டாக்டர் சு.சுவாமி மத்திய அமைச்சர் ஆவாரா …? பாஜகவில் அவரை எதிர்ப்பது யார் ….?

Dr-Swamy2

டாக்டர் சு.சுவாமி டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை
ஏற்றுக் கொள்வாரா என்கிற எதிர்பார்ப்புகளுக்கிடையே – நேற்றிரவு
டாக்டர் சு.சுவாமி தன் எண்ணத்தை திட்டவட்டமாகத்
தெரியப்படுத்தி விட்டார்…

நேற்றைய தினம் செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் –

” நான் ஒரு கருத்தில் உறுதியாக இருக்கிறேன்-
நான் நிச்சயம் தீவிர அரசியலில் தான் இருப்பேன்.

( துணை வேந்தரானால் இது சாத்தியமில்லை …)

எனக்கு எதாவது கொடுக்க வேண்டுமென்று
அவர்கள் ( ? பாஜக or மோடிஜி …? ) விரும்பினால் –
மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் கொடுக்கலாம்….! ”

இதையொட்டி அவர் தரப்பிலிருந்து வெளிவந்திருக்கும் செய்திகள்
சொல்வதாவது –

சு.சுவாமிக்கும் மோடிஜிக்குமான நட்பு 30 ஆண்டுகள் பழையது.
இருவரும் ஒருவரையொருவர் மிக நன்றாக உணர்ந்தவர்கள்.
மோடிஜி பிரதமர் ஆக வேண்டுமென்று சு.சுவாமி விரும்புனார்.
அதே போல், மோடிஜியும், தான் ஆட்சிக்கு வந்தால்,
அமைச்சரவையில் சு.சுவாமிக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்படும்
என்று உறுதியளித்தார்.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் உருவான சூழ்நிலையில்,
மோடிஜி, தான், சு.சுவாமியை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள
இயலாத சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சு.சுவாமி அமைச்சரவையில் சேர்க்கப்படுவதை தடுக்க
சில மூத்த தலைவர்கள் முக்கியமாக ஒரு மூத்த பாஜக அமைச்சர்
தடையாக இருக்கின்றனர்.

அந்த மூத்த அமைச்சர் திரு அருண் ஜெட்லியாக இருக்குமோ…? –
அருண் ஜெட்லி நிதியமைச்சர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று
பல முறை சு.சுவாமி வெளிப்படையாக
விமரிசனங்கள் செய்திருக்கிறார். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் 29 அன்று,
அருண் ஜெட்லியைப் பற்றி சு.சுவாமி எழுதியுள்ளவை –

————————
Arun Jaitley is not an economist, he is clueless.
He has to rely on his advisors
and he has got them from America (Raghuram Rajan, Reserve Bank)
they don’t know anything about India. They should have been sacked.
but Jaitley doesn’t understand economics, so he is bound to rely on
people’s advice and those guys are committed to IMF and their audience in America.

Black Money: Yeah black money can be brought back but Mr Jaitley doesn’t know
how and I have written to the Prime Minister and I hope he looks at the steps
I have suggested

—————————-

சு.சுவாமியை அமைச்சரவையில் சேர்க்க இயலாமைக்கு சில
காரணங்களும் அவர்களால் முன்வைக்கப்படுகின்றன….

1) அமைச்சரவையில் இருந்தாலும் கூட, சு.சுவாமியின் சுதந்திரமான
போக்கை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. மனம் போன போக்கில்
இயங்கும் அவரது தீவிர அரசியலால், அரசுக்கு பல பிரச்சினைகள்
உண்டாகக்கூடும்….

2) ஏற்கெனவே 75 வயது நிரம்பிய பல மூத்த தலைவர்களுக்கு
மத்திய அமைச்சரவையில் வயதைக் காரணம் காட்டி இடமளிப்பது
தவிர்க்கப்பட்டு விட்டது. சு.சுவாமி ஏற்கெனவே 76-ல் இருக்கிறார்.
எனவே இவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது பல பிரச்சினைகளை
புதிதாக உண்டு பண்ணும்.

