திரு.ஸ்டாலின் கவலைகள் தீர்ந்தன… இனி எந்த தடங்கலும் இருக்காது ….!!!

stalin-2

 

மதிமுக விலிருந்து பல நிர்வாகிகளை திமுக தலைமை கவர்ந்திழுத்து
விட்ட சூழ்நிலையில் இன்று மாலை மிச்சமுள்ள முக்கிய நிர்வாகிகளுடன்
திரு.வைகோ ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில் விகடன் செய்தி இதழ் வைகோவுக்கு சில
ஆலோசனைகளை கூறி இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் –

——–

இப்போது மீண்டும் ஒரு பிளவை சந்திக்கிறது ம.தி.மு.க. இதுவரை
ஒருவர் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறியவர்கள், இப்போது
அணியாக வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்த பிளவுக்கும் காரணமாய்
சொல்லப்படுவது வைகோவின் அணுகுமுறைதான்.

வைகோவையும், வைகோவின் போக்கையும் கடுமையாக விமர்சித்து, ‘உண்மை
தொண்டர்கள்’ எனும் பெயரில் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு
கடிதம் ஒன்று வந்தது. ‘அதிக சுடுகாடுகளுக்கு செல்பவன் நான்
என வைகோ அடிக்கடி சொல்வார். போகிற போக்கில் கட்சியையும் அவர் சுடுகாட்டுக்கு
கொண்டு சேர்க்காமல் விடமாட்டார்’
என அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டவை
ஒவ்வொன்றும் மிகக் கடுமையான வார்த்தைகள். இந்த கடிதம் கட்சி நிர்வாகிகளிடம்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மட்டும்
தி.மு.க.வுக்கு எதிராய், வைகோவுக்கு ஆதரவாய்
குரல் கொடுத்தார். தி.மு.க.வையும், கருணாநிதியையும் மல்லை சத்யா
கடுமையாக திட்டித் தீர்த்தபோது மேடையில் இருந்த வைகோ,
உற்சாகமாய் கை தட்டினார். ஆனால், தன்னோடு மேடையில் இருந்த ஓரிருவர்
மட்டுமே கை தட்டினார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டார்
அல்லது அதை காணாததுபோல் இருந்துவிட்டார்.

விளைவு, கட்சியின் பொருளாளர் மாசிலாமணி, மேடையில்
வைகோவோடு முன்வரிசையில் அமர்ந்திருந்த மகளிர் அணி செயலாளர்
குமாரி, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலர் என கடந்த இரு
தினங்களில் 5 கட்சி நிர்வாகிகள், கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர்.
இன்னும் இந்த பட்டியல் நீளுமோ என்பதுதான் ம.தி.மு.க. தொண்டனின் தற்போதைய
கவலை.

இந்த பிளவுக்கு என்னதான் காரணம்… கடிதமும், அதில்
சொல்லப்பட்டவையும் உண்மைதானா?
இதுகுறித்து ம.தி.மு.க.வினர்
சிலரிடம் பேசினோம். விரக்தியோடுதான் பேசத்துவங்கினார்கள்.

“சரியான நேரத்தில், தவறான முடிவு எடுக்கும், சரியான தலைவர்
வைகோ என ஒரு பேச்சு உண்டு. அதில் ம.தி.மு.க.வில் இருக்கும்
பலருக்கே மாற்று கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.

கடந்த ஜூன் மாதத்தில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில்
தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என்றார். தி.மு.க.வினருடன்
நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அதன் பின்னர் ஸ்டாலின், வைகோவை சந்தித்தார்.
கலைஞருடன் வைகோ பேசினார். கருணாநிதி இல்லத் திருமணத்துக்கு சென்று
ஸ்டாலினையும், கலைஞரையும் பாராட்டினார். ஆனால், அடுத்த சில நாட்களில்
நடந்தது என்ன என்பது எங்களுக்கு தெரியாது. தெரியப்படுத்தவும்
இல்லை.

