90 வயது தந்தையை முதல்வராக்கவா ஸ்டாலின் இத்தனை மெனக்கெடுகிறார்…..?

.

கடந்த சில நாட்களாக திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு
வரும் “நமக்கு நாமே” பயணத்தில் –
தன் வழக்கத்திற்கு முற்றிலும் மாறான செயல்களைச் செய்வதால்
படாத பாடு படும் அவரது செய்கைகள் நமக்கு
வியப்பை அளிக்கிறது….. கூடவே சில கேள்விகளையும் ….!!!

இடுகைக்கு உள்ளே போகும் முன்னர், நாளிதழ்களில்
ஸ்டாலின் அவர்களின் பயணம் தொடர்பாக வெளிவந்திருக்கும்
சில புகைப்படங்களும், கேலிச்சித்திரங்களும் கீழே –

stalin cycling

stalin -in bus -1

stalin in bus -2

stalin cartoon

stalin - market

stalin in perumal temple with wifestalin -vessel maker

stalin vivasayee

stalin with little girl

stalin with

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கையில், எல்லாரையும்
முந்திக் கொண்டு தான் செயல்பட வேண்டும் – மக்கள் மனதில்
முந்தி இடம் பெற வேண்டும் என்கிற அவரது நோக்கம் புரிகிறது.

மற்ற – அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளர்களான –

பாமக வின் டாக்டர் அன்புமணி,
தேமுதிக வின் திரு விஜய்காந்த்,

ஆகியோர் இதற்கு எந்தவித பதில் ( counter )
நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதை – பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்.
அவை எந்த அளவிற்கு ஸ்டாலின் அவர்களின்
எதிர்பார்ப்பை பாதிப்பதாக இருந்தாலும் கூட –

ஒரு பேச்சுக்காக – ஸ்டாலின் அவர்களின் தீவிரமான முயற்சிகளின்
காரணமாக, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் –
திமுக தனியாகவோ, கூட்டணி பலத்திலோ ஆட்சியமைக்கக்கூடிய
அளவிற்கு வெற்றி பெற்றால் – பிறகு

என்ன நடக்கும் என்பது குறித்து சில கேள்விகள் –

1) உண்மையாகவே ஸ்டாலின், தன் தந்தையை பதவியில்
அமர்த்துவதற்காகத் தான் இவ்வளவு பாடுபடுகிறாரா …?

2) இவ்வளவு பாடுபட்டு ஸ்டாலின் உழைப்பதால்
கிடைக்கக்கூடிய வெற்றியின் பலனை அவருக்கே அளித்து
ஸ்டாலினை முதல்வராக்க கலைஞர் தாமாகவே
பெருந்தன்மையுடன் முன்வருவாரா …?

அல்லது –

3) 6-வது தடவையாக தானே முதல்வர் ஆக வேண்டும் என்கிற
தந்தையின் தீராத ஆசையை நிறைவேற்ற ஸ்டாலின்
முன்வருவாரா….?

அல்லது –

4) இந்த வெற்றி – தனது தனிப்பட்ட தீவிர முயற்சி மற்றும்
கடும் உழைப்பினால் கிடைத்தது என்பதால் –
தமிழக மக்கள் தன்னை முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறார்கள்
என்று காரணம் கூறி – ஸ்டாலின் தானே முதல்வர் பதவியில்
அமர முயற்சிப்பாரா …?

அல்லது –

5) தள்ளாத 90 வயதில் – முதல்வர் பதவிக்குரிய கடுமையான
பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தந்தையின் வயதும்,
உடல்நிலையும் இடம் கொடுக்காது என்றே காரணம் காட்டி –
ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர வைக்க
திருமதி துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோர்
போடும் திட்டம் நிறைவேறுமா …?

அல்லது –

6) ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முயன்றால்,
தான் ஒதுக்கப்படுவோம் என்பதை உணர்ந்து வேறு வழியின்றி
ஸ்டாலின் முதல்வர் ஆக கலைஞர் ஒப்புக்கொள்வாரா …?

