விகடனில் வெளிவந்துள்ள வித்தியாசமான கட்டுரை ……

che.airport

chen.harbour

விகடன் குழுமம் 100 சதவீதம் ஜெ.அரசுக்கு எதிராக எழுதி, செயல்பட்டு வரும் ஒரு செய்திக் குடும்பம். ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், ஆகியவற்றில் வரும் அரசியல் சார்ந்த
விஷயங்கள் அனைத்திலுமே தொடர்ந்து தமிழக,
குறிப்பாக ஜெ. ஆட்சியை குறைகூறியே
எழுதி வரும் ஒரு பத்திரிகைக் குழுமம்.

உலக முதலீட்டாளர் மாநாடு ( Global Investors Meet )
நடைபெறும் சமயத்தில் அது குறித்த ஒரு இடுகையை இந்த வலைத்தளத்தில் எழுத வேண்டும் என்று நினைத்து அதற்கான பல புள்ளி விவரங்களை சேகரித்து வந்தேன். அது குறித்த விவரங்களை கீழே தனியே தந்திருக்கிறேன்.

அதிசயமாக சென்னையில் ( Global Investors Meet )
உலக முதலீட்டாளர் மாநாடு துவங்கிய நேற்று –
அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்பது போன்ற தோற்றத்துடன்
ஒரு வித்தியாசமான கட்டுரையை விகடன்.காம் வெளியிட்டிருக்கிறது.
எடிட்டர்ஸ் சாய்ஸ் பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும்
இதை எழுதியவரின் பெயரை எங்குமே காணோம்.
எழுதியவர் பெயரை வெளியிடாமல் எப்படி இப்படி ஒரு கட்டுரை
என்று யோசித்துக் கொண்டிருந்தேன் …..

இதில் தரப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள்
அனைத்தும் உண்மையே….!

இது நிச்சயமாக அரசு சார்பிலான விளம்பரம் அல்ல..
அரசுக்கு எதிராக நக்கலாக சில வரிகளும் இருக்கின்றன….

இந்த விந்தை எப்படி நிகழ்ந்தது என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்……..!!!

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்…..

————————————————————–

http://www.vikatan.com/news/article.php?aid=52151

Posted Date : 11:26 (09/09/2015)
Last updated : 11:26 (09/09/2015)

முதலீட்டாளர்கள் மாநாடு :
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

ஒரு காலத்தில் மும்பைக்கு அடுத்தபடியாக தொழில்வளம்
மிகுந்த நகரமாக சென்னை விளங்கியது. தென்னிந்தியாவில்
தொழில் துவங்க சர்வதேச நிறுவனங்கள் திட்டமிட்டால்,
அவர்களின் முதல் தேர்வு சென்னை நகரமாகத்தான் இருக்கும்.

ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக
பொறுப்பேற்ற பின்னர், அந்த மாநிலத்தில் தொழில்வளம் பெருகியது.
தகவல் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஹைதராபாத்தை நோக்கி
படையெடுத்தன. ஹைதரபாத் இந்தியாவின் ‘ஹைடெக்’ நகரமானது.

அதேபோல் இயற்கையாகவே பெங்களூரு நகரின் இதமான
சீதோஷ்ண நிலையும், நகரின் உள்கட்டமைப்பும் சர்வதேச
முதலீட்டாளர்களை கவர, அங்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள்
கால் பதிக்கத் தொடங்கின. இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி ‘ என்ற செல்லப் பெயருடன் பெங்களூரு சென்னையை முந்தியது.

கேரளம் தனக்கே உரிய பாணியில் செயல்பட்டு, கொச்சியில்
அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளை வளைகுடா நடுகளில்
இருந்து கொட்ட வைத்தது. குறிப்பாக இங்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ச்சி பெற்று, கொச்சி நகரில் வானளவு கட்டடங்கள் வளர்ந்தன.

பழங்காலத்தில் இருந்தே மோட்டார் தொழிலில் மட்டும் சென்னையின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. ஆசியாவின் ‘டெட்ராயிட்’ என்ற பெயர் மட்டுமே சென்னைக்கு இன்று வரை நிலைத்து இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தகழக அரசுகள், பழம் பெருமையை பேசிக் கொண்டே இருந்தனவே தவிர, சர்வதேச அளவில் தொழில் முதலீட்டாளர்களை இழுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டு விட்டன என்றே சொல்ல வேண்டும்.

