மோடிஜி மீது டாக்டர் சு.சுவாமி நேரடி குற்றச்சாட்டு – 18 பில்லியன் டாலர் கருப்புப்பணம் வெள்ளையானது….. !!!

subramanian-swamy

மோடிஜி அரசின் மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேரடியாக
தாக்குதலைத் துவங்கி இருக்கிறார்….
அண்மையில் பிரதமர் மோடிஜிக்கு சு.சுவாமி எழுதிய கடிதத்தில்,
மோடிஜி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வந்திருக்கும்
நேரடி அந்நிய முதலீடான 24 பில்லியன் டாலரில் – 18 பில்லியன்
டாலர் உண்மையான முதலீடு அல்லவென்றும், இந்தப்பணம்
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த கருப்புப்பணம்
தான் என்றும் அதுவே மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூர் மூலமாக மீண்டும்
இந்தியாவில் அந்நிய முதலீடாக வெள்ளையாக மாறி உள்ளே நுழைந்து
இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்…!

swamy to modiji

செப்டம்பர், 15- ந்தேதி மோடிஜிக்கு டாக்டர் சு.சுவாமி நேரடியாக
எழுதி இருக்கும் கடிதத்தில் இரண்டு விஷயங்களை வலியுறுத்தி
இருக்கிறார்.

1) இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமானால்
தனி நபர் வருமான வரியை சுத்தமாக ஒழிக்க வேண்டும்.
அதனால் ஏற்படும் வருமான பற்றாக்குறையை வெகுசுலபமாக
2ஜி, 3ஜி, 4ஜி ஒலிக்கற்றைகள் மற்றும் நிலக்கரிச் சுரங்க
ஏலங்களில் வரும் வருமானம் மூலம் ஈடுசெய்து விடலாம்.
இந்த ஏலங்களின் மூலம் தனி நபர் வருமான வரியைப் போன்று
ஆறு மடங்கு அதிகமான வரவு அரசுக்கு கிடைக்கும்.

2) இரண்டாவது யோசனை சற்று வித்தியாசமாக இருக்கிறது.
லெண்டிங் ரேட் என்னும் கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை
குறைக்கும் முயற்சியில் –
ரிசர்வ் வங்கி கவர்னர் நோயாளியை குணப்படுத்துவதற்கு பதிலாக
கொன்று விடுவதன் மூலம் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்
– இது நேர்மாறான பலன்களையே விளைவிக்கும் என்கிறார்.

மேலே சொன்ன குற்றச்சாட்டையும் கூறி விட்டு, விசித்திரமான
ஒரு யோசனையையும் கூறி இருக்கிறார்.
பங்கு மார்க்கெட்டில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கும், கருப்புப்பண
நுழைவிற்கும் காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்
“பார்டிசிபேடரி நோட்” முறையையே இன்னும் அனுமதிப்பது தான்.

கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை ( prime lending rate )
உடனடியாக 8% அளவிற்கு குறைத்தும், மேலும் படிப்படியாக
5 % அளவிற்கு குறைக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்.
அதே சமயத்தில், நிரந்தர வைப்பில் (fixed deposits ) வைக்கப்படும்
பணத்திற்கு வட்டி விகிதம் இப்போது இருக்கும் அதே விகிதத்தில்
இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார்.
( hence the second step is to bring down the prime lending rate of interest
down to 8 % and finally down to 5 % while retaining the rate of interest
for fixed deposits )

அதாவது அதிக வட்டிக்கு வங்கிகள் டெபாசிட் பெற்று,
குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க வேண்டும்….!!!
இது எப்படி சாத்தியமாகும் என்பது நமக்கு புரியவில்லை….
சு.சுவாமி விவரமாக எழுதும்போது ஒருவேளை புரியவரலாம்…!

இப்படி அதிரடியாக பாஜக அரசால் நிறைவேற்ற முடியாத
யோசனைகளை எல்லாம் கடிதம் மூலம் வெளியிட்டு,
தனக்கு பெரிய அளவில் பப்ளிசிடியும், அதே சமயம் மோடிஜி அரசுக்கு
பாதகமான இமேஜையும் உருவாக்கும் சு.சுவாமியின்
எதிர்பார்ப்புகள் மோடிஜி குழுவினருக்கு தெரியாததல்ல.

சு.சுவாமியின் முதல் எதிர்பார்ப்பு – நிதியமைச்சர் பதவி….
அது இயலாத பட்சத்தில் – சுதந்திரமான வர்த்தக அமைச்சர் பதவி….

கவர்னர் பதவிகளுக்கு எல்லாம் அவர் மசிவதாக இல்லை.
அதிகாரமில்லாத பொம்மையாகவும், டெல்லி அரசியலை விட்டு
ஒதுங்கி இருக்கவும் அவர் தயார் இல்லை.

அவரை அமைச்சராக உள்ளே சேர்த்துக்கொள்வது –
வேலியில் போகிற ஓணானை …. சேர்த்துக் கொள்வது போல் தான்
என்பது மோடிஜிக்கு தெரியாதா …?