3) சு.சுவாமியை தீவிர டெல்லி அரசியலில் இருந்து விலகி
இருக்கச்செய்வது தான் ஆட்சிக்கும், கட்சிக்கும் – பாதுகாப்பு.

ஒரு பதவியும் கொடுக்காமல் இருந்தாலும்,
சு.சுவாமியால் பிரச்சினைகள் உருவாகும்.
எனவே, இவை எல்லாவற்றிற்கும் சேர்ந்த தீர்வாக
கடந்த ஒரு வருடத்தில் ஐந்து முறைகள் வெவ்வேறு வாய்ப்புகள்
அளிக்கப்பட்டிருக்கின்றன.
(இவை எதுவுமே வெளியில் சொல்லப்படவில்லை)
இப்போது கடைசியாக அளிக்கப்பட்ட வாய்ப்பு மட்டுமே
வெளிவந்திருக்கிறது….

இதற்கு முன்னர் –

எதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக,
அமெரிக்காவிற்கான இந்திய தூதராக,
மேற்கத்திய நாடுகள் எதாவதொன்றிற்கான இந்திய தூதராக,
ஐ.நா.வில் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினராக,
பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து உருவாக்கிய
“ப்ரிக்ஸ் வங்கி” யின் முதல் தலைவராக –
ஐந்து முறை வெவ்வேறு வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்தையும் சு.சுவாமி மறுத்திருக்கிறார்.

இப்போது கடைசியில் வந்திருப்பது தான் டெல்லி பல்கலைக்கழக
துணை வேந்தர் பதவி. அதனை நேரடியாக நிராகரிக்காமல் –
நடைமுறை சாத்தியமில்லாத பல கண்டின்களை விதித்து –
அதையும் நிராகரிக்க வழியுண்டாக்கி விட்டார்….

சு.சுவாமிக்கு ஒரே குறி ….. மத்திய அமைச்சர் பதவி….!
மோடிஜியின் இயலாமையை இப்போதைக்கு அவர் பொறுத்துக்
கொண்டிருக்கிறார்.

எப்போது வெடிப்பாரோ ….. தெரியாது….!!!

All the Best .. Dr.Swamyji….!!!
Also all the Best – Modiji….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to டாக்டர் சு.சுவாமி மத்திய அமைச்சர் ஆவாரா …? பாஜகவில் அவரை எதிர்ப்பது யார் ….?

 1. Pingback: டாக்டர் சு.சுவாமி மத்திய அமைச்சர் ஆவாரா …? பாஜகவில் அவரை எதிர்ப்பது யார் ….? | Classic Tamil

 2. Thiruvengadam சொல்கிறார்:

  சுசாமி தன் லட்சியத்தை பெற்றுவிட்டால், தற்போது தமிழக எதிர்க்கட்சிகளின் முதல் கையெழுத்து விஷயம் போல் முதல் உத்திரவு தன் மாணவர்மேல் தானோ?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரு விஷயத்தை நான் இடுகையில் சொல்லத் தவறி விட்டேன்.
  மோடிஜியும் நானும் – ராஜாவும், ராஜகுருவும் போல என்று
  டாக்டர் சு.சுவாமி ஒரு தடவை சொன்னார். ஆனால் மோடிஜி என்றுமே
  சு.சுவாமி தனக்கு நெருக்கமானவர் என்று காட்டிக்கொண்டதில்லை.

  மோடிஜிக்கும் – அருண்ஜிக்கும் இடையே இருப்பது மிக நெருங்கிய நட்பு.
  கடந்த 13-14 ஆண்டுகளாக, மோடிஜி குஜராத் முதலமைச்சர் ஆவதற்கும்
  முன்னால் இருந்தே இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள்.
  எனவே, அருண்ஜிக்கு விரோதமாக மோடிஜி எந்த முடிவையும்
  எடுக்க மாட்டார்.

