திரு.வைகோவிற்கு இந்த கடிதத்தை யார் அனுப்பி இருக்கக்கூடும்…..??? !!!

kalaignar and vaiko

நேற்று மாலை மதிமுக வில் ஒரு surprise move
நடந்திருக்கிறது. காஞ்சி மாவட்ட செயலர் பாலவாக்கம் சோமு
திமுகவிற்கு சென்று – சேர்ந்து விட்டார்…..!!!

palavaakkam somu

இதற்கான பின்னணி இரண்டு நாட்களுக்கு முன்னரே தெரிய வந்தது…
மதிமுக தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் – வைகோவுக்கும்,
கட்சித் தொண்டர்கள் சார்பாக “உங்களை நேசிக்கும் தொண்டர்கள்”
என்று சொல்லி ஒரு கடிதம் சுற்றுக்கு வந்தது.

அதில் –

” எம்.பி. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டு என்பதை
சூசகமாகவோ, பகிரங்கமாகவோ அறிவிக்கும் நீங்கள் எம்.எல்.ஏ.
தேர்தல் என்று வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள்
எதிர்பார்ப்பு, அவர்களின் மனநிலையை திட்டமிட்டு குழப்புகிறீர்கள்.

உங்களின் உண்மையான திட்டம் தான் என்ன ..?
கட்சிக்காரர்களை கடன்காரர்களாகவும், ஏமாற்றத்துக்கும்
உள்ளாக்கும் உங்களின் உள்நோக்கத்தை பகிரங்கமாக
வெளிப்படுத்துங்கள். உண்மையில் திமுகவுடன் கூட்டு சேரக்கூடாது
என்று கொள்கை இருந்திருந்தால், எம்பி தேர்தலில் ஏன் கூட்டு
சேர்ந்தீர்கள் ? எதற்கு எம்.எல்.ஏ. தேர்தல் வரும்போது மட்டும்
குழப்பம் செய்கிறீர்கள் ?

ஜெயலலிதா கட்சி வெற்றிபெறும் என்று தெரிந்து தானே இப்போது
உறவாடும் இதே கம்யூனிஸ்ட்காரர்கள், ஜவாஹிருல்லா ஆகியோர்
விஜய்காந்த் அலுவலகத்துக்கு கடந்த தேர்தலில் ஓடினார்கள்..?

விஜய்காந்த் வந்தால் ஜெயிக்க முடியும் என்று தெரிந்து கொண்ட கட்சிகள், ஏன் பழுத்த அரசியல்வாதியான உங்களை ஒதுக்கிவிட்டு, கோயம்பேடு விஜய்காந்த் அலுவலகத்திற்கு சென்று கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதாவுடன் விஜய்காந்தைக் கூட்டு சேர
வைத்தார்கள்…?

மதுவிலக்கு உங்களுடைய நியாயமான கொள்கை. இதற்காக
மற்றவர்களை விட நீங்கள் அதிகமாக உழைத்தவர்.
இந்த உழைப்பின் தகுதியை மதித்துதான் –

பழைய மஹாபலிபுரம் சாலையில் –
முன்கூட்டியே கட்சியின் முக்கிய
நிர்வாகிகளுக்கு போனில் தகவல்
தந்து, நீங்களும் சம்மதித்து,

நடைபயணத்தின்போது ஜெயலலிதா
வழியில் தனது காரை நிறுத்திவிட்டு,
இறங்கி வந்து மரியாதை கொடுத்தார்.
அதை பயன்படுத்த எந்த முயற்சியும்
எடுக்கவில்லை நீங்கள்.

திருமண வீட்டில் ஸ்டாலினிடம் மனம் நெகிழப் பேசி,
பாசம் காட்டியதும், கருணாநிதி வீட்டுத் திருமணத்தில் –
“அடடா வைகோ எதையும் மறக்கவில்லை ..” என்று
கருணாநிதியை நம்பவைத்து, அவர் உங்கள் கையை
பிடித்து பாசம் காட்டியதும்,
கண்ணீர் உதிர நீங்கள் பேசியதெல்லாம் –
நன்றியா – நாடகமா ….?

நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்பதில் எங்களுக்கும்
உடன்பாடு உண்டு. அதற்காக கட்சியில் பலம் இருக்கிறதா ?
பணம் இருக்கிறதா ? கிளைகள் தான் உள்ளனவா…?

” எட்டு மாதங்களுக்கு அவர்கள் வண்டியை
உருட்டிட உங்களை ( வைகோவை ) அவர்கள் சக்கரமாகப்
பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக
நான் உழைக்க வேண்டுமா ”

– என்று பாசறைகளில் பகிரங்கமாக பேசுகிறீர்களே…
இது அப்பட்டமான திராவிட இயக்கத் துரோக சிந்தனை தானே ?
ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு
தான் இருக்கிறார்கள்.

கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் –
“இப்படி தவறான முடிவெடுக்கும் தலைவரிடம்
சிக்கி விட்டோம்”
-என்று புலம்பித் திரிகிறார்கள்.

உங்கள் காலத்திற்கு பிறகு மதிமுக இருக்க வேண்டுமானால்,
சட்டமன்றத்துக்குள் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்குரிய
கூட்டணியைப்பற்றி சிந்தியுங்கள்.

மூன்றாவது அணி, நான்காவது அணி தமிழ்நாட்டில்
எடுபடாது.
நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்பது உலகறியும். தமிழ் மக்களிடம் நீங்கள் பெற்றுள்ள நற்பெயர் ஒவ்வொருவரும் உணர்வார்கள்.

ஆனால், தற்போது உங்களுடைய நிலைப்பாடுகள்
திராவிட இயக்க உணர்வே இல்லாதது போல்
மாறிக்கொண்டிருக்கிறது. திருப்பூர் மாநாட்டில்
எந்த முடிவையும் அறிவிக்காதீர்கள் ”

– என்று சொல்லிக் கொண்டு போகிறது அந்த கடிதம்….!!!

யார் எழுதி-அனுப்பி இருப்பார்கள் அந்த கடிதம் / சுற்றறிக்கையை….?
இது ஒரு அற்புதமான திரைக்கதாசிரியரின்
கைவண்ணம் அல்லவா..?

மதிமுக தொண்டர்கள் யாருமே இப்படி எல்லாம்
எழுதி இருக்க வாய்ப்பே இல்லை….
இரண்டே possibilities தான்…

திமுக அல்லது அதிமுக….!
வைகோ – மக்கள் நல கூட்டணி என்கிற பெயரில்
தனியே ஒரு கூட்டணியை உருவாக்குவது – போட்டி போடுவது –
அதிமுக வுக்கு நன்மையே பயக்கும். எனவே அதைத்தடுக்க
அதிமுக முன்வராது.
எனவே இது அதிமுகவின் வேலை இல்லை..!

அதனால்- அடுத்த only possibility ….?
கடிதம்-சுற்றறிக்கை, கலைஞரின் மூளையில்
உதித்த அற்புதமாகவே இருக்க முடியும்…….

வைகோ – செவ்வாயன்று நடைபெறும் திருப்பூர் மாநாட்டில்
புதிய கூட்டணியை அறிவிக்க கூடாது…..இது தான் கடிதத்தின்
நோக்கம்.

கலைஞரின் –
முதல் ஷாட் –
குழப்பமூட்டும் கடிதம் / சுற்றறிக்கை..
இரண்டாவது ஷாட் – பாலவாக்கம் சோமுவின்
திமுகவை நோக்கிய பயணம்…

இதற்கு மேலும், திருப்பூர் மாநாட்டில்
கூட்டணியை அறிவிக்க வைகோ விற்கு துணிவிருக்குமா …..?

என்ன தான் சொல்லுங்கள் –
கலைஞருக்கு இணை கலைஞரே தான்….!!!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

திரு.வைகோவிற்கு இந்த கடிதத்தை யார் அனுப்பி இருக்கக்கூடும்…..??? !!! க்கு 17 பதில்கள்

  1. drkgp சொல்கிறார்:

    இந்த மொட்டைகடுதாசியின் லெவலுக்கு அவர் சென்றிருப்பாரா?

