( பகுதி-2 )- துக்ளக் ஆசிரியர் சோ…. (தொடர்ச்சி)

cho

“துக்ளக்” முதல் இதழ் வெளியானது – 1970-ஆம் ஆண்டு
பொங்கல் அன்று ( 15/01/1970 ).
அடுத்த ஆண்டு துவங்கி இன்று வரை வருடம் தவறாமல் பொங்கல்
தினத்தன்று, வாசகர்களின் முன்னிலையில், துக்ளக் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஆசிரியர் சோ அவர்கள்…..

கடந்த 10 ஆண்டுகளாக நான் சென்னையில் இருப்பதால்,
தொடர்ந்து பத்து துக்ளக் ஆண்டு விழாக்களில்
கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம்
என்று தான் சொல்ல வேண்டும்…..

“துக்ளக்” முதல் இதழின் அட்டைப்படம் கீழே –
எவ்வளவு தன்னம்பிக்கையும், ( திமிரும்…! ) இருந்தால்,
புதிதாகத் துவக்கும் ஒரு இதழின் அட்டைப்படத்தில் இரண்டு
கழுதைகளைப் போடத் தோன்றும்…!
( கவனிக்க – அப்போதைய துக்ளக்கின் விலை 40 பைசா மட்டுமே…
இப்போதும் விலை குறைவே – இன்னமும் 10 ரூபாய் தான்…! )

thuglaq -front cover

“துக்ளக்” பத்திரிகையை தான் துவக்கிய பின்னணியை
பின்னொரு காலத்தில், ஆசிரியர் சோ-வே விவரமாக
விளக்கி எழுதினார்.

அந்த கதையை சோ அவர்களின் வார்த்தைகளிலேயே
படிப்பது தான் சுவாரஸ்யம் என்பதற்காக நண்பர்களின்
பார்வைக்காக அதை அப்படியே கீழே பதிப்பித்திருக்கிறேன் –

thuglaq-1

thuglaq-2

thuglaq-3

thuglaq-4

thuglaq-5

thuglaq-6

thuglaq-7

இந்த இடுகையின் முதல் பகுதியின் பின்னூட்டத்தில்
நண்பர் பாமரன் “முகமது பின் துக்ளக்” திரைப்படத்தின்
சாம்பிள் வசனங்களை கொடுத்திருந்தார்….

அதே போல் “முகமது பின் துக்ளக்” நாடகத்தின் ஒரு பகுதியை
இங்கு தந்தால், சோ அவர்களின் சுவையான கிண்டல் நடிப்பையும் பார்த்ததாக இருக்குமே என்று தோன்றியது.

எனவே, முகமது பின் துக்ளக் நாடகத்திலிருந்து
ஒரு சிறிய, சுவையான பகுதி கீழே –
(என்ன அற்புதமான ஒரு நடை …..!!! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ( பகுதி-2 )- துக்ளக் ஆசிரியர் சோ…. (தொடர்ச்சி)

 1. வணக்கம் ஐயா கடந்த பதிவில் முகமது பின் துக்கக் திரைப்படத்தை குறிப்பிட்டு கருத்துரை தந்தேன் இதில் படித்தின் காட்சிகள் பேட்டியின் பகுதி வரவில்லையே ஐயா.. புகைப்படத்தில் உள்ள திரு. சோ அவர்களின் விடயத்தை நான் இன்னும் படிக்க வில்லை காப்பி செய்திருக்கின்றேன் பெரியதாக்கி படிக்க…. நன்றி ஐயா
  – கில்லர்ஜி

 2. today.and.me சொல்கிறார்:

  பதூத்தா !
  கேமராவிலிருந்து துக்ளக் சுல்தானை மறைக்கிறாய் பார்
  தள்ளி நில்…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   நாளைய இடுகை உங்களுக்கு காணிக்கை….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. johan paris சொல்கிறார்:

  அதிர்ஸ்டம் தந்த அனுபவம் தொடர் அப்போதே படித்துள்ளேன். முகமது பின் துக்ளக் படம் பார்த்துள்ளேன். அல்லா அல்லா பிரபல பாடல், இன்றைய இளைஞர்களுக்கு உங்கள் எழுத்து நிச்சயம் உதவும். நமக்கும் திரும்பிப் பார்க்க – சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

 4. வணக்கம் ஐயா காணொளி இப்பொழுதுதான் கண்டு ரசித்தேன் இந்த வகையான வசனங்கள் திரு. சோ அவர்களுக்கு மட்டுமே உரித்தானது….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கில்லர்ஜி,