அல்லது –

6) இருவருக்கும் முதல்வர் ஆகும் ஆசை இருந்து –
கட்சியில் பலப்பரீட்சை நடக்குமா ….?

azhagiri cartoon

7) இதில் திரு அழகிரி அவர்களின் தலையீடு
எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்…?

நண்பர்கள் இந்த possibilities குறித்து என்ன
நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பின்னூட்டங்களில் எழுதுங்களேன்…..

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

90 வயது தந்தையை முதல்வராக்கவா ஸ்டாலின் இத்தனை மெனக்கெடுகிறார்…..? க்கு 30 பதில்கள்

 1. Pingback: 90 வயது தந்தையை முதல்வராக்கவா ஸ்டாலின் இத்தனை மெனக்கெடுகிறார்…..? | Classic Tamil

 2. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  தளபதி எவ்வாறு அறுபது வயதிலும் இளைஞரணி தலைவராக தொடர்கிறாரோ அவ்வாறே தான் தலைவரும் ஆறாவது முறையாக முதல்வராக விரும்புவார் அதனை நியாயபடுத்த கழக ஒற்றுமை என்ற ஆயுதத்தையும் பயன்படுத்துவார். அதேநேரம் நமக்கு நாமே என்று கிளம்பியிருக்கும் ஸ்டாலின் தங்களது கடந்த ஆட்சியின் போது எங்கே போயிருந்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும் ஏன் என்றால் இன்று அவர் முன்னிலைபடுத்தும் பல விஷயங்கள் அன்றும் இருந்தன இன்றும் இருக்கின்றன நாளையும் இருக்கப்போகின்றன ஏன்என்றால் இ்ங்கு ஆட்சி அதிகாரம் என்பது தனியுடைமையாகி தலைவர் தலைவி குடும்பம் என்று நிலைபடுத்தப்பட்டுவிட்டது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரசேகரன்,

   தெரிந்தோ,தெரியாமலோ நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருகிறேன்…
   ( கடந்த காலங்களில் தந்தையின் ஆட்சி தானே நடந்தது …
   அதற்கு தானே மன்னிப்பு கோருகிறார்….?🙂 )

   இனி இத்தகைய தவறுகள் நிகழாது – அதற்கு நான் பொறுப்பு ….
   (என்றால் -இனி ஆட்சி இவருடையது என்று தானே பொருள்…!!!🙂🙂 )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. paamaran சொல்கிறார்:

  7 — கேள்விகளுக்கு பிறகு — 8 –வதாக ஒன்று சேர்க்க முடியுமா என்று பாருங்கள் …! —- அப்படியே … இவருக்கு ஆதரவு பெருகி …. ? — ” அப்பா — அண்ணன் — தங்கை — கட்சியில் உள்ள பழைய பெருச்சாளிகள் ” என்று பிரச்னை ஏற்பட்டால் ” தனி கட்சி ” தொடங்குவாரா … ? என்பது தான் …!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   கட்சி தான் ஏற்கெனவே இவர் “வசம்” வந்து விட்டதே….
   இனி தனி கட்சி துவங்குவதாக இருந்தால் –
   அதை கலைஞர் தானே செய்ய வேண்டும்….. !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    KM ji

    கட்சி இவர் வசம் என்றால் ஏன் கட்சி கலரையே காணமுடியவில்லை…..
    இந்த நமக்கு நாமேயில் மட்டும் என்று இல்லை.
    முடியட்டும் விடியட்டும்-மில்லும் தான்…

    ஸ்மால் டவுட்

 4. Ganpat சொல்கிறார்:

  மரண தண்டனையை எதிர்பார்க்கும் கைதிகள் சிந்திக்கிறார்கள்..
  நம்மை தூக்கில் போடுவார்களா?
  விஷம் கொடுத்து கொல்வார்களா?
  கல்லால் அடித்து கொல்வார்களா?
  மின்சாரம் பாய்ச்சி கொல்வார்களா?
  யானையால் தலையை இடற செய்து கொல்வார்களா?
  firing squad மூலம் கொல்வார்களா?
  இன்னும் பல வருஷம் காத்திருக்க வைத்தே கொல்வார்களா?🙂🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   இன்னும் ஒன்றை விட்டு விட்டீர்கள்….
   என் மாதிரி கேஸ்….
   தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர் –
   ஆசாமி -காத்திருக்கும் நிலையிலேயே போய் விட்டால் …..🙂 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    திருந்துங்களய்யா
    …………
    …………
    …………
    …………
    …………
    திருந்துங்களேன்ய்யா
    😀

   • Ganpat சொல்கிறார்:

    நீங்க நூறு ஆண்டுகள் வாழ்வீர்கள் சார்!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கண்பத்.