கூட்டணி விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என பலமுறை சொல்லியும், திருப்பூர்
மாநாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். இப்போது
இதை அறிவிக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை.
இதுதான் பலருக்கு அதிருப்தி
ஏற்பட காரணம்.

வைகோ சரியான தலைவர்தான். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், சரியான
நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காத
சரியான தலைவராக இருப்பதில் என்ன பலன் கிடைக்கப்போகிறது?

உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டிய நேரத்தில்
உணர்ச்சி வசப்பட்டு, அவசரப்பட்டு செயல்படுவது பலனளிக்காது என்பதை அவரிடம்
பலமுறை சொல்லியாகிவிட்டது.
பலமுறை அனுபவமாகவும் அவர் கற்றுக்கொண்டதுதான் இது.
இருந்தாலும் அப்படித்தான் இருப்பேன் என்றால் என்னதான்
செய்ய முடியும்?” என கொட்டித்தீர்க்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.

வைகோ என்ன சொல்கிறார்?

ஆனால், வைகோ இதற்கு வேறு காரணத்தை சொல்கிறார்.
“ம.தி.மு.க.வை கருவறுக்க திட்டமிடுகிறது தி.மு.க.
இதற்கு தி.மு.க. தலைவரும், அவரது மகனும்தான் இதற்கு காரணம். 1991ம் ஆண்டு
என்மீது குற்றஞ்சாட்டி நிர்வாகிகளுக்கு
கடிதம் எழுதி என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.
இப்போது ம.தி.மு.க.வை அழிக்க அதே முயற்சியை செய்கிறார்கள். ஸ்டாலினின்
ஏற்பாட்டில்தான் இதெல்லாம் நடக்கிறது. இத்தனைக்கும் பிறகு நான் ஏன் தி.மு.க.வுடன்
சேர வேண்டும்?

தி.மு.க., அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் அவர்களின்
பழிபாவங்களுக்கு நாமும் ஆளாக நேரிடும் என்பதால் அவர்களோடு கூட்டணி இல்லை
என அறிவித்துள்ளோம்.
ம.தி.மு.க. தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல.
தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தலைவர்கள் வெளியேறுவது கட்சியை
பாதிக்காது. எம்.பி., எம்.எல்.ஏ. பதவி வேண்டும் என்பவர்கள் கட்சியை விட்டு
வெளியேறுகிறார்கள்” என்கிறார் வைகோ.

இன்னும் பலர் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறுவதாக சொல்கிறார்கள்.
அவர் வெளியேறுகிறார், இவர் வெளியேறுகிறார் என செய்திகள்
வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவை உணமை என சொல்வதற்கில்லை
என்றபோதிலும், நடக்காது என்றும் புறந்தள்ளி விட முடியாது.
நெருப்பு இன்னும் முழுமையாக அணைந்து விடவில்லை. ஏனென்றால்
ம.தி.மு.க.வில் இன்னும் புகைச்சல் இருக்கிறது.

அப்படியென்றால் நெருப்பும் இருக்கத்தானே செய்யும். நெருப்பு எங்கே
இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதை அணைக்க வேண்டியதுதான்
இப்போது செய்ய வேண்டியது. இல்லாவிட்டால் மீண்டும் தீ பற்றும்.

ம.தி.மு.க. உடைவதற்கான எல்லா காரியங்களும்
நடந்து வருகிறது. அதை வைகோ உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாளை உயர்நிலைக்குழு கூட்டத்தை அவசர அவசரமாய்
கூட்டியுள்ளார். வைகோ கவனமாய் இருக்க வேண்டிய நேரம் இது!

(விகடன் அட்வைஸ் இத்துடன் முடிகிறது … )
—————————————

கட்சி உடைந்து விடும்… எனவே உங்கள் முடிவை மறுபரிசீலனை
செய்யுங்கள். திமுகவுடன் ஒத்துப் போங்கள் என்கிறது விகடன்….
(போக வேண்டியவர்கள் அனைவரும் ஏற்கெனவே போய் விட்ட
நிலையில் – இந்த ஆலோசனையால் என்ன பயன் …? )

இன்று பகல் புதிய தலைமுறைக்கு வைகோ அவர்கள் கொடுத்த
பேட்டியை பார்த்த பிறகு, வைகோ இனி திமுகவுக்கு எதிராக
இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார் என்றே தோன்றுகிறது….!