   நல்ல வேளையாக இந்த காலத்து டெக்னாலஜி –
   எல்லாவற்றையும் பாதுகாத்து, திரும்ப திரும்ப பார்த்து, கேட்டு – ரசிக்க
   உதவுகிறது.
   இந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு நமது நன்றியைச் சொல்ல வேண்டும்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. paamaran சொல்கிறார்:

  // ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய மனிதர்கள் கூடி மது விருந்து நடத்துவது வழக்கம். அப்போது ஐ.ஜி.யாக இருந்தவர் ரெய்ட் செல்ல தீர்மானித்தார். நேராக ராஜாஜியிடம் போய் ரெய்ட் நடத்தப் போகும் விவரத்தைக் கூறினார்.
  “”தாராளமாக உங்கள் வேலையைச் செய்யுங்கள்” என்று ராஜாஜி சம்மதம் தெரிவித்தார். அப்போது அந்த ஐ.ஜி. பெரிய மனிதர்கள் பலர் அங்கே இருப்பதைக் கூறினார்.
  “”அதனால் என்ன?” என்று கேட்டார் ராஜாஜி. அந்த விருந்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியும் இருப்பதைத் தெரிவித்தார் ஐ.ஜி. சிறிது நேரம் யோசித்த ராஜாஜி, “”அந்த நீதிபதியிடம் போய் “முதலமைச்சர் உங்களை அவசரமாகப் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டுமாம்’ என்று சொல்லுங்கள். அவர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தவுடன், நீங்கள் போலீசாருடன் உள்ளே சென்று ரெய்டு நடத்துங்கள்”என்றார்.
  அதே போன்று அந்த நீதிபதி ராஜாஜியைப் பார்க்க அவசரமாக வந்தார். அப்போது ராஜாஜி, “”இந்த தடவை நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்தால் கைது செய்யப்படுவீர்கள்” என்று கூறி நீதிபதியை அனுப்பி வைத்தார்.
  அந்த நீதிபதி மீது எந்தத் தவறும் கூற முடியாது. ஆனால் இந்த குறைபாடு அவரிடமிருந்தது. நீதித்துறை மீது ராஜாஜிக்கு இருந்த மரியாதை காரணமாக அதை இப்படி சாமர்த்தியமாக சமாளித்தார்.
  (“துக்ளக் 40-வது ஆண்டு விழாவில் சோ கூறியது’) // ….. இதெல்லாம் அந்த காலத்தில் நடந்தது — நீதித்துறை மீது அனைவருக்கும் மதிப்பும் — மரியாதையும் இருந்தது …. ! ஆனால் இன்று பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை படித்தால் : — // மதுரை ஹைகோர்ட் கிளையை மூடிவிடலாமா? ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வியால் வக்கீல்கள் அதிர்ச்சி…. !!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-hc-order-larger-bench-inquiry-the-contempt-proceeding-236784.html // என்று கேட்கின்ற நிலையில் நீதிபதிகளும் — இவ்வாறு கேட்க காரணமான வக்கீல்களையும் நினைத்தால் என்ன தோன்றுகிறது …? சோ உடல் நலத்தோடு இருந்தால் இதை பற்றி கண்டிப்பாக ” ஒரு விளாசு விளாசி இருப்பார் ” ….!!! சோ ஒரு வழக்கறிஞராக — ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தும் பல முறை இரண்டு தரப்பினரின் தவறுகளை ” ஆண்மையுடன் ” சுட்டிக்காட்டியவர் என்பதை மறக்க — மறுக்க முடியுமா …. ? சோ … சோ … தானே …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   முற்றிலும் உண்மை நண்பரே.
   அந்த quality of people- ஐ இப்போதெல்லாம் நம்மால்
   பார்க்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

  மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள் அய்யா! நன்றி! 1980-களில் எனது ஆதர்சமாக விளங்கியவர் திரு.சோ அவர்கள், என்றாலும் பின்னாளில் அவரை விலக்க வேண்டியதாகிவிட்டது; எனினும், மிகவும் இக்கட்டான அரசியல் சமயங்களில் அவரது பங்களிப்பு மிகமிக முக்கியமானது! குறிப்பாக நெருக்கடிநிலைக் காலம், என்.டி.ஆரின் முதல்வர் பதவிப் பறிப்பு விவகாரம் ஆகியவை என் நினைவில் உள்ளவை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தங்க ராஜேந்திரன்,

   அதெல்லாம் கனவு மாதிரி இருக்கிறது…. அல்லவா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Dear KM & Pamaran The video is simply class. I have seen Md.bin thuglak drama and cinema
  many times in my earlier days. Even today I saw the video for five times. Those dialogues are
  standing beyond time. My special thanks to Paamaran.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.