இந்த விஷயத்தில் இப்போதுதான் தமிழக ஆட்சியாளர்கள் விழித்துக் கொண்டு, துரித நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்க சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று
தொடங்குகிறது. சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டை
திரட்டும் இலக்கினை கொண்டு இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
முதலீட்டாளர்கள் தமிழகத்தை கவர முக்கிய காரணிகள்
பல இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்….

இந்தியாவை பொறுத்த வரை தமிழகம்தான் வெகு வேகமாக
நகரமயமாகி வரும் மாநிலம். 48.5 சதவீத தமிழக மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின்
பங்கு 8.4 சதவீதம் ஆகும். மகாராஷ்ட்ர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் 17 சதவீத
நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இது வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம்.

இந்திய தொழில்துறை மொத்த உற்பத்தியில் தமிழகத்தின்
பங்களிப்பு 11 சதவீதம் .

கடந்த 14 ஆண்டுகளில், தமிழகத்தின் அந்நிய நேரடி
முதலீடு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
( ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி )ஆகும்.

இந்தியாவில் காற்றாடி மின்சார உற்பத்தியில், தமிழகத்தின்
பங்கு 28 சதவீதம் ஆகும். காற்றாடி மின்சார உற்பத்தியில்
இந்தியாவில் தமிழகத்துக்குதான் முதலிடம்.

இந்தியாவிலேயே அதிகளவு தொழிற் கல்வி நிறுவனங்கள்
இருப்பது தமிழகத்தில்தான். இந்திய தொழில்நுட்ப பல்கலைக்
கழகங்களில் 18 சதவீதம் தமிழத்தில்தான் உள்ளன. அதிலும்
தமிழகத்துக்குதான் முதலிடம்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு உலகின் பல நாடுகளில்
இருந்து நேரடி விமான போக்குவரத்து உள்ளது. அதே போல்
துறைமுகம் வழியாகவும் சர்வதேச நாடுகளுடன் சென்னை
இணைக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் தூத்தூக்குடி கடல் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
இங்கு குட்டி விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
சென்னை, தூத்தூக்குடி மற்றும் தமிழகத்திலுள்ள 4 சிறு
துறைமுகங்கள் வழியாக ஆண்டுக்கு 110 மில்லியன் டன் சரக்கு
கையாளப்படுகின்றன. இது இந்தியாவின் 15 சதவீதம் ஆகும்.

தமிழத்தில் 6 ஆயிரம் 700 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்
பாதைகள் உள்ளன. அவற்றில் உள்ள 690 ரயில் நிலையங்கள்
வழியாக சரக்கு போக்குவரத்து நடைபெறுகின்றன.

தமிழகத்தில் உள்ள 2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட
சாலையில் 60 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் தேசிய சாலைகள்
ஆகும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை,திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு சர்வதேச நாடுகள் பலவற்றில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட பயணிகளை இந்த விமான நிலையங்கள் கையாள்கின்றன. சென்னையில் இருந்து விமான சரக்கு போக்குவரத்தும் பல நாடுகளுக்கு நடைபெறுகிறது.

இது தவிர இந்தியாவிலேயே சுற்றுலாப்பயணிகளை அதிகளவில்
ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆண்டுக்கு பல லட்சம்
சுற்றுலாப்பயணிகள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர்.
தமிழகத்தின் பாரம்பரியமிக்க கோவில்கள் சுற்றுலாப்பயணிகளை
கவரும் அம்சமாக உள்ளன.

தொழில் கல்வி கற்றவர்களும் தொழில் முனைவோர்களும்
அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்தான்.