எனவே, சு.சுவாமியின் வாயை தற்போதைக்கு அடைக்கும்
வழியாக – டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி
என்கிற யோசனை மோடிஜி அரசுக்கு வந்திருக்கலாம்….
அதை திருமதி ஸ்மிரிதியின் மூலமாக சொல்லி பார்த்திருக்கக்கூடும்.

ஆனால், சு.சுவாமி சிரித்த வாயர் தானே தவிர
இளித்த வாயர் அல்லவே….!!!

எனவே, பல கண்டிஷன்களை முன்னேற்பாடாக போடுகிறார்.

” தனக்கு எமெர்ஜென்சி பவர் வேண்டும் –
தான் நினைப்பதை அறிமுகப்படுத்தவோ, செயல்படுத்தவோ,
அதிகாரம் வேண்டும். நிர்வாகம் தூய்மைப்பட, களைகளை
அகற்ற அதிகாரம் வேண்டும். தன்னால் – மத்திய அரசின்
அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு கொள்ள முடியாது….
( இதுவரை ஜாயிண்ட் செகரட்டரி அளவில் தான்
துணைவேந்தருடன் ஆலோசனைகள் நடத்தி வந்தனர்…)
கல்வி அமைச்சருக்கு குறைவான ஸ்டேடஸ் உடைய
யாருடனும் தான் இணைந்து இயங்க முடியாது….) etc. etc..

டாக்டர் சு.சுவாமியை துணைவேந்தராக நியமிப்பதாக இருந்தால் –
முன் அனுபவம், வயது தகுதி போன்ற விஷயங்களிலும் சில
விலக்குகளை உண்டாக்க வேண்டியிருக்கும்….

இந்த ஆலோசனை குறித்த செய்திகளையும்
அவரே “லீக்” செய்கிறார்….
மீண்டும் மோடிஜிக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது …..!

s.swamy twitter on jnu

ஆக ……..
இது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை.
வலியப்போய் வம்பில் சிக்குகிறது மோடிஜி அரசு….
மத்திய அரசின் நிலை ஆப்பசைத்த குரங்கின் நிலையையே
பிரதிபலிக்கிறது என்று தற்போதைக்கு தோன்றுகிறது…

ஆனால் – இருவருமே –
வல்லவருக்கு வல்லவர் –
கில்லாடிக்கு கில்லாடி –
பொறுத்திருந்து பார்ப்போம்….. என்ன தான் நடக்கிறது என்று….!!!

பின் குறிப்பு –

இந்த பிணக்கு நிஜமாகவே பெரிதாக விரிந்தால் –
“காஞ்சனா-2 ” க்ளைமாக்ஸ் பார்த்திருப்பீர்களே ….!!!
அது அற்புதமான காட்சியாகவே இருக்கும் …..
(நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமே …!)

” பேய்க்கும் பேய்க்கும் சண்டை “

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மோடிஜி மீது டாக்டர் சு.சுவாமி நேரடி குற்றச்சாட்டு – 18 பில்லியன் டாலர் கருப்புப்பணம் வெள்ளையானது….. !!!

 1. Sidarth abhimanyu சொல்கிறார்:

  // இந்த பிணக்கு நிஜமாகவே பெரிதாக விரிந்தால் –
  “காஞ்சனா-2 ” க்ளைமாக்ஸ் பார்த்திருப்பீர்களே ….!!!
  அது அற்புதமான காட்சியாகவே இருக்கும் …..
  (நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமே …!)

  ” பேய்க்கும் பேய்க்கும் சண்டை “ //

  k.m.sir

  Your “uthaaranam” super .

 2. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,

  உண்மையிலேயே நான் காஞ்சனாவும் பார்க்கவில்லை, பார்ட்2வும் பார்க்கவில்லை. நீங்கள் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு யுடூபில் தேடினேன் கிடைக்கவில்லை. மோடி-சாமி அளவுக்கு சொதப்பல் க்ளைமேக்ஸ் ஆகவா இருக்கும் என்று சந்தேகமாக இருக்கிறது.. நண்பர்கள் யாராவது லி்ங்க் கிடைத்தால் இணையுங்களேன்.

  நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   உம்ஹூம் … முழு படம் பார்த்தால் என்னை திட்டினாலும் திட்டுவீர்கள்….

   க்ளைமாக்ஸ் 5-6 நிமிடம் வரும்… அது மட்டும் தான் …
   “பேய்க்கும் பேய்க்கும் சண்டை ”

   – இந்த சண்டை நிஜமாகவே விரிவடைய வேண்டுமென்று
   எல்லாம் வல்ல இறைவனை மனதாற வேண்டுகிறேன்.
   (கடவுள் இதை உடனே நிறைவேற்றா விட்டாலும் –
   கொஞ்ச நாட்கள் கழித்தாவது நிறைவேற்றினால் சரி…!!! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. today.and.me சொல்கிறார்:

  சர்டிபிகேட் சர்ச்சையில் சிக்கிய கல்வி மந்திரி ஸ்மிரிதி இரானி
  உலகப் பொருளாதார மேதை சுப்பிரமணியசுவாமிக்கே
  டெல்லியுனிவர்சிட்டி பதவி குறித்து ஆலோசனையா?

