லலித்மோடியை பிடிக்க ” இண்டர்போல் ” எந்த அளவுக்கு உதவும் …?

Interpol_logo

இண்டர்போல் ( International Criminal Police
Organization ) ஏஜென்சிக்கு “ரெட் நோட்டீஸ்”request கொடுத்து விட்டால், அடுத்த வாரமே ஆளைப் பிடித்து கொடுத்து விடுவார்கள் என்று இங்கு மீடியாவில் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

லலித் மோடி விஷயத்தில், ஏதோ அடுத்த வாரமே அவரை
பிடித்து தர தரவென்று இழுத்து வந்து திஹார் சிறையில்
அடைத்து விடப்போவது போல் பாஜகவும், அதன் அமைச்சர்களும்
கூறிக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் அவசர அவசரமாக, கோர்ட்டில் வாரண்ட் பிறப்பிக்க
உத்தரவு வாங்கி இண்டர்போல் நிறுவனத்திற்கும் அனுப்பினார்கள்…
முடிந்தால் – பீஹார் தேர்தலுக்கு முன்னரே கொண்டு வருவது போல.

இவர்கள் அனுப்பிய “request ” சென்ற வேகத்திலேயே
திரும்ப வந்து விட்டது….. இன்டர்போல் நிறுவனம் வாரண்டை
அனுப்பிய மத்திய அரசிடம் சில (தகாத ….!!!) கேள்விகளைக்
கேட்டுள்ளது…..

விளைவு ……. வழக்கம் போல் பதில் எழுத
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்…! பதில் எழுத சுஷ்மாஜியை
கன்சல்ட் செய்யலாமா அல்லது அருண்ஜியை கன்சல்ட்
செய்யலாமா என்று….!!!

சரி – இன்டர்போல் நிறுவனம் எப்படி செயல்படுகிறது ..?

நமது விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அவசியம்
தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக,
கீழே தந்திருக்கிறேன் –

ஒரு ரிடையரான மூத்த போலீஸ் அதிகாரி கொடுத்த
ஒரு பேட்டியிலிருந்து, இது குறித்த சில பகுதிகளை,
தொகுத்திருக்கிறேன் –

இன்டர்போல் அமைப்பு ஒரு பலன் இல்லாத அமைப்பு
என்கிறார்களே – உண்மையா …?

இன்டர்போல் என்பது ஐ.நா.வின் அமைப்பு அல்ல.
ஐ.நா.வைப்போல் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் அமைப்பும் அல்ல. அது ஒரு நல்லெண்ண அடிப்படையில் உருவான ஒரு பொது அமைப்பு.

உலக நாடுகள் தங்களுக்குள் சில தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், சில குற்றவாளிகளைப்பிடித்து ஒப்படைக்கவும் இந்த அமைப்பு உதவி செய்கிறது. சில நாடுகள் இந்த உதவியை செய்ய மறுப்பதும் உண்டு.

சிபிஐ தான் இந்தியாவிற்கான இன்டர்போல் குழு. தமிழக போலீஸ் வெளிநாட்டில் உள்ள ஒரு குற்றவாளியை பிடிக்க வேண்டுமானால், நேரடியாகப் போய் விட முடியாது. சிபிஐ மூலமாகத் தான் எதுவும் செய்ய முடியும்.

நான் பதவியில் இருந்தபோது விலையுயர்ந்த சிலைகளைக் கடத்திய ஒரு குற்றவாளி அமெரிக்காவில் போய் ஒளிந்து கொண்டான்.
நாங்கள் சிபிஐ மூலம் அமெரிக்க போலீஸின் உதவியுடன்,
அவனை கைது செய்து இங்கு கொண்டு வந்தோம்.

அப்போது கூட, நாங்கள் முதலில் தொடர்பு கொண்டபோது –
“இங்கே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உயர் அதிகாரிகள் எல்லாரும் பிஸி. ஜனவரியில் தொடர்பு
கொள்ளுங்கள் “

என்று கூறி விட்டார்கள். இது தான் நிலைமை. அது ஒரு
சட்டரீதியான அமைப்பு அல்ல. விரும்பினால் ( ….??? )
உதவுவார்கள். அவ்வளவு தான்.

பரஸ்பர ஒப்பந்தம் இருக்கும்
நாடுகள், தேடும் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்பார்கள்.
அவர்கள் கேட்டால், நாமும் பிடித்துக் ஒப்படைக்க வேண்டும்.
சில நாடுகளுடன் அந்த ஒப்பந்தமே இருக்காது.
பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் அக்ரிமெண்ட் இருந்தாலும், அவர்கள் பிடித்துத்தர மறுக்கலாம்.

lalit modi with interpol chief

லண்டன் இன்டர்போல் chief-ம், லலித் மோடியும் தோள்மேல்
கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை
பார்த்திருப்பீர்கள்…..