தண்ணீர் முதல் மின்சாரம் வரை அண்டை மாநிலங்களிடம்
கையேந்தும் நிலை தமிழகத்துக்கு இருக்கிறது.
தொழில்துறையிலாவது தமிழகத்தை சார்ந்து பிற மாநிலங்கள்
இயங்க வேண்டுமென்பதை இலக்காக கொண்டு
செயல்படுதல் அவசியம். இப்போதாவது ஆட்சியாளர்கள்
விழித்துக் கொண்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

—————————————-

-விகடன் கட்டுரை இங்கு முடிகிறது.
கீழே இருப்பது என் தொடர்ச்சி…..
———————————————————————

இந்த மாநாடு தொடர்பாக நான் சேகரித்த
பல புள்ளி விவரங்களில்,
மேலே விகடன் தந்துள்ளவை தவிர மீதி விவரங்கள் –

புதிய தொழில்களைத் துவக்குவதற்காக தமிழக அரசு
சுமார் 42,000 ஏக்கர் அளவு நிலங்களைத் தேர்ந்தெடுத்து,
தயாராக ஒதுக்கி வைத்திருக்கிறது.

கடந்த 2014-15 புள்ளி விவரங்களின்படி, இந்தியாவுக்குள்ளாக
( domestic travellers ) அதிகம் சுற்றுலா பயணிகளைக்
கவரும் முதல் மாநிலமாகவும், வெளிநாடுகளிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகளைக் கவரும் 2-வது சிறந்த மாநிலமாகவும்
தமிழகம் திகழ்கிறது.

INDIA TODAY -யால் 2014-15 ஆண்டில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த நகரமாக “சென்னை” தேர்ந்தெடுக்கப்பட்டு
பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய அளவில் – தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களில், 16 சதவீதம் பேர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.

அதே போல் அகில இந்திய அளவில் – இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 17 சதவீதம் தொழிற்சாலைகள்
தமிழ் நாட்டில் இருக்கின்றன.

இந்தியாவின் மொத்த உற்பத்திக்கு ( GDP )- அகில இந்திய
அளவில், 2-வது மிகச்சிறந்த மாநிலமாக 8.4 சதவீதம்
பங்கினை தமிழ் நாடு அளிக்கிறது.

ஜவுளி உற்பத்தியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது.

வெளிநாடுகளின் முதலீடுகளைக் கவர்வதில்
(FDI ) – இந்தியாவின் மூன்றாவது சிறந்த மாநிலமாக
தமிழகம் இருக்கிறது.

The Associated Chambers of Commerce and Industry
of India, (ASSOCHAM ), New Delhi –
February 2015 -ல் வெளியிட்டுள்ள
States Emergence : A Comparative Analysis of Growth
and Development – அறிக்கையில்
THE BEST PERFORMING STATES -ல் தமிழகம் சிறப்பிடம்
பெற்றிருக்கிறது.

———————————-

மேலே உள்ளவை புள்ளி விவரங்கள் மட்டுமே.
இத்தனை சிறப்புகள் இருந்தாலும், நம்மால் அவற்றை
உணர்ந்து பாராட்ட முடியவில்லை என்றால் அதற்கு பல காரணிகள்இருக்கின்றன.

ஒன்றை மட்டும் இங்கு சொல்லி இப்போதைக்கு இந்த இடுகையை முடிக்கிறேன்.

வெளியே புகழ் பெற்ற சாதனையாளர்கள் பலரின் திறன் –
அவர்களது சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு
தெரிவதில்லை அல்லது அங்கீகாரம் கிடைப்பதில்லை.

அது போல், தமிழ் நாட்டிலேயே வசித்து வருபவர்களுக்கு அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் உணர முடிவதில்லை.

இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் – குறிப்பாக உத்திர பிரதேசம்,
பீகார், மேற்கு வங்காளம், ஒடிஷா – சென்று வசித்து வந்தவர்களுக்கு தமிழ் நாட்டின் அருமைகள் புரியும்.

நான் இந்தியாவின் பல மாநிலங்களில், பல ஆண்டுகளை
கழித்தவன்
. எனக்கு தமிழகத்தின் விசேஷம் புரிகிறது.
நிறைய குறைகள் இங்கும் உண்டு. திருத்தப்பட வேண்டியவை,
மாற்றப்பட வேண்டியவை, ஒழிக்கப்பட வேண்டியவை –
என்று நிறைய உண்டு.

ஆனாலும், ஒப்பீடு என்று வந்தால் – தமிழகம் நிச்சயம்
ஒரு சிறந்த மாநிலம் தான்.

