மதத்தின் பெயரை சொல்லித் திரியும் மனித விலங்குகள் ….

.

வாய்மை, நேர்மை, எதிரிகளாலும் குறை காண முடியாத
வாழ்க்கை, சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடற்ற நிலை,
பணிவு, எளிமை, கனிவு, வீரம், ஈகை, தோழர்களை
அரவணைத்துச் செல்லும் பாங்கு, அடித்தட்டு மக்களை
நேசித்த விதம், அறிவுக் கூர்மை போன்ற உன்னத
தலைமைப் பண்புகளால் மக்களை கவர்ந்தவர் –

ஏழ்மையில் பிறந்தார்…
பின்னர் பெரும் நிலத்தின் அதிபராக பத்தாண்டுகள் பணி புரிந்தார்…
மக்கள் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர்…
ஆனால், அவரோ இறுதி வரை எளிமையாகவே வாழ்ந்து சென்றர்…

அவரது மிக நெருங்கிய தோழர் அவரைப்பற்றி கூறுகிறார்….

“ஒருமுறை நான் அவரை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு
சென்றேன். உள்ளே நுழைந்து அவர் இருந்த அறையை
நோட்டமிட்டேன். ஒரே ஒரு கீழாடை மட்டும் உடுத்தி இருந்தார்.
ஒரு எளிய கட்டில் … மேலே ஒரு பாய்…
ஒருபுறம் மண்பாண்டம்…
தலைக்கு மேல் சில தோல் பைகள்…
இதனைத்தவிர வேறு எதுவும் அந்த வீட்டில் இருக்கவில்லை.
அவர் அப்போது அந்த நாட்டின் ஆட்சியாளராக இருந்தார்…!!!

மற்ற ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்க
தாங்கள் மட்டும் இவ்வளவு கடினமான சூழ்நிலையில்
வாழ்கிறீர்களே என்று கேட்டதற்கு –

” அவர்கள் இந்த உலக இன்பங்களை பெற்றுக் கொள்ள –
நான் மறுமையின் பேற்றை அடைந்து கொள்வது
உனக்கு பிடிக்கவில்லையா ?”
என்று பதிலளித்தார்.

அவர் நினைத்தால் – மற்ற மன்னர்களைப் போலவே வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவருக்கு கிடைத்த அனைத்தையும் மற்றவர்களுக்கே
கொடுத்து விட்டார்.

தம்மை பின்பற்றியவர்களை சீடர்கள் என்று அழைக்காமல்,
தோழர்கள் என்றே அழைத்தார்.

யாரைக் கண்டாலும், அவரே முதலில் வணக்கம் சொல்வார்.

எவரையும் தனக்கு பின்னால் நடக்க அனுமதிக்க மாட்டார்.

நலிந்தோரையும், நோயாளிகளையும் விசாரிப்பதை அன்றாட
நடவடிக்கையாக வைத்திருந்தார். தோழர்களின் இறுதி ஊர்வலத்தில்
தவறாமல் கலந்து கொள்வதை கடமையாகவே கருதினார்.

மற்ற தோழர்களுடன் அனைத்து பணிகளையும்
பகிர்ந்து கொள்வார்….

– இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…அவர் பெருமையை ….
நான் அறிந்த வரை அந்த மதத்தின் தலைவரைப் பற்றி ….
————————————————————————

இவர் வழியில் வந்தவர் என்று சொல்லிக்கொண்டு,
இவர் வழிகாட்டிய மார்க்கத்தின் பெயரைக் கூறிக்கொண்டு –

ilan kurdi-1

iraq-1

syria-1

syrian refugees-2

syria-turkey border-2

syria-turkish border-1

 

மனிதத்தை மறந்து,
குழந்தைகளை, பெண்களை, வயோதிகர்களை –
40 லட்சம் மக்களை, வீடிழந்து, நாடிழந்து, நாடோடிகளாக –
ஒவ்வொரு நாடாக ஓடி அடைக்கலம் தேடுபவர்களாக,
உயிர் பிழைக்க ஓடுபவர்களாக விரட்டுவது –

மனிதர்கள் செய்யக்கூடிய காரியமா …?
இவர்களை இப்படி எல்லாம் செய்யத்தூண்டுவது மதமா…?
உலகில் நானறிய எந்த மதமும் இத்தகைய தீய செயல்களை
போதிக்கவில்லையே…

மனிதாபிமானம் இல்லாத அரக்கர்கள் தாங்கள் செய்யும்
கொடும் செயலை மறைக்க பூசிக்கொள்ளும் அரிதாரம் தான் மதம்….

உலகில் உள்ள மாந்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து –
இந்த விலங்குகளை அழிக்கும் நாள் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ,
அவ்வளவிற்கு அவ்வளவு
மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே போகும்
அவலங்களை தடுத்து நிறுத்தலாம்….

என்று நடக்கப் போகிறது அது …?
எப்போது நீங்கப்போகிறது இந்த மக்களின் அவலம்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மதத்தின் பெயரை சொல்லித் திரியும் மனித விலங்குகள் ….

 1. Rami சொல்கிறார்:

  மதம் வேண்டாம் —– டீப்பா போனா பெரியவரா மாரிடபோறிங்க ஜாக்கிரதை

 2. paamaran சொல்கிறார்:

  எளிமையாய் ஒரு வெள்ளாடை — கனிவான செயல்கள் — கைகட்டி நடந்த பாங்கு — வாடிய மக்களை மட்டுமில்லாது — வாடிய பயிர்களை கண்டும் – வாடியவர் — ஜீவ காருண்யத்தை தோற்றுவித்தவர் — மதங்களை அப்போதே சாடியவர் — அவரே ” பெரு நெறி பிடித்து ஒழுக வேண்டும் — மதமான ” பேய் ” — பிடியாது இருக்க வேண்டும் ” என்று பாடி இறைவனிடம் வேண்டி கொண்டார் என்றால் — அவரையும் மத வெறியர்கள் புண்படுத்தி உள்ளார்கள் என்பதே உண்மை —-இந்த மதம் என்கிற மத யானை அன்றில் இருந்து — இன்று வரை உலகத்தை கபளீகரம் செய்து கொண்டுதான் இருக்கிறது … !

 3. Pingback: மதத்தின் பெயரை சொல்லித் திரியும் மனித விலங்குகள் …. | Classic Tamil

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தக்க காரணமின்றி ஒரு உயிரை கொன்ற ஒருவன்,
  இந்த முழு சமுதாயத்தையும் ஒட்டு மொத்தமாக கொன்றவனாவான்.
  — நபி மொழி

  • Selvadurai சொல்கிறார்:

   “தக்க காரணமின்றி ஒரு உயிரை கொன்ற ஒருவன்”

   பிரச்சினையே இதில் தான். கொல்கின்ற எவனும் அது தக்க காரணத்திற்கு என்றே கூறி விடுகிறான். எனவே அது ”எக்காரணத்திற்காக என்றாலும் ஒரு உயிரை கொன்ற ஒருவன்” என்று இருப்பதே சரி

 5. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அதாவது “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்” என்பதை போன்று ஆகும் என்று சொல்றீங்க!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.