எனவே, லலித் மோடியின் தரிசனத்திற்காக இந்திய மீடியாக்கள்
தொடர்ந்து காத்திருக்க வேண்டியது தான்……

நமக்கெல்லாம் அந்த ஆசையும் இல்லை –
நம்பிக்கையும் இல்லை….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to லலித்மோடியை பிடிக்க ” இண்டர்போல் ” எந்த அளவுக்கு உதவும் …?

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  உலகத்தில் ஊழல் இல்லாத அமைப்பு என்று எதுவும் கிடையாது போலிருக்கிறது. பணம் நிறைய வைத்துள்ள யாருமே (99 சதவிகிதம்) குறுக்கு வழியில் சம்பாதித்தவர்கள்தான். எல்லோரையும் பிடிப்பது யார்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   கடவுளாகப் பார்த்து யாரையாவது அடையாளம்
   காட்டினால் தான் உண்டு….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

    படித்தீர்களா – ?
    சகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்:
    கோவையில் குபீர் கிளப்பிய பிரேமலதா!-

 2. paamaran சொல்கிறார்:

  // இவர்கள் அனுப்பிய “request ” சென்ற வேகத்திலேயே
  திரும்ப வந்து விட்டது….. இன்டர்போல் நிறுவனம் வாரண்டை
  அனுப்பிய மத்திய அரசிடம் சில (தகாத ….!!!) கேள்விகளைக்
  கேட்டுள்ளது…..
  விளைவு ……. வழக்கம் போல் பதில் எழுத
  யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்…! பதில் எழுத சுஷ்மாஜியை
  கன்சல்ட் செய்யலாமா அல்லது அருண்ஜியை கன்சல்ட்
  செய்யலாமா என்று….!!! // —– இங்கே இவர்கள் யோசித்துக்கொண்டே இருக்க வேண்யதுதான் —- அங்கே அவர் ‘ இன்டெர் போல் சீப் தோளில் கையை போட்டுக்கொண்டு ஜாலியாக இருக்க வேண்டியதுதான் ….? லலித்மோடி விவகாரத்தில் எல்லாம் பி.ஜே.பி அரசின் கவனம் இல்லை —- தற்போது அதனுடைய கவனம் எல்லாம் ” மக்களின் ஜீவாதார உரிமைகளில் ” எப்படியெல்லாம் கை வைக்கலாம் என்பதில் தான் இருக்கிறது …! மொழியிலும் —- உணவு விஷயங்களில் தலையிட்டுள்ள அரசு — அடுத்து இருப்பிடம் மற்றும் உடை விஷயத்தில் தடையிடாது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது……. ? அடுத்து ஒரு வேடிக்கையான செய்தி : —- வக்கீல்களிடமிருந்து நீதிமன்றங்களை காக்க சிஐஎஸ்எப் பாதுகாப்பு… ஹைகோர்ட் தலைமை நீதிபதி அதிரடி …. !!!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/under-threat-from-lawyers-cj-madras-high-court-seeks-cisf-protection-235723.html …… நல்ல நீதித்துறை ….? இல்லையா .. அய்யா …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   இன்றைய காலகட்டத்தில் – தமிழ்நாட்டில் வக்கீல்களின்
   அட்டகாசம் பொறுக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.
   பல சமயங்களில் வக்கீல்களுக்கும் ரவுடிகளுக்கும்
   வித்தியாசமே தெரிவதில்லை.
   ( என்னுடைய இந்த ஸ்டேட்மெண்டிற்காக யாராவது
   என்னை வீடு புகுந்து அடிக்கக்கூடும்…! )

   ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் என்றால் சமுதாயத்தில்
   மிகவும் மதிக்கத்தக்கவராக இருந்தார்கள். சட்ட ஞானம்
   மிகுந்தவர்களாக இருந்தார்கள்.

   இன்று ரவுடிகளாகவும், புரோக்கர்களாகவும் இருக்கிறார்கள்.
   ( நான் எல்லாரையும் சொல்லவில்லை. விதிவிலக்காகவும்
   நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம்
   பிழைக்கத் தெரியாதவர்களாகவே நினைக்கப்படுகிறார்கள்.)