பின் குறிப்பு –

இது குறித்து நண்பர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களில்
எதிர்பார்க்கிறேன்.
விகடன் கட்டுரையிலிருந்தே தொடங்கலாம்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to விகடனில் வெளிவந்துள்ள வித்தியாசமான கட்டுரை ……

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  K.M.sir,

  பல குறைகள் இங்கே இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன்
  ஒப்பிடும்போது, தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது என்கிற
  உங்கள் ஸ்டேட்மெண்ட் சரியானதே.

  நான் டெல்லியில் சில வருடங்கள் இருந்திருக்கிறென்.
  தலைநகரமாக இருந்தாலும் கூட பல விஷயங்களில்,
  படுகேவலமான சூழ்நிலையில் தான் டெல்லி இருக்கிறது.
  நன்றி.

 2. krishna சொல்கிறார்:

  உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் மிகவும் பின் தங்க ஆரம்பித்திருக்கிறோம். அதே போல, பணியிலமர்த்த தகுதியற்ற பொறியாளர்கள் லடசக்கணக்கில் தமிழகத்தில் உள்ளனர். நீர் ஆதாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மிகவும் கவலை கொள்ளத்தக்க விஷயம், ஊழல். தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் ஊழல் இல்லை. இந்த இடத்தில், ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகம் மற்ற மாநிலங்களை விட பல துறைகளில் சிறந்து விளங்க, தமிழகத்தை ஆண்ட அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உண்டு.

 3. sam சொல்கிறார்:

  KM Sir, உங்களைப்போலவே விகடன் கட்டுரை 100 சதவீதம் ஜெ.அரசுக்கு கண்மூடித்தனமாக, ஆதரவாக பாராட்டி எழுதுவதில்லை என்று அளவில்லாத வருத்தம் போலிருக்கிறதே.!!!! மற்றபடி நல்ல புள்ளி விவரங்களுடைய இடுகை. நன்றி

  • ssk சொல்கிறார்:

   உண்மை.. உண்மை. ……… சத்தம் அதிகம்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ssk,

    என்ன செய்வது…..
    சிலருக்கு சத்தமாகச் சொன்னால் தானே புரிகிறது 🙂

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சாம்,

   நான் ஜெ.அரசை பாராட்டவேண்டும் என்று
   நினைக்கும்போது, அதை வெளிப்படையாகச்
   செய்கிறேன்.

   குறைகள் உண்டு என்றும் கூறி இருக்கிறேன் –

   //நிறைய குறைகள் இங்கும் உண்டு.
   திருத்தப்பட வேண்டியவை,
   மாற்றப்பட வேண்டியவை,
   ஒழிக்கப்பட வேண்டியவை –
   என்று நிறைய உண்டு.//

   ஆனால், விகடன் குடும்பம் – திமுகவை
   ஆதரிப்பது என்கிற செயலை மறைமுகமாக
   அஜெண்டாவாக வைத்திருக்கிறது.

   அது தான் வித்தியாசம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Vijay சொல்கிறார்:

    Hi,
    This is not true sir, If now DMK is rule TN, Vikatan will support ADMK indirectly and oppose directly to DMK. This is common protocol for them(Vikatan). For more reference Please check DMK last year of rule period(2010) vikatan magazines,they have supported strongly for ADMK and oppose DMK.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் விஜய்,

     தொடர்ந்து படித்து வாருங்கள் நண்பரே….
     நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 4. sam சொல்கிறார்:

  “தமிழகம் மற்ற மாநிலங்களை விட பல துறைகளில் சிறந்து விளங்க, தமிழகத்தை ஆண்ட அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உண்டு.”

  மிகச்சரியான வரிகள்

  அதேபோல
  தமிழகம் மற்ற மாநிலங்களை விட சில துறைகளில் மிகவும் பின் தங்கவும், தமிழகத்தை ஆண்ட அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உண்டு

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சாம்,

   “தமிழகம் மற்ற மாநிலங்களை விட பல துறைகளில்
   சிறந்து விளங்க, தமிழகத்தை ஆண்ட அனைத்து
   கட்சிகளுக்கும் பங்கு உண்டு.”

   – ஏற்றுக் கொள்கிறேன்.

   அதேபோல தமிழகம் மற்ற மாநிலங்களை விட
   சில துறைகளில் மிகவும் பின் தங்கவும், தமிழகத்தை
   ஆண்ட அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உண்டு.