    சென்றிருந்தால் சாணக்கியர் பட்டம் அவருக்கு பொருந்தாது.

    • today.and.me சொல்கிறார்:

      நண்ப டாக்டர் கேஜிபி,
      முரசொலியில் வரும் கேள்வி பதில்கள் பகுதியில் கேள்விகள் எல்லாம் மொட்டைக் கடிதக் கேள்விகள் தான் என்பது நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா அல்லது மற்ற யாருக்கும்கூடவா?🙂

      இது அரசியல் சாணக்கியருக்குப் பொருந்தாதா?

  2. தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

    இல்லை சார்.
    இதில் வேறு யாருக்கும் லாபம் இல்லை.
    மதிமுக தொண்டர்கள் இப்படி எல்லாம் தலைவருக்கு
    எழுத மாட்டார்கள். அதிமுகவுக்கு லாபமில்லை.நஷ்டம் தான்.
    ஒன்று கலைஞர் இல்லையென்றால் வைகோ திமுக கூட்டணிக்கு
    தான் போக வேண்டுமென்று விரும்புகிற வேறு யாரோ தலைவர்.
    கலைஞர் இதிலெல்லாம் மிகவும் கெட்டிக்காரர். எல்லாமே அவருக்கு
    கைவந்த கலை. எல்லாமே திரைக்கதை அனுபவம். நன்றி.

  3. paamaran சொல்கிறார்:

    வை.கோ. அவர்களின் சமிப கால நடவடிக்கைகளை பற்றி ஆகஸ்ட் மாதத்தில் —– 6– 7— 8 — 9 தேதிகளில் திரு கா.மை அவர்கள் எழுதிய இடுக்கைகளை வாசித்தவர்களுக்கு அவரின் போக்கு பற்றி நன்கு விளங்கும் …… மக்களிடமும் — கட்சியினரிடமும் வெறுப்பு ஏற்பட்டதை நன்றாக பயன்படுத்திக்கொண்ட ” அந்த ஜகஜ்ஜால கில்லாடியை ” ஓரளவுக்காவது பாராட்டியே ஆக வேண்டும் ….? இது ஒரு புறம் இருக்க ” திரு . சகாயம் ஐ .ஏ . எஸ் . அவர்களை பற்றி வருகின்ற செய்திகளை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ….? — கிரானைட் குவாரிகளில் நரபலிகள்… சுடுகாட்டில் உறங்கிய சகாயம்… டுவிட்டரில் குவிந்த ஆதரவு
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/granite-scam-bone-fragments-found-hunt-proof-human-sacrifice-235602.html……… சகாயத்தைச் சுற்றி மாபியா கும்பல் உள்ளது.. பி.ஆர்.பி. கிரானைட்ஸ் வக்கீல் போடும் போடு
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/prp-lawyer-blames-sagayam-235646.html ……… விளம்பரத்திற்கு ஏங்கி சகாயத்துக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/former-ias-officer-murugan-criticise-sagayam-235652.html …… !!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பாமரன் ( மற்ற நண்பர்களுக்கும் சேர்த்தே ….. )

      திரு.சகாயம் அவர்கள் தொடர்புடைய செய்திகளைப் போட
      ஒரு தனி பதிவே தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

      நிறைய பேர் ஆழமாகப் போகாமல், மேலோட்டமாகவே
      செய்திகளைப் பார்த்து விட்டு அவருக்கு ஒத்துழைப்பு இல்லை
      என்று கூறுகிறார்கள்.
      ( இதில் திமுகவும் சிக்கும் என்பதை மறந்து விட்டு
      இன்று திருவாளர் ஸ்டாலினும் கூட சொல்கிறார்….!!!)

      கொஞ்சம் நிதானமாக யோசித்தால் நிறைய செய்திகளை
      இதில் பார்க்க முடியும்.