   உயர்நீதிமன்றத்தின் உத்திரவு எனக்கு அதிசயமாகத்
   தோன்றவில்லை…. வரவேற்கத்தக்கதே…!
   அப்போதாவது இவர்களுக்கு உரைக்கிறதா பார்ப்போம்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    பத்து பொறுக்கிகளை ஒண்டியாக சமாளிக்கும் ஒரு வீர இளைஞன் …!!!
    Posted on திசெம்பர் 23, 2014 by vimarisanam – kavirimainthanvimarisanam ——- kavirimainthan சொல்கிறார்:
    5:40 முப இல் திசெம்பர் 24, 2014
    வக்கீல்கள் என்கிற போர்வையில், வெள்ளையுடையில் பொறுக்கிகள் பலர்
    பவனி வருகிறார்கள். இவர்களை தனியே அடையாளம் கண்டுகொண்டு,
    கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    எது முதல் காரணமாக இருந்தாலும் சரி –
    தனி ஒரு இளைஞனை பத்து பேர் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்குவதை
    எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும் …?

    ஏன் – சட்டம் படித்த வக்கீல்களுக்கு –
    சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது தவறு என்பது தெரியாதா ..?
    அந்த இளைஞன் ” மோதுவது போல்” வந்தாலும் கூட –
    இவர்கள் பத்து பேராகச் சேர்ந்து அவனை அடிக்க எந்த சட்டம் இடம் கொடுக்கிறது ..?

    மீண்டும் சொல்கிறேன் –

    இன்றைய வக்கீல்கள் – பொறுக்கிகளை தங்கள் அமைப்பிலிருந்து
    விலக்கா விட்டால், சமுதாயத்தில் ஒட்டுமொத்த வக்கீல்களின்
    மதிப்பும், மரியாதையும் பாழாகி விடும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்….. அய்யா ,,! இந்த இடுக்கையில் உள்ள உங்களின் ஆதங்கத்திற்கு ஒரு நடவடிக்கைபோல ” உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ” உத்திரவு இருக்கிறது போலும் …. !!! அப்படியாவது திருந்துவார்களா … ? இவர்கள் பெரிதும் மதிக்க வேண்டிய நீதிமன்றத்தையே ஒரு உத்திரவு போட்டு இவர்களிடமிருந்து காக்க வேண்டிய அபாயம் யாரால் உருவானது ….. ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     O my God…!

     பாமரன்,

     இப்படி எப்போதோ எழுதிஇருப்பதை நானே சுத்தமாக
     மறந்து விட்டேன். எப்படித்தான் பொருத்தமாக அதை
     இங்கு கொண்டு வந்தீர்களோ…!
     (நல்ல வேளை – அதே கருத்தை தான் இப்போதும்
     உறுதி செய்திருக்கிறேன்…! )
     மறதி அதிகமாகி விட்டது. முன்னால் சொன்னது
     நினைவில் இல்லாமல்,
     மனதில் தோன்றுவதை அப்படியே எழுதி விடுவது
     பல சமயங்களில் நன்றாக இருந்தாலும்,
     சில சமயங்களில் எனக்கே விரோதமாகக் கூட போகலாம்…!

     மிக்க நன்றி நண்பரே.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • paamaran சொல்கிறார்:

      அநீதிக்கு எதிராக ” நீங்கள் இடும் இடுக்கை களை ” — ஊன்றி படித்தவர்களால் எப்படி அய்யா மறக்கமுடியும் …. நல்லவர்களுக்கெல்லாம் ” சாட்சிகள் இரண்டு : ஒன்று மனசாட்சி —- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா — என்பதை போல நீங்கள் எழுதுகிறீர்கள் —- நாங்கள் படிக்கிறோம் —– அவ்வளவே …. நன்றி …. !

     • today.and.me சொல்கிறார்:

      //மறதி அதிகமாகி விட்டது. முன்னால் சொன்னது
      நினைவில் இல்லாமல், மனதில் தோன்றுவதை அப்படியே எழுதி விடுவது
      பல சமயங்களில் நன்றாக இருந்தாலும், சில சமயங்களில் எனக்கே விரோதமாகக் கூட போகலாம்…!//

      பொன்னியின் செல்வனின் ஆழ்வார்க்கடியானை நினைவுபடுத்தும் வரிகளுக்கான சந்தர்ப்பங்கள்….
      😀 😀

 3. Pingback: லலித்மோடியை பிடிக்க ” இண்டர்போல் ” எந்த அளவுக்கு உதவும் …? | Classic Tamil

 4. Narasimhan சொல்கிறார்:

  அடாடா, நேற்று ரஜனிகாந்த் என்ற வக்கீல் நீதிபதிகளுக்கு பாதுகாப்பே வக்கில்கள்தாம் என்று விவாத்தின்போது கூறினாரே .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.