   – மறுக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Pingback: விகடனில் வெளிவந்துள்ள வித்தியாசமான கட்டுரை …… | Classic Tamil

 6. mani சொல்கிறார்:

  As far as infrastructure, connectivity, power position and employment opportunities concerned
  Tamilnadu is far far superior to other states.i have travelled to Madhya pradesh
  recently despite the tall promises made by the BJP GOVT that state is inferior in all
  respects.

 7. drkgp சொல்கிறார்:

  60000 Kilometers of national highway in Tamil Nadu ?
  Can anybody reconfirm this figure? I feel this should be much lower.

  Apart from the language agitation of 1965, there was no prolonged
  disruption of normal life here for last five decades. People here are
  mostly law abiding and love to take instruction from above. But for
  the ubiquitous corruption, our State would be a paradise for any
  investor.

 8. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  Extracts from today`s J V :‘அப்படியானால் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் எப்போது உறுதியாகும்?’’

  ‘‘தற்போது தங்களின் ஆர்வத்தைத் தெரிவித்த முதலீட்டாளர்கள், தமிழக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எடுத்துக்கொண்டு தங்கள் நாடுகளுக்குச் செல்வார்கள். அங்கு அவர்களின் நிர்வாகிகளோடு இவற்றைப் பற்றி விவாதிப்பார்கள்; அதன்பிறகு அவர்கள் ஒரு குழுவை அனுப்பி தமிழக அரசியல் நிலவரம், தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை, மற்ற சாதக பாதக அம்சங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பார்கள்; அந்த அறிக்கை திருப்தி அளித்தால், அதன்பிறகு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். அதில் உடன்பாடு ஏற்பட்டால், புரிந்து உணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதன்பிறகுதான் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை தமிழகத்துக்குள் கொண்டுவருவார்கள். சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்பதைவிட, தொழில் துறை கண்காட்சி அரங்கம்போலத்தான் மாநாடு அமைக்கப்பட்டு இருந்தது.’’…………… ‘‘கூட்டிக் கழித்துப் பார்த்தால்?’’

  ‘‘தமிழக அரசாங்கம், முதலமைச்சர், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும். அவ்வளவுதான். தற்போது இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 25 சதவிகிதம் முதலீடு நமது மாநிலத்துக்கு வந்தாலே பெரிய விஷயம்தான்.’’…….. முதலீடு செய்யவரும் தொழிலதிபர்கள் சந்திரபாபு நாயுடுவை நேரடியாக தொலைபேசியிலும் இ-மெயிலிலும் தொடர்புகொள்ள முடியும். இது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எப்போதும் சாத்தியமில்லை. இங்குள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைத் தொடர்புகொள்வதில் உள்ள சிக்கல்களும் சொல்லமுடியாதவை.’’ All are self explanatory. This is an an observation accepatable by neutrality

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திருவேங்கடம்,

   2g அலைக்கற்றையில் 740 கோடி கொள்ளை அடித்தவர்கள்,
   அண்டர்கிரவுண்டு கேபிள் போட்டு 700 சட்டவிரோத கனெக்ஷங்கள்
   கொடுத்து தொலைபேசி இலாகாவை, நாட்டை கொள்ளை
   அடித்தவர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு,
   அவர்கள் சார்பில் எழுதப்படுவதை எல்லாம்-

   இவர்கள் எதற்காக இப்படி எழுதுகிறார்கள்,
   இதை எழுதுவதன் பின்னணி என்ன,
   இதில் சொல்லப்படுவனவற்றின் உள்நோக்கம் என்ன ?

   என்பதையெல்லாம் புரிந்து கொள்ள சற்றும் முயற்சி செய்யாமல்,

   ’’ All are self explanatory. This is an an observation
   accepatable by neutrality.”

   என்று வறண்ட தத்துவம் பேசும் அறிஞர்களை convince செய்யும்
   சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ – எனக்கு தெரியவில்லை.
   நீங்கள் ஜூவி யில் எழுதப்படுபவற்றை அப்படியே நம்புபவராக
   இருந்தால் – நான் என்ன எழுதியும் பயனில்லை.