      கொலை / நரபலி செய்யப்பட்டு, புதைக்கப்பட்டதாக கூறப்படும்
      நிகழ்வு நடந்திருப்பது 1999-ல். அதற்கு சாட்சி என்று சொல்லப்படும்
      நபர் முதல் தடவையாக போலீசில் புகார் கொடுத்ததாக
      கூறப்படுவது 2003-ல்.

      இது தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்கு நடந்து வந்திருக்கும்
      ஒரு மிகப்பெரிய சமூகக் கொடூரம். தொடர்ந்து வந்த
      இரண்டு கட்சி அரசுகளிலும் முக்கியமான பிரமுகர்கள்
      கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

      தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு –
      மதுரை வட்டாரத்தில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள்,
      கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், ரெவினியூ
      உட்பட பல இலாகாக்களின் மூத்த / இளைய அதிகாரிகள்
      பலருக்கும் படியளக்கப்பட்டிருக்கிறது.

      இந்த கட்சி தான்
      இந்த அதிகாரி தான் –
      என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி,
      பல அரசியல் பிரமுகர்களும், நூற்றுக்கணக்கான அதிகாரிகளும்
      (இப்போதும் இருக்கும், ரிடையராகி விட்ட, மறைந்து விட்ட ….)
      சம்பந்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய கொடூர சம்பவம் இது.

      ஆனால் – ஒழுங்காக ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு,
      விசாரணைகள் நடத்தப்பட்டு, பொறுப்பாளிகள் நிச்சயிக்கப்பட்டு,
      வழக்குகள் நடத்தப்பட்டு ………. அப்பீல்களும் முடிந்து,
      குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்
      என்கிற நம்பிக்கையே இல்லை..

      குறைந்த பட்சம், இந்த நிறுவனங்களுக்கு எதிராக
      போடப்பட்டிருக்கும், நூற்றுக்கணக்கான வழக்குகள்
      மேலும் மேலும் நீடித்துக் கொண்டே போகாமல்,
      கைப்பற்றப்பட்ட கிரானைட் கற்கள் அனைத்தும்-

      ஈ-ஆக்ஷன் முறையில், உலகளாவிய டெண்டர் விடப்பட்டு,
      முறையாக விற்கப்பட்டு –
      அடுத்த ஒரு வருட காலத்திற்குள்ளாவது,
      பணத்தை அரசு கருவூலத்தில்
      சேர்க்க முடிந்தால் – அதுவே –
      அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், அரசும், நீதிமன்றங்களும் –
      இந்த சமுதாயத்திற்கு கிடைக்கச் செய்யும் மிகப்பெரிய நீதி.

      -திரு.சகாயம் அவர்களின் ரிப்போர்ட் நீதிமன்றத்தால்
      வெளியிடப்படும்போது, இந்த விவரங்கள் உறுதி செய்யப்படும்
      என்று நம்புகிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • today.and.me சொல்கிறார்:

        //நிறைய பேர் ஆழமாகப் போகாமல், மேலோட்டமாகவே
        செய்திகளைப் பார்த்து விட்டு அவருக்கு ஒத்துழைப்பு இல்லை
        என்று கூறுகிறார்கள்.//

        கிராணைட் குவாரி ஆய்வுப்பனியில் தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது :- சகாயம்

      • today.and.me சொல்கிறார்:

        //தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு – மதுரை வட்டாரத்தில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், ரெவினியூ
        உட்பட பல இலாகாக்களின் மூத்த / இளைய அதிகாரிகள் பலருக்கும் படியளக்கப்பட்டிருக்கிறது.

        இந்த கட்சி தான் இந்த அதிகாரி தான் – என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி, பல அரசியல் பிரமுகர்களும், நூற்றுக்கணக்கான அதிகாரிகளும்
        (இப்போதும் இருக்கும், ரிடையராகி விட்ட, மறைந்து விட்ட ….) சம்பந்தப்பட்டிருக்கும்//

        இந்த இருபது வருட காலகட்டத்திற்குள் திரு சகாயம் இஆப அவர்களும் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியிருக்கிறார் என்பதை தங்கள் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். அவர் ஆட்சியாளராக இருந்தபோது இதே பிஆர்பி நிறுவனத்திற்கு எதிராக ஒரு புல்லைக்கூட தூக்கிப்போடாமல் இருந்தவர்தான்.

