பாமா விஜயம் – வாசன் கம்பெனி – வக்கீல் நோட்டீஸ் ….!!!

bama vijayam....

 

பல வருடங்களுக்கு முன்பு ஒரு முழுநீள நகைச்சுவைப்படம்
டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கியது – “பாமா விஜயம்” என்ற பெயரில்
வெளிவந்தது. இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதில் ஒரு காட்சி…
(என் நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு சொல்கிறேன் –
கொஞ்சம் மாறுபடக்கூடும்….)

வெளியூர் எதோ ஒன்று –
அப்பாவான பிராம்மண வக்கீல் ஒருவர்,
கூடவே அவரது மனைவி.
சென்னையில் திருமணமான அவரது ஒரே மகள்.
மகளுக்கு அவள் கணவன் மீது – அவன் சினிமா நடிகையுடன் சகவாசம்
வைத்திருப்பதாக ஒரு சந்தேகம் – அதன் விளைவாக சண்டை.

செல்ல மகள் தந்தைக்கு டெலிபோன் செய்து அழுதுகொண்டே கணவர் மீது
புகார் சொல்கிறார். தந்தை கடும் கோபம் கொள்கிறார்.

போனில் பேசிய தந்தையிடம், தாய் – மகளுக்கு ஏதோ
பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு தனது வக்கீல் கணவரிடம்
என்ன விஷயம் என்று கேட்கிறாள் –

தந்தை சொல்கிறார் –
” மாப்பிள்ளை ராஸ்கல்… சினிமா நடிகையுடன்
தொடர்பு வைத்திருக்கிறானாம்….நம்ம பெண்ணை
கொடுமைப்படுத்துகிறானாம்…
நான் இப்பவே மெட்ராசுக்குப் போய் …..
ஒரு நல்ல வக்கீலைப் பிடித்து …..
அந்த ராஸ்கலை என்ன பண்றேன் பார் …… “

மனவி குறுக்கிடுகிறார் – ” ஏன்னா – நீங்களே ஒரு வக்கீல் தானே,
எதுக்கு இன்னொரு வக்கீலைப் பிடிக்கணும் …!!! ”
என்கிறார்.

வக்கீல் கணவர் டென்ஷனில், கோபமாக
” நல்ல ” வக்கீல்னு சொன்னேன்ல “
என்பார் ( அழுத்தந்திருத்தமாக ….!!! )

– அற்புதமான டைமிங்.
ஒரு சீரியஸ் சீனில்,

மிக அழகாக கிண்டலுடன் கூடிய நகைச்சுவை காட்சி அது.

சரி இப்போ எதுக்கு சார் இதைச் சொல்றீங்க என்கிறீர்களா ….?

வாசன் ஐ ….. வரி ஏய்ப்பு தொடர்பான விஷயங்களும்,
அமலாக்கப் பிரிவு விசாரணை குறித்தும்,

முன்னாள் அமைச்சர் தந்தை-மகன் தொடர்பான விஷயங்களும்
செய்திப்பத்திரிகைகளில் வெளிவந்தன அல்லவா…

அது குறித்து சீனியர் வக்கீலான தந்தை
இன்று ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார்…..

இந்த செய்திகள் அனைத்துமே பொய்யானவை.
வேண்டுமென்றே எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எதிராக
கிளப்பப்படும் பொய்யான புகார்கள். மீடியாவில் உள்ளவர்கள்
பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்காக தனிப்பட்ட முறையில் விசாரித்து,
உண்மை என்று நிரூபிக்கப்படாத செய்திகளை
பிரசுரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்
நான் தயங்க மாட்டேன்.

எனது நல்ல வக்கீல்களின் கரங்களில்
இந்த விஷயம் ஒப்படைக்கப்பட்டு,

சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்….!
(என்பதை அனைவரும் அறியவும்…!!! )

“சாமான்ய”ரான நாம் எங்கே போய், எப்படி
independent verification எல்லாம் பண்ணுவது ….
” நல்ல ” வக்கீல்” களை எல்லாம் சமாளிக்க நம்மால் முடியுமா …?
எனவே, நமக்கு இந்த வம்பெல்லாம் எதுவும் வேண்டாம் சாமி …

இன்றைய தத்துவமாகிய – ” அசத்யமேவ ஜெயதே ..” வை
உணர்ந்து “கப்-சிப்”…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to பாமா விஜயம் – வாசன் கம்பெனி – வக்கீல் நோட்டீஸ் ….!!!

 1. Sampathkumar. K. சொல்கிறார்:

  k.m.sir,

  very interesting quote..

 2. Pingback: பாமா விஜயம் – வாசன் கம்பெனி – வக்கீல் நோட்டீஸ் ….!!! | Classic Tamil

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எதைக் கொண்டுவந்து எங்கே இணைத்துவிட்டீர்கள். அருமை. சட்டம் கொள்ளையர்கள் கூடாரத்துக்குத் துணைபோகிறது. .பணம் அவ்வளவு குவிந்திருக்கிறது.