     ஆனால், நம்மால் பிறருக்கு ஒரு சிறிதாவது பயன் உள்ள வரை தான்
     இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்…
     என் பிரார்த்தனை…

     ஆனால், இருப்பதும் போவதும் -நம் கையில் இல்லை….
     என்பதை நான் முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன்.

     விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வோம்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Ganpat சொல்கிறார்:

      முற்றிலும் உண்மை!..நம் பாரத தேசத்தின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தன்னால் தேர்தெடுக்கப் பட்டவர் எப்பொழுது (ஆட்சியை விட்டு) போகப்போகிறார் என்று நினைப்பதிலேயே பொழுது கழிந்துவிடுவதால் தான் போவதை பற்றி எண்ண நேரமே இருப்பதில்லை !!🙂🙂

 5. Lakshman சொல்கிறார்:

  முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பிறகு சித்தப்பாவாக ஆவதை பற்றி பிறகு யோசிக்கலாம்!!!

  • gopalasamy சொல்கிறார்:

   I was thinking to write same thing.

  • today.and.me சொல்கிறார்:

   வழுக்கையில் முடி வளர வைத்ததை மறந்துவிட்டீர்களே…………………

   ALL THINGS ARE POSSIBLE IN GOD.

   திமுகவின் பகுத்தறிவுக்கும் – கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கக்கூடாது
   😀

 6. Thiruvengadam சொல்கிறார்:

  ஐதற்கான ஒரு முன் னொட்டம் வேட்பாளர் தேர்வுகளிலேயே தெரியலாம். சென்ற மத்திய ஆட்சியில் சோனியா போல் ” ஆலோசகராக” பொறுப்பில்லாமல் / அதிகாரம் மட்டும் என்ற நிலை வரலாம். ஏதாவது அதிசயம் ஏற்பட்டாலன்றி தற்போதைய நிலை அழகிரி தாக்கம் ஆய்வுக்கு உட்படாது.

 7. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  2ஜியும்,கலைஞர் டிவியும் வரும் டிசம்பர்,ஜனவரி மாதங்களில் ஸ்டாலின் நடத்தும் அனைத்து நிகழ்வுகளை காலிசெய்து விடும் எனத் தெரிகிறது.

 8. காட்சிகளின் அமைப்பு ஸூப்பர் ஐயா அதிலும் பாத்திரத் தொழிலாளி வேலை செய்யும் இடத்தில் நடிகர் வாயிலில் நிற்கிறார் போட்டோ எடுப்பவர் முன் கூட்டியே அந்த இடத்தில் நிற்க வைக்கப்படுகிறார் இந்த டைரக்ஷனை மிகவும் ரசித்தேன்

 9. today.and.me சொல்கிறார்:

  இந்தா
  அடுத்து
  ………..
  ………..
  ………..
  ………..
  வைகோ
  ………..
  ………..
  ………..
  ………..
  அப்புறம்
  டி ராஜேந்தர்
  ………..
  ………..

  நெக்ஸ்ட்
  யாரெல்லாம் நடக்கறதுக்கு க்யுல இருக்காங்கன்னு பாத்தா

  மு கருணா நிதி
  ஜிகே வாசன்
  அன்புமணி
  விஜயகாந்த்
  திருமாவளவன்
  சீமான்
  ட்ராபிக் ராமசாமி
  குஸ்பு / ஈவிகேஸ்
  ஹெச் ராஜா / தமிழிசை
  ………..
  ………..
  ………..
  ………..
  ………..
  ………..
  ஆமா இப்டியே நடந்துக்கிட்டே இருந்தா
  ரோடு எல்லாம் தேஞ்சுபோயிடாதா???
  😀 😀

 10. today.and.me சொல்கிறார்:

  இவரே தாத்தா ஆயிட்டாராம்………………..
  தந்தையைப் பார்பாராமா???

