மானமிகு வீரமணி சொல்கிறார் – ” மானம், வெட்கம் எல்லாம் நமக்கு எதற்கு – வைகோ அவர்களே வாங்க திமுக கூட்டணிக்கு ” ….!!!

.

vaiko and veeramani-1

பல்லடத்தில் மதிமுக மாநாடு நடக்கவிருக்கிற நிலையில், மதிமுக மக்கள் நலக்கூட்டணியை உறுதிப்படுத்தினால், மதிமுக விலிருந்து நிர்வாகிகளை, தொண்டர்களை பெரிய அளவில் பிரித்து இழுப்போம் என்று பயமுறுத்துகிற மாதிரி,

மாநாட்டுக்கு 2 நாட்கள் முன்னதாக
காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமுவை திமுகவிற்கு
இழுத்தார் கலைஞர்.

இந்நிலையில், நேற்று மதிமுக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ( மானமிகு .. ) வீரமணி அவர்கள் வைகோவை தன்மானம் பார்க்க வேண்டாம் –
இனமானம் பார்த்து திமுகவுடன் கூட்டணி வையுங்கள்
என்று பேசினார்.

இது விகடன் தரும் செய்தி –

பெரியார், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் வைகோ
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
நீங்கள் (வைகோ) பல அரசியல் கட்சித்தலைவர்களை அழைத்து
கூட்டம் நடத்துகிறீர்கள்.

அவர்களுக்கு இங்குள்ள படங்களில் உள்ளவர்கள்
யார் என்று கூட தெரியாது…….!!!!!!!!!!

நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து பொதுநலனுக்காக
குரல் கொடுங்கள். ஆனால் தேர்தல் எனும்போது சரியாக சிந்தித்து, தெளிவான முடிவெடுங்கள்.

தன்மானமா, இனமானமா எனும்போது, இனமானத்துக்காக
தன்மானத்தை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை
– என்றார் பெரியார்.

எனவே தன்மானத்துக்கு இழுக்கு, அறைகூவல் ஏற்பட்டாலும் இனமானத்துக்காக நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் – என்று பேசினார்.

—————–

இது தினகரன் தரும் செய்தி –

தவறான முடிவு வேண்டாம் என வீரமணி பேச்சு

மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில்,
யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது முக்கியம். கடந்த தேர்தலில்
எடுத்த தவறான முடிவால் உழைப்பெல்லாம் வீணானது.

இப்போது, மீண்டும் ஒரு தவறை செய்ய வேண்டாம்.
திராவிட இயக்கத்துக்கு புதிய சவால்கள் கிளம்பியுள்ளன.
இந்த சூழலில், சரியான முடிவு எடுத்து,

அந்த சவாலை முறியடிக்க வேண்டும்.
சொல்வது என் கடமை. முடிவெடுப்பது வைகோவின்
கடமை’ என்றார்.

வைகோவிற்கு இன்னும் பயம் சேர்ப்பது மாதிரி இன்னும் கொஞ்சம் மசாலா சேர்க்கிறது தினகரன்…..

” இதையடுத்து, தொண்டர்கள் கரவொலி எழுப்பினர்.
வீரமணியின் பேச்சை மதிமுக தொண்டர்கள் வரவேற்றதால்,
என்ன பதில் சொல்வது என தெரியாமல் வைகோ சில நிமிடம்
திகைத்தார்.

பின்னர், தொண்டர்களுக்கு புன்னகையை மட்டும்
பரிசாக தந்தார்.”

மானமிகு வீரமணி அவர்களின் பேச்சை ஏற்று –
தன் மானத்தை இழக்க வைகோ தயாராக இருப்பாரா …?

கூட்டத்தின் இறுதியில் தன் முடிவை அறிவித்தார் –

” தமிழகத்தில் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில்
திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும்
மதிமுக கூட்டணி வைக்காது.

இரண்டு கட்சிகளுமே ஊழலில்
திளைத்துப் போயுள்ளன.

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள்
உள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்துடன்
எங்களது கூட்டணி இருக்கும். மக்கள் நலக் கூட்டியக்கத்தில்
மனித நேய மக்கள் கட்சி சேர வேண்டும்.
எங்களது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து
தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும்..”
– என்றார் வைகோ

கலைஞரின் அடுத்த பயமுறுத்தல் என்னவென்று –
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் …….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to மானமிகு வீரமணி சொல்கிறார் – ” மானம், வெட்கம் எல்லாம் நமக்கு எதற்கு – வைகோ அவர்களே வாங்க திமுக கூட்டணிக்கு ” ….!!!