 4. drkgp சொல்கிறார்:

  அன்று பூர்தி சார்பான விவகாரங்களில் எமது சகாகளுக்கு தாங்கள் உதவியதை மறவோம்.

  இன்று அதேபோன்று தங்களுக்கு உதவுவதில் மகிழ்வுறுகிறொம்.

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  2026 வரை மோடி ஆட்சி?- நாஸ்டிராடமஸ் புத்தகத்தில் குறிப்பு!

  இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ் தான் எழுதிய ஜோதிட குறிப்பில் எழுதி வைத்துள்ளார். அவர் எழுதிய ஜோதிட குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் 33 ம் பக்கங்களில் இந்தியா குறித்து அவர் எழுதி உள்ளார். “பொறுத்திருங்கள். ராமராஜ்யம் வரப் போகிறது. நடுத்தர வயதுடைய அதீத ஆற்றல் கொண்டு மனிதர் ஆட்சிக்கு வருவார். அவரது ஆட்சி காலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொற்காலமாக திகழும். அவரது சனாதன தர்மத்தால் இந்தியா மிகச் சிறந்த இந்து நாடாக மாறும். துவக்கத்தில் பலரும் அவரை வெறுத்தாலும், பின்பு அவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். அவரது தலைமையில் இந்தியா “குளோபல் மாஸ்டர்” ஆக மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் இந்தியா புகழிடமாக மாறும்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  #juniorvikatan #nostradamus
  Dear sir
  Pl. give your view in this subject.there will be no problem to anybody

 6. kalakarthik சொல்கிறார்:

  // Pl. give your view in this subject.there will be no problem to anybody//
  yes. everybody expects you to write more and more on many more subjects.
  anbudan
  kalakarthik
  karthik amma

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக் அம்மா, வருக.

   நிதானமாக எல்லாவற்றையுமே எழுதலாம்…
   மோடிஜி தான் 2026 வரை ஆட்சியில் இருக்கப் போகிறாராமே ..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. paamaran சொல்கிறார்:

  // 3 தூண்கள்… வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பாஜகவின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார்.காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பார்… அவரது ஆட்சியில் படிப்படியாக இந்தியாவில் மாற்றங்கள் நிகழும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்சினை ஆகியவற்றையும் தீர்ப்பார் எனவும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் .// …….:” இந்த முக்கியமான கதைகளை விட்டு விட்டீர்களே ….. நண்பரே ” ……?
  பெயரெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறாரா …! மூன்று தூண்கள் போதுமா …? மூன்று தூண்களில் இரண்டு தூண்கள் இப்போது வலுவிழந்து உளுத்து போய் இருப்பதை பற்றி ஒன்றும் கூற வில்லையா …? ஏன் 2026 வரை தான் அவரால் குறிக்க முடிந்ததா ….? அதன் பிறகு குறிக்க ” ஜோசியம் ” வேலை செய்ய வில்லையா…. ? இந்த செய்தியை ஊடகங்களில் போட சொன்னவர்கள் : 32 மற்றும் 33 வது பக்கங்களையும் போட்டு இருக்கலாமே …!! அப்படியே தமிழ் நாட்டின் ஜோசியத்தையும் போட்டு இருந்தால் ” இங்கே – நான் தான் அடுத்த முதல்வர் ” என்று பினாத்திக்கொண்டு சுற்றி — சுற்றி வருபவர்களுக்கும் கொஞ்சம் — ரிலாக்ஸ் கிடைத்து இருக்கும் …?

 8. paamaran சொல்கிறார்:

  தினமணி செய்தி : —– // வாசன் குழும இயக்குநர் எம்.ஏ.அழகப்பன் ராஜிநாமா………..First Published : 21 September 2015 12:24 AM IST
  வாசன் கண் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர்கள் குழுவின் மூத்த இயக்குநரும், முருகப்பா குழுமத்தைச் சேர்ந்தவருமான எம்.ஏ.அழகப்பன் தனது இயக்குநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
  வாசன் கண் மருத்துவக் குழுமத்தைத் தொடர்புபடுத்தி “ப.சிதம்பரமும் ரூ.223 கோடி கருப்புப் பண பரிவர்த்தனையும்’ என்ற தலைப்பில் “தினமணி’யில் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தியின் கட்டுரை வெளியானது.
  அதன் எதிரொலியாக தனது இயக்குநர் பதவியிலிருந்து எம்.ஏ.அழகப்பன் விலகியுள்ளார்…. // —— ” பாமா விஜயம் – கிருஷ்ணருக்காக ; இங்கே எதுக்காக ” — என்று கேட்டு – வழக்கு ஏதாவது போட்டுவிட போகிறார்கள் … அய்யா …. !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இந்த வலைத்தள நண்பர்கள் என்னைவிட கெட்டிக்காரர்கள்….!