  காமை ஜி
  தலைப்பே சரியில்லையே…😛

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் டுடேஅண்ட்மீ,

  full swing -ல இருக்கீங்க….

  நடக்கட்டும்…. நடக்கட்டும்….!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 12. Ganpat சொல்கிறார்:

  =2016 தைமாசம் ஒரு தமிழருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு serious ஆக ஆகலாம்

  = அவர் அப்போலோவில் அட்மிட் செய்யப்படலாம்.

  =”நான் போவதை பற்றிகூட எனக்கு பயமில்லை! என் உயிரினை விட மேலான தமிழர்களை அனாதையாக விட்டு செல்கிறேனே!” என்று அவர் குமுறி அழும் காட்சி சேனல்களில் ஒளிபரப்பபடலாம்.

  =சில அப்பாவி இளைஞர்கள் துக்கம் மேலிட தீக்குளிக்கலாம்

  =இந்த நிலையில் அவர் மனைவிகள் மகன்கள் மகள்கள் ஒன்று சேர்ந்து அவர் படுக்கை அருகில் நின்று “உங்கள் ஆசை என்னவெனினும் நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம் தந்தையே!” என உருகி சொல்லலாம்

  =நீங்கள் உங்கள் பிணக்குகளை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்து இந்த நாட்டை, திராவிடர்களை ,சிறுபான்மையினரை, ஆரிய ஆதிக்க சக்திகளிடமிருந்து காப்பாற்றுவேன் என வாக்கு கொடுங்கள்!” என்று கேட்கலாம்

  =அவர்கள் அவர் கை மீது தங்கள் கைகளை வைத்து அப்படியே உறுதி அளிக்கலாம்

  =இதைக்கண்டு அங்கே டாக்டர் நர்ஸ் வார்டு பாய் உள்ளிட்ட அனைவரும் தங்கள கண்களை துடைத்துக்கொள்ளலாம்

  =அவர் கட்சி இதை நிழற்படம் எடுத்து தமிழகம் முழுதும் போஸ்டர் ஓட்டலாம்

  =அதை கண்டு வாக்காளர்களும் உருகி அவர்களுக்கு ஓட்டளிக்கலாம்

  =தேர்தல் வெற்றியே அவரை குணப்படுத்தி விட அவர் மீண்டும் பதவி ஏற்கலாம்

  =தன் இரு மகன்களையும் தன் இரு கண்கள் என அறிமுகப்படுத்தி கிழக்கே தான் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்தாலும் வடக்கே இளையவனும் தெற்கே மூத்தவனும் மேற்கே தன் மகளும் காவல் தெய்வமாக நின்று தமிழகத்தை காப்பர்
  என்று பிஸினசை பிரித்துக்கொடுக்கலாம்.

  =இதுவரை முதல்வராக இருந்தவர் மலைவாசஸ்தலத்திற்கு சென்று விடலாம்.அங்கு அவர் 2020க்கிற்காக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளலாம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   பிரணமாதம்…. நீங்கள் சொல்வது –
   முழுவதும் அப்படியே நடந்தால் தேவலை என்று
   சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தாலும்,
   முதல் பாதி வரையிலாவது (🙂 )
   நடக்க வாய்ப்பு இருக்கிறது…!!!

   ” பின்னூட்ட சக்ரவர்த்தி” – என்று சும்மாவா சொன்னார்கள் …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    மிக்க நன்றி! உங்கள் அன்பிற்கு..இங்கே ஒரே ஒரு சக்ரவர்த்தி நீங்கள்தான் .உங்கள் எண்ணங்களிலும் உழைப்பிலும் முயற்சியிலும் நாங்கள் எங்களால் முடிந்த அளவு பங்கேற்கிறோம்.எனவே நான் ஒரு எளிய பின்னூட்ட குறுநில மன்னன்தான்🙂

 13. Tamil Thiratti சொல்கிறார்:

  மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.