————————————-

அங்கே, திமுக கேம்பில், எப்போது வைகோ அவர்கள்
மக்கள் நல இயக்கத்தை உருவாக்கினாரோ அப்போதே அவர்
திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார் என்பது புரிந்து
விட்டது. இனி அவரை அழைப்பதிலோ, எதிர்பார்ப்பதிலோ
பலன் இருக்காது என்ற தீர்மானத்திற்கு வந்து,

வைகோவை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்கள்.
வைகோவை விட்டு, அவரது சகாக்களை பிரித்தால், மனோதத்துவ
ரீதியாக வைகோ பலவீனப்பட்டு விடுவார். அவரை திமுக கூட்டணியில்
வைத்துக் கொண்டு திண்டாடுவதை விட, அவர் கட்சியை உடைத்து,
அவரை பலவீனப்படுத்துவதே சிறந்தது என்று தீர்மானித்தனர்
தலைவரும், தனயனும்….

விளைவு – வைகோ வேண்டவே வேண்டாம் –
மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிற அழைப்பு….!

—————————

– தளபதியின் துணைவியார் செய்த
யாகங்கள் பலன் கொடுக்கத் துவங்கி விட்டதாகத் தெரிகிறது….!

இவ்வளவு நாட்களாக, படு ஸ்ட்ராங்க் நினைவாற்றலுடன் இருந்த
கலைஞர், அண்மைக்காலமாக, ஞாபக மறதி காரணமாக
திண்டாடுகிறாராம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சில சமயங்களில்
பேசவும் செய்கிறாராம். சில சமயங்களில் ஏற்கெனவே சொன்னதையே
திரும்பவும் சொல்கிறாராம். சில சமயங்களில் தான் சொன்னதையே
மறுக்கிறாராம்…

அண்மையில் காஞ்சிபுரத்தில் நடந்த மகளிரணி மாநாட்டில்,
பேசும்போது, இரண்டு பக்கங்களை தவற விட்டு விட்டு, அதைப்பற்றிய
உணர்வும் இன்றி, தொடர்பின்றியே பேசினாராம்..
பின்னர் இது குறித்து
அவரிடம் சொல்லப்பட்டபோது, இல்லவே இல்லை என்றாராம்.
பிறகு நிகழ்ச்சி வீடியோவை போட்டுக்காட்டிய பிறகு தான் நம்பினாராம்…

பிறகு அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ந்த முப்பெரும் விழாவில்
கலைஞர் பேசும்போது, ஸ்டாலின் முன்ஜாக்கிரதையாக பேச வேண்டிய
கத்தைத்தாளை தன்னிடமே வைத்துக் கொண்டு, ஒவ்வொரு தாளாக
வரிசையாக கலைஞரிடம் எடுத்துக் கொடுத்தாராம்.

தமிழ்நாடு முழுவதும் – மக்களை நேரடியாக சந்திக்கும் முயற்சியை
ஸ்டாலின் நாளை துவக்குகிறார்.

ஸ்டாலின் பிரச்சார பயணம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம்,
அவர் போகும் முன்னர் திரையிடப்படுவதற்காக ஸ்டாலின் நடிக்கும்
ஒரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதை திரையிடுவதற்காக 60 இன்ச் நீள அகலமுள்ள 11 எல்.சி.டி.
தொலைக்காட்சி பெட்டிகள் கன்யாகுமரிக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டு
விட்டனவாம்.
அந்த தொலைக்காட்சி பெட்டிகளை பொருத்துவதற்கு –
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களும்,
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு புதிய ஜெனரேட்டரும்
பொருத்தப்பட்டுள்ளனவாம். இவற்றின் கூடவே வட இந்தியாவிலிருந்து
தொழில் நுட்ப நிபுணர்களும் சென்றிருக்கிறார்களாம்….

