை. நான் அடுத்த வேலையை
   பார்க்க – போகிறேன். விஷயம் நடைமுறைக்கு
   வரும்போது, அவர்களே புரிந்து கொள்ளட்டும்.
   உங்கள் உதவிக்கு மீண்டும் நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • drtv சொல்கிறார்:

    கடவுளே! எப்படி சார் செய்தி உறுதி ஆச்சு?
    1. பொருள் – சப்ஜெக்ட் – ல என்ன போட்டு இருக்குன்னு படிச்சீங்களா?
    2. சர்குலர்ல எங்கேயாவது கட்டணம் பத்தி வருதா?
    சலுகை கட்டணம் ரத்து ந்னு எந்த வரிகளை படித்து உறுதி படுத்திகிட்டீங்கன்னு தயை செய்து சொன்னால் தேவலை.

   • ravi சொல்கிறார்:

    கே.எம்
    லெட்டரில் , லோயர் பெர்து, இதற்கான ஒதுக்கீடு , அதை பற்றிய விவரங்கள் உள்ளன … 45 வயது பெண்மணிக்கு எங்கே அய்யா சீனியர் சிடிசன் கோட்டா உண்டு !! பிள்ளைதாச்சி பெண்கள்ளுக்கு எங்கே கட்டண சலுகை உள்ளது ????
    அதிகாரி இங்கிலீஷில் குழப்பி உள்ளார்…
    எதற்கு மட்டையடி ????

  • Ganpat சொல்கிறார்:

   இந்த சுற்றறிக்கையில் quota என சொல்லப்படுவது berth க்கான கோட்டா .ஆனால் இப்படி குழப்பியிருக்க வேண்டாம்!

 19. srinivasanmurugesan சொல்கிறார்:

  நானும் அனுப்பி விட்டேன்

 20. ganapathi சொல்கிறார்:

  நல்ல பதிவு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.