  எனவே, அநேகமாக, சு.சுவாமி தான் போரைத் துவக்க வேண்டியிருக்கும்…!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  //All the Best .. Dr.Swamyji….!!!
  Also all the Best – Modiji….!!!//

  No. All the Best Arunji…

  😀

 5. paamaran சொல்கிறார்:

  Posted on ஒக்ரோபர் 27, 2014 by vimarisanam – kavirimainthan
  (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 ) // திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன்
  சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி
  தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள். அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில் சேரப்போவதாகவும்……!! // சுவாமி சிங்கமும், மோடி சிங்கமும் மோதுமா ….?
  Posted on மார்ச் 4, 2015 by vimarisanam – kavirimainthan இரண்டு சிங்கங்களும் இப்போதைக்கு சிரித்துக் கொண்டே
  கை குலுக்கிக் கொண்டாலும் – என்று வேண்டுமானாலும்
  மோதிக்கொள்ளும் நிலையில் இருக்கின்றன என்பது தானே
  நிதரிசனமான உண்மை ….?
  மோதல் வருமா அல்லது தழுவல் சாத்தியமா …?

  தழுவல் என்று வந்தால் – சு.சுவாமி விரைவில்
  மத்திய அமைச்சர் ஆகக்கூடும்….

  ஆனால் – மோதல் என்று ஒன்று வந்தால் அதில் –
  எந்த சிங்கம் ( !!! ) ஜெயிக்கும் ….? என்று இடுக்கையில் குறிப்பிட்டு இருந்திர்கள் …. தற்போது // All the Best .. Dr.Swamyji….!!!
  Also all the Best – Modiji….!!! // என்றும் இரு சிங்கங்களையும் வாழ்த்தியுள்ளிர்கள்…. ! தனக்கு கொடுக்கப்பட்ட ” assignment-” களை முடித்துவிட்டாரா – சுவாமி ..? அதனால் தான் தற்போது உரிமையோடு ” மந்திரி பதவி ” வேண்டும் என்று கேட்க துவங்கி விட்டாரா …? தற்போதைய நிலையில் ” எந்த சிங்கம் ஜெயிக்கும் …!!! மோடிஜி என்கிற சிங்கத்திடம் : அரசு — அதிகாரம் இருக்கிறது —- சுவாமி என்கிற சிங்கத்திடம் தற்போதுள்ள பா.ஜ.க.அரசின் முக்கிய புள்ளிகளின் விவரங்களை வைத்து உபத்திரவங்கள் வருமோ …. ? என்றும் எண்ணுவார்களா …? என்ன தான் நடக்கும் …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பாமரன்,

   டாக்டர் சு.சுவாமி இயன்ற வரை பொறுத்து பார்ப்பார் என்றே நினைக்கிறேன்.

   அவ்வப்போது மறைமுகமாக, தொந்திரவுகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
   இவர் வாயை அடைக்க எதாவது கொடுத்தே ஆக வேண்டும் என்கிற உணரவை
   மோடிஜிக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்….

   இனியும் பொறுமை காக்க முடியாது என்கிற நிலை வரும்போது –
   “பேய்க்கும் பேய்க்கும் சண்டை” துவங்கலாம்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    …….சு.சாமி துணைவேந்தரா? இல்லை என்கிறார் ஸ்மிருதி இரானி : —- தினமலர் செய்தி ….!
    பதிவு செய்த நாள்
    26செப்
    2015
    23:10
    லக்னோ: ”டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தராக, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல், வெறும் வதந்தி,” என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி கூறினார்……. ? சு.சுவாமி டிவிட்டரில் பதியும் அளவுக்கு ஒன்றும் தெரியாதவரா ? தற்போது ஸ்மிருதி இரானி பின் வாங்குவது எதனால் ….? ஒருவேளை சு.சுவாமியின் ” பல்லை பிடித்து பார்க்கும் ” தந்திரமா …. ? என்ன உள்குத்து நடந்து கொண்டு இருக்கிறது …. ? இந்த செய்தியை பார்க்கையில் சு. சுவாமியின் மந்திரி பதவி கோரிக்கை நிறைவேற சாத்தியம் உண்டா ….. ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப பாமரன்,

     குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை தான்
     திருமதி இரானியின் நிலை …..!
     சு.சுவாமியின் ட்விட்டர்களே இதற்கு சாட்சி…

     சு.சுவாமி அமைச்சராவதற்கான சாத்தியம் …
     இல்லை … இல்லை …. இல்லவே இல்லை…!!!
     (என்பதே எனது கருத்து )

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.