 

stalin-1

எனவே, பட்டத்து இளவரசர் திக்விஜயம் கிளம்புகிறார்.
தேர்தலில் ஜெயித்தால் – முதலமைச்சர் நாற்காலியில் உட்கார
ஸ்டாலினுக்கு எந்தவித தடங்கலும் இருக்காது….

இன்னும் 5-6 மாதங்களில்,
தலைவருக்கு நாற்காலியே மறந்து விடும்….!!!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to திரு.ஸ்டாலின் கவலைகள் தீர்ந்தன… இனி எந்த தடங்கலும் இருக்காது ….!!!

 1. drkgp சொல்கிறார்:

  யாகம் ஞாபகமறதி இதனை இனைக்கும் திறனை காணும்போது தானைத்தலைவரது
  தொழில்முறை ரகசியத்தை செவ்வனே கற்றுள்ளீர்கள் என்றே தெரிகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டாக்டர் கேஜிபி,

   தானைத் தலைவரது கால் தூசுக்கும் இணையாகுமா
   நம் திறன்…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Thanavanam சொல்கிறார்:

  தமிழர்களின் நலன் மற்றும் எதிரி யார் என தெரியாமல் களமாடுகிறார்.வைகோ.|

  • தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

   தமிழர்களின் நலன் காக்க தானே தளபதியின் திருமதி
   கோவில் கோவிலாகச் சென்று ” யாகம்” நடத்துகிறார் ?

   இவர்கள் பேசுவது பகுத்தறிவு.
   இவர்களின் திருமதிகள் செய்வது தீர்த்த யாத்திரையும்
   “சத்ரு சம்ஹார யாகங்களும் ”

   வைகோவிற்கு தமிழர் நலன் காக்கும் இந்த வித்தை
   தெரியாததால் தான் இன்று தெருவில் நிற்கிறார்.

 3. kandaswamy சொல்கிறார்:

  Stalins tour programme is not DIG VIJAYAM as you mentioned. He has been meeting the public regularly all along.

  • தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

   இது காறும் ஸ்டாலின் அவர்கள் நடத்தி வந்தது
   மண்டலவாரியாக “பேரணிகள்”
   இப்போது போவதுதான் தெருத்தெருவாக – பொதுமக்களை சந்திக்க.

 4. paamaran சொல்கிறார்:

  // Dinamalar Banner Tamil நியூஸ் …….பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015,23:55 IST
  சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க.,வின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி உள்ளது.
  கூட்டணிக்கு ஒத்து வராத கட்சிகளை கரைத்து, அங்கிருந்து ஆட்களை இழுத்து வர, தி.மு.க., தரப்பு முழு வேகத்தில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. துவக்கத்தில், ம.தி.மு.க., மீது கவனத்தை செலுத்திய தி.மு.க.,வினர், இப்போது, தே.மு.தி.க., மீதும் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதால், அக்கட்சி வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகள் தென்படுகின்றன.தே.மு.தி.க., தலைமை மீது அதிருப்தியுடன் இருப்பவர்களை, தி.மு.க., பிரமுகர்கள் சந்தித்து, ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். இதில், தே.மு.தி.க.,வின், நான்கு எம்.எல்.ஏ.,க்கள், 10 மாவட்ட செயலர்கள் சிக்கி உள்ளனர். தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்றால், அவர்கள், கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைவதை தடுக்க முடியாது. இவ்வாறு தே.மு.தி.க., மூத்த நிர்வாகி கூறினார் //….இது தினமலர் செய்தி ! ——– இனி எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்கிற முனைப்போடு செயல் படும் தி.மு.க…. ” கொட்டி கிடக்குது —- கொட்டி கொடுத்து ” ஆட்களை வளைக்க ஆரம்பித்து விட்டார்கள் …. ஆனாலும் பெரும்பாலான ஊடகங்கள் ” பஞ்ச பாண்டவர் கூட்டணி ” அமைய அ .தி.மு.க. தான் காய்நகர்த்தி — காரணம் என்று ஓயாது கூவிக்கொண்டு இருக்கிறார்கள் —- அப்படி அ.தி.மு.க .– காரணம் என்றால் வை.கோ. வை விட்டு பிரிந்தவர்கள் தாவி சென்றிருக்க வேண்டிய இடம் அ.தி.மு.க. தானே …. ? விகடன் என்ன …. அனைத்தையும் வாங்கி விட்டார்கள் போல தெரிகிறது ….. ? யார் வந்தாலும் — வராவிட்டாலும் கட்டாயமாக வர வழைத்து சீட் கொடுக்க காத்திருக்கும் ஒரே கட்சி தி.மு.க. தானே …. ? இவ்வளவு நடப்புகளுக்கும் ” எந்த ஒரு ரி ஆக்சனும் ” இல்லாமல் இருக்கின்ற ஒரே கட்சி — அ.தி.மு.க…. தானே — அய்யா ….? என்னதான் நடக்கும் ….. ?