        தற்போதைய அதிமுக அரசின் ஒத்துழைப்பாலேயே இவரால் இந்தளவுக்காவது கடமையாற்ற முடிந்தது என்பது என் எண்ணம்.

        இவரைச் சுற்றியிருப்பவர்களில் முதன்மையானவராக திடீரென்று வந்து முளைத்திருப்பவர் அமெரிக்காவில் விற்பனைபிரதிநியாக வேலைபார்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆல்பர்ட் பெர்னாண்டோ எனப்படுபவர். இவர் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாநாட்டின் பணிகளில் முக்கியபங்காற்றினார், தற்போது இவர் எப்படி வந்து சகாயம் அவர்களுடன் இணைந்தார், அவரை இணைத்தது யார்? போன்ற விவரங்கள் தோண்டப்பட்டால் சகாயம் அவர்களே பதில்சொல்லவேண்டிய நிலை ஏற்படலாம்…

      • தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

        k.m.sir,

        என்ன இருந்தாலும், இரவு முழுவதும் சகாயம் சார்
        அங்கேயே டேரா அடித்து, தடயத்தை அழித்து விடுவார்கள்
        என்று அதற்கான காரணமும் கூறியது
        ஏற்கத்தக்கதே அல்ல. சுற்றிலும் அவ்வளவு பேர்
        இருக்கையில், பூமியில் 4-5 அடி ஆழத்தில்
        இருக்கும் தடயங்களை எப்படி, யார் அழிக்க முடியும் ?
        கிராமத்தார்கள் இல்லையா, போலீஸ்காரர்கள் இல்லையா,
        அவரது உதவியாளர்கள் இல்லையா ? அவரே கட்டில் போட்டு
        தூங்கி போட்டோவிற்கு போஸ் கொடுத்தது எதர்காக ?
        இது சுய விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டது.

        புதிய தலைமுறை டிவி திட்டம் போட்டு அங்கே வரவழைக்கப்பட்டு,
        அவருக்கு துதி பாடி நிறைய விளம்பரங்கள் செய்தது.
        அவர் கூட, ஆம் ஆத்மி கட்சி மற்றும் கிறிஸ்தவ முன்னணியை
        சேர்ந்தவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். இவர் அவர்கள் கூட
        நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

        இவை எல்லாம், பிற்கால அரசியல் நுழைவிற்கான எதாவது
        அடிப்படைத் திட்டமாகக் கூட இருக்கலாம். யார் கண்டது ?

  4. புது வசந்தம் சொல்கிறார்:

    இங்கு க (அ) ஜெ , இப்படி தான் என்று இருக்கும், எதுவும் மாறாது. யார் இடம் பிடிப்பது என்பதில் சில வித்தியாசம் மட்டுமே இருக்கும். இங்கு இப்படியே போகும்.
    மத்தியில் இதை விட மோசம், எதிர் பார்த்தது எதுவுமே நடப்பதில்லை. ஹிந்தி மட்டுமே பேச வேண்டும் என்று பிரதமரே சொல்கிறார். சுதந்திர நாட்டில் எனது மொழி பேச எனக்கு உரிமையில்லை, எனது உணவை சாப்பிட உரிமையில்லை, எனது பண்டிகையை கொண்டாட உரிமையில்லை. இந்திய குடிமகனின் அரசியல் அமைப்பு உரிமைகள் ஒவ்வொன்றாக பிடுங்கபடுகிறது. இது தேச வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன் படும். இந்த தேசத்தின் குடிமக்களிடம் ஒரு வெறுப்புணர்வை விதைக்காதா?. உங்கள் பார்வையில் இதனை கூறுங்கள்…
    http://www.vikatan.com/news/article.php?aid=52413

    • today.and.me சொல்கிறார்:

      நண்ப புதுவசந்தம்,
      //ஹிந்தி மட்டுமே பேச வேண்டும் என்று பிரதமரே சொல்கிறார். //
      அவர் சொன்னால்கூட அவர் வியாபாரம் அவர் கூவிக்கூவி விற்கிறார் எனலாம். தமிழகப் பிரதிநிதி பொன்னார் கூறுகிறார் ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரியாததற்காக வெட்கப்படுகிறேன் என்று. தமிழரான இவரே இப்படிச்சொல்லும்போது, ………….என்னத்தைச் சொல்வது.