  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா தான் நினைவுக்கு வருகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   திருமதி ஸ்ம்ரிதி இரானி – மோடிஜியின் தூதுவராக இந்த ஆலோசனையை
   எடுத்து சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்.
   மேலும், சு.சுவாமிக்கு இந்த அமைச்சரின் மீது ஒரு soft corner உண்டு.
   ஆகையால கடுப்படிக்க மாட்டார்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    மத்திய அமைச்சர் பதவி தாருங்கள்:சாமி :— தினமலர் செய்தி
    பதிவு செய்த நாள்
    25செப்
    2015
    09:07
    // புதுடில்லி : டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, நான் விருப்பப்பட்டோ அல்லது என்னிடம் கேட்டோ அரசு இந்த பதவியை எனக்கு வழங்கவில்லை. நான் அரசியலில் இருக்கவும், அதுில் கவனம் செலுத்தவுமே விரும்புகிறேன். ஒருவேளை எனக்கு எதாவது பதவி கொடுக்க வேண்டும் என விரும்பினால், சாத்திய கூறு இருந்தால், எனக்கு மத்திய அமைச்சர் பதவி தாருங்கள் என தெரிவித்துள்ளார்.// மந்திரி பதவிதான் அதுவும் நிதி அமைச்சர் தான் அவரது குறிக்கோள் என்று // அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 )
    Posted on ஒக்ரோபர் 27, 2014 by vimarisanam – காவிரிமைந்தன் அன்றே குறிப்பிட்ட பதிவில் நிதியமைச்சர் பதவி என்பது சு.சுவாமி அவர்களின்
    நீண்ட காலக் கனவு….( முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம்
    கேட்டு, கிடைக்காமல் போனதிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக – இன்னமும் தொடர்வது …..)
    வாழ்க்கையின் உச்சபட்ச
    லட்சியத்திற்கான முதல் படி …!!!
    ( உடனடித் திட்டம் – மத்திய நிதியமைச்சர்
    நீண்டகாலத் திட்டம் – இந்தியாவின் பிரதம மந்திரி ….!!!! ) …… என்றும் பதிவிட்டு இருந்த திரு.கா.மை. அவர்களின் கருத்து — ஈடேறி விடும் போல தெரிகிறது — அப்படித்தானே ….?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப பாமரன்,

     மீண்டும் உங்கள் ஞாபக சக்தி என்னை பிரமிக்க வைக்கிறது.
     (சாமிகளின் சாகசங்கள்….! )
     நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகள் குறித்து இன்று
     இன்னுமொரு இடுகை வருகிறது.
     உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப பாமரன், காமைஜி

     அவரது கனவு எப்போதுமே பகல் கனவுதான் 😦

     பலிக்கப்போவதில்லை. 😦

     எனவே அவர் தனது பிளாக்மெயிலர் தொழிலையே எப்போதும் போல் சிறப்பாகச் செய்வார் என எதிர்பார்க்கலாம். 😀

 4. Pingback: மோடிஜி மீது டாக்டர் சு.சுவாமி நேரடி குற்றச்சாட்டு – 18 பில்லியன் டாலர் கருப்புப்பணம் வெள்ளையான

 5. Sanmath AK சொல்கிறார்:

  Swamy’s comments or criticisms cannot be ignored….. Though he has intentions behind his complaints being made, he is not any other citizen to blabber something….. that $18 billion should be seriously think about….. By such complaints Swamy is pressuring those black-money operators to push the govt to give Swamy some powerful post…..

  Other side is, Swamy has no political backing or any kind of media power……He is brilliant and has connections at all levels…… what is it with him or behind him or activating him or supporting him to make a fiery person among cold-blooded politicians ???…..Answer to this may even have direct punch on our national security !!!!!…..only god knows(few politicians who think they have equal powers to god, may also be knowing it)…..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சன்மத்,

   நீங்கள் சொல்வதும் உண்மையே.
   நான் என் இடுகைகளில் கூட – என்றுமே டாக்டர் சு.சுவாமியின்
   புத்திசாலித்தனத்தை குறைத்து கூறியது இல்லை.

   ஆனால் – அவர் ஒரு ஆபத்தான புத்திசாலி ….!
   He is an intelligent crook….!

   அவரது பல கொள்கைகள், முக்கியமாக – மதம், மொழி குறித்தவை சமூகத்தில் கடும் கொந்தளிப்புகளை
   உருவாக்கக்கூடியவை. மேலும் அவர் ஒரு self centred person.
   மற்றவர்களைப் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதாகத்
   தெரியவில்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. sridhar சொல்கிறார்:

  Every year unclaimed fixed deposits thousands of crores are going to bank a/c. So no need intrest for loans. In ethiyopia [ not signed in gott agreement ] all the communication business are owned by the govt. Now a day comuniction business is in the rank one profit business in the world. . In india indian posts & telegraphs now bharath sanchar nigam ltd., doordharshan [ worlds only best ‘pal b’ broadcasting system ] is worlds second biggest & best communication net work. indian govt. owned this service the income is enough for all govt. expance. No tax is required.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.