 5. Pingback: திரு.ஸ்டாலின் கவலைகள் தீர்ந்தன… இனி எந்த தடங்கலும் இருக்காது ….!!! | Classic Tamil

 6. P.CHELLAMUTHU சொல்கிறார்:

  பஞ்சபண்டவர் கூட்டணி இறுதியாக ஆட்சியில் பங்குவேண்டும் என்ற நிபந்தனையுடன் தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வாய்ப்பிருந்தது! அதை இழந்துவிட்டார்கள்! என்று நான் நினைக்கிறேன்.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் சொன்ன முக்கியமான சில பாயிண்டுகளை யாரும்
  கண்டு கொள்ளவில்லையே ….

  1) பகுத்தறிவு வாதம் + சத்ரு சம்ஹார யாகம்….

  2) தலைவர் முதல்வர் நாற்காலியை மறப்பது….

  3) வலுவான கூட்டணி இல்லாமலே கூட ஜெயிக்க முடியும் என்று
  திரு.ஸ்டாலின் நினைப்பது ….

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • paamaran சொல்கிறார்:

   பகுத்தறிவு வாதம் : — எப்போதோ ” காலாவதியாகி ” ஆகிப்போனது : மஞ்சள் துண்டு போட்ட போதே ….. , சத்ரு சம்காரயாகம் : — முன்பு ராஜாத்தி– இப்போ துர்கா ……தலைவர் முதல்வர் நாற்காலியை : — மறக்கவில்லை என்பதற்கு தான் என்னும் 10 — 15 — ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறி ஸ்டாலினுக்கு ” ஷாக் ” கொடுத்தது …..வலுவான கூட்டணி இல்லாமல் : — போனால் என்ன ” கட்சிகளை உடைப்பது — செலவழித்து ஆட்களை பிடிப்பது — ஜாதி கலவரங்களை தூண்டி சட்டம் — ஒழுங்கு பிரச்சனையை கிளப்பி விடுவது போன்ற — தந்தைவழி தந்திரங்கள் இருக்கவே இருக்கிறது …. அப்புறம் என்ன அய்யா …. ? அப்படியே தேர்தலில் வெற்றி பெற்றாலும் …. அப்புறம் தானே இருக்கு இவர்களுக்குள் பெரிய கச்சேரி : ” அப்பாவுக்கும் — மகனுக்கும் ” — பொறுத்திருந்து — பார்ப்போமா ….?

 8. today.and.me சொல்கிறார்:

  அப்பா முதல்வர் நாற்காலியை மறப்பது இருக்கட்டும்.

  ஸ்டாலினால்
  லைவ் ஆக ஒலி-ஒளிபரப்பப்படும்
  நமக்கு நாமே
  முழு நீள நகைச்சுவை திரைப்படத்தைப் பார்த்தீர்களா?

  மக்களே முகவை முழுவதும் மறந்துவிடுவார்கள் போலிருக்கிறதே?!!??!?!?!?!?!?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   கலைஞரின் ராஜதந்திரத்திற்கு முன் ஸ்டாலின் எம்மாத்திரம்…..?

   விரைவில் எதாவது “செக்-மேட்” நடக்கும் – எதிர்பார்க்கலாம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.