   எதை, எங்கே, எப்படி – போடுவது என்பது அவர்களுக்கு
   நன்றாகவே தெரியும் ….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    சிதம்பரம் பதிலளிக்காதது ஏன்?
    By எஸ். குருமூர்த்தி, சென்னை
    First Published : 22 September 2015 01:27 AM ஈஸ்ட் —– இன்றைய… குருமூர்த்தியின் கட்டுரையின் ஒரு சில பகுதிகள் : — // பொதுவாக சிதம்பரம் போன்ற அறிவுஜீவிகள், சட்டம் படித்தவர்கள் ஏதாவது கருத்துக் கூறினால் அதை ஆழ்ந்து பரிசீலிக்கத் தேவையிருக்காது. தெளிவாகவும் விவரமாகவும் பதில் அளித்திருப்பார்கள். ஆனால், வாசன் குழும விவகாரம் தொடர்பான அவரது வெற்று அறிக்கையை தூண்டித் துருவிப் பார்க்க வேண்டியுள்ளது.
    எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ அந்த நிறுவனத்தில் எந்தத் தொடர்பும் இல்லை; அந்த நிறுவனத்தில் பங்குகளோ முதலீடுகளோ அல்லது பொருளாதார ரீதியிலான பலன்களோ இல்லை என்று மறுப்பு அறிக்கையில் கூறியுள்ள சிதம்பரம், வாசன் குழுமத்தின் பெயரை ஓர் இடத்தில்கூடக் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் சிதம்பரத்தின் பதில்கள் மழுப்பலாக உள்ளதே தவிர, தினமணியில் தொடர் கட்டுரையாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதாக இல்லை என்பதுதான் உண்மை….. என்று குருமூர்த்தி தொடர்கிறார் …! நல்லா போகுது …. அப்படித்தானே …. ?

    • paamaran சொல்கிறார்:

     தொடர்புடைய கொசுறு செய்தி : —– சிதம்பரத்தின் மறுப்பும், தினமணியின் உறுதியும்! …… By சென்னை,
     First Published : 21 September 2015 02:36 AM IST …………தினமணி ஆசிரியரின் விளக்கம்: கட்டுரையில் வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதில் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     குருமூர்த்தி அவர்களின் பணி அற்புதம்….

     பாவம் அவருக்குத் தான் ஒரே சமயத்தில் இரு தரப்பிலும் விரோதத்தை
     எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

     கே.டி.பிரதர்ஸ்., சீனியர் வக்கீல்-மகன் – என்று புதையல்களை
     தோண்டும்போது ஏற்படும் இடர்ப்பாடுகள் ஒரு புறம்.

     சொந்த கட்சியிலேயே, ஜெட்லிஜி குரூப்பின் எதிர்ப்புகள் மற்றொரு புறம்.

     தொடர்ந்து உறுதியாக இதே பாதையில் செல்ல குருமூர்த்தி அவர்களுக்கு
     நமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • paamaran சொல்கிறார்:

      கார்த்தி மறுப்பு : ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம் தரப்போ, இப்போது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. வாசன் ஹெல்த் கேர் மருத்துவமனையில் கறுப்புப் பணம் பரிவர்த்தனை இருந்திருந்தால் அதை வெளியே கொண்டுவந்த விசாரணை அதிகாரி சீனிவாசராவுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக அவரை இவர்கள் இடமாற்றம் செய்கிறார்களே ஏன்? கறுப்புப் பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகளை முடுக்கி இருக்கலாமே? எங்களுக்கு அந்த நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பது உண்மை என்றால் எங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கலாமே? இதுவரை டெல்லியில் இருந்து நோட்டீஸ்கூட வரவில்லையே? ஏன் என்கிறது………! சிதம்பரத்துக்கு செக் அதே நேரத்தில் ஒருசில உள்நோக்கங்களுக்காகவே இந்த விவகாரம் கிளப்பப்படுகிறது என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழக சட்டசபை தேர்தலின் போது ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாம். அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முன்னேற்பாடாகத்தான் சிதம்பரத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இதை கிளப்பிவிடுகிறார்களாம்…….!! ஜேட்லிக்கு நெருக்கடி மேலும் பாரதிய ஜனதா கட்சியிலேயே நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிரான கோஷ்டி ஒன்று தீவிரமாக லாபி செய்து கொண்டிருக்கிறதாம். அந்த லாபியுடன் சேர்ந்து கொண்டு வாசன் கண் மருத்துவமனையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது…… !!!
      Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karti-chidambaram-denies-ties-with-vasan-healthcare-236188.html ……. இவ்வாறெல்லாம் செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதின் — நோக்கம் பற்றி ….. ?

 9. drkgp சொல்கிறார்:

  Political vendetta – இதுதான் மாட்டிக்கொண்ட அனைவரும் தரும் ஒரே பதில்.
  சிலநாட்கள் இதுபற்றி பேசப்படும் எழுதப்படும் விவாதிக்கப்படும் பின் மறக்கப்படும்.
  இது இழுத்துமூடப்படுமுன்பே இன்னொன்று தலைதூக்கும் ஊழலுக்காபஞ்சம் நமது திருநாட்டில்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.