   இருந்தாலும், நான் இந்த பொருள் குறித்து நான் அடுத்த இடுகை
   எழுதும் வரை பொருத்தருள வேண்டுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. Kumar சொல்கிறார்:

  “விகடன் குடும்பம் – திமுகவை
  ஆதரிப்பது என்கிற செயலை மறைமுகமாக
  அஜெண்டாவாக வைத்திருக்கிறது ”
  இது ஒன்றும் ஆச்சிரியம் அல்ல விகடன் குழுமத்தில் 46.15 சதவிகித பங்குகளை மாரன் சகோதரர்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது read article –
  http://newsavukku.blogspot.in/2010/09/blog-post_5.html

 10. Kumar சொல்கிறார்:

  விகடன் குழுமத்தில் 46.15 சதவிகித பங்குகளை மாரன் சகோதரர்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது –
  https://www.savukkuonline.com/1651/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி குமார்.

   இதைத்தான் நான் நீண்ட நாட்களாக
   தேடிக்கொண்டிருந்தேன். சரியான நேரத்தில்
   தந்து உதவி இருக்கிறீர்கள். மீண்டும் நன்றிகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. Sharron சொல்கிறார்:

  KM SIR where is today @ me?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Re-directed to TodayandMe ….

   Dear friend TodayandMe…..

   the blog waits for you ….!!!

   with all best wishes,
   Kavirimainthan

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப ஷரோன், காமைஜி,

    தங்களின் அக்கறையான விசாரிப்புக்கு நன்றி. இலகுவான ஸ்மைலிக்களைக் கூடப் போடமுடியாத அளவுக்கு இடமாறுதலில் கொஞ்சம் வேலைபளு.

    இங்கேதான் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். நண்பர்களின் பின்னூட்டங்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, நண்பர்கள் பேசுவதை எழுதுவதை நான் ஒன்றும் சொல்லாமல் கவனித்துக்கொண்டிருப்பது சுகமாக இருக்கிறது. பலர் ஆர்வத்துடன் வித்தியாசமான கருத்துக்களை வைப்பதைக் காண சந்தோஷமாக இருக்கிறது.

    என் கருத்தை வைத்தே ஆகவேண்டிய நிலை இருந்தால் நிச்சயமாக வைத்துவிடுவேன்.

    நன்றி நண்பர்களே.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வருக நண்ப டுடேஅண்ட்மீ,

     எனக்கு ஸ்மைலி போட கற்றுக்கொடுத்த
     தங்கள் வரவு நலவரவு ஆகுக ….!!! 🙂 🙂

     அந்த ஸ்மைலி, பல இடங்களில்
     விவாதத்திற்கிடையே சூட்டைத் தணிக்க உதவுவதை
     நடைமுறையில் காண்கிறேன். அதனால் தான்,
     உங்களிடம் கேட்டு கற்றுக் கொண்டேன். நன்றி. 😉

     நீங்கள் பாட்டிற்கு கலைஞர் முதல்வரானால்
     என்று சவால் விடுகிறீர்கள்….
     அவர் வீட்டிலேயே விபரீதத்தை வைத்துக்கொண்டு
     6-வது முறை முதல்வர் ஆவது அவ்வளவு சுலபமா என்ன …?

     நேற்றைய தினம், திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள்,
     திருவெண்காடு கோவிலில் – உறவினர்கள் வடிவில் இருக்கும்
     எதிரிகள் செயலற்றுப்போக ஹோமம் செய்த
     செய்தியை எப்படி பார்க்காமல் விட்டீர்கள்… !!!

     ( பகுத்தறிவாளரான கலைஞருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை
     இருக்காது என்பதால் – இந்த செய்தியை கேட்ட பின்பு கூட
     அவர் தைரியமாக இருக்ககூடும்…!!! )

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      //திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள்,திருவெண்காடு கோவிலில் – உறவினர்கள் வடிவில் இருக்கும் எதிரிகள் செயலற்றுப்போக ஹோமம் செய்த செய்தியை எப்படி பார்க்காமல் விட்டீர்கள்… !!!//

      Yes. I did see that. முடிஞ்சா தான் விடிவு.
      🙂

     • today.and.me சொல்கிறார்:

      /./பகுத்தறிவாளரான கலைஞருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை
      இருக்காது// what about yellow shawl.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.