 1. இவங்கே காலம் பூராம் மாற்றி மாற்றிதான் பேசுவாங்கே… யாருக்கு உணர்வு இருக்கு…. ஓட்டுப்போடுறவனுக்கு 500 ரூபாய் போதும் இந்த வகை மனிதர்கள் ஒழியும்வரை தமிழ்நாடு முன்னேறுவது கேள்விக்குறியே…

  • today.and.me சொல்கிறார்:

   எனக்கு இதுவரை யாரும் ஒரு ஐம்பது ரூபாய் கூட குடுக்கமாட்டேன்றாங்க கில்லர்ஜி. வரும் தேர்தலில் ஐநூறு கிடைக்க என்ன பண்ணலாம்? எனி ஐடியா?

 2. Madhavan சொல்கிறார்:

  http://ramaniecuvellore.blogspot.in/2015/09/blog-post_14.html

  ingey satru paarungal, ungal thalayai uruttikondu irukkiraarkal

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   விமரிசனம் வைக்க ஆரம்பித்தால், அதற்கு எதிர்ப்புக் குரலும் இருக்கும். கா.மை, நேர்மையாக விமரிசனம் வைப்பதுபோல்தான் தோன்றுகிறது. கா.மை சார் பிளாக்கில், இதை எழுதலையா, அதை எழுதலையா என்று சொல்வது சரியல்ல. அவர் எழுதுவது நேர்மையில்லை என்றால், பின்னூட்டத்தில் தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாமே..

  • தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

   நீங்கள் குறிப்பிடும் வலைத்தளத்தை இயக்கிக் கொண்டிருப்பவர்
   ஒரு பொதுவுடைமைத் தோழர். அவருக்கும் இந்த உளறல்களுக்கும்
   எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பே இல்லை. அவருடைய வலைத்தளத்திற்கு
   நிறைய வருகை இருக்கிறது.
   எனவே காவிரிமைந்தனைத் தாக்கி எழுதி இருப்பவர்கள்,
   தோழர் ரமணியின் தளத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள்
   வேலையை காட்டுகிறார்கள் இவர்கள். எல்லாம் ஸ்டாலின் கூட்டம் தான்.
   விமரிசனம் வலைத்தளத்தில் வருவது எல்லாமே
   அந்த திருட்டு கும்பலுக்கு எதிராக இருப்பதால் வாய்க்கு வந்ததை
   எல்லாம் உளருகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   தோழர் ராமனைப் பற்றி நான் அறிவேன்.
   அவர் ஒரு இயக்கத்தின் பால் பற்று கொண்டிருப்பவர்.
   அவர் வழியில் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்….
   அவருக்கும் இந்த தூற்றுதல்களுக்கும் எந்தவித
   சம்பந்தமும் இல்லை.

   நாம் இதைப் பற்றி மேற்கொண்டு விவாதிப்பதை
   தவிர்த்து விட்டு நம் வழியில் போவோமே ……

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமைஜி,

    பாமக அவருககுப் பிடிக்காத கட்சியாக இருநதாலும் கூட, fabricated-photoshoped poster image ஒன்றை தன்னுடைய பதிவுக்கு உபயோகப்படுத்தியிருக்கும் தோழர் வேலூர்ராமன் அவர்களும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் – பரப்புரைகளுக்கு பொய்யான புகைப்படத்தை போடவேண்டாமே என்று.

    என்ன செய்வது? அவரவர் ப்ளாக்குகள், அவரவர் பதிவுகள், அவரவர் விருப்பம்.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப மாதவன்,

   நேரே இங்கே வந்து தன் தரப்பு கருத்துக்களை ஆதாரத்துடன் வைத்து மறுக்க இயலாதவர்கள்தான் வேறு எங்கேயாவது சென்று புரணி பேசிக்கொண்டிருப்பார்கள். விட்டுததள்ளுங்கள்.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இனமானம் பார்த்த கி.வீரமணி என்ன செய்தார்? 91-96ல் ஜெயலலிதாவிற்கு சாமரம் வீசிக்கொண்டு இருந்தார். 2001லிருந்து கருணானிதிக்கு ஜால்ரா அடித்தார். சந்தடி சாக்கில் அவர் பையனை அடுத்த தலைவராகக் கொண்டுவந்தார் (சொத்து முக்கியம் அமைச்சரே..இனம், மானம் எல்லாம் அவசியமில்லை). இலங்கையில் மக்களைக் கொன்று குவித்திருந்தபோது, வீரமணி எங்கிருந்தார் என்பது தெரியவில்லை. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருந்தபோது (அப்ப மத்தவங்கள்ளாம் என்ன செய்றாங்க?) வீரமணி, இல்லாத தன்மானத்தையும், இனமானத்தையும் தேடி யாத்திரை போயிருந்தார். வீரமணி, எஸ்ரா, சுபவீ இவங்கள்ளாம் புரோக்கர். 8-10 வருஷமா திருமாவும் இந்த வேலையைப் பார்த்தார். சரியான கூலி இல்லை என்றதும் இப்போது ஆட்சியில் பங்கு என்ற சங்கை ஊதுகிறார்.

  ஸ்டாலின் முதலமைச்சராக வைகோ பாடுபட்டால், அதைவிடக் கேவலம் ஏதும் இருக்கமுடியாது. ஸ்டாலினுக்கு, வைகோ போன்றோ, குஷ்பு போன்றோ கரிஷ்மா இல்லை. அதனால், அவர்களோடு இயைந்து ஸ்டாலின் இருக்க மாட்டார்.

  எனக்குத் தோன்றுகிறது..தே.தி.மு.கவும் நிச்சயம் திமுகாவுடன் சேராது. அதற்கு நான் நினைக்கிற காரணம், அதிமுகாவுக்கு அடுத்த தலைவர் கிடையாது. மக்கள்தான் கருணானிதிக்கு எதிரான கட்சிக்கு அதிக ஆதரவு கொடுக்கின்றனர் (அந்தக் கட்சி மொத்தமா மக்கள் எதிர்ப்பு ஆட்சி நடத்தினால் ஒழிய..அதாவது 91-96ஐப் போல்).

  திமுகா அன்பர்கள், ஏதோ மக்கள் மாற்றி மாற்றி வாக்களிப்பதைப்போல் பேசுகின்றனர். 96ஐத் தவிர, அதிமுக தோற்றபோதும், திமுகாவை விட வாக்கு சதவிகிதம் அதிகம். சென்றமுறை, திமுக மைனாரிட்டி அரசுதான் அமைத்தது.

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இப்போ, கா.மைஜி சார், பாமகா தேர்தல் அறிக்கையை வாரிவிட எழுதிக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். முதலமைச்சர் பதவியைத் தவிர அனைத்தும் மக்களுக்கு இலவசம்.

 5. paamaran சொல்கிறார்:

  வீரமணி அவ்வளவு தூரம் பேசியும் —- தனது கட்சியினரை தன் பக்கம் இழுக்கும் தி.மு.க.வின் மேலுள்ள கோபத்தில்கடைசியாக கூறிவிட்டதை கடைபிடிப்பாரா வை.கோ …? : — // சட்டசபைத் தேர்தலில் அதிமுக, .திமுகவுடன் கூட்டணி இல்லை… அறிவித்தார் வைகோ! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-alliance-with-dmk-aiadmk-vaiko-235809.html …….. சென்னைவாசிகளுக்கு இலவச பஸ் பயணம், அனைவருக்கும் இலவச கல்வி: பாமக வரைவு தேர்தல் அறிக்கை
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-releases-model-manifesto-2016-assembly-elections-235831.html ….. இலவசங்கள் கூடாது என்றவரும் — தமிழகம் பல லட்சங்கள் கடனில் தத்தளிக்கிறது என்றவரும் — மதுவிலக்கு முதல் கையெழுத்து என்று கூறி அதன் வருமானம் இல்லாமல் ஆன பின்னாலும் ” இவர்களது வரைவு அறிக்கை எப்படி சாத்தியம் ” என்பது அவர்களுக்கே புரியுமா …? இது சும்மா ஒரு வரைவு அறிக்கை தானே என்று நினைத்து தயாரித்து இருப்பார்களா …? பின்னால் – இதுவரை யாராவது தேர்தல் அறிக்கையில் கூறியதை — பேசியதை நடைமுறை படுத்தியிருக்கிறார்களா ? … என்று கேட்டு தப்பித்து கொள்வார்களா …? சமாளிக்க நம்ப மோடிஜி இருக்கவே – இருக்கிறார் ” அவர் சொன்ன கருப்புப்பணம் ஒவ்வொருவருக்கும் 15 — லட்சம் என்ற டயலாக் ” அப்படி தானே ….?

 6. Pingback: மானமிகு வீரமணி சொல்கிறார் – ” மானம், வெட்கம் எல்லாம் நமக்கு எதற்கு – வைகோ அவர்களே வாங்க திமுக க

 7. today.and.me சொல்கிறார்:

  சேலம் மாவட்டம் மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன்
  மாவட்ட அவைத்தலைவர் ஜெயவேல்
  மதிமுக மாவட்ட துணை செயலாளர்கள்
  -எஸ்.வி. ராஜேந்திரன்
  -ஆனந்தி கண்ணன்,
  மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம்
  மகளிரணி மாநில செயலாளர் குமரி விஜயகுமாரி
  ………………
  ………………
  ………………
  ………………
  லிஸ்ட் ரொம்ப நீளம்..
  ஆமா இன்னும் யாராவது மிச்சம் மீதி மதிமுக தொண்டர்கள் இருக்காங்களா?
  🙂 😀

  • today.and.me சொல்கிறார்:

   இந்தப் பதிவில் காமைஜி குறிப்பிட்டுள்ள பல்லடம் மாநாட்டின் சைட் எபக்ட்….!!!

   ஒரு அப்டேட்…

   திராவிட இன இயக்க உணர்வைக் கட்டிக்காக்கும் உறுதியோடு தமிழுக்கும் … பணியாற்றும் முதல்தொண்டனாக இருப்பேன் என்று குறிப்பிட்டு

   மதிமுக மதுரை புற நகர் செயலாளர் டாக்டர் இரா மாசிலாமணி (எ) சரவணன் விலகல் கடிதம் கொடுத்தார்.

   எங்க போவாரு? நம்ம முககிட்டதான்.
   யாரு சொன்னா?அவரேதான்.

   • today.and.me சொல்கிறார்:

    மதிமுக கோவை மாவட்ட செயலாளர் ஆர்ஆர் மோகன்குமார்
    ஈரோடு கணேச மூர்த்தி
    திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர், டி, மாரியப்பன்
    கரூர் மாவட்ட செயலாளர் பரணிகுமார்

    ——— இப்பவே கண்ணைக் கட்டுதே.

    இவ்ளோ பேரு சீக்ரெட் சிகரெட் வியாபாரி பாக்கெட்ல இருக்காங்கன்னு இப்பத்தான் தெரியுது

 8. Rami சொல்கிறார்:

  சு சாமி விஜகாந்த்த பார்த்தா
  —மரியாதநிமித்தம்
  வீரமணி வை.கோ வ பார்த்தா
  —மானங்கெட்டதனம்
  நல்லா இருக்கு நண்பர்களே ,
  ——————————————————————————–

  கூட இருந்து வெற்றிக்கு தோள் கொடுத்த தே மு தி க -வ
  -மூனே மாசத்துலே 10 MLA-வ உருவனா நல்லவிங்க
  கூட்டனிக்கு தனிப்பட்ட காரணத்துக்காக வராத வை.கோ-வின்
  -மா சே உருவனா கெட்டவுங்க .
  நல்லா இருக்கு நண்பர்களே ,

  கட்சிலெஇருந்து தூக்குன அழகிரிய போய் பார்த்து ஆதரவு கொடுத்த (தூண்டிவிட்ட)
  – வை.கோ நல்லவரு .
  கடைசிவரைக்கும் கூடவச்சி(கூட்டணிக்கு) கழுதறுத்த
  -அம்மா நல்லவரு .
  தொகுதி அறிவித்ததும் நட்டாத்துல கழட்டிவிட்டு விட்டு விஜயகாந்த்த போய் பார்த்த
  -கம்னிஸ்டுகள் நல்லவிங்க .
  அரசியல்ல ,அரசியல் ஆட்டம் ஆடும்
  -மு க கெட்டவரு
  நல்லா இருக்கு நண்பர்களே ,

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராமி,

   நீங்கள் சொல்வதிலும் சிறிது உண்மை இருக்கவே செய்கிறது.
   இதில் தவறு செய்யாதவர் யாருமில்லை என்பதே சரி.

   அவரவர்க்கு அவரவர் நியாயம்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.