      இது தேசத்திற்குள்ளேயே பிரிவினைக்கு வேண்டுமானால் வழிவகுக்கும்.

  5. Pingback: திரு.வைகோவிற்கு இந்த கடிதத்தை யார் அனுப்பி இருக்கக்கூடும்…..??? !!! | Classic Tamil

  6. paamaran சொல்கிறார்:

    சகாயம் அவர்களின் விசாரணை பற்றிய செய்திகளில் பெரும்பாலும் பி.ஆர்.பி. கிரானைட் கம்பனியை மற்றுமே முன்னிலை படுத்துகின்ற ஊடகங்கள் — வழக்கு விசாரணையை அரசு { சகாயத்திற்கு முன்பே } ஆரம்பித்தவுடன் ” தலை மறைவாகி ” போன அழகிரியின் மகன் துரை தயாநிதியை பற்றி எந்த செய்தியும் கூறாமல் இருட்டடிப்பு செய்வது ஏன் …. ? சகாயம் கூட “ஒலிம்பஸ் ” கிரானைட் கம்பனியை பற்றி அதிகம் விசாரணையை மேற்கொண்டதாக யாருக்காவது தெரியுமா …? சகாயம் பி.ஆர்.பி. கம்பனியை மட்டும் சுற்றி — சுற்றி ஆய்வு செய்தாதக தானே மக்களுக்கு தெரிகிறது …. நன்கு விவரம் தெரிந்த ஒரு அதிகாரி ” அடம்பிடிப்பதும் — இடுகாட்டில் படுத்து உறங்கி மீடியாக்களில் பிரபலமாவது ” ஏற்புடையதா … ? ஓவர் ஆக்டிங் செய்வதை போல தோன்ற வில்லையா …..? பல ஆண்டுகளுக்கு முன் பலி செய்து புதைக்கப்பட்ட எலும்பு கூடுகளை எப்படி — எப்போது தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என்பது கூட அறியாதவரா — சகாயம் … ? நேர்மையை விரும்புகிறவர்கள் இவரது செயலை பார்த்து ” முகம் சுளிக்க ” மாட்டார்களா …..? எப்படி இருந்தாலும் ” பிச்சைகாரனின்” பாத்திரத்தில் பல வகை உணவுகள் இருப்பதை போல — இந்த விசாரணையில் பல கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் என்று எல்லோரும் கலந்து கட்டி அடித்த கொள்ளை வெளிவருமல்லவா … ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      திரு.சகாயத்தைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டத்தினர்
      இருக்கின்றனர். நான் அவரது உதவியாளர்களைச்
      சொல்லவில்லை. …. இன்னும் சில பேர்…..

      சுடுகாட்டில், அவரைச் சுற்றிலும், தலையில் குல்லாயுடன்
      (தமிழ் ஆம் ஆத்மி…?) சிலர் உட்கார்ந்திருந்தனர்.
      அவர்களுடன், இவரும் சகஜமாக அளவளாவிக் கொண்டிருந்தார்.
      அடுத்து இவர் என்ன செய்யப்போகிறார் என்பது போன்ற
      விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

      தொலைக்காட்சிகளில் அவர்களைக் காட்டும்போது,
      சகாயம் தரப்பினர் என்கிற அடைமொழியுடன்
      காட்டுகிறார்கள்.

      இவையெல்லாம் நீதிமன்றத்தின் பார்வைக்கு போகுமா …?

      இந்த விசாரணைக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறதோ –
      என்கிற சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. drkgp சொல்கிறார்:

    Sagayam’s show reminds me of Kejriwal’s tent show on Delhi streets last year.

    To do that watchman’ job, there were many qualified and trained people around.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.