திடுக்கிடும் மோசடி – அமலாக்கத்துறை ( E.D.) அருண்ஜி வசம் இருக்கும்போதே இதெல்லாம் நடக்குமா…?

.

.

திடுக்கிடும் மோசடி குறித்த தகவல் ஒன்று நேற்றைய தினம்
வெளியாகி இருக்கிறது. நிதியமைச்சராக திரு.அருண் ஜெட்லி அவர்கள்
இருக்கும்போது இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா
என்கிற கேள்வியும் எழுகிறது….!

வர்த்தக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவை,
பயனாளிகளிடம் இருந்து தங்களுக்கான தொகையை வசூல் செய்யும்போது,
கூடவே TDS ( tax deduction at source ) என்று தங்களிடமிருந்து
பெறும் வசதிக்காக பயனாளிகள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய
சர்வீஸ் டேக்ஸ் எனப்படும் வரியையும் சேர்த்து வசூல் செய்கிறார்கள்.
( உதாரணமாக, ஒரு நகைக்கடையில் நாம் எதாவது நகை வாங்கினால்,
அதன் விலையுடன் கூடவே, சர்வீஸ் டேக்ஸையும் சேர்த்து
வசூலிக்கிறார்களே – அது போல )

அப்படி வசூலிக்கப்படும் சர்வீஸ் டேக்ஸ், வசூல் செய்த நிறுவனத்தால்,
அவ்வப்போது, குறிப்பிட்ட காலவரைக்குள்ளாக மத்திய அரசுக்கு
செலுத்தப்பட வேண்டும்.

இதைச் செலுத்தாமல், அந்த நிறுவனத்தின் வசமே, குறிப்பிட்ட
காலவரைக்கும் மேலாக அந்த பணம் நிறுத்தி வைக்கப்பட்டால்,
இந்த செய்தி எப்போது வருமான வரி இலாகாவின் பாரவைக்கு
தெரிய வருகிறதோ,
அந்த நாள் வரை அபராதத்துடன் வசூலிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின்
உரிமையாளர் மீது, வருமான வரி இலாகா / அமலக்கத்துறை சார்பாக,
வழக்கு பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்/கள் சிறைச்சாலைக்கும்
செல்ல வேண்டிய அளவிற்கு கடுமையான விதிகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் செயல்படும், ஒரு புகழ்பெற்ற மருத்துவ சேவை நிறுவனம்,
வாசன் என்கிற துவக்கப்பெயருடன் செயல் பட்டு வரும்
அந்த நிறுவனம் ( தமாக தலைவருக்கும் இதற்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை – இது அவருக்கு நேர் எதிரான ஒரு
அரசியல்வாதியுடன் தொடர்புடையது…. ) டிசம்பர், 2014 -உடன்
முடியும் ஆண்டில், பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட
கோடிக்கணக்கான ரூபாயை ( 19.22 கோடிகள் ) மத்திய அரசுக்கு
செலுத்தாமல் தன்னிடமே பயன்பாட்டிற்கு வைத்துக் கொண்டிருக்கிறது….

சட்டவிரோதமான இந்த செயலை கண்டுபிடித்து, கிரிமினல்
நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அதிகாரி,
இதை கண்டு கொள்ளாமலிருக்க, அவர் நீண்ட நாட்களாக
கோரியிருந்த ஒரு இடத்திற்கு பணிமாற்றம் கொடுத்து திருப்தி
படுத்தப்பட்டாராம்.

பிற்பாடு, மார்ச் 2015-ல், அந்த நிறுவனமே, தானாகவே முன்வந்து
இப்படி ஒரு தவறு (தவறா… கிரிமினல் குற்றமா ..!!! )
ஏற்பட்டிருப்பது தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாகவும்,
எதேச்சையாக நிகழ்ந்து விட்ட தவறுக்கு வருந்துவதாகவும்
செலுத்தப்பட வேண்டிய TDS தொகையான ரூ.19.22 கோடிகளை –
இரண்டு தவணைகளில் (…..?? ) கட்டி விடுவதாகவும் –
வருமான வரி இலாகாவிற்கு, தாமாகவே தெரிவிப்பது போல்
எழுதி இருக்கிறது… !

ஒரு கிரிமினல் குற்றத்தை, எதேச்சையாக நிகழ்ந்து விட்ட
ஒரு செயல்முறைத் தவறாக சித்தரித்து அந்த நிறுவனம்
வருமான வரி இலாகாவிற்கு எழுதவும், மேற்கொண்டு அந்த
நிறுவனத்தின் மீது எந்தவித கடுமையான நடவடிக்கைகளும்
எடுக்கப்படாமல் இருக்கவும், இதற்கு அனுகூலமாக இருந்த
வருமான வரி இலாகா உயர் அதிகாரிக்கு அவர் விரும்பிய
இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்படவும் –

காரணமாக இருந்தவர் என்று வருமான வரி இலாகாவின் மீது
இன்னமும் தன் செல்வாக்கை தொடர்வதாக -ஒரு காங்கிரஸ் முன்னாள்
மத்திய அமைச்சர் மீது குற்றம் சுமத்துகிறது இந்த செய்தி.

இதை வேறு யாராவது எழுப்பி இருந்தால், செய்தியின்
உண்மைத்தன்மை பற்றி நமக்கு சந்தேகம் வரலாம். ஆனால்,
இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்திருப்பவர்
மதிப்பிற்குரிய திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் என்னும்போது ….?

– திருவாளர் அருண்ஜி அவர்கள் பொறுப்பில் இருக்கும்போதே-
இவையெல்லாம் நடக்கின்றனவா …? எப்படி …?
என்று கேள்வி எழுப்பவே தோன்றுகிறது….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திடுக்கிடும் மோசடி – அமலாக்கத்துறை ( E.D.) அருண்ஜி வசம் இருக்கும்போதே இதெல்லாம் நடக்குமா…?

 1. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  பசியும் காசியும் விளையாடும் விளையாட்டு இதில் அருண்ஜீயாகட்டும் மோடிஜீயாகட்டும் என்ன செய்ய முடியும் இவர்கள் என்ன கேடி பிரதர்ஸ்ஸா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மோசடி புரிய பரம்பரை வக்கில்கள் அல்லவா

 2. paamaran சொல்கிறார்:

  அருண் ஜி … என்ன … ஆறுமுகஜி … இருந்தாலும் ” நாங்க இருக்கிறோம் ” என்பது தானே அர்த்தம் …. ! இவ்வாறெல்லாம் நடப்பதையும் — பா.ஜ.க. அரசின் குறைகளுக்கும் — பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணம் அரசு இல்லை என்பதை போலவும் ” சு. சாமி : அவரது ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை : — ரகுராம் ராஜனால் பொருளாதாரம் தரை மட்டமாகப் போகிறது..: சு.சாமி போடும் குண்டு!
  Read more at: http://tamil.oneindia.com/news/india/subramanian-swamy-says-the-economy-is-crashing-replace-raghuram-rajan-235914.html …. இந்த ” குண்டு ” எப்படி …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   டாக்டர் சு.சுவாமி நமது தற்போதைய பொருளாதார நிலை குறித்து
   கூறி இருப்பவற்றில் நிறைய உண்மை இருக்கிறது.
   ஆனால், அதற்கான பழியை டாக்டர் ரகுராம் ராஜன் மீது போடுவது
   தான் அபாண்டம் என்று நினைக்கிறேன்.

   பாஜக அரசுக்கு தற்போது தேவைப்படுவது ஒரு “பலியாடு”
   பாவம் ரகுராம் ராஜன்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    // Posted on திசெம்பர் 29, 2014 by vimarisanam – kavirimainthanடாக்டர் சுப்ர.சுவாமிக்கு 70 லட்சம் வேண்டுமாம் – செய்யாத வேலைக்கு சம்பளம் …!! கொடுக்க மறுத்த டைரெக்டர் திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர்வீட்டுக்குப் போகிறார்…..!!! // …… இதைபோல “திரு . ரகுராம் ராஜன் ” அடுத்த பலியாடா ? — விரைவில் ” கல்தாவா ” அப்போ மோடிஜி — மற்றும் அமைச்சர்களுக்கு பொருளாதார வீழ்ச்சியில் — பொறுப்பு இல்லையா …? உடனடியாக ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்குப் பதில் ” பெங்களூரு ஐஐஎம் பொருளாதார பேராசிரியர் வைத்தியநாதன் ” போன்றோரை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும்…. ! என்று சு.சாமி ஒரு நபரை குறிப்பிட்டு சிபாரிசு செய்வது தான் … நெருடல் … இல்லையா… அய்யா …?

 3. paamaran சொல்கிறார்:

  அய்யா ….. ! //இதற்கு மேலும், திருப்பூர் மாநாட்டில்
  கூட்டணியை அறிவிக்க வைகோ விற்கு துணிவிருக்குமா
  என்ன தான் சொல்லுங்கள் –
  கலைஞருக்கு இணை கலைஞரே தான்….!!! // என்று கூறி இருந்தீர்கள் … ஆனால் ம.தி.மு.க கூடாரத்தையே காலி செய்து தன் பக்கம் இழுக்க ஆரம்பித்ததோடு அல்லாமல் : — தி.மு.க.வுக்கு போக யாருக்கெல்லாம் விருப்பமோ போங்க… வாழ்த்தி அனுப்புகிறேன்: வைகோ விரக்தி
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-on-mdmk-s-internal-turmoil-235859.html …. வை. கோ. வை புலம்ப விட்டு பழி தீர்த்து கொள்வதில் கலைஞரை மிஞ்ச ஆள் இல்லை …! பணம் பத்தும் செய்யுமோ …. ?

 4. Pingback: திடுக்கிடும் மோசடி – அமலாக்கத்துறை ( E.D.) அருண்ஜி வசம் இருக்கும்போதே இதெல்லாம் நடக்குமா…? | Classic Tamil

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தமிழக காவல்துறை மீது நம்பிக்கையில்லை. தனது பாதுகாப்பிற்காக தனி படையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பற்றி உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன் ஐயா.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் அஜீஸ்,

  அது காவல்படையின் மீது அவநம்பிக்கையை குறிப்பதாகாது….
  தமிழ் நாட்டு வக்கீல்களின் வரம்புமீறிய செயல்பாடுகளைப் பற்றி
  அறிந்துள்ளதன் விளைவு என்று தான